17 அதிகாரம்

17 அதிகாரம்

கர்த்தர் இரக்கங்களின் பிதாவாகயிருக்கிறார். ஆபிராம் விசுவாசமுள்ளவர்கள் எல்லோருக்கும் தகப்பனாகயிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு அது உறுதிபண்ணப்படுகிறது.

ஆபிராம் ""தேவனுடைய சிநேகிதர்'' என்று அழைக்கப்படுகிறார். கர்த்தர் ஆபிராமோடு யோசனையும் பண்ணுகிறார். அவரோடு உடன்படிக்கையும் பண்ணுகிறார். கர்த்தர் ஆபிராமோடு தம்முடைய இரகசியத்தையும் பகிர்ந்துகொள்கிறார்.

கர்த்தர் ஆபிராமோடு பண்ணிய உடன்படிக்கையைப்பற்றி ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது.

""அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும், கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன்'' (ஆதி 15:18#21).

கர்த்தர் ஆபிராமோடு இந்த உடன்படிக்கைபண்ணின சூழ்நிலைகளும், காலமும், மற்ற விவரமும் (ஆதி 17:1,2). ஆபிராம் கர்த்தரை முகங்குப்புற விழுந்து வணங்குகிறார் (ஆதி 17:3).

கர்த்தர் ஆபிராமோடு பண்ணின உடன்படிக்கையின் அம்சங்கள். ஆபிராம் திரளான ஜாதிகளுக்கு தகப்பனாவார் (ஆதி 17:4,6). ஆபிராமின் பெயர் இனிமேல் ஆபிரகாம் என்று அழைக்கப்படும் (ஆதி 17:5).

கர்த்தர் ஆபிராமுக்கும் அவருக்கு பின்வரும் அவருடைய சந்ததிக்கும் தேவனாயிருப்பார். கர்த்தர் அவர்களுக்கு கானான் தேசம் முழுவதையும் நித்திய சுதந்தரமாகக் கொடுப்பார் (ஆதி 17:7,8).

கர்த்தர் ஆபிராமோடு பண்ணின உடன்படிக்கையானது விருத்தசேதனத்தினால் உறுதிபண்ணப்படுகிறது (ஆதி 17:9#14).

சாராய் இனிமேல் சாராள் என்று அழைக்கப்படுவாள். சாராள் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெறுவாள் (ஆதி 17:15,16). ஆபிராம் கர்த்தருடைய வாக்குத்தத்தைப் பெற்றுக்கொள்கிறார் (ஆதி 17:17).

ஆபிராம் இஸ்மவேலுக்காக கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார் (ஆதி 17:18). கர்த்தர் ஆபிராமின் விண்ணப்பத்திற்கு செவிகொடுக்கிறார் (ஆதி 17:19#22).

கர்த்தர் நியமித்த பிரகாரம், ஆபிரகாமும் அவருடைய குடும்பத்தாரும் விருத்தசேதனம்பண்ணுகிறார்கள் (ஆதி 17:23#27).

சர்வல்லமையுள்ள தேவன்

ஆதி 17:1#3

ஆதி 17:1. ஆபிராம் தொண்ணூற்றென்பது வயதானபோது கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வல்லமையுள்ள தேவன்: நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.

ஆதி 17:2. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப் பண்ணுவேன் என்றார்.

ஆதி 17:3. அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி:

இஸ்மவேல் பிறந்து பதிமூன்று வருஷமாயிற்று. ஆபிராம் இப்போது தொண்ணூற்று ஒன்பது வயதுள்ளவராயிருக்கிறார். ஆபிராமுக்கு அன்றாட அப்பம் போல, அனுதினமும் அற்புதமும் அதிசயமும் நடக்கவில்லை. கர்த்தருக்கு ஏற்ற வேளையிலே, ஆபிராமின் ஜீவியத்தில் அவ்வப்போது அற்புதம் நடைபெறுகிறது.

ஆபிராமைப்போலவே, கர்த்தருடைய பரிசுத்தவான்களில் அநேகர், அற்புதங்களையும் அடையாளங்களையும் அன்றாடம் பெற்றுக்கொள்வதில்லை. அவர்களுடைய ஜீவியத்தில் எப்போதாவது அற்புதம் நடைபெறுகிறது. அதற்காக அவர்கள் கர்த்தரைத் துதிக்கிறார்கள். கர்த்தர் நமக்கு அன்றாடம் விருந்து வைக்காவிட்டாலும், நமக்கு போஜனம் கொடுத்து, நம்முடைய பசியைப் போக்குவார்.

நாம் பரலோகத்திற்குப் போகும் காலம் வரையிலும், இந்தப் பூமியிலே நாம் பரதேசிகளாய் சஞ்சரிக்கிறோம். பரலோகத்திலே நமக்கு நித்திய விருந்து வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. இந்தப் பூமியில் நமக்கு நித்திய விருந்து கிடைக்காவிட்டாலும், கர்த்தர் தம்முடைய கிருபையினால், நமக்கு தேவையான போஜனம் கொடுப்பார்.

ஆபிராமுக்கும் சாராயிக்கும் இன்னும் பிள்ளை பிறக்கவில்லை. தன் சந்ததியைப் பார்க்கவேண்டுமென்று ஆபிராம் அவசரப்படுகிறார். அவரால் கர்த்தருடைய வேளை வரும் வரையிலும் பொறுமையோடு காத்திருக்க முடியவில்லை. சாராயும் ஆபிராமைப்போலவே அவசரப்படுகிறாள். அவர்கள் கர்த்தருடைய வேளைக்காக காத்திராமல், அவசரப்பட்டதினால், ஆபிராம் ஆகாரை மறுமனையாட்டியாக விவாகம்பண்ணுகிறார். ஆபிராமுக்கும் ஆகாருக்கும் இஸ்மவேல் பிறக்கிறான்.

இஸ்மவேல் பிறந்து பதிமூன்று வருஷமாயிற்று. ஆபிராமுக்கு இப்போது தொண்ணூற்று ஒன்பது வயதாயிற்று. அப்பொழுது கர்த்தர் ஆபிராமுக்கு தரிசனமாகிறார். கர்த்தர் தம்முடைய ஷேக்கைனா மகிமையில், தம்மை ஆபிராமுக்கு வெளிப்படுத்துகிறார். ஆபிராம் கர்த்தருடைய மகிமையான பிரசன்னத்தை பிரத்தியட்சமாய்ப் பார்க்கிறார்.

கர்த்தர் ஆபிராமுக்கு தரிசனமானபோது, ஆபிராம் கர்த்தரை முகங்குப்புற விழுந்து வணங்குகிறார். கர்த்தர் ஆபிராமோடு பேசுகிறார். அங்கு தேவனுடைய ஷேக்கைனா மகிமை பிரகாசமாகயிருக்கிறது. அந்த மகிமைக்கு முன்பாக ஆபிராம் மங்கிப் போனவராகயிருக்கிறார். சர்வவல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக ஆபிராமால் நிற்க முடியவில்லை. ஆபிராம் தன்னை அபாத்திரவானாகப் பாவித்து, தரையிலே முகங்குப்புற விழுகிறார்.

கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""நான் சர்வல்லமையுள்ள தேவன்: நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன்'' (ஆதி 17:1,2) என்று சொல்லுகிறார்.

""சர்வல்லமையுள்ள தேவன்'' என்னும் பெயருக்கான எபிரெய வார்த்தை ""எல்#ஷடாய்'' என்பதாகும். ""எல்'' என்னும் பெயருக்கு வல்லமையுள்ளவர் என்று பொருள். ""ஷடாய்'' என்னும் பெயருக்கு ""மார்பகம் உடையவர்'' என்று பொருள். தேவன் வல்லமையுள்ளவர், அதேவேளையில் பராமரிக்கிறவர், வலிமையைக் கொடுக்கிறவர், திருப்தியாக்குகிறவர், ஜனங்களுடைய தேவைகளைச் சந்திக்கிறவர்.

கர்த்தர் ஆபிரகாமைத் திரளாக வர்த்திக்கப் பண்ணுகிறவர். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கிருபையினால் ஆபிரகாமின் சந்ததி எண்ணிக்கையில் தூளைப் போலவும் (ஆதி 13:16), நட்சத்திரங்களைப் போலவும் (ஆதி 15:5), மணலைப்போலவும் (ஆதி 22:17) இருக்கும்.

கர்த்தர் இங்கு சொல்லுகிற வாக்குத்தத்தம், ஆபிராமுக்கும் அவருடைய பின்சந்ததியாருக்கும் பொதுவாக சொல்லப்படுகிறது. இயேசுகிறிஸ்துவிற்குள் விசுவாசிகளாகயிருக்கிற நம் எல்லோருக்கும் இந்த வாக்குத்தத்தத்தில் பங்குள்ளது. விசுவாசிகளாகிய நாம் ஆபிராமுக்கு ஆவிக்குரிய சந்ததியாராயிருக்கிறோம்.

கர்த்தர் ஆபிராமுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார். ""நான் சர்வவல்லமையுள்ள தேவன்'' என்று கர்த்தர் ஆபிராமுக்கு சொல்லுகிறார். கர்த்தர் தம்முடைய சுபாவத்தை ஆபிராமுக்கு வெளிப்படுத்துகிறார். நாம் கர்த்தரைப்பற்றித் தெரிந்துகொள்ளும்போது, அவருடைய சுபாவத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். கர்த்தர் நமக்கு சர்வவல்லமையுள்ளவராகயிருக்கிறார்.

சர்வவல்லமையுள்ள தேவன் என்பதற்கான எபிரெய வார்த்தை ""எல்ஷடாய்'' என்பதாகும். இதற்கு முன்பு கர்த்தர் தம்மை வெளிப்படுத்தியபோது, அவர் தம்மை ""யேகோவா'' என்று வெளிப்படுத்தினார்.

""மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை'' (யாத் 6:2,.3).

கர்த்தர் யாக்கோபுக்கு தம்மை சர்வவல்லமையுள்ள தேவனாக வெளிப்படுத்தியிருக்கிறார். ""பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னி-ருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்'' (ஆதி 35:11).

கர்த்தர் இஸ்ரவேலின் முற்பிதாக்களுக்கு தம்மை சர்வவல்லமையுள்ள தேவனாக வெளிப்படுத்தினார். அவர்களும் கர்த்தரை சர்வவல்லமையுள்ளதேவன் என்றே அழைத்தார்கள்.

""சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணுவார்'' (ஆதி 28:3).

""அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வவல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப் பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப் போல் இருப்பேன் என்றான்'' (ஆதி 43:14).

""யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்தார்'' (ஆதி 48:3).

மோசேயின் காலத்திற்கு பின்பு கர்த்தரை அழைப்பதற்கு, யேகோவா என்னும் பெயரே அதிகமாக பயன்படுத்தப்பட்டது. சர்வவல்லமையுள்ள தேவன் என்று பொருள்படும், ""எல்ஷடாய்'' என்னும் பெயர் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை.

கர்த்தர் சர்வவல்லமையுள்ள தேவனாகயிருக்கிறார். அவர் நமக்கு போதுமானவர். அவரால் எல்லாம் கூடும். சர்வவல்லமையுள்ள தேவனுக்கு வேறு யாருடைய உதவியும், ஒத்தாசையும் தேவைப்படாது. அவர் ஒருவராகவே பலத்த காரியங்களை செய்கிறவர்.

கர்த்தர் ஆபிராமிடம், ""நான் சர்வவல்லமையுள்ள தேவன்'' என்று சொல்லும்போது, ""நான் உனக்கு போதுமானவராயிருக்கிற தேவன்'' என்று பொருள்படுமாறு சொல்லுகிறார்.

கர்த்தர் நம்மோடு உடன்படிக்கை பண்ணும்போது, அவர் நம்மிடத்திலிருந்தும் சில காரியங்களை எதிர்பார்க்கிறார். உடன்படிக்கை கர்த்தருக்கும் நமக்கும் பொதுவானது. இந்த உடன்படிக்கையில் கர்த்தர் கடைப்பிடிக்க வேண்டிய பகுதியும் உள்ளது. நாம் கடைப்பிடிக்க வேண்டிய பகுதியும் உள்ளது.

கர்த்தர் ஆபிராமோடு உடன்படிக்கை பண்ணும்போது, ""நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு'' என்று சொல்லுகிறார். இந்த நிபந்தனையை ஆபிராம் நிறைவேற்றவேண்டும். நாம் கர்த்தருக்கு முன்பாக எப்போதும் உத்தமமாய் நடக்கவேண்டும். இதுவே நாம் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

புதியஏற்பாட்டுக்கால உடன்படிக்கையில் பரிசுத்தமும், பரிபூரணமும் மனுஷரிடம் காணப்படவேண்டும். இதே எதிர்பார்ப்பு ஆபிரகாமின் உடன்படிக்கையிலும் காணப்படுகிறது. ஆபிரகாம் பரிசுத்தமாகவும், பரிபூரணமாகவும் இருப்பதற்குச் சர்வ வல்லமையுள்ள தேவன் உதவி புரிகிறார். பண்பில் மாறாத தேவன் நமக்கும் உதவி புரிவார். எல்லோரும் பாவம் செய்து ஏகமாய் கெட்டுப் போய் இருக்கிறார்கள்.

மனுஷர் இரட்சிக்கப்படுவதற்கு தேவகிருபை தேவை. (லூக்கா 1:74-75; ரோமர் 6:1-23; ரோமர் 8:1-13; ரோமர் 12:1-2; 1கொரி 1:18-30; 1கொரி 3:16-17; 1கொரி 6:9-20; 1கொரி 9:27; 2கொரி 5:17-21; 2கொரி 6:14-18; 2கொரி 7:1; கலா 5:16-26; எபே 4:22-24; கொலோ 3:5-10; 2தீமோ 2; தீத்து 2:11-14; எபி 12:14; 1யோவான் 1:7-9; 1யோவான் 2:29; 1யோவான் 3:5-10; 1யோவான் 5:1-4,18) ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட அதே சுவிசேஷமே நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. (கலா 3:8; ரோமர் 4).

நாம் கர்த்தரோடு எப்போதும் ஐக்கியமாயிருக்கவேண்டும். நம்முடைய இருதயத்தில் கர்த்தருடைய பரிசுத்த பிரசன்னம் தங்கியிருக்கவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய ஆராதனைகளிலும், நாம் கர்த்தருக்காக செய்யும் ஊழியங்களிலும், நாம் கர்த்தருக்கு முன்பாக உத்தமமாய் நடக்கவேண்டும்.

""ஆகையால் இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்-யிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்'' (1சாமு 2:30).

நாம் கர்த்தருக்கு முன்பாக உத்தமமாய் நடக்காமல், கர்த்தரைப் பின்பற்றுவது என்பதோ, கர்த்தருக்கு ஊழியம் செய்வது என்பதோ, கர்த்தரை ஆராதிப்பது என்பதோ இயலாத காரியம். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் உண்மையும் உத்தமமுமே நமக்கு பிரதானம். கர்த்தர் நமக்கு போதுமானவர் என்பதை நாம் உறுதிசெய்துகொண்டு, அவருக்கு முன்பாக நாம் உத்தமமாய் நடக்கவேண்டும்.

ஆபிராம் கர்த்தருக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து வணங்குகிறார். அவர் சாஷ்டாங்கமாக தரையிலே விழுகிறார். சாஷ்டாங்கமாக விழும் முறைகளைப்பற்றி பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :

1. தேவனுடைய பிரசன்னத்தினால் ஆளுகை செய்யப்பட்டு சாஷ்டாங்கமாய் விழுதல். (ஆதி 15:12-17; உபா 9:18,25; நியா 13:20; எசே 1:28; எசே 3:23; எசே 43:3; எசே 44:4; தானி 8:17; தானி 10:5-19; மத் 17:6; அப் 9:4; அப் 10:10; வெளி 1:17)

2. ஜெபத்தில் சாஷ்டாங்கமாய் விழுதல். (ஆதி 17:3,17; லேவி 9:24; எண் 14:5; எண் 16:4,22,45; எண் 20:6; எண் 22:31; உபா 9:18,25; யோசு 5:14; யோசு 7:6; 1இராஜா 18:39; லூக்கா 17:16; வெளி 5:8,14; வெளி 7:11; வெளி 11:16)

3. ஜெபத்தின் பாரங்களினால் சாஷ்டாங்கமாய் விழுதல். (யோசு 7:6; மத் 26:39; மாற்கு 3:11; மாற்கு 5:22; மாற்கு 7:25; மாற்கு 14:35; லூக்கா 5:12; யோவான் 11:32)

ஆபிராம் # ஆபிரகாம்

ஆதி 17:4#6

ஆதி 17:4. நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.

ஆதி 17:5. இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

ஆதி 17:6. உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்தி-ருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.

கர்த்தருடைய உடன்படிக்கை கிருபையின் உடன்படிக்கையாயிருக்கிறது. கர்த்தரே தம்முடைய உடன்படிக்கைக்கு ஸ்தாபகர். கர்த்தரே நம்மோடு உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். கர்த்தர் தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக, உடன்படிக்கையின் ஷரத்துக்களை எழுதுகிறார்.

கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்'' (ஆதி 17:4) என்று சொல்லுகிறார்.

ஆபிராமுக்கு மாம்சத்தின் பிரகாரமாக பிறக்கும் சந்ததி திரளாயிருக்கும். ஆபிராமுக்கு மாம்சப்பிரகாரமான சந்ததிகள் இருப்பதுபோல, ஆவிக்குரிய சந்ததியும் இருப்பார்கள். இயேசுகிறிஸ்துவை தங்கள் இரட்சகராக விசுவாசிக்கிற எல்லோருமே, ஆபிரகாமின் சந்ததியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லா காலங்களிலும், எல்லா தேசங்களிலும் இருக்கிறார்கள். ஆபிராம் தேவனுடைய சிநேகிதராகவும் இருக்கிறார். அவர் விசுவாச சந்ததியார் எல்லோருக்கும் தகப்பனாகவும் இருக்கிறார்.

கர்த்தர் ஆபிராமோடு பண்ணுகிற உடன்படிக்கையை உறுதிபண்ணும் வண்ணமாக, ஆபிராம் என்னும் பெயரை, ஆபிரகாம் என்று மாற்றுகிறார். ஆபிராம் என்னும் பெயருக்கு ""உயர்த்தப்பட்ட தகப்பன்'' என்று பொருள். ஆபிரகாம் என்னும் பெயருக்கு, ""திரளான ஜாதிகளுக்கு தகப்பன்'' என்று பொருள்.

கர்த்தர் ஆபிராமைக் கனம்பண்ணுகிறார். கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்'' (ஆதி 17:5) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் ஆபிராமின் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார். ஆபிராமுக்கும் சாராயிக்கும் இன்னும் ஈசாக்கு பிறக்கவில்லை. ஆனாலும் கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""நீ திரளான ஜாதிகளுக்கு தகப்பனாவாய்'' என்று சொல்லுகிறார். ஆபிராம் கர்த்தருடைய வாக்குத்தத்த வார்த்தைகளை விசுவாசிக்கவேண்டும். அவர் தன்னுடைய விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்து, ஊன்றக்கட்டப்படவேண்டும். ஆபிராம் தன் விசுவாசத்தில் நிலைத்திருக்க, கர்த்தர் அவரை உற்சாகப்படுத்துகிறார்.

ஆபிரகாம் திரளான ஜாதிகளுக்கு தகப்பனாகயிருப்பார். இஸ்ரவேலர், இஸ்மவேலர், மீதியானியர், ஏதோமியர், அரபியர் ஆகியோருக்கு ஆபிரகாம் முற்பிதாவாக இருக்கிறார். (ஆதி 17:20; ஆதி 25:1-3,24-27; ஆதி 35:11).

கர்த்தர் ஆபிரகாமோடு தம்முடைய உடன்படிக்கையை, நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிக்கிறார். ஆபிரகாமின் சந்ததி நித்திய காலமாக இருந்தால்தான் தேவனால் தமது உடன்படிக்கையை நித்திய காலத்திற்கும் நிறைவேற்றமுடியும். ஆகையினால் ஆபிரகாமின் இயற்கையான சந்ததி பூமியில் நித்திய காலமாக இருக்கும்.

கானான் தேசம் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகயிருக்கும். ஆபிரகாமின் சந்ததி நித்திய காலமாக இருக்கவில்லையென்றால், கானான் தேசம் அவர்களுக்கு நித்திய சுதந்தரமாக இருக்காது.

கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்தி-ருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்'' (ஆதி 17:6) என்றும் சொல்லுகிறார். ஆபிராம் திரளான ஜாதிகளுக்கு தகப்பனாயிருப்பது மாத்திரமல்ல, அவர் ராஜாக்களுக்கும் தகப்பனாயிருப்பார்.

விருத்தசேதனம்

ஆதி 17:7#14

ஆதி 17:7. உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

ஆதி 17:8. நீ பரதேசியாய்த் தங்கிவருகிறகானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.

ஆதி 17:9. பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.

ஆதி 17:10. எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.

ஆதி 17:11. உங்கள் நுனித்தோ-ன் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

ஆதி 17:12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம்நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.

ஆதி 17:13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக் கடவது;

ஆதி 17:14. நுனித்தோ-ன் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையாயிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.

கர்த்தர் ஆபிராமோடு பண்ணின உடன்படிக்கையை உறுதிபண்ணுகிறார். கர்த்தர் ஆபிராமுக்கும், அவருக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் அவருடைய சந்ததிக்கும், தம்முடைய உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிக்கிறார். கர்த்தர் ஆபிராமுக்கும், அவருக்கு பின்வரும் அவருடைய சந்ததிக்கும் தேவனாயிருப்பார் (ஆதி 17:7).

கர்த்தருடைய உடன்படிக்கை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிக்கப்படுகிறது. இந்த உடன்படிக்கையை மாற்ற முடியாது. இதைத் திரும்பபெற்றுக்கொள்ளவும் முடியாது. இந்த உடன்படிக்கையை நிறைவேற்றாமல், இதை அவமாய்ப் போகப்பண்ணவும் முடியாது. ஏனெனில் கர்த்தருடைய உடன்படிக்கை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

கர்த்தர் தம்முடைய உடன்படிக்கையை ஆபிராமோடு மாத்திரமல்ல, அவருக்கு பின் தலைமுறை தலைமுறையாக வரும் அவருடைய சந்ததிக்கும், நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபித்திருக்கிறார். கர்த்தர் தம்முடைய உடன்படிக்கையை ஆபிராமின் மாம்சப்பிரகாரமான சந்ததியோடு மாத்திரமல்ல, அவருடைய ஆவிக்குரிய சந்ததியோடும், நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபித்திருக்கிறார்.

கர்த்தருடைய உடன்படிக்கை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய உடன்படிக்கை கிருபையின் உடன்படிக்கை. புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய நாம் கிருபையின் காலத்திலிருக்கிறோம். கர்த்தர் ஆபிராமோடு பண்ணின உடன்படிக்கை, புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய, நம்முடைய காலத்திலும் செயல்படும் வண்ணமாக, அது கிருபையின் உடன்படிக்கையாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

கர்த்தர் ஆபிராமோடு பண்ணின உடன்படிக்கை வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கையாகும். கர்த்தர் ஆபிராமுக்கும், அவருடைய சந்ததியாருக்கும் போதுமானவராகயிருக்கிறார். ஆகையினால் கர்த்தர் தம்மை, ""நான் சர்வவல்லமையுள்ள தேவன்'' என்று ஆபிராமுக்கு வெளிப்படுத்தினார்.

கர்த்தருடைய உடன்படிக்கையில் இரண்டு முக்கியமான ஷரத்துக்கள் உள்ளன. அவையாவன: 1. கர்த்தர் ஆபிராமுக்கும் அவருக்கு பின்வரும் அவருடைய சந்ததிக்கும் தேவனாயிருப்பார். 2. கர்த்தர் கானான் தேசம் முழுவதையும், ஆபிராமுக்கும், அவருக்கு பின்வரும் அவருடைய சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுப்பார்.

கர்த்தர் ஆபிராமுக்கும், அவருக்கு பின்வரும் அவருடைய சந்ததிக்கும் தேவனாயிருப்பார். இதனால் கர்த்தருடைய சுபாவங்களையெல்லாம், அவருடைய ஜனத்தார் தங்களுக்கு ஆசீர்வாதமுண்டாக பெற்றுக்கொள்வார்கள். கர்த்தருடைய கிருபை அவர்களுக்குரியது. அவர்களுடைய ஞானமும், பெலமும் அவர்களுக்குரியது.

கர்த்தர் சர்வவல்லமையுள்ள தேவன். கர்த்தருடைய வல்லமை அவருடைய ஜனத்திற்குரியது. கர்த்தர் தம்முடைய ஞானத்தினால், அவர்களை வழிநடத்துகிறார். அவர்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார். கர்த்தர் தம்முடைய வல்லமையினால் அவர்களைப் பாதுகாக்கிறார். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார். கர்த்தருடைய நன்மையும் அவருடைய ஜனத்திற்குரியது. கர்த்தர் தம்முடைய கிருபையினால் அவர்களுடைய தேவைகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்கிறார்.

ஆபிராம் இப்போது கானான் தேசத்திலே பரதேசியாய்த் தங்கிவருகிறார். கர்த்தர் இந்தக் கானான் தேசம் முழுவதையும், ஆபிராமுக்கும், அவருக்கு பின்வரும் அவருடைய சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுப்பார். கர்த்தர் மறுபடியுமாக, ""நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன்'' (ஆதி 17:8) என்று வாக்குப்பண்ணுகிறார்.

கானான் தேசம் என்பது பரமதேசத்திற்கு அடையாளமாக சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய ஜனத்திற்கு பரலோகமே நித்திய வாசஸ்தலம். அதுவே அவர்களுக்கு நித்திய சுதந்தரம். அங்கே அவர்களுக்கு நித்திய சந்தோஷமும், நித்திய ஓய்வும் உண்டு.

""ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது'' (எபி 4:9).

கர்த்தர் ஆபிராமுக்கும் அவருடைய சந்ததியாருக்கும் கானான் தேசம் முழுவதையும் நித்திய சுதந்தரமாகக் கொடுக்கிறார். ஆபிராம் இப்போது கானான் தேசத்திலிருக்கிறார். ஆனால் அவர் இந்த தேசத்தை இன்னும் சுதந்தரிக்கவில்லை. அவர் கானான் தேசத்திலே இப்போது பரதேசியாய் தங்கி வருகிறார்.

ஆபிராம் கானான் தேசத்திற்கு பரதேசியாயிருந்ததுபோல, நாமும் இப்போது பரமகானானாகிய பரமதேசத்திற்கு பரதேசிகளாயிருக்கிறோம். நாம் பரலோகத்திலே பிரவேசிக்கும்போது, பரமதேசத்தை நமக்கு நித்திய சுதந்தரமாகப் பெற்றுக்கொள்வோம். அதுவரையிலும் நாம் இந்தப் பூமியிலிருப்போம். இந்தப் பூமியிலும் நாம் பரதேசிகளாகவே இருப்போம்.

கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, ""நீயும் உன் சந்ததியும் என் உடன்படிக்கையை கைக்கொள்ளுங்கள்'' (ஆதி 17:9) என்று சொல்லுகிறார்.

ஆபிரகாமின் உடன்படிக்கை நிபந்தனையற்ற உடன்படிக்கை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இது தவறு. தேவன் கலகக்காரருக்கு ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்களைக் கொடுக்கமாட்டார். தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு ஆசீர்வாதம் உண்டு (ஆதி 17:9-10).

ஆபிரகாமின் உடன்படிக்கை நித்தியமானது என்று மூன்று முறை கூறப்பட்டிருக்கிறது. அதில் இது இரண்டாவது முறையாகும். (ஆதி 17:7,13,19).

கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, அதை உறுதிபடுத்துவதற்கு அடையாளத்தையும் ஏற்படுத்துகிறார். ஆபிராமின் சந்ததியில் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளுக்கும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும். இதுவே உடன்படிக்கையின் அடையாளம். இது விருத்தசேதன உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது.

""மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம்நாளிலே அவனை விருத்தசேதனம் பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்'' (அப் 7:8).

விருத்தசேதனமானது அடையாளமாகவும், அச்சாரமாகவும் இருக்கிறது. ""மேலும், விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்'' (ரோம 4:11).

விருத்தசேதனத்தின் மூலமாக கர்த்தர் ஆபிராமுக்கும் அவருடைய சந்ததிக்கும் தம்முடைய வாக்குத்தத்தங்களை உறுதிபண்ணுகிறார். வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவது கர்த்தருடைய பங்கு. விருத்தசேதனம்பண்ணுவது ஆபிரகாமின் பங்கு.

விருத்தசேதனமானது சரீரப்பிரகாரமான நியமனமாயிருக்கிறது. விருத்தசேதனம் பண்ணப்படும்போது இரத்தம் சிந்தப்படும். ஆகையினால் இது இரத்தநியமமாகவும் இருக்கிறது. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை. பாவம் பரிகரிக்கப்படவேண்டுமென்றால், அது இரத்தத்தினால் மாத்திரமே பரிகரிக்கப்படும்.

""நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துத-ல்லாமல் மன்னிப்பு உண்டாகாது'' (எபி 9:22).

""அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்'' (யாத் 24:8).

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையிலே மனுக்குலத்தாரின் பாவங்களைப் போக்குவதற்காக, தம்முடைய சொந்த இரத்தத்தையே மீட்பின் கிரயமாக செலுத்தினார். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டதினால், அந்த இரத்தத்தை தவிர மற்ற இரத்த உடன்படிக்கைகளும், இரத்த நியமங்களும் தேவையில்லாமல் போயிற்று. அவை இப்பொழுது ஒழிக்கப்பட்டுவிட்டது.

கர்த்தருடைய உடன்படிக்கையில் நாம் உண்மையுள்ளவர்களாகயிருக்கவேண்டும். நம்முடைய உண்மைக்கு அடையாளமாக பூர்வகாலத்தில் விருத்தசேதனம் நியமிக்கப்பட்டது. இப்போது விருத்தசேதனத்திற்குப் பதிலாக தண்ணீர் ஞானஸ்நானம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

ஆபிராமின் சந்ததியில் பிறக்கும் ஆண்பிள்ளைகளுக்கு மாத்திரம் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டுமென்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தருடைய உடன்படிக்கையில் ஸ்திரீகளும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஆண்பிள்ளைகள் மாத்திரம் விருத்தசேதனம்பண்ணினால் போதுமானது. புருஷன் தன் மனைவிக்கு தலையாயிருக்கிறான். ஆகையினால் புருஷனுக்கு மாத்திரம் விருத்தசேதனம்பண்ணப்படுகிறது.

ஆண்பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவர்களுடைய நுனித்தோல் நீக்கப்படும். பொதுவாக இந்த நுனித்தோலின் மூலமாகவே பாவமான ஒவ்வொரு சந்ததியும் நடந்து வருகிறது. கர்த்தர் ஆபிராமுக்கு விருத்தசேதன உடன்படிக்கையைப்பற்றிச் சொன்னபோது, கிறிஸ்துவானவர் இந்தப் பூமியில் இன்னும் மனுஷனாக அவதரிக்கவில்லை. அவர் நம்முடைய பாவங்களுக்காக இன்னும் கல்வாரி சிலுவையில் தம்முடைய இரத்தத்தை சிந்தவில்லை.

ஆகையினால் கர்த்தர் இப்போது, ஆபிராமின் சந்ததியில் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளுக்கும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும் என்று சொல்லுகிறார். கர்த்தர் ஆபிராமின் சந்ததியாரோடு உடன்படிக்கை பண்ணும்போது, அந்த சந்ததியிலுள்ள ஆண்பிள்ளைகள் அனைவரும், தங்களுடைய சரீரத்தின் ஒரு பகுதியை பலியாக செலுத்தி, கர்த்தருடைய உடன்படிக்கையில் பிரவேசிக்கவேண்டும். ஆண்பிள்ளைகளின் நுனித்தோல் வெட்டப்படும்போது, அவர்கள் அந்த நுனித்தோலை கர்த்தருக்கு பலியாக செலுத்துகிறார்கள்.

நுனித்தோலானது சரீரத்தின் இரகசியமான பகுதி. ஆனாலும் உண்மையான விருத்தசேதனம் என்பது, ஆண்பிள்ளைகளுடைய நுனித்தோலை வெட்டுவது அல்ல. மனுஷருடைய இருதயத்தில் பண்ணப்படும் விருத்தசேதனமே, மெய்யான விருத்தசேதனம்.

ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது (ரோமர் 2:28,29).

கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, ""உங்கள் நுனித்தோ-ன் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன் படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம்நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்'' (ஆதி 17:11,12) என்று சொல்லுகிறார்.

ஆபிரகாமின் வீட்டில் பிறந்த பிள்ளைகளுக்கும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். ஆபிகாமின் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்கு கொள்ளப்பட்ட, எந்தப் பிள்ளைக்கும் அப்படியே விருத்தசேதனம்பண்ணப்பட வேண்டும். எஜமான் தன் குடும்பத்திற்கு ஆண்டவனாயிருக்கிறான். அவன் தன்னுடைய ஆண்பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணும்போது, தன்னிடத்தில் வேலை பார்க்கிற வேலைக்கார ஆண்பிள்ளைகளுக்கும் விருத்சேதனம்பண்ணவேண்டும்.

""உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்கு கொள்ளப்பட்ட பிள்ளை'' என்னும் வாக்கியம் புறஜாதியாரைக் குறிப்பிடுகிறது. புறஜாதியாரும் விசுவாசத்தினாலே ஆபிரகாமின் சந்ததியாராயிருக்கிறார்கள். இவர்கள் ஆபிரகாமுக்கு சரீரப்பிரகாரமான சந்ததியாரல்ல. இவர்கள் அவருக்கு ஆவிக்குரிய சந்ததியார்.

""ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கு வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கும் என்று ஒருவனைக்குறித்துச் சொல்-யிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே'' (கலா 3:16).

விருத்தசேதனத்தை மீறுவது, உடன்படிக்கையை மீறுவதற்கு சமம். பெற்றோர் தங்கள் ஆண்பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவில்லையென்றால், அவர்கள் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள். அவர்களுக்கு அழிவு வரும். மோசே இப்படிப்பட்ட அழிவுக்கு அருகாமையிலிருந்தார்.

""வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார். அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்'' (யாத் 4:24,25).

விருத்தசேதனம்பண்ணாதவர்கள்மீது தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பு வரும். கர்த்தர் ஆபிரகாமிடம் இதுபற்றிச் சொல்லும்போது, ""நுனித்தோ-ன் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையாயிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்'' (ஆதி 17:14) என்று சொல்லுகிறார்.

விருத்தசேதனம் பண்ணாதவர்களுக்கு மரணம் நேரிடும். (ஆதி 9:11; யாத் 12:15,19; யாத் 31:14; லேவி 7:20,21, 25,27; சங் 101:5; ஏசா 53:8; தானி 9:26; சக 14:2; மல் 2:12) அவர்கள் எவ்வாறு மரிப்பார்கள் என்று கூறப்படவில்லை. உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும் விருத்தசேதனத்தை ஒருவர் வேண்டுமென்றே புறக்கணிக்கும்போது அவருக்கு மரணம் நேரிடும். ஆயினும் இந்தப் பிரமாணம் அதிகமாக வலியுறுத்தப்படவில்லை. ஏனெனில் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பிரயாணம்பண்ணிய போது அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணப்படவில்லை (யோசு 5:2-10).

சாராய் # சாராள்

ஆதி 17:15#17

ஆதி 17:15. பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.

ஆதி 17:16. நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்கு தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.

ஆதி 17:17. அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்-க்கொண்டு,

கர்த்தர் சாராயின் பெயரை, சாராள் என்று மாற்றுகிறார். பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: ""உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்'' (ஆதி 17:15) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் சாராளை ஆசீர்வதிப்பார். கர்த்தர் சாராள் மூலமாக ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைத் தருவார். சாராள் ஜாதிகளுக்கு தாயாகயிருப்பாள். அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகும்படியாக கர்த்தர் அவளை ஆசீர்வதிப்பார் (ஆதி 17:16).

கர்த்தர் தம்முடைய ஜனத்திற்கு, தம்முடைய நல்ல நோக்கத்தையும், திட்டத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துகிறார். கர்த்தர் ஒரே சமயத்தில் எல்லா வெளிப்பாடுகளையும் கொடுக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக தம்முடைய இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.

ஆபிராமின் சந்ததி திரளாயிருக்கும் என்றும், அது ஆசீர்வதிக்கப்படும் என்றும் கர்த்தர் சொன்னார். ஆனால் இதுவரையிலும் கர்த்தர் ஆபிராமிடத்தில், ""சாராளாலே உனக்கு ஒரு குமாரனைத் தருவேன்'' என்று சொல்லவே இல்லை. கர்த்தர் இப்போதுதான் தம்முடைய திட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

கர்த்தர் சாராளை ஆசீர்வதிக்கும்போது, அவள் இனிமேல் மலடியாயிருக்கமாட்டாள். அவள் கர்ப்பவதியாகி தாயாகயிருப்பாள். அவள் ஜாதிகளுக்கு தாயாகயிருப்பாள் என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தருடைய ஆசீர்வாதம் வரும்போது, விருத்தியும், பெருக்கமும் உண்டாகும். கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதத்தோடு வருத்தத்தைக் கூட்டமாட்டார். ஆகார் வருத்தப்பட்டதுபோல சாராள் வருத்தப்படவில்லை.

கர்த்தரே சர்வஆளுகையுள்ளவர். அவர் ஜனங்களை ஆளுகை செய்கிறார். ராஜாக்களை சிங்காசனத்தில் அமரச் செய்கிறார். ஒரு தேசத்தில் நல்லாட்சி நடைபெறும்போது, அதனால் கர்த்தருடைய சபைக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் கிடைக்கிறது. தேசம் அமைதியாயிருக்கும்போது ƒவிசுவாசிகள் கர்த்தரை தடையில்லாமல் துதிக்கலாம்.

கர்த்தர் சாராளை ஆசீர்வதிக்கும்போது, ""அவள் ஜாதிகளுக்கு தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும் அவளை ஆசீர்வதிப்பேன்'' (ஆதி 17:16) என்று சொல்லி ஆசீர்வதிக்கிறார். கர்த்தர் ஆபிரகாமின் சந்ததியை ஆசீர்வதிக்கிறார். அவர்களை ஆளுகை செய்வதற்கு ராஜாக்களையும் கொடுக்கிறார்.

சாராயின் பெயரும் இப்போது சாராள் என்று மாற்றப்பட்டிருக்கிறது. சாராய் என்னும் பெயருக்கு ""என்னுடைய ராஜாக்கள்'' என்று பொருள். இதனால் சாராளின் மகிமை ஒரு குடும்பத்தோடு முடிவு பெறும். சாராள் என்னும் பெயருக்கு திரளான ராஜாக்கள் என்று பொருள். இதன் மூலமாக சாராளுடைய மகிமை அதிகரிக்கிறது. அவள் ஒரு ஜாதிக்கு மாத்திரமல்ல, அநேக ஜாதிகளுக்கு தாயாகயிருப்பாள்.

சாராய் என்பதற்கு இளவரசி என்று பொருள். சாராள் என்பதற்கு இளவரசிகளின் தலைவி அல்லது இளவரசிகளின் தாய் என்று பொருள். சாராள் என்னும் பெயர் ""சார்'' என்னும் எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. இதற்கு இளவரசன் என்று பொருள். ""சார்'' என்னும் வார்த்தையின் பெண்பால் ""சாராள்'' ஆகும்.

ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு முகங்குப்புற விழுந்து நகைக்கிறார். ""நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ?'' (ஆதி 17:17) என்று தன் இருதயத்திலே சொல்-க்கொண்டு, நகைக்கிறார்.

ஆபிராம் கர்த்தருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்துகிறார். அவர் கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுகிறார். ஆபிரகாமின் இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பியிருக்கிறது. அவர் நகைக்கிறார். ஆபிரகாமின் நகைப்பு அவிசுவாசத்திற்கு அடையாளமல்ல. அது சந்தோஷத்தினால் உண்டாகும் நகைப்பு. இது விசுவாசத்தினால் உண்டாகும் நகைப்பு. இது கர்த்தர் அவரை ஆசீர்வதிப்பதினால் உண்டாகும் நகைப்பு. ஆபிரகாம் களிகூர்ந்ததை இயேசுகிறிஸ்துவும் குறிப்பிட்டிருக்கிறார் (யோவா 8:56).

ஆபிரகாம் தன் இருதயத்திற்குள்ளே, ""நூறுவயதானவனுக்கு பிள்ளை பிறக்குமோ'' என்று சொல்லிக்கொள்கிறார். கர்த்தரால் எல்லாம் ஆகும் என்னும் விசுவாசம் ஆபிரகாமிடத்தில் இருக்கிறது. கர்த்தர் ஆபிரகாமுக்கு போதுமானவராகயிருக்கிறார். அவர் சர்வவல்லமையுள்ள தேவன். ஆபிரகாம் கர்த்தருடைய சர்வவல்லமையை தன் இருதயத்தில் நினைத்துப் பார்த்து, கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கிறார்.

ஆபிரகாமின் ஜெபம்

ஆதி 17:18#22

ஆதி 17:18. இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்.

ஆதி 17:19. அப்பொழுது தேவன்: உன்மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கைûயை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

ஆதி 17:20. இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.

ஆதி 17:21. வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார்.

ஆதி 17:22. தேவன் ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.

ஆபிரகாம் இஸ்மவேலுக்காக கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். ""இஸ்மவேல் உமக்கு முன்பாக பிழைப்பானாக'' என்று ஆபிரகாம் கர்த்தரிடத்தில் சொல்லுகிறார். சாராளுக்கு குமாரன் பிறக்கப்போவதினால், ஆகார் பெற்ற இஸ்மவேலை கர்த்தர் மறந்துவிடுவாரோ என்றும், அவனை புறக்கணித்து தள்ளிவிடுவாரோ என்றும் ஆபிரகாம் யோசிக்கிறார். ஆபிரகாமுக்கு தன் குமாரனாகிய இஸ்மவேல் மீதும் பிரியம் இருக்கிறது.

தேவனுடைய திட்டத்தில் மேசியா ஆபிரகாமின் சந்ததியில் வருவார். ஆனால் இதில் இஸ்மவேலுக்குப் பங்கிராது என்பது ஆபிரகாமுக்குத் தெரியவருகிறது. ஆகையினால் இஸ்மவேலுக்காக ஆபிரகாம் விண்ணப்பம்பண்ணுகிறார். இஸ்மவேலைக் குறித்த தேவனுடைய திட்டம் ஆதி 17:20-21 ஆகிய வசனங்களில் உறுதிபண்ணப்படுகிறது.

ஆபிரகாம் கர்த்தரை நோக்கி, ""இஸ்மவேல் உமக்கு முன்பாக பிழைப்பானாக'' என்று கட்டளையிடவில்லை. ஆனாலும் ஆபிரகாம் தன்னுடைய மனதின் விருப்பத்தை கர்த்தரிடத்தில் பணிவான விண்ணப்பமாகச் சொல்லுகிறார்.

""நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுத-னாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்'' (பிலி 4:6).

பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்காக கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும். யோபு தன்னுடைய எல்லா பிள்ளைகளுக்காகவும் கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணி பலிசெலுத்தியதுபோல, நாமும் நம்முடைய பிள்ளைகள் எல்லோருக்காகவும் கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ண வேண்டும்.

""விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்-, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனப-களைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்'' (யோபு 1:5).

நம்முடைய பிள்ளைகளைக் குறித்து நமக்கு பல்வேறுவிதமான திட்டங்கள் இருக்கலாம். அவர்களுடைய வருங்காலத்தைக் குறித்து நாம் இப்போதே திட்டம்பண்ணலாம். நம்முடைய பிள்ளைகள் கர்த்தருக்கு முன்பாக ஜீவிக்கவேண்டும். அவர்கள் கர்த்தருடைய பாதையிலே நடக்கவேண்டும். நம்முடைய பிள்ளைகள் கர்த்தரோடு செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் நீதியின் பாதையிலே நடப்பதற்கு கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதுவே நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் மெய்யான ஆசீர்வாதம். ஆபிரகாம் இந்த மெய்யான ஆசீர்வாதத்தை நினைவுகூர்ந்து, ""இஸ்மவேல் உமக்கு முன்பாக பிழைப்பானாக'' என்று கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.

கர்த்தர் ஆபிரகாமின் விண்ணப்பத்திற்கு செவிகொடுக்கிறார். கர்த்தர் அவருடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறார். கர்த்தர் கொடுக்கும் பதில் சமாதானத்தின் பதிலாக இருக்கிறது. கர்த்தர் இஸ்மவேலுக்கு பொதுவான ஆசீர்வாதத்தைக் கட்டளையிடுகிறார்.

கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, ""இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்'' (ஆதி 17:20) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் இஸ்மவேலின் சந்ததியையும் ஆசீர்வதிப்பார். அவருடைய சந்ததி திரளாய்ப் பெருகியிருக்கும். அவர்கள் செழித்திருப்பார்கள். இஸ்மவேல் பன்னிரண்டு பிரபுக்களை பெறுவார். கர்த்தர் ஆபிரகாமின் விண்ணப்பத்தைக் கேட்டு, இஸ்மவேலை ஆசீர்வதிக்கிறார். ஆனாலும் இந்த ஆசீர்வாதம் உடன்படிக்கையின் ஆசீர்வாதமல்ல. உடன்படிக்கையின் ஆசீர்வாதம் ஈசாக்குக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.

கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, ""உன்மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கைûயை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்'' (ஆதி 17:19) என்று சொல்லுகிறார்.

ஈசாக்கு என்னும் பெயருக்கு ""நகைப்பு'' என்று பொருள். ஈசாக்கின் பிறப்பைப் பற்றி அறிவிக்கப்பட்டபோது ஆபிரகாமும் (ஆதி 17:17), சாராளும் நகைத்தார்கள் (ஆதி 18:12-15).

கர்த்தர் ஆபிரகாமிடம் ஈசாக்கைப்பற்றி மேலும் சொல்லும்போது, ""வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்'' (ஆதி 17:21) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் ஆபிரகாமுக்கு தம்முடைய உடன்படிக்கையைப்பற்றிச் சொல்லும்போது, ""சாராள் உனக்கு பெறப்போகிற ஈசாக்கு'' என்று மறுபடியுமாகச் சொல்லுகிறார். கர்த்தர் தம்முடைய உடன்படிக்கையை இஸ்மவேலோடு ஏற்படுத்தாமல், ஈசாக்கோடு ஏற்படுத்துகிறார்.

சாராள் பெறப்போகிற பிள்ளைக்கு கர்த்தரே ஈசாக்கு என்று பேரிடுகிறார். கர்த்தர் ஆபிரகாமிடத்தில் சாராளைப்பற்றிச் சொன்னபோது, "" நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்கு தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன்'' என்று சொல்லுகிறார். அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைக்கிறார் (ஆதி 17:16,17).

கர்த்தர் சாராளின் மூலமாக தனக்கு ஒரு குமாரனை வாக்குப்பண்ணினபோது, ஆபிரகாம் தன்னுடைய ஆவியிலே மகிழ்ந்து களிகூருகிறார். ஈசாக்கு பிறக்கப்போகும் காலத்தையும் கர்த்தர் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார். ""வருகிற வருஷத்தில், குறித்த காலத்தில் சாராள் உனக்கு பெறப்போகிற ஈசாக்கு'' என்று கர்த்தர் ஆபிரகாமுக்கு சொல்லுகிறார். கர்த்தருடைய வாக்குத்தத்தம் சீக்கிரத்தில் நிறைவேறப் போகிறது. அப்போது ஆபிரகாமின் சந்தோஷம் இன்னும் அதிகரிக்கும்.

நாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்காக காத்திருக்கும்போது, நம்முடைய இருதயத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும். ஆபிரகாம் ஈசாக்குக்காக காத்திருந்தபோது, அவருடைய இருதயத்தில் அப்படிப்பட்ட மகிழ்ச்சியும் சந்தோஷம் உண்டாயிற்று.

தேவன் ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு, அவர் ஆபிராமைவிட்டு எழுந்தருளுகிறார் (ஆதி 17:22).

இஸ்மவேலுக்கு விருத்தசேதனம்

ஆதி 17:23#27

ஆதி 17:23. அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோ-ன் மாம்சத்தை அந்நாளிலேதான் விருத்தசேதனம் பண்ணினான்.

ஆதி 17:24. ஆபிரகாமுடைய நுனித்தோ-ன் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றென்பது வயதாயிருந்தான்.

ஆதி 17:25. அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோ-ன் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.

ஆதி 17:26. ஒரே நாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.

ஆதி 17:27. வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடே கூட விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.

ஆபிரகாம் விருத்தசேதன பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிறார். ஆபிரகாமும் அவருடைய குடும்பத்திலுள்ள ஆண்பிள்ளைகள் அனைவரும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்கிறார்கள். கர்த்தருடைய உடன்படிக்கையைப் பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாக, ஆபிரகாமின் குடும்பத்தார் விருத்தசேதனம்பண்ணிக்கொள்கிறார்கள்.

இதன் மூலமாக ஆபிரகாமின் குடும்பத்தாருக்கும், மற்ற குடும்பத்தாருக்கும் வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது. மற்ற குடும்பத்தாருக்கு கர்த்தருடைய உடன்படிக்கையிலும், ஆசீர்வாதத்திலும் பங்குமில்லை பாத்தியமுமில்லை. அவர்கள் கர்த்தருடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்கள். ஆபிரகாமும் அவருடைய சந்ததியாரும்,கர்த்தருடைய ஆசீர்வாதத்திற்கு பாத்திரமானவர்கள். அவருடைய உடன்படிக்கையில் பங்குள்ளவர்கள்.

அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோ-ன் மாம்சத்தை அந்நாளிலேதான் விருத்தசேதனம் பண்ணுகிறார் (ஆதி 17:23).

ஆபிரகாம் கர்த்தருடைய கட்டளைக்கு உடனே கீழ்ப்படிகிறார். கர்த்தருடைய வார்த்தைக்கு உண்மையாய்க் கீழ்ப்படிகிறவர்கள், தங்களுடைய கீழ்ப்படிதலை காலதாமதம்பண்ணமாட்டார்கள்.

""உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்'' (சங் 119:60).

ஒரே நாளில் ஆபிரகாமும் அவருடைய குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்படுகிறார்கள். ஆபிரகாமுடைய நுனித்தோ-ன் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவர் தொண்ணூற்றென்பது வயதாயிருக்கிறார் (ஆதி 17:26,24).

ஆபிரகாமுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோ-ன் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருக்கிறான் (ஆதி 17:25).

ஆபிரகாமுடைய வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவர் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவரோடே கூட விருத்தசேதனம் பண்ணப்படுகிறார்கள் (ஆதி 17:27). விருத்தசேதனம்பண்ணுவதில் ஆபிரகாம் தன்னுடைய குடும்பத்திலுள்ளவர்களுக்கும், அவருடைய வீட்டு மனுஷருக்கும் முன்மாதிரியாயிருக்கிறார். இஸ்மவேலும் விருத்தசேதனம்பண்ணப்பட்டதினால், அவரும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுகிறார்.

விருத்தசேதனம் பண்ணுதல் ஆபிரகாமின் உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும். ஆபிரகாமின் சந்ததியில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மீட்பர் வருவார் என்பதற்கு இது ஓர் அடையாளம். மாம்சத்தின் பாவங்களைக் களைந்துபோட்டு, புதிய சிருஷ்டிகளாகத் தேவனை ஆராதிப்போருக்கு மீட்பருடைய இரட்சிப்பின் கிரியை அநுக்கிரகம் பண்ணப்பட்டிருக்கிறது.

விருத்தசேதன மார்க்கத்தார் என்பது யூதரைக் குறிக்கும். (ரோமர் 3:30; ரோமர் 4:9; கலா 2:9). கிறிஸ்து வந்த பின்பு, விருத்தசேதனத்தினால் பிரயோஜனமில்லை. (கலா 5:6; கொலோ 3:11). ஆவிக்குரிய விருத்தசேதனம் என்பது இருதயத்தில் செய்யப்படுவதாகும். மாம்சத்தில் செய்யப்படுவது விருத்தசேதனம் அல்ல. (ரோமர் 2:28-29; 1கொரி 7:19; பிலி 3:3; கொலோ 2:11).

இப்பொழுதும் இஸ்மவேலரும், அரபியரும் தங்களுடைய பதின்மூன்றாம் வயதில் விருத்தசேதனம் பண்ணிக் கொள்கிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.