18 அதிகாரம்

18 அதிகாரம்

கர்த்தருக்கும் ஆபிரகாமுக்கும் இடையே மற்றொரு சம்பாஷணை நடைபெறுகிறது. அந்த சம்பவம் இந்த அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆபிரகாமுக்கு எதிராக மூன்று புருஷர்கள் நிற்கிறார்கள். ஆபிரகாமுக்கும் அவர்களுக்கும் இடையே சம்பாஷணை நடைபெறுகிறது (ஆதி 18:1#8).

கர்த்தர் சாராளுக்கு தம்முடைய கிருபையை வெளிப்படுத்துகிறார். உற்பவ காலதிட்டத்தில் சாராள் ஒரு குமாரனைப்பெறுவாள் (ஆதி 18:9#15).

கர்த்தருடைய கோபம் சோதோமின்மீது வருகிறது. சோதோமை அழிக்கும் தம்முடைய திட்டத்தை கர்த்தர் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் (ஆதி 18:16#22). ஆபிரகாம் கர்த்தரிடத்தில் சோதோமுக்காக பரிந்து பேசுகிறார் (ஆதி 18:23#33).

ஆபிரகாமும் மூன்று புருஷரும்

ஆதி 18:1#8

ஆதி 18:1. பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பக-ன் உஷ்ணவேளையில் கூடாரவாச-லே உட்கார்ந்திருந்து,

ஆதி 18:2. தன் கண்ளை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாச--ருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து;

ஆதி 18:3. ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோக வேண்டாம்.

ஆதி 18:4. கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.

ஆதி 18:5. நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள்.

ஆதி 18:6. அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்-யமாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.

ஆதி 18:7. ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான்.

ஆதி 18:8. ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.

கர்த்தர் ஆபிரகாமுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார். கர்த்தருக்கும் ஆபிரகாமுக்கும் இடையே நெருங்கிய ஐக்கியம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இருவரும் பல காரியங்களை அந்நியோன்யமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

புதிய ஏற்பாட்டுக்காலத்தில் வார்த்தையாகயிருக்கிற தேவன், தம்மை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வார்த்தை மாம்சமானார். கர்த்தர் ஆபிரகாமுக்கு தம்மை தாராளமாக வெளிப்படுத்தியதுபோல, புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய நமக்கு, கிறிஸ்துவானவர் தம்மை, வார்த்தையின் மூலமாக தாராளமாய் வெளிப்படுத்துகிறார்.

கர்த்தர் ஆபிரகாமுக்கு மம்ரேயின் சமபூமியிலே தரிசனமாகிறார். ஆபிரகாம் பக-ன் உஷ்ணவேளையில் கூடாரவாச-லே உட்கார்ந்திருந்திருக்கிறார் (ஆதி 18:1). ஆபிரகாம் கர்த்தருக்காக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார். ஆபிரகாம் அந்நியரை உபசரிக்கிறவர். அவர்களை வரவேற்கும் வண்ணமாக ஆபிரகாம் கூடார வாசலில் உட்கார்ந்திருக்கிறார்.

ஆபிரகாம் ஆதி 13:18 ஆவது வசனத்தின் காலத்திலிருந்து மம்ரேயில் தங்கியிருக்கிறார். ஆதி 20:1 ஆவது வசனத்தில் ""அவ்விடம் விட்டு பிரயாணம் பண்ணும் வரையிலும்'' அவர் மம்ரேயிலேயே தொடர்ந்து தங்கியிருப்பார். பக-ன் உஷ்ணவேளையின் போது கூடார வாசலில் உட்கார்ந்திருந்து ஓய்வெடுப்பதும், போஜனம் பண்ணுவதும் அக்காலத்து வழக்கம்.

கர்த்தர் தம்மை ஒருவருக்கு வெளிப்படுத்துவதற்கு முன்பாக, தம்மை பற்றிய எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் அவருடைய மனதிலே அதிகரிக்கச் செய்கிறார். ஆபிரகாமின் மனதிலே கர்த்தரைக் குறித்த எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகமாயிருக்கிறது. ஆகையினால் ஆபிரகாம் கர்த்தரை வரவேற்க ஆயத்தமாயிருக்கிறார்.

நாம் அந்நியரை உபசரிக்கவேண்டும். அவர்களை உபசரிக்கும்போது, சில சமயங்களில் நமக்கு தெரியாமலேயே, தேவதூதர்களையும் உபசரிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும். இதனால் நமக்கு அதிகமான மேன்மையும் ஆசீர்வாதமும் உண்டாகும்.

நம்மிடத்தில் வருகிற அந்நியர்கள் எல்லோரையும் சந்தேகப்படக்கூடாது. அன்பு சகலத்தையும் நம்பும். நாம் அந்நியர்மீது அன்புகூர்ந்தால், அவர்கள்மீது சந்தேகப்பபடாமல், அவர்களை ஏற்றுக்கொண்டு உபசரிப்போம். நம் வீட்டிலுள்ளவர்களுக்கு திரும்ப திரும்ப போஜனம் கொடுப்பதுபோல, பசியிலிருக்கிற அந்நியருக்கும் போஜனம்கொடுக்கவேண்டும்.

ஆபிரகாம் தன் கண்ளை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவருக்கு எதிரே நிற்கிறார்கள்; ஆபிரகாம் அவர்களைக் கண்டவுடனே, அவர் கூடாரவாச--ருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து, அவர்களை வரவேற்கிறார் (ஆதி 18:2).

ஆபிரகாம் அந்த மூன்று புருஷரையும் நோக்கி, ""ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோக வேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்'' (ஆதி 18:3,4) என்று சொல்லுகிறார்.

அக்காலத்தில் பாதரட்சைகளை அணிந்து நடந்து வருவது வழக்கம். (ஆதி 18:4; ஆதி 43:24; லூக்கா 7:44). தேவனும் இரண்டு தூதர்களும் எந்த மாதிரியான பாதரட்சைகளை அணிந்து வந்தார்கள் என்று இங்கு அறிவிக்கப்படவில்லை. பூமியிலுள்ள மனுஷரைப் போலவே அவர்களுடைய கால்களும் கழுவப்பட வேண்டியதாயிருக்கிறது.

போஜனம் ஆயத்தமாகும் வரையிலும் மூவரும் காத்திருந்து பின்பு அவர்கள் புசிக்கிறார்கள் (ஆதி 18:8; யாத் 24:9-11; சங் 78:25).

ஆபிரகாம் இப்போது வயது முதிர்ந்தவராகயிருக்கிறார். அவர் தன்னுடைய வயதின் முதுமைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மூன்று புருஷரையும் ஏறெடுத்து பார்த்து, அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடுகிறார். ஆபிரகாமுக்கு இது ஓடுகிற வயதல்ல. ஆனாலும் அந்நியரை உபசரிக்கவேண்டும் என்னும் ஆர்வம் அவரிடத்தில் அதிகமாயிருக்கிறது. தன்னுடைய கூடாரத்திற்கு வரும் அந்நியர்களை, எப்படி உபசரிக்கவேண்டுமோ, அப்படி உபசரிப்பதற்கு ஆபிரகாம் ஆயத்தமாயிருக்கிறார்.

நாம் கர்த்தரை விசுவாசிக்கிறோம் என்பதற்காக, மனுஷரை மறந்துவிடக்கூடாது. மனுஷர்மீது அன்பு கூரக்கூடாது என்று பரிசுத்தவேதாகமத்தில் எங்கும் தடைபண்ணப்படவில்லை. நம்மிடத்தில் நல்ல சுபாவங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் காணப்படவேண்டும் என்றே பரிசுத்தவேதாகமம் நமக்கு போதிக்கிறது. நாம் எல்லா மனுஷருக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கவேண்டும்.

கர்த்தர் நம்மைத் திரளாய் ஆசீர்வதித்திருக்கும்போது, நாம் மற்றவர்களுக்கு தாராளமாய் உதவிசெய்யவேண்டும். ஆபிரகாம் தன்னுடைய கூடார வாசலிலே, தனக்கு முன்பாக நின்கிற மூன்று புருஷரையும் அன்போடு வரவேற்கிறார். ஆபிரகாமின் வரவேற்பில் மாய்மாலம் இல்லை. அவர் சுத்த இருதயத்தோடும், தெளிந்த சிந்தனையோடும், மூன்று புருஷரையும் வரவேற்கிறார்.

ஆபிரகாம் அவர்களை மரத்தடியில் சாய்ந்துகொண்டிருக்குமாறு சொல்லுகிறார். மேலும் ஆபிரகாம் அந்த மூன்று புருஷரையும் நோக்கி, "" நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள்'' (ஆதி 18:5) என்று சொல்லுகிறார்.

ஆபிரகாம் அந்த மூன்று புருஷருக்கும் விருந்து ஆயத்தம்பண்ணுகிறார். அப்பமும், வெண்ணெயையும், பாலும், சமைப்பித்த கன்றும் அவர்களுக்கு விருந்து போஜனமாக பரிமாறப்படுகிறது. அவர்கள் மரத்தடியிலே போஜனம்பண்ணுகிறார்கள். போஜனம் சாதாரணமானதாகயிருந்தாலும், போஜனம்பண்ணுகிற ஸ்தலம் மரத்தடியாகயிருந்தாலும், ஆபிரகாமின் விருந்து உபசரிப்பு மிகவும் நேர்த்தியாகயிருக்கிறது.

ஆபிரகாம் ஒரு ஐசுவரியவான். அவர் தன்னுடைய விருந்தினரைக் கனம்பண்ணி, அவர்களுக்கு தாராளமாக போஜனம்கொடுக்கிறார். போஜனத்தில் குறைவு இல்லை. ஒருவேளை ஆபிரகாம் கொடுக்கும் விருந்திலே, விதவிதமான போஜனங்கள் பரிமாறப்படாமலிருக்கலாம். ஆனாலும் அப்பமும் இறைச்சியும் தாராளமாக பரிமாறப்படுகிறது.

ஆபிரகாமின் மனைவி கூடாரத்திலிருக்கிறாள். ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: ""நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்-யமாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு'' (ஆதி 18:6) என்று சொல்லுகிறார். ஆபிரகாமும் சாராளும் தங்கள் விருந்தினர்களை உபசரிப்பதில் அதிககவனம் செலுத்துகிறார்கள். போஜனம் ஆயத்தம்பண்ணுவதற்காக அதிக நேரம் செலவுபண்ணுகிறார்கள்.

படி என்பது அக்காலத்து அளவு. ஆபிரகாமிற்கு பல வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். மூன்றுபடி மாவினால் அப்பம் சுட்டால் அது அவர்களுக்கு ஒரு வேளை போஜனத்திற்கு மட்டுமே சரியாக இருக்கும். தேவனும் தூதரும் பூமிக்கு வந்திருப்பதை ஆபிரகாம் தன்னுடைய சொந்தக் கண்களால் காண்கிறார். மனுஷனால் தேவனைக் காணமுடியும்.

சாராள் அப்பம் சுட்டுக்கொண்டிருக்கும்போது, ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுக்கிறார் அந்த வேலைக்காரன் அதைச் சீக்கிரத்தில் சமைக்கிறான் (ஆதி 18:7).

ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடுகிறார். கிழக்கு தேசத்தில் விருந்து உபசரிப்பதில் தீவிரம் காட்டுவார்கள். (ஆதி 18:2,6). ஆபிரகாமைப் போல பணிந்து, குனிந்து விருந்தினரை உபசரிப்பது கிழக்கு தேசத்து வழக்கமாகும். (ஆதி 18:2-3).

தன்னுடைய கூடாரத்திற்கு வந்திருக்கிற மூன்று மனுஷருக்கும் ஆபிரகாம் விருந்து பரிமாறுகிறார். ஆபிரகாம் ஐசுவரியவானாகயிருந்தாலும், அவர் வயது முதிர்ந்தவராகயிருந்தாலும், அந்நியருக்கு விருந்து பரிமாறுவது தனக்கு கவுரவகுறைச்சல் என்று நினைக்கவில்லை.

ஆபிரகாம் வெண்ணெயையும், பாலையும், சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைக்கிறார். அந்த மூன்று புருஷரும் அந்த போஜனத்தை புசிக்கிறார்கள். ஆபிரகாமோ அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருக்கிறார் (ஆதி 18:8).

ஆபிரகாம் விருந்தினரோடு அமர்ந்து போஜனம் பண்ணவில்லை. அரபியர்கள் தங்கள் விருந்தினரோடு ஒருபோதும் அமர்ந்து போஜனம் பண்ணமாட்டார்கள். விருந்தினர் போஜனம் பண்ணும்போது அவர்களுக்கு அருகில் நின்று, அவர்களுக்குத் தேவையானவற்றைக் கவனித்து, விருந்து உபசரிப்பார்கள்.

தேவனும் தூதர்களும் வானத்திலும் புசிக்கிறார்கள். பூமியிலும் புசிக்கிறார்கள். (யாத் 24:11; சங் 78:25; லூக்கா 22:16,18,30; லூக்கா 24:30,43; அப் 10:41; எபி 13:2). இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு வாக்குத்தத்தமாகக் கூறும்போது ""நீங்கள் என் ராஜ்யத்திலே என்பந்தியில் போஜனபானம் பண்ணுவீர்கள்'' என்று கூறியிருக்கிறார் (லூக்கா 22:30).

ஆபிரகாம் பாவத்திற்கு துணைபோகவில்லை. அவர் சிநேகத்திற்கு துணைபோகிறார். உண்மையான சிநேகிதர்கள் ஒருவருக்கொருவர் தீங்கு செய்யமாட்டார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்து, ஆதரவாயிருப்பார்கள். கிறிஸ்துவானவர் தம்முடைய சீஷர்களின் கால்களை கழுவி, தம்முடைய தாழ்மையை வெளிப்படுத்தினார். இது நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

கிறிஸ்துவானவரைப்போல நம்மிடத்திலும் மாய்மாலம் இல்லாத அன்பு இருக்கவேண்டும். நம்முடைய இருதயத்தில் பெருமை இருக்கக்கூடாது. நம்முடைய சிநேகிதரிடத்தில், அன்பையும், மனத்தாழ்மையையும் அதிகமாய் வெளிப்படுத்தவேண்டும்.

சாராளின் நகைப்பு

ஆதி 18:9#15

ஆதி 18:9. அவர்கள் அவனை நோக்கி:உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.

ஆதி 18:10. அப்பொழுது அவர்: ஒரு உற்பவ காலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாச-ல் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

ஆதி 18:11. ஆபிரகாரமும் சாராளும் வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.

ஆதி 18:12. ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.

ஆதி 18:13. அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?

ஆதி 18:14. கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலதிட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.

ஆதி 18:15. சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.

ஆபிரகாம் மூன்று மனுஷரையும் தன் கூடாரத்தில் வரவேற்று, அவர்களுக்கு போஜனம் கொடுக்கிறார். அவர்களும் ஆபிரகாமை ஆசீர்வதிக்கிறார்கள். தான் வரவேற்றது கர்த்தருடைய தூதர்கள் என்பதை அறியாமலேயே, ஆபிரகாம் அவர்களுக்கு போஜனம் கொடுத்து உபசரித்திருக்கிறார். அவர்கள் மூன்றுபேரும் பரலோகத்திலிருந்து வந்தவர்கள். அவர்கள் பரலோகத்தின் கிருபையுள்ள வார்த்தைகளை ஆபிரகாமுக்கு சொல்லுகிறார்கள்.

""தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்'' (மத் 10:41).

ஆபிரகாம் மூன்று புருஷருக்கும் போஜனம் கொடுக்கிறார். அவர்கள் புசிக்கிறார்கள். அப்போது ஆபிரகாம் அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருக்கிறார். அப்பொழுது சாராள் கூடாரத்திலிருக்கிறாள். ஆபிரகாமும் மூன்று மனுஷரும் மரத்தடியில் பேசிக்கொண்டிருக்கும்போது, சாராள் அவர்கள் பேசுவதை பின்புறமாய் கூடாரவாசலில் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

ஆபிரகாமின் காலத்தில் ஸ்திரீகள் புருஷருக்கு சமமாக அவர்கள் மத்தியிலே அமரமாட்டார்கள். புருஷருடைய சம்பாஷணைகளில் பங்குபெறமாட்டார்கள். அக்காலத்து ஸ்திரீகள் புருஷரோடு சரிசமமாக அமர்ந்து போஜனம்பண்ணவுமாட்டார்கள். ஸ்திரீகள் ஒருவேளை தங்கள் வீட்டு புருஷரோடு போஜனம்பண்ணினாலும், அந்நிய புருஷரோடு, சரிசமமாக அமர்ந்து போஜனம் பண்ணுவதை தவிர்த்துவிடுவார்கள்.

தங்கள் வீட்டிலோ, கூடாரத்திலோ அந்நிய புருஷர்கள் விருந்தினராக வந்திருக்கும்போது, அந்த வீட்டு ஸ்திரீகள் தங்களுக்குரிய மாடங்களிலோ, கூடாரத்தின் பின்புறத்திலோ தங்களை வெளிப்படுத்தாமல் மறைவாகயிருப்பார்கள். இப்போது ஆபிரகாமும், மூன்று புருஷரும் மரத்தடியிலிருக்கிறார்கள். சாராள் கூடாரவாசலின் பின்புறமாகயிருக்கிறாள். அந்தப் புருஷர்களால் சாராளைப் பார்க்க முடியாது. ஆனாலும் அவர்கள் பேசுவதை சாராளால் கேட்கமுடிகிறது.

மூன்று புருஷரும் ஆபிரகாமை நோக்கி, ""உன் மனைவி சாராள் எங்கே'' என்று கேட்கிறார்கள். ஆபிரகாம் அவர்களிடத்தில், ""அதோ கூடாரத்தில் இருக்கிறாள்'' (ஆதி 18:9) என்று சொல்லுகிறார்.

சாராளால் கூடாரத்தில்தான் இருக்கமுடியும். அதுவே அவளுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஸ்தலம். சாராளைப்போலவே, கர்த்தர் நமக்கு நியமித்த ஸ்தலங்களில் நாம் இருக்கவேண்டும். கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற ஊழியத்தை செய்யவேண்டும். அப்போதுதான் நமக்கு ஆறுதலும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

""அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்'' (லூக் 2:8).

ஆபிரகாமுக்கு முன்பாக நிற்கிற மூன்று புருஷரில் ஒருவர் கர்த்தர் என்றும், மற்ற இருவரும் கர்த்தருடைய தூதர்கள் என்றும் வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். சாராள் கூடாரத்திலிருக்கிறாள் என்று ஆபிரகாம் சொன்ன பின்பு, அந்த மூன்று புருஷரில் ஒருவர் ஆபிரகாமோடு பேசுகிறார். அவர் கர்த்தர் என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.

கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, ""ஒரு உற்பவ காலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்'' (ஆதி 18:10) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் ஏற்கெனவே ஆபிரகாமின் சந்ததியை ஆசீர்வதித்திருக்கிறார். கர்த்தருடைய ஆசீர்வாதம் நமக்கு திரும்ப திரும்ப சொல்லப்படும்போது, அது நமக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும். கர்த்தர் சொன்ன ஆசீர்வாதம் இதனால் மறுபடியும் உறுதிபண்ணப்படுகிறது.

கர்த்தருடைய ஆசீர்வாதம், ஆபிரகாமின் மாம்சப்பிரகாரமான சந்ததிக்கும், அவருடைய ஆவிக்குரிய சந்ததிக்கும் சொல்லப்படுகிறது. விசுவாசிகளாகிய நமக்கும், ஆபிரகாமுக்கு சொல்லப்பட்ட ஆசீர்வாதத்தில் பங்குள்ளது.

ஆபிரகாமின் மாம்சபிரகாரமான சந்ததியார், ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கின் சந்ததியில் பிறந்தவர்கள். ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததியாராகிய விசுவாசிகளோ, தேவனுடைய வார்த்தையினால் பிறந்தவர்கள்.

""அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே'' (1பேது 1:23).

கர்த்தர் ஆபிரகாமுக்கு ஆசீர்வாதமான வார்த்தைகளை சொல்லும்போது, சாராள் அவருக்கு பின்புறமாய் கூடார வாசலில் நின்று, அந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். கர்த்தர் சொல்லுகிற வார்த்தைகள் மிகவும் நல்ல வார்த்தைகள். அவை ஆசீர்வாதமான வார்த்தைகள். ஆனால் சாராளால் கர்த்தர் சொல்லுகிற நல்ல வார்த்தைகளை நம்பமுடியவில்லை. ஆகையினால் சாராள் தன் உள்ளத்திலே நகைக்கிறாள் (ஆதி 18:12).

அக்காலத்தில் ஆண் விருந்தினர்கள் போஜனம்பண்ணும்போது வீட்டிலுள்ள ஸ்திரீகள் அவர்களோடு அமர்ந்து போஜனம் பண்ணும் வழக்கம் இல்லை. தன்னுடைய பெயரை விருந்தினர்கள் கூறியபோது, சாராள் எழுந்து, கூடாரவாசலின் வாசல் அருகே நின்று, அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஆபிரகாமிடம் பேசும் கர்த்தரையும், தூதரையும் சாராள் கவனித்துப் பார்க்கிறாள்.

சாராளின் நகைப்பு அவளுடைய அவிசுவாசத்திற்கு அடையாளம். அவள் கர்த்தருடைய வார்த்தையை நம்பவில்லை. சந்தேகப்படுகிறாள். சாராள் சரீரப்பிரகாரமாகவும் உலகப்பிரகாரமாகவும் சிந்திக்கிறாள். கர்த்தர் ஆபிரகாமுக்கு தம்முடைய ஆசீர்வாதமான வார்த்தைகளை சொல்லும்போது, ஆபிரகாரமும் சாராளும் வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருக்கிறார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று (ஆதி 18:11).

இப்போது ஆபிரகாமிற்கு 99 வயது, சாராளுக்கு 89 வயது. வருகிற வருஷத்தில் ஈசாக்கு பிறக்கும்போது ஆபிரகாமிற்கு 100 வயதும், சாராளுக்கு 90 வயதும் ஆகும். (ஆதி 17:17; ஆதி 21:5).

ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. சாராள் இதுவரையிலும் பிள்ளை பெற்றெடுக்கவில்லை. (ஆதி 11:30) அவளுடைய சரீரத்தில் பிள்ளை பெறும் பருவத்தையும் கடந்து சென்றுவிட்டாள். ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்று போனாலும், வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் என்றெண்ணி, கர்ப்பந்தரிக்க பெலனடைந்து, வயது சென்றவளாயிருந்தும் பிள்ளை பெறுகிறாள் (எபி 11:11).

ஆகையால், சாராள் கர்த்தருடைய வார்ததையைக் கேட்டு தன் உள்ளத்திலே நகைக்கிறாள். ""நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ'' (ஆதி 18:12) என்று சாராள் தன் மனதிற்குள்ளே சொல்லிக்கொள்கிறாள்.

சாராள் மாம்சப்பிரகாரமாக யோசிக்கிறாள். கர்த்தருடைய ஆசீர்வாதமான வார்த்தைகளை நம்புவதற்கு, சாராளின் மாம்ச சிந்தை தடையாகயிருக்கிறது. சாராள் முதிர்ந்த வயதுள்ளவள் என்பது மெய்தான். அவள் கிழவியாயிருப்பதும் மெய்தான். ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று என்பதும் மெய்தான். ஆனாலும் கர்த்தருடைய வார்த்தையும் மெய்யானது என்பதை சாராள் நம்பவேண்டும்.

கர்த்தர் தம்முடைய வார்த்தையில் உண்மையுள்ளவர். கர்த்தரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. அவர் சர்வவல்லமையுள்ள தேவன். கர்த்தர் செய்ய நினைக்கிற காரியம் ஒருபோதும் தடைபடாது. சாராள் மாம்சப்பிரகாரமாக யோசிக்கக்கூடாது. கர்த்தருடைய வார்த்தையை சந்தேகப்படக்கூடாது. கர்த்தரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை என்று சாராள் நம்பவேண்டும்.

சாராளைப்போலவே விசுவாசிகளாகிய நமக்கும் பல சமயங்களில் சந்தேகம் வருகிறது. நாம் ஆவிக்குரிய காரியங்களை மாம்சப்பிரகாரமாக யோசிக்கிறோம். இதனால் கர்த்தருடைய தெய்வீக வாக்குத்தத்தங்கள் மீது நமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. நம்முடைய மாம்சசிந்தை, கர்த்தருடைய ஆவிக்குரிய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமாக கிரியை நடப்பிக்கும். மாம்சத்தைப் பற்றிக்கொள்கிறவர்களால் கர்த்தரைப்பற்றிக்கொள்வது இயலாத காரியம்.

சாராள் தன் மனதிற்குள்ளே நகைத்து, பேசிக்கொண்டிருந்தாலும், கர்த்தர் அவளுடைய மனதின் சிந்தனைகளை அறிந்திருக்கிறார். கர்த்தருக்கு மறைவான இரகசியம் ஒன்றுமில்லை.

கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: ""சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலதிட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்'' (ஆதி 18:13,14) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் சாராளை, அவளுடைய கணவர் ஆபிரகாமின் மூலமாக கடிந்துகொள்கிறார். ""சாராள் ஏன் நகைக்கிறாள்'' என்று கர்த்தர் ஆபிரகாமிடம் கேட்கிறார். நம்முடைய அவிசுவாசம் தேவனுக்கு முன்பாக அருவருப்பாகயிருக்கிறது. கர்த்தருடைய வார்த்தைகளையும், வாக்குத்தத்தங்களையும் நாம் நம்ப மறுப்பது, கர்த்தருடைய தெய்வீகத்தை நம்ப மறுப்பதற்கு அடையாளம்.

""அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்'' (லூக் 1:18).

கர்த்தர் சொல்லுகிற இந்த வார்த்தைகளையும் சாராள் கூடாரவாசலில் கேட்டுக்கொண்டிருக்கிறாள். சாராள் தன்னுடைய தப்பிதத்தை மூடி மறைக்க முயற்சிபண்ணுகிறாள். சாராள் பயந்து, ""நான் நகைக்கவில்லை'' என்று சொல்லுகிறாள். சாராள் பொய் சொல்லுகிறாள். சாராளுக்கு பயமுண்டாயிற்று. பயத்தினால் அவள் உண்மை பேசாமல், பொய்பேசுகிறாள். கர்த்தர் சொல்லுகிற வார்த்தைகளை சாராளால் நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.

கர்த்தருடைய வாக்குத்தத்தம் உறுதியாயிருக்கிறது. சாராளுடைய சரீரமோ, கர்த்தருடைய வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கு தடையாயிருக்கிறது. சாராள் தன்னுடைய மாம்சப்பிரகாரமான சூழ்நிலைகளை நோக்கிப் பார்த்தால், அவள் அவிசுவாசத்தினால் சோர்ந்துபோவாள். கர்த்தருடைய வார்த்தைகளையும், வாக்குத்தத்தங்களையும், விசுவாசிக்க வேண்டும். சூழ்நிலைகளை நோக்கிப் பார்க்காமல், வாக்குத்தத்தம்பண்ணின கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும்.

சாராளுக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்று கர்த்தர் சொன்னபோது, சாராள் தன் உள்ளத்திலே நகைத்தாள். ஆனால் இப்போதோ அவள், ""நான் நகைக்கவில்லை'' என்று சொல்லி தன்னுடைய பாவத்தை மறைக்கிறாள். பாவத்தை மறைக்கிறவர்கள் வாழ்வடையமாட்டார்கள். அதை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவர்களோ தேவனுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்வார்கள். சாராள் தன்னுடைய பாவத்தை மறைப்பதும், பாவமான முயற்சியாகவே இருக்கிறது. பாவம் செய்கிறவர்களுக்கு வெட்கமும் அவமானமும் வரும். பாவத்தை மறைக்கிறவர்களுக்கோ, அதைவிட கூடுதலான வெட்கமும் அவமானமும் வரும்.

சாராள் பயந்து, ""நான் நகைக்கவில்லை'' என்று மறுத்தாலும், கர்த்தர் அவளை நோக்கி, ""இல்லை, நீ நகைத்தாய்'' (ஆதி 18:15) என்று சொல்லுகிறார். சாராளால் தன்னுடைய தப்பிதத்தை மறைக்க முடியவில்லை. கர்த்தர் அவளுடைய இருதயத்தின் அந்தரங்க இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.

சாராள் தேவனுக்குப் பயப்படுகிறாள். தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை மாற்றி விடுவாரோ என்றும், தனக்கு பிள்ளை பிறக்காமல் போய்விடுமோ என்றும் எண்ணி, ""நான் நகைக்கவில்லை'' என்று பொய் கூறுகிறாள். தேவன் அவளைக் கடிந்து கொள்ளாமல், ""இல்லை, நீ நகைத்தாய்'' என்று கூறி திருத்துகிறார்.

சோதோம் கொமோராவின் கூக்குரல்

ஆதி 18:16#22

ஆதி 18:16. பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்.

ஆதி 18:17. அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்.

ஆதி 18:18. நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?

ஆதி 18:19. கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

ஆதி 18:20. பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,

ஆதி 18:21. நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குர-ன்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்.

ஆதி 18:22. அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்.

பரலோகத்திலிருந்து வந்த தூதர்கள் பூமியிலே தங்களுடைய ஊழியத்தை செய்கிறார்கள். ஆபிரகாமைப் பார்ப்பதற்கு மூன்று பேர் வந்தார்கள். அவர்களில் ஒருவர் கர்த்தர் என்றும், மற்ற இருவரும் கர்த்தருடைய தூதர்கள் என்றும் வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.

கர்த்தர் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் தம்முடைய வாக்குத்தத்த வார்த்தைகளை சொல்லுகிறார். கர்த்தருடைய தூதர்கள் இரண்டுபேரும் சோதோமை நோக்கிப் போகிறார்கள். அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்து சேருகிறார்கள் (ஆதி 19:1).

சோதோமைப் பற்றி தேவனுடைய சமுகத்தில் ஏற்கெனவே செய்தி வந்திருக்கிறது. அவர்கள் எந்த அளவிற்கு துன்மார்க்கமானவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய சோதோமிற்கு வந்திருக்கிறார்கள். (ஆதி 18:20-21). போகும் வழியில் தங்களுடைய நண்பனான ஆபிரகாமைச் சந்திக்கிறார்கள். இப்பொழுது அவர்கள் ஆபிரகாமைச் சந்தித்து விட்டு சோதோமை நோக்கி போனார்கள்.

ஆபிரகாம் அந்த மூன்று மனுஷரோடும் கூடவே நடந்து போகிறார். தேவன் ஆள்தத்துவப் பண்புடையவராக மனுஷ சரீரத்தில் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். சோதோம் எங்கே இருக்கிறது என்று ஆபிரகாம் அவர்களுக்கு வழிகாட்டத் தேவையில்லை. அவர்களுக்கு எல்லாம் தெரியும். விருந்தினரை உபசரிக்கும் ஒரு பண்பாக ஆபிரகாம் அவர்களோடே கூடப்போய் அவர்களை வழிவிட்டனுப்புகிறார். ஆபிரகாமை பார்க்க வந்த மூன்று புருஷரில் இரண்டு பேர் மாத்திரமே சோதோமுக்கு போகிறார்கள். மற்றொரு புருஷர் கர்த்தர்.

கர்த்தர் ஆபிரகாமோடு கூடவே இருக்கிறார். ""சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குர-ன்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன்'' (ஆதி 18:20,21) என்று கர்த்தர் சொல்லுகிறார். சோதோம் அழிக்கப்படவேண்டிய பட்டணமாயிருக்கிறது.

கர்த்தருடைய தூதர்கள் இரண்டுபேரும், ஆபிரகாமை விட்டு சோதோமை நோக்கிப் போகும்போது, ஆபிரகாம் அவர்களோடே கூடப்போய், அவர்களை வழிவிட்டனுப்புகிறார். அவர்களை விட்டுப்பிரிய ஆபிரகாமுக்கு மனதில்லை. அவர்கள் ஆபிரகாமைப் பார்க்க வந்த அந்நியர்கள். ஆனாலும் ஆபிரகாம் அவர்கள்மீது பிரியமாயும், நேசமாயும் இருக்கிறார். ஆபிரகாம் அவர்களுக்கு தன்னுடைய மதிப்பையும், மரியாதையையும் காண்பிக்கிறார்.

ஆபிரகாமைப் பார்க்க வந்த மூன்று மனுஷரும், அவரைக் கனம்பண்ணுகிறார்கள். தம்மைக் கனம்பண்ணுகிறவர்களை கர்த்தரும் கனம்பண்ணுவார். கர்த்தருடைய•தூதர்கள் இரண்டுபேரும், ஆபிரகாமைவிட்டு சோதோமுக்கு புறப்பட்டுப்போன பின்பு, கர்த்தர் ஆபிரகாமிடம் தொடர்ந்து பேசுகிறார். கர்த்தர் சோதோமை அழிக்கப்போகிறார். அதற்கான காரணத்தை கர்த்தர் ஆபிரகாமுக்கு தெரியப்படுத்துகிறார்.

ஆபிரகாமின் யோசனையை கேட்கவேண்டும் என்னும் அவசியமோ அல்லது நிர்ப்பந்தமோ கர்த்தருக்கு இல்லை. ஆனாலும் கர்த்தர் தம்முடைய தெய்வீக ஆலோசனைகளை ஆபிரகாமோடு பகிர்ந்துகொள்கிறார். ""நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ'' (ஆதி 18:18) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தேவனுடைய இரகசியங்கள் அவருடைய நண்பர்களுக்கு வெளிப்படுத்தப்படும். (சங் 84:11; யோவான் 15:15; யாக் 2:23).

கர்த்தர் ஆபிரகாமை அறிந்திருக்கிறார். ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குத்தத்தங்கள் நிபந்தனையுள்ளவை. ஆபிரகாம் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஆசீர்வாதம் உண்டு.

கர்த்தர் பாவத்தை நியாயந்தீர்க்கிறார். பாவத்திற்கு உரிய தண்டனையைக் கர்த்தர் நிச்சயமாகவே கொடுப்பார். தம்முடைய ஜனமாக இருந்தாலும், தூதர்களாக இருந்தாலும், தேவன் பட்சபாதம் காண்பிப்பதில்லை. (மத் 25:41; 2பேதுரு 2:4; யூதா 1:6-7; வெளி 20:10) மனுஷர்மீதும் கர்த்தர் நியாயம் விசாரிக்கிறார். (ஆதி 2:17; யாத் 32:32-33; எசே 18:20-26; ரோமர் 6:14-23; ரோமர் 8:12-13; 1கொரி 3:16-17; 1கொரி 6:9-11; கலா 5:19-21; கொலோ 3:6-10).

கர்த்தர் ஒருவனை நியாயந்தீர்ப்பதற்கு முன்பாக, எல்லாக் காரியங்களையும் தெளிவாக ஆராய்ந்து பார்த்து நீதியாய் நியாயம் விசாரிக்கிறார்.

கர்த்தரும், ஆபிரகாமும் அந்த இடத்திலேயே நின்று விடுகிறார்கள். இரண்டு தூதர்கள் மட்டும் சோதோமை நோக்கி போகிறார்கள். (ஆதி 19:1). தேவன் சர்வவியாபகர். ஆயினும் தமது சரீரத்தில் அவர் நம்மைப்போலவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பிரயாணம் பண்ணுகிறார். (ஆதி 18:21; ஆதி 11:5-9; ஆதி 17:22; ஆதி 18:33; ஆதி 35:13)

கர்த்தர் ஆபிரகாமுக்கு தம்முடைய இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய தெய்வீக இரகசியம், விசுவாசிகளாகிய நமக்கும், ஏற்ற காலங்களிலே வெளிப்படுத்தப்படும். தாம் செய்யப்போகிறதை கர்த்தர் ஆபிரகாமுக்கு மறைக்காமல் சொல்லுவதற்கு ஒரு காரணமுள்ளது.

ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவருக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும். கர்த்தர் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைக்கமாட்டார் (ஆதி 18:17,18).

கர்த்தர் சோதோமை அழிக்கப்போகிறார். கர்த்தர் இதை ஆபிரகாமுக்கு மறைக்காமல் வெளிப்படுத்துகிறார். யூதமார்க்கத்து ரபிமார்கள், ""நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ'' என்று கர்த்தர் சொல்லுவதற்கு விளக்கம் சொல்லுகிறார்கள்.

கர்த்தர் கானான் தேசத்தை ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறார். சோதோம் கொமோரா ஆகிய பட்டணங்கள் கானான் தேசத்திலிருக்கிறது. கர்த்தர் இவ்விரண்டு பட்டணங்களையும் அழிக்கப்போகிறார். கானான் தேசம் ஆபிரகாமுக்கு சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டிருப்பதினால், ஆபிரகாமுக்கு தெரியாமல் அல்லது ஆபிரகாமின் ஒப்புதல் இல்லாமல், கர்த்தர் கானான் தேசத்திலுள்ள அந்த இரண்டு பட்டணங்களையும் அழிக்க விரும்பவில்லை.

தாம் செய்யப்போகிறதை கர்த்தர் ஆபிரகாமுக்கு மறைக்காமல் வெளிப்படுத்துவதற்கு, இந்த வசனப்பகுதியில் இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அவையாவன : 1. ஆபிரகாம் கர்த்தருடைய சிநேகிதர். அவர் கர்த்தருக்கு பிரியமானவர். 2. ஆபிரகாம் தனக்கு பின் வரும் தன் வீட்டாருக்கு கர்த்தருடைய நீதியையும் நியாயத்தையும் போதிப்பார்.

ஆபிரகாம் கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறார். அவர் கர்த்தரோடு ஐக்கியமாகயிருக்கிறார். நாம் கர்த்தரிடத்தில் நெருங்கிய ஐக்கியத்திலிருக்கும்போது, கர்த்தருடைய சிந்தையே நம்முடைய மனதிலிருக்கும். நம்முடைய சித்தமும் கர்த்தருடைய சித்தமும் வித்தியாசமாயிராது. நாம் கர்த்தரை நம்பி, அவரை அதிகமாய் நேசிக்கும்போது, நம்முடைய சித்தத்தையும் திட்டத்தையும், கர்த்தருடைய சித்தத்திற்கும் திட்டத்திற்கும் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தருடைய சித்தம், உலகப்பிரகாரமான ஜனங்களைவிட, விசுவாசிகளாகிய நமக்கே, அதிகமாய் வெளிப்படுத்தப்படும். தம்முடைய திட்டங்களையும் நோக்கங்களையும் அறிந்துகொள்ளும் ஞானத்தையும் கர்த்தர் நமக்கு கொடுப்பார். விசுவாசிகளாகிய நாம், இனிமேல் வரப்போகிற காரியங்களை, கர்த்தருடைய கிருபையினால் புரிந்துகொள்வோம்.

""இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்'' (ஓசி 14:9).

""எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்'' (சங் 107:43).

ஆபிரகாமுக்கு கர்த்தருடைய திட்டம் தெரிந்திருக்கவேண்டும். ஏனெனில் அவர் தன்னுடைய வீட்டாருக்கு, கர்த்தருடைய நீதியையும் நியாயத்தையும் கட்டளையிடுவார். கர்த்தரோடு ஐக்கியமாகயிருக்கிறவர்கள், கர்த்தருடைய சித்தத்தைப் புரிந்துகொண்டு, அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து சொல்லுவார்கள்.

கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதித்திருக்கிறார். கர்த்தருடைய ஆசீர்வாதம் தனக்கு கிடைத்திருப்பதுபோல, தன்னுடைய வீட்டாருக்கும் கிடைக்கவேண்டும் என்று ஆபிரகாம் விரும்புகிறார். தங்களுடைய குடும்பம் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறவர்கள், தங்களுடைய குடும்பத்தாருக்கு கர்த்தருடைய நீதியையும் நியாயத்தையும் கற்றுக்கொடுப்பார்கள். அவர்கள் கர்த்தருடைய வழியைக் காத்து நடக்கவேண்டுமென்று அவர்களுக்கு புத்திமதிகளை சொல்லுவார்கள்.

நம்முடைய பிள்ளைகளை நாம் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை கர்த்தருக்கு பிரியமான வழிகளில் வளர்க்கவேண்டும். அவர்களுக்கு கர்த்தருடைய நீதியையும் நியாயத்தையும் போதிக்கவேண்டும். கர்த்தருடைய வழியை காத்து நடப்பதற்கு அவர்களுக்கு பயிற்சி கொடுக்கவேண்டும்.

தானும் தன்னுடைய குடும்பத்தாரும் கர்த்தருடைய வழியை காத்து நடக்கவேண்டும் என்று ஆபிரகாம் கவனமாயிருக்கிறார். தன்னுடைய குடும்பத்தார் எல்லோரும் கர்த்தருக்கு பிரியமானவர்களாகவும், அவருக்கு பிரயோஜனமானவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது ஆபிரகாமின் விருப்பம். இதற்காகவே ஆபிரகாம், தன்னுடைய வீட்டாருக்கு, நீதியையும் நியாயத்தையும் கற்றுக்கொடுக்கிறார்.

கர்த்தர் ஆபிரகாமைப்பற்றிச் சொல்லும்போது, ""நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்'' (ஆதி 18:18,19) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் ஆபிரகாமை அறிந்திருக்கிறார். ஆபிரகாம் இப்போது செய்கிறதையும், அவர் இனிமேல் செய்யப்போகிறதையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். ஆபிரகாம் தன்னுடைய வீட்டாரின் மனதிலே சந்தேகத்தையோ, அவிசுவாசத்தையோ ஏற்படுத்த விரும்பவில்லை. தன்னுடைய வீட்டார் கர்த்தரைக் குறித்து தேவையில்லாத விவாதங்களையும், தர்க்கங்களையும் பண்ணிக்கொண்டிருக்கக்கூடாது என்று ஆபிரகாம் எதிர்பார்க்கிறார்.

தன்னுடைய வீட்டார் கர்த்தரை நம்பி நன்மை செய்யவேண்டும் என்பதும், கர்த்தருக்கு பயந்து ஜீவிக்கவேண்டும் என்பதும் ஆபிரகாமின் விருப்பம். ஆபிரகாம் கர்த்தருடைய வழியை காத்து நடக்கிறார். தன்னைப்போலவே தன்னுடைய வீட்டாரும் கர்த்தருடைய வழியை காத்து நடக்கவேண்டுமென்று ஆபிரகாம் அவர்களுக்கு கட்டளையிடவேண்டும். இது ஆபிரகாமின் குடும்ப பொறுப்பு. ஆபிரகாமின் குடும்பத்தில் கர்த்தரை ஆராதிக்கும் ஆராதனையும், கர்த்தருடைய உபதேசமும் நிரம்பியிருக்கவேண்டும்.

""கர்த்தருடைய வழியை காத்து நடப்பது'' என்னும் வாக்கியத்திற்கு, ""கர்த்தருடைய ஆராதனையில் அதிகமாய்ப் பங்கு பெறுதல்'' என்றும், ""எல்லா மனுஷரோடும் உண்மையாயும் கண்ணியமாயும் இருப்பது'' என்றும் பொருள்.

ஆபிரகாமின் வீட்டார் கர்த்தருடைய வழியை காத்து நடக்கும்போது, ஆபிரகாம் மரித்த பின்பும் அவர்கள், கர்த்தருடைய வழியை காத்து நடப்பார்கள். அவர்கள் தங்கள் காலத்திலும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவார்கள்.

கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கப்போகிறார். கர்த்தர் அந்தப் பட்டணங்களை அழிப்பதற்கான காரணத்தையும், ஆபிரகாமோடு பகிர்ந்துகொள்கிறார்.

கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, ""சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குர-ன்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன்'' (ஆதி 18:20,21) என்று சொல்லுகிறார்.

பாவத்தின் கூக்குரலும், பாவிகளின் கூக்குரலும் பரலோகத்திலே கேட்கிறது. கர்த்தர் பாவிகளை பழிவாங்குவார். அவர்களுடைய அக்கிரமங்களை விசாரிப்பார். கர்த்தர் பாவிகளை தண்டிக்கமாட்டார் என்றும், அவர்களுடைய பாவங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்றும் ஒரு சிலர் சொல்லுகிறார்கள். இவர்கள் கர்த்தருடைய அன்பையும், இரக்கத்தையும், கிருபையையும் பெரிதுபடுத்தி பேசுகிறவர்கள்.

கர்த்தர் அன்பும், கிருபையும், இரக்கமுமுள்ளவர் என்பது மெய்யான சத்தியம். அதே வேளையில் அவர், நீதியும், நியாயமும், சத்தியமுமுள்ள தேவனாயிருக்கிறார். கர்த்தர் பாவிகளை நேசிக்கிறார். ஆனால் அவர்களுடைய பாவங்களை வெறுக்கிறார். பாவிகள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

சோதோம் கொமோராவின் பாவம் மிகவும் கொடிதாயிருக்கிறது. அதன் கூக்குரல் பரலோகத்தில் பெரிதாய்க் கேட்கிறது. இந்தப் பட்டணத்து ஜனங்கள் அதிகமாய்ப் பாவம் செய்கிறார்கள். கர்த்தர் அவர்களுடைய பாவங்களை விசாரித்து, தம்முடைய நீதியின் பிரகாரம் அவர்களை நியாயந்தீர்க்க ஆயத்தமாயிருக்கிறார்.

கர்த்தர் தம்முடைய நியாயத்தீர்ப்பை யார்மீதும் திடீரென்று கொடுத்துவிடமாட்டார். கர்த்தர் ஒருவரை நியாயந்தீர்ப்பதற்கு முன்பாக, அதுபற்றி தம்முடைய தெய்வீக ஆலோசனைகளில் ஆலோசனைபண்ணிய பிறகே, அவர் நியாயந்தீர்ப்பார்.

சோதோம் கொமோராவின் பாவம் மிகவும் கொடியதாகயிருந்தாலும், கர்த்தர் அவர்களை அழித்துப்போடவேண்டுமென்று உடனே தீர்மானம்பண்ணவில்லை. அவர்களுடைய பாவங்களை பார்த்து அறியப்போவதாக கர்த்தர் சொல்லுகிறார். சோதோம் கொமோராவின் ஜனங்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்ப, காலஅவகாசம் கொடுக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் ஆபிரகாமும் அவர்களுக்காக பரிந்து பேசி ஜெபிக்கலாம். திறப்பின் வாசலில் நிற்கிறவர்களை கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

""ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது'' (ஏசா 59:16).

அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போகிறார்கள்; ஆபிரகாமைப் பார்க்க வந்த மூன்று புருஷரில் இரண்டுபேர் சோதோமை நோக்கிப் போகிறார்கள் (ஆதி 18:22). ஆபிரகாமை பார்க்க வந்த மூன்றாவது புருஷர் கர்த்தர். அவர் இப்போது சோதோமுக்குப் போகவில்லை. கர்த்தர் இன்னும் ஆபிரகாமோடு பேசிக்கொண்டிருக்கிறார். ஆபிரகாமோ இன்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருக்கிறார்.

ஆபிரகாமின் பரிந்து பேசும் ஜெபம்

ஆதி 18:23#33

ஆதி 18:23. அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?

ஆதி 18:24. பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?

ஆதி 18:25. துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.

ஆதி 18:26. அதற்கு கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.

ஆதி 18:27. அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.

ஆதி 18:28. ஒருவேளை ஐம்பது நீதிமாக்ளுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுவதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்:நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி 18:29. அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி 18:30. அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராம-ருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி 18:31. அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி 18:32. அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றார். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதி 18:33. கர்த்தர் ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.

நாம் வார்த்தையினாலும், ஜெபத்தினாலும் கர்த்தரோடு சம்பாஷணைபண்ணுகிறோம். கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலமாக நம்மோடு பேசுகிறார். நாம் ஜெபத்தின் மூலமாக கர்த்தரோடு பேசுகிறோம்.

கர்த்தர் ஆபிரகாமிடம் சோதோமைக் குறித்த தம்முடைய நோக்கங்களை வெளிப்படுத்துகிறார். கர்த்தருடைய வெளிப்பாட்டை பெற்றுக்கொண்ட உடன், ஆபிரகாம் கர்த்தரிடத்தில் சோதோமுக்காக பரிந்து பேச ஆரம்பிக்கிறார். கர்த்தருடைய வார்த்தை நமக்கு அறிவிக்கப்படும்போது, நாம் அதற்காக கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ண ஆரம்பிக்கவேண்டும். நம்முடைய ஜெபத்திற்கு ஆதரவாகவே கர்த்தருடைய வார்த்தை நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.

ஆபிரகாம் கர்த்தருக்கு சமீபமாய் சேருகிறார் (ஆதி 18:23). ஆபிரகாமின் இருதயம் கர்த்தருக்கு சமீபமாயிருக்கிறது.

""அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவி-ருந்து தோன்றுவார்; அவரைச் சமீபித்து வரப்பண்ணுவேன், அவர் சமீபித்து வருவார், என்னிடத்தில் சேரும்படி, தன் இருதயத்தைப் பிணைப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார்'' (எரே 30:21).

ஆபிரகாம் கர்த்தருடைய சமுகத்திலே தைரியமாய்க் கிட்டிச்சேர்ந்திருக்கிறார். அவருடைய விசுவாசம் கர்த்தருக்குள் உறுதியாயிருக்கிறது. அவர் கர்த்தருடைய கிருபையையும், இரக்கத்தையும், நன்மையையும் நம்பி, அவருக்கு சமீபமாய் சேர்ந்திருக்கிறார்.

ஆபிரகாம் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார். பரிசுத்தவேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிற இந்த ஜெபமே முதலாவது ஜெபமாகும். கர்த்தர் சோதோமை அழித்துப்போடாமல், அதை அழிவுக்கு தப்புவிக்கப்பண்ணவேண்டும் என்பதே ஆபிரகாமின் ஜெபம். ஆபிரகாம் கர்த்தரிடத்தில் சோதோமுக்காக பரிந்து பேசுகிறார்.

இந்த ஜெபம் பரிந்து பேசும் ஜெபத்திற்கு முதலாவது எடுத்துக்காட்டு. மற்றவர்கள்மீது இரக்கம் காண்பிக்க வேண்டுமென்று ஆபிரகாம் தேவனிடத்தில் மன்றாடுகிறார். ஆபிரகாம் தன்னுடைய விண்ணப்பத்திற்கான காரணங்களையும் தேவனிடத்தில் கூறுகிறார்.

கர்த்தர் நீதியுள்ளவர். அதே வேளையில் அவர் இரக்கமுமுள்ளவர். சோதோம் தண்டிக்கப்பட வேண்டும். சோதோமுக்கு வரும் தண்டனை ஆபிரகாமிற்கும், அவருடைய சந்ததிக்கும் ஒரு நிரந்தரமான பாடமாக அமைய வேண்டும். ஆபிரகாம் மம்ரேயில் இருக்கிறார். சிலகாலம் அவர் எபிரோனிலும் இருந்தார். இவ்விரண்டுமே யூதாவின் மலைப்பகுதியில் தெற்கு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பகுதிகள். சவக்கடலிலிருந்து எபிரோன் மலை 4200 அடி உயரத்தில் இருக்கிறது. சோதோம் சவக்கடலுக்கு அருகில் உள்ளது.

மம்ரேயிலிருந்து சோதோம் தென்கிழக்காக 26 மைல் தூரத்தில் உள்ளது. மலைப்பகுதியில் இருக்கும் ஆபிரகாம் சமபூமியை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருப்பார். ஆபிரகாம் தேவனோடு பரிந்து பேசிக் கொண்டிருக்கும்போது இரண்டு தூதர்களும் சோதோமிற்குச் சென்று விட்டார்கள். கர்த்தரும் ஆபிரகாமோடே பேசி முடித்த பின்பு, போய்விட்டார். ஆபிரகாமும் தன்னுடைய இடமான மம்ரேயிக்குத் திரும்பிப் போய்விட்டார்.

மறுநாள் மம்ரேயிலிருந்து சோதோமின் அழிவை ஆபிரகாம் தெளிவாகப் பார்க்கிறார். (ஆதி 18:33, ஆதி 19:27) துன்மார்க்கருக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும் என்பதற்குச் சோதோமின் அழிவு ஓர் அடையாளமாக இருக்கிறது.

கர்த்தர் பாவங்களை வெறுக்கிறார். ஆனாலும் அவர் பாவிகள்மீது இரக்கம் காண்பிக்கிறார். நாமும் பாவங்களை வெறுக்கவேண்டும். பாவிகளுக்காக கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணவேண்டும். பாவிகள் அழிந்துபோவது கர்த்தருக்கு பிரியமல்ல. அவர்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பி, அழிவுக்கு தப்பித்துக்கொள்ளவேண்டும் என்பதே கர்த்தருக்கு பிரியம்.

ஆபிரகாம் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, ""துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ'' என்று கேட்கிறார். கர்த்தர் நீதியுள்ளவர். அவர் நீதிமானை அழிக்கமாட்டார். சோதோம் பட்டணத்தில் துன்மார்க்கரும் இருக்கிறார்கள். நீதிமான்களும் இருக்கிறார்கள். லோத்து ஒரு நீதிமான். கர்த்தர் சோதோமை அழிக்கும்போது, அந்தப் பட்டணத்திலுள்ள துன்மார்க்கரோடே நீதிமான்களும் அழிந்துபோவார்களே என்னும் வேதனை ஆபிரகாமின் மனதில் உண்டாயிற்று.

சோதோம் பட்டணத்திலுள்ள எல்லோரும் அழிவுக்கு தப்பிக்கவேண்டுமென்று ஆபிரகாம் கர்த்தரிடத்தில் பரிந்துபேசவில்லை. தேவனுடைய நீதி அவர்கள் மத்தியில் நிறைவேறும் என்பது ஆபிரகாமுக்கு தெரியும். கர்த்தர் நீதியுள்ளவர். அவர் நீதியாய் நியாயம் விசாரிக்கிறவர். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நீதியும் நியாயமுமுள்ளதாக இருக்கும். ஆபிரகாம் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, ""சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ'' (ஆதி 18:25) என்று கேட்கிறார்.

ஆபிரகாம் கர்த்தரிடத்தில் விசுவாசத்தோடு ஜெபம்பண்ணுகிறார். ஆபிரகாமின் ஜெபம் பரிந்து பேசும் ஜெபமாகவும், விசுவாச ஜெபமாகவும் இருக்கிறது. சோதோம் பட்டணத்தில், துன்மார்க்கரும் நீதிமான்களும் கலந்திருப்பதுபோல, இந்த உலகத்திலும் கலந்திருக்கிறார்கள். இந்த உலகத்து ஜனங்களில் சிலர் நல்லவர்களாகவும், சிலர் தீயவர்களாகவும் இருக்கிறார்கள்.

நீதிமான்கள் துன்மார்க்கரோடே கலந்திருந்தாலும், கர்த்தர் நீதியுள்ளவராக இருக்கிறார். அவர் துன்மார்க்கரோடே நீதிமானை அழிக்கமாட்டார். ஆபிரகாம் கர்த்தரை நோக்கி, ""துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ'' (ஆதி 18:25) என்று சொல்லுகிறார்.

நீதிமான்களும் துன்மார்க்கரோடே பாடுகளை அனுபவிப்பார்கள். ஆனாலும் நீதிமான்கள் துன்மார்க்கரைப்போல பாடுகளை அனுபவிக்கமாட்டார்கள். பாடுகளையும் வேதனைகளையும் அனுபவிப்பது துன்மார்க்கருக்கு தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறது.

ஆபிரகாம் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது தன்னை வெகுவாகத் தாழ்த்துகிறார். ""இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்'' (ஆதி 18:27) என்று ஆபிரகாம் கர்த்தரிடத்தில் மிகுந்த பணிவோடு சொல்லுகிறார். ஆபிரகாம் தன்னுடைய பணிவான வார்த்தையை மறுபடியும் சொல்லும்போது, ""இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்'' (ஆதி 18:31) என்று சொல்லுகிறார்.

ஆபிரகாம் கர்த்தருக்கு சமீபமாய்ச் சேர்ந்து, அவரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார். தன்னுடைய தைரியத்தைப் பார்த்து ஆபிரகாமுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. நாமும் கர்த்தருடைய கிருபையினால், அவருடைய கிருபாசனத்தண்டையில் கிட்டிச்சேருகிற சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். தம்மிடத்தில் பேசுவதற்கு கர்த்தர் நமக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். நாம் கர்த்தருக்கு சமீபமாய்ச் சேருவதும், அவருடைய சமுகத்திலே ஜெபம்பண்ணுவதும் நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம்.

""அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்தி-ருந்து கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? (2சாமு 7:18).

ஆபிரகாம் கர்த்தரிடத்தில் பரிந்து பேசி ஜெபம்பண்ணினாலும், அவர் கர்த்தரோடு போராடி ஜெபம்பண்ணுகிறார். ஆபிரகாம் கர்த்தரை நோக்கி, ""பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?'' (ஆதி 18:24) என்று கேட்கிறார்.

அதற்கு கர்த்தர்: ""நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன்'' (ஆதி 18:26) என்று ஆபிரகாமுக்கு பிரதியுத்தரம் சொல்லுகிறார். ஆபிரகாமின் பரிந்து பேசுகிற ஜெபவார்த்தைகளைக் கேட்டு கர்த்தர் கோபப்படவில்லை. ஆபிரகாமின் விண்ணப்பத்திற்கு கர்த்தர் செவிகொடுக்கிறார்.

கர்த்தர் நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்டு, அவர்கள்மீது கோபப்படமாட்டார். செம்மையானவர்களின் ஜெபம் கர்த்தருக்கு பிரியமானது.

""சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்'' (சங் 80:4).

""துன்மார்க்கருடைய ப- கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்'' (நீதி 15:8).

ஆபிரகாம் கர்த்தரோடு போராடி ஜெபம்பண்ணுகிறார். ஆபிரகாமின் பரிந்து பேசும் ஜெபத்தையும், போராடி ஜெபிக்கும் ஜெபத்தையும் பார்த்து, கர்த்தர் அவர்மீது பிரியப்படுகிறார்.

சோதோமின் பாவம் மிகவும் கொடியதாயிருக்கிறது. அது ஆபிரகாமுக்கும் தெரியும். ஆனாலும் அந்தப் பட்டணத்திற்குள்ளே ஒரு சில நீதிமான்களும் இருப்பார்கள் என்று ஆபிரகாம் நம்புகிறார். கர்த்தர் அந்த நீதிமான்கள் நிமித்தம், அந்தப் பட்டணத்தை அழிக்கமாட்டார் என்று ஆபிரகாம் நம்புகிறார் (ஆதி 18:24).

சோதோமும் கொமோராவும் பாவமான ஸ்தலங்களாகயிருந்தாலும், அதிலும் ஒரு சில நீதிமான்கள் இருந்தால், கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் அந்தப் பட்டணங்களுக்கு கிடைக்கும் என்பது ஆபிரகாமின் நம்பிக்கை. கர்த்தர் தம்முடைய கிருபையினால் சோதோமின் ஜனங்களுக்கு இரக்கம் காண்பிக்கவேண்டும் என்பது ஆபிரகாமின் விருப்பம்.

சோதோம் பட்டணத்தில் எத்தனை நீதிமான்கள் இருப்பார்கள் என்பது ஆபிரகாமுக்கு தெரியாது. ""பட்டணத்திற்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள்'' என்று ஆபிரகாம் கர்த்தரிடத்தில் சொல்லுகிறார். அந்தப் பட்டணத்திலே எத்தனை நீதிமான்கள் இருக்கிறார்கள் என்பது கர்த்தருக்கு தெரியும்.

சோதோம் பட்டணத்தில் ஐம்பது நீதிமான்கள் இருப்பார்களா என்னும் சந்தேகம் ஆபிரகாமுக்கு வந்துவிடுகிறது. ஒருவேளை சோதோம் பட்டணத்திற்குள்ளே, ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள் என்று ஆபிரகாம் நினைக்கிறார். நீதிமான்களின் எண்ணிக்கை குறைவாகயிருந்தாலும், கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் சோதோம் பட்டணத்திற்கு கிடைக்கவேண்டும் என்பது ஆபிரகாமின் பரிந்து பேசும் ஜெபமாகும்.

ஆபிரகாம் கர்த்தரை நோக்கி, ""ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுவதையும் அழிப்பீரோ'' என்று கேட்கிறார். அதற்கு கர்த்தர்: ""நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை'' என்று சொல்லுகிறார்.

சோதோம் பட்டணத்தில் நாற்பத்தைந்து நீதிமான்கள் இருப்பார்களா என்னும் சந்தேகமும் ஆபிரகாமுக்கு வந்துவிடுகிறது. ஆகையினால் ஆபிரகாம் இன்னும் கர்த்தரோடே பேசி, ""நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ'' என்று கேட்கிறார். அதற்கு கர்த்தர்: ""நாற்பது நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை'' (ஆதி 18:29) என்று சொல்லுகிறார்.

தான் கர்த்தரிடத்தில் அதிகமாக பேசினால், கர்த்தருடைய கோபம் தன்மீது வருமோ என்னும் சந்தேகம் ஆபிரகாமுக்கு வருகிறது. ஆகையினால் அவர் கர்த்தரிடத்தில், ""நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்கு கோபம் வராமலிருப்பதாக'' (ஆதி 18:30) என்று சொல்லுகிறார்.

கர்த்தருக்கு தன்மீது கோபம் வந்தாலும், ஆபிரகாம் தன்னுடைய பரிந்து பேசும் ஜெபத்தை நிறுத்திவிடவில்லை. அவர் கர்த்தரை நோக்கி, ""முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ'' என்று கேட்கிறார். அதற்கு கர்த்தர், ""முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை'' (ஆதி 18:30) என்று சொல்லுகிறார்.

சோதோம் பட்டணத்தில், எத்தனை நீதிமான்கள் இருப்பார்கள் என்னும் எண்ணிக்கை ஆபிரகாமுக்கு தெரியவில்லை. ஆபிரகாம் ஆரம்பத்தில், அந்தப் பட்டணத்தில் ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள் என்று சொன்னார். அதன் பின்பு நாற்பத்தைந்து என்றும், இப்போது முப்பது நீதிமான்கள் என்றும் சொல்லுகிறார்.

சோதோம் பட்டணத்தில் முப்பது நீதிமான்கள் இருப்பார்களா என்னும் சந்தேகமும் ஆபிரகாமுக்கு வந்துவிடுகிறது. ஆகையினால் அவர் கர்த்தரிடத்தில், ""இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ'' என்று சொல்லுகிறார். அதற்கு கர்த்தர்: ""இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை'' (ஆதி 18:31) என்று சொல்லுகிறார்.

ஆபிரகாம் இந்த விண்ணப்பத்தை கர்த்தரிடத்தில் ஏறெடுக்கும்போது, மிகவும் பணிவாக, ""இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்'' என்று சொல்லி தன்னுடைய விண்ணப்பத்தை சொல்லுகிறார்.

சோதோம் பட்டணத்தாருக்காக தான் கர்த்தரிடத்தில் தொடர்ந்து பரிந்துபேசினால், கர்த்தருடைய கோபம் தன்மீது வருமோ என்னும் சந்தேகம் ஆபிரகாமின் மனதில் உண்டாயிற்று. ஆகையினால் ஆபிரகாம் கர்த்தரை நோக்கி, ""ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்'' (ஆதி 18:32) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் தன்மீது கோபப்பட்டாலும், ஆபிரகாம் சோதோம் பட்டணத்தாருக்காக பரிந்து பேசுவதை நிறுத்திவிடவில்லை. அவர் மேலும் கர்த்தரை நோக்கி, ""பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ'' என்று கேட்கிறார். அதற்கு கர்த்தர்: ""பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை'' (ஆதி 18:32) என்று சொல்லுகிறார்.

ஆபிரகாம் ஐம்பது நீதிமான்களில் ஆரம்பித்தார். இப்போது பத்து நீதிமான்கள் வரையிலும் இறங்கி வந்திருக்கிறார். சோதோம் பட்டணத்தாருக்கு கர்த்தர் தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் காண்பிக்கவேண்டும் என்பது ஆபிரகாமின் விருப்பம். இதற்காகவே அவர் கர்த்தரிடத்தில் இதுவரையிலும் பரிந்துபேசி ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறார்.

ஆபிரகாம் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, கர்த்தருடைய பொதுவான நல்ல சுபாவம் இங்கு வெளிப்படுகிறது. கர்த்தர் துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிக்கமாட்டார். அவர் துன்மார்க்கரை சங்கரிப்பதுபோல, நீதிமானை சங்கரிக்கமாட்டார். நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது கர்த்தருக்கு தூரமாயிருக்கும். கர்த்தர் சர்வலோக நியாயாதிபதியாயிருக்கிறார். அவர் நீதி செய்வார்.

ஆபிரகாம் கர்த்தரிடத்தில் சோதோம் பட்டணத்தாருக்காக தொடர்ந்து பரிந்துபேசி ஜெபித்துக்கொண்டே இருக்கிறார். ஆபிரகாம் ஜெபம்பண்ணி முடிக்கும் வரையிலும், கர்த்தர் ஆபிரகாமுக்கு அருகாமையில் நிற்கிறார். ஆபிரகாம் தொடர்ந்து ஜெபிக்கும்போது, கர்த்தர் தம்முடைய பொறுமையை இழந்து, அந்த இடத்தை விட்டு விலகிப்போய்விடவில்லை. ஆபிரகாம் ஜெபம்பண்ணி முடித்த பின்பே, கர்த்தர் அவ்விடத்தை விட்டுப்போகிறார்.

ஆபிரகாம் தான் பரிந்து பேசி ஜெபிப்பதை எப்பொழுது நிறுத்துகிறாரோ, அப்பொழுதுதான் கர்த்தரும் அவருக்கு பிரதியுத்தரம் சொல்லுவதை நிறுத்துவார். ஆபிரகாம் கர்த்தரிடத்தில் இன்னும் அதிகமாய் ஜெபம்பண்ணினால், கர்த்தரும் இன்னும் அதிகமாய் அவருக்கு பிரதியுத்தரம் சொல்லுவார். இதுவே ஜெபத்தின் வல்லமை.

நாம் கர்த்தருடைய சமுகத்திலே ஜெபிக்க ஜெபிக்க, கர்த்தருடைய பதில்களை பெற்றுக்கொள்ளலாம். நம்முடைய ஜெபங்கள் ஒருபோதும் வீணாய்ப்போவதில்லை. கேளுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும் என்று கர்த்தர் நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். நாம் கேட்கும் வரையிலும் கர்த்தர் நமக்கு கொடுத்துக் கொண்டேயிருப்பார். அவர் நம்முடைய வேண்டுதல்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் செவிகொடுத்துக் கொண்டேயிருப்பார்.

கர்த்தர் ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு போய்விடுகிறார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்புகிறார் (ஆதி 18:33).

இரண்டு நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே நடந்து செல்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் இருவரும் பிரிந்து போய்விடுகிறார்கள். யாத் 33:11 ஆவது வசனத்தில் கர்த்தர் மோசேயிடம் ""ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதைப் போல முகமுகமாகப் பேசினார்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தர் ஆபிரகாமிடத்தில் இதுபோலவே பேசுகிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.