16.பிரசங்க குறிப்புகள் Vol

பிரசங்க குறிப்புகள் Vol.16

1. தேவன் இஸ்ரவேல் புத்திரரை தமக்காக வேறுபிரி 12 காரணங்கள்

1. இது தேவனுடைய திட்டம். (உபா 32:8; அப் 17:26) மேசியா வரும்போது, தேவனுடைய இந்தத் திட்டம் நித்திய காலமாக அமுல் செய்யப்படும். (ஏசா 11:11-12; எசே 37; எசே 48; தானி 7:13-14; சக 14:16-21).

2. தேவன் ஆபிரகாமிடம் அவருடைய சந்ததி பெரிய ஜாதியாகும் என்று வாக்குப்பண்ணினார். இந்த உடன்படிக்கைகளையும், வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றுவதற்குத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (ஆதி 12:1-3).

3. கானான் தேசம் ஆபிரகாமின் சந்ததியாருக்கு நித்திய சுதந்தரமாகக் கொடுக்கப்படும் என்று தேவன் வாக்குப்பண்ணினார். இந்த உடன்படிக்கைகளையும், வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றுவதற்குத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (ஆதி 15:18-21; ஆதி 17:8).

4. ஸ்திரீயின் வித்து, தன்னை நசுக்கிப் போடும் என்பது சாத்தானுக்குத் தெரியும். ஆகையினால் ஆதாமின் சந்ததியில் இராட்சதருடைய சந்ததியைச் சாத்தான் கலந்து, ஸ்திரீயின் வித்தை மாசுபடுத்தினான். மாசுபட்ட இந்தச் சந்ததியிலிருந்து தேவன் தம்முடைய ஜனத்தை வேறுபிரித்தார்.

5. கானானியருடைய ஜாதிகளை அவர்களுடைய துன்மார்க்கத்தின் நிமித்தமாகக் கர்த்தர் அழித்தார் என்பதை உலகத்துக்குக் காண்பிப்பதற்காகத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (உபா 7:1-24; உபா 9:5).

6. ஆதாமின் சந்ததியை மாசுபடாமல் பாதுகாத்து, அந்த சந்ததியின் வழியில் மேசியா வரவேண்டும் என்பது தேவனுடைய சித்தமாகும். தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (ஆதி 3:15; ரோமர் 9:3-5).

7. மனுஷனுக்குத் தேவனுடைய வெளிப்பாட்டைத் தெரியப்படுத்துவதற்குத் தேவன் இஸ்ரவேலரை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். இதற்காகத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (ரோமர் 3:2; ரோமர் 9:3-5).

8. இஸ்ரவேல் தேசத்தை எல்லா தேசங்களுக்கும் நித்திய தலையாக ஏற்படுத்தினார். இதற்காகத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (உபா 15:16; உபா 28:13).

9. தேசங்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காகத் தேவன் இஸ்ரவேலை வேறுபடுத்தினார். (ஆதி 12:1-3; ஏசா 2:1-4; ஏசா 52:7; ஏசா 66:19-21; சக 8:23; சக 14:16-21).

10. மெய்யான ஆராதனையில் தேவனை ஆராதிக்கும் ஆசாரியக்கூட்டமாக ஆக்குவதற்குத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (யாத் 19:6)

11. பரிசுத்த ஜாதியாகவும், தேவனுடைய விசேஷித்த ஜனமாகவும் தேவனுடைய கிருபை, ஆசீர்வாதங்கள் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் ஜனமாகவும், உலகத்தாருக்கு இஸ்ரவேலைக் காண்பிப்பதற்காக அதை வேறுபிரித்தார். (யாத் 19:6; உபா 7:6-8).

12. விக்கிரகாராதனையினாலும், பாவங்களினாலும் எல்லா தேசங்களுக்கும் வரும் தண்டனையை உலகத்தாருக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பதற்காகத் தேவன் இஸ்ரவேலை வேறுபிரித்தார். (யாத் 20:1-6; யாத் 32:21-25; யாத் 34:15-17; உபா 7:1-6; உபா 13:1-8; உபா 18:9-14).

2. தங்களை அறியாதிருந்த ஐந்து சம்பவங்கள்

1. மன்னாவைப் பற்றி இஸ்ரவேல் புத்திரர் அறியாதிருந்தார்கள் (யாத் 16:15).

2. தன் முகம் பிரகாசித்திருப்பதை மோசே அறியாதிருந்தார் (யாத் 34:29).

3. கர்த்தர் தன்னை விட்டு அகன்றுபோனதை சிம்சோன் அறியாதிருந்தான் (நியா 16:20).

4. என்ன சொல்ல வேண்டுமென்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள். (மாற்கு 9:6; மாற்கு 14:40; லூக்கா 2:49; யோவான் 5:13)

5. தான் விடுவிக்கப்பட்டதை பேதுரு அறியாதிருந்தார் (அப் 12:9).

3. இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு காணிக்கையாக கொடுத்த 18 பொருட்கள்

1. அஸ்தகடகங்கள்

2. காதணிகள்

3. மோதிரங்கள்

4. ஆரங்கள்

5. சகலவித பொன்னாபரணங்கள்

6. இளநீலநூல் (யாத் 35:23)

7. இரத்தாம்பரநூல் (யாத் 35:27; யாத் 28:17-21)

8. சிவப்புநூல்

9. மெல்-ய பஞ்சு நூல்

10. வெள்ளாட்டு மயிர்

11. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல்

12. தகசுத்தோல்

13. வெள்ளி (யாத் 35:24)

14. வெண்கலம்

15. சீத்திம் மரம்

16. கோமேதக்கற்களும், மற்றக் கற்களும்

17. தூபவர்க்கங்கள் (யாத் 35:28)

18. அபிஷேகத்தைலம்

4. அடையாளங்கள்

பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருக்கும் பல நிகழ்ச்சிகள் புதிய ஏற்பாட்டின் சத்தியங்கள் பலவற்றிற்கு அடையாளமாக உள்ளன. தேவன் தமது மீட்பின் திட்டத்தை வெளிப்படையாகவும், அடையாளமாகவும் கூறியிருக்கிறார். (கொலோ 2:17; எபி 8:5; எபி 10:1).

கிரேக்க மொழியில் ஐந்து வார்த்தைகள் ""அடையாளம்'' என்னும் பொருளைத் தருகிறது. அவையாவன: 1. சொரூபம், 2. ஒப்பனை 3. சாயல் 4. உவமை 5. நிழல்.

அடையாளங்களுக்கு இவ்வாறு விளக்கம் கொடுக்கலாம்.

1. அடையாளத்திற்கும் மெய்ப்பொருளுக்கும் ஒற்றுமை காணப்பட வேண்டும். (கொலோ 2:14-17; எபி 10:1).

2. அடையாளமும், மெய்ப்பொருளும் தீர்க்கதரிசனத்தினால் இணைக்கப்பட வேண்டும். (யோவான் 3:14; ரோமர் 5:14; கொலோ 2:14-17; எபி 8:5; எபி 9:23-24; எபி 10:1; 1பேதுரு 3:21).

3. அடையாளம் வரப்போகிற உண்மைக்கு நிழலாயிருக்கிறது. அடையாளம் மெய்ப்பொருளல்ல. (கொலோ 2:14-17; எபி 8:5; எபி 10:1).

4. அடையாளம் உலகத்திற்குரியது. மெய்ப்பொருளோ பரலோகத்திற்குரியது. (எபி 8:5; எபி 9:24; 1பேதுரு 3:21).

5. அடையாளமும், மெய்ப்பொருளும் சத்தியத்தை விளக்குவதற்காகத் தேவனால் முன்னறியப்பட்டிருக்கிறது. (ரோமர் 5:14; எபி 9:23-24; எபி 10:1-21).

அடையாளங்களில் நான்கு வகைகள் உள்ளன. அவையாவன:

1. அடையாள நபர்கள்

2. அடையாள நிகழ்ச்சிகள்

3. அடையாளச்செயல்கள்

4. அடையாள முறைமைகள்

5. அடையாள நபர்கள்

(1) ஆதாம் கிறிஸ்துவிற்கு அடையாளமாக இருந்தார். (ரோமர் 5:12-21; 2கொரி 15:45-49).

(2) மெல்கிசேதேக்கு கிறிஸ்துவின் நித்திய ஆசாரியத்துவதற்கு அடையாளமாக இருந்தார். (ஆதி 14:18-24; எபி 5:5-9; எபி 6:20; எபி 7:1-10,17); ஆசாரியத்துவத்திற்கும், ராஜரிகத்திற்கும் சேர்ந்து அடையாளமாக இருந்தார். (எபி 7:1-3=சக 6:12-13); நித்தியமானவருக்கு அடையாளமாக இருந்தார். (எபி 7:3,6= மீகா 5:1-2; யோவான் 1:1-3; எபி 1:8).

(3) ஆபிரகாம் தன் ஒரே குமாரனாகிய ஈசாக்கைப் பலியிடப்போனது தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பலியிடக் கொடுத்ததற்கு அடையாளமாகும். (ஆதி 22; யோவான் 3:16; எபி 11:17-19).

(4) ஈசாக்கு இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு அடையாளம். (ஆதி 22; எபி 11:19).

(5) மோசே தேவனுடைய தீர்க்கதரிசி (உபா 18:15-19; அப் 3:19-26), உண்மையுள்ளவர் (அப் 3:1-6) ஆகிய காரியங்களில் கிறிஸ்துவின் அடையாளமாக இருந்தார்.

(6) ஆரோன் கிறிஸ்துவின் பிரதான ஆசாரியத்துவத்திற்கு அடையாளமாக இருந்தார்.

(7) யோனா கிறிஸ்துவின் மரணம், அடக்கம் பண்ணப்படுதல், பாதாளத்திற்கு இறங்கிப் போதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்கு அடையாளமாக இருந்தார். (யோனா 2; மத் 12:40; எபே 4:8-10).

6. அடையாள நிகழ்ச்சிகள்

(1) ஜலப்பிரளயம் ஞானஸ்நானத்திற்கு அடையாளம். (1பேதுரு 3:20-21).

(2) வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரர் சந்தித்த நிகழ்ச்சிகள், கிறிஸ்தவ விசுவாசிகள் தங்கள் ஜீவியங்களில் சந்திக்கப்போகும் நிகழ்ச்சிகளுக்கு அடையாளம். (2கொரி 10:1-13).

(3) வனாந்தரத்தில் வெண்கலச் சர்ப்பம் உயர்த்தப்பட்டது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கும், கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் உண்டாகும் ஆசீர்வாதங்களுக்கும் அடையாளமாகும். (யோவான் 3:14; எண் 21).

7. அடையாளச்செயல்கள்

(1) யாத் 17 ஆவது அதிகாரத்தில் கற்பாறையை அடிப்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப் படுவதற்கும், ஜனங்களுக்காக அடிக்கப்படுவதற்கும் அடையாளமாகும். (2கொரி 10:4).

(2)இரண்டாம் முறையாகக் கற்பாறையிடம் பேசுவதற்குப் பதிலாகக் கற்பாறையை அடிப்பது கிறிஸ்துவை மறுபடியும் சிலுவையில் அறைவதற்கு அடையாளமாகும். (எண் 20; 2கொரி 10:4; எபி 6:6).

(3)தலைக்கல்லாகிய மூலைக்கல்லைப் புறக்கணிப்பது இயேசு கிறிஸ்துவைப் புறக்கணிப்பதற்கு அடையாளமாகும். (ஏசா 28:16; மத் 21:42).

(4)ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியருடைய பல்வேறு பணிவிடைகள் இயேசு கிறிஸ்துவின் மூலமாக வரும் மீட்பிற்கு அடையாளமாகும். மிருகஜீவன்களைக் கொல்லுதல், இரத்தம் சிந்துதல், இரத்தத்தைத் தெளித்தல், தூபபீடத்தில் தூபம் ஏற்றுதல், சமுகத்தப்பம், விளக்குகளை ஏற்றுதல், வருஷாந்திர பண்டிகைகள் ஆகியவை அனைத்துமே அடையாளச் செயல்களாகும். இவை கிறிஸ்துவிலும், அவருடைய மீட்பின் கிரியையிலும் நிறைவேறிற்று. (எபி 7:11-28; எபி 8:1-6; எபி 9:1-28; எபி 10:1-22).

8. அடையாள முறைமைகள்

(1) பலிசெலுத்துதல், ஆராதனை செலுத்துதல் சம்பந்தமான மோசேயின் முறைமைகள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் பலிமரணத்திற்கும், அவருடைய மீட்பின் கிரியைக்கும் அடையாளமாகும். தேவனை உண்மையோடு தொழுது கொள்வதற்கும், இதை அடையாளமாகச் சொல்லலாம். (யாத் 12-13; யாத் 25:1-40:38; எபி 7-10).

(2)ஆரோனின் ஆசாரியத்துவம், ஆசாரியர்களின் வஸ்திரங்கள், ஊழியம் சம்பந்தமான பிரமாணங்கள் ஆகியவை அனைத்தும், கிறிஸ்துவிற்கும் அவருடைய மீட்பின் கிரியைக்கும் அடையாளமாகும். (யாத் 28-29; எபி 7-10).

(3) இஸ்ரவேல் புத்திரரின் ஓய்வுநாள் ஆசரிப்பு இரட்சிக்கப்பட்டவர்களுக்கு இயேசு கிறிஸ்துவில் உண்டாகும் நித்திய ஓய்விற்கு அடையாளம். (யாத் 20:8-11; யாத் 31:12-18; உபா 5:15; எபி 4).

(4)இஸ்ரவேல் புத்திரரின் பண்டிகைகள் கிறிஸ்துவின் மூலமாக வரும் மீட்பின் கிரியைகளுக்கு அடையாளம். (யாத் 12; லேவி 23; 2கொரி 5:7; எபி 5-10).

(5)தேவாலயம், அதில் கடைப்பிடிக்கப்பட்ட ஆராதனை முறைமைகள் ஆகியவை அனைத்துமே மெய்யான தேவனை ஆவியோடும்,உண்மையோடும் ஆராதிப்பதற்கு அடையாளமாகும்.

(6) ஆசரிப்புக்கூடாரம், தேவாலயம், அதின் பணிமுட்டுக்கள் ஆகியவை பரலோகத்தின் தேவாலயத்திற்கு அடையாளமாகும். (எபி 8:1-5; எபி 9:1-10,23-24).

அடையாளங்களை வியாக்கியானம் பண்ணும்போது மிகவும் கவனமாக வியாக்கியானம் பண்ணவேண்டும். அதன் விவரம் வருமாறு:

1. அடையாளத்திற்கும், மெய்ப்பொருளுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையை மட்டும் வலியுறுத்த வேண்டும். உபதேசத்திற்கு அடையாளம் அடிப்படையாக இருக்கக் கூடாது.

2.அடையாளங்களை அவற்றின் மெய்ப்பொருளோடு தொடர்புபடுத்தியே வியாக்கியானம் பண்ண வேண்டும்.

3. தெளிவான வரலாற்று நிகழ்ச்சிகளை அடையாளங்களாகக் கருதக்கூடாது.

4.அடையாளமும், மெய்ப்பொருளும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகவேண்டும். அவை வேதவாக்கியத்திற்கு முரண்படக்கூடாது.

5.வேதாகமத்தின் வரலாற்றுச் செய்திகளுக்கு அடையாளத்தின் அடிப்படையில் வியாக்கியானம் பண்ணி, வரலாற்றின் உண்மைகளை மாற்றிவிடக்கூடாது.

9. இஸ்ரவேல் புத்திரர் மோசேயினிடத்தில் கொண்டு வந்த 40 பொருட்கள்

கீழே சொல்லப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் மோசேயினிடத்தில் கொண்டு வருகிறார்கள். கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்திருக்கிறார்கள் (யாத் 39:33-42).

1. கூடாரம்

2. அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகள்

3. அதின் துறடுகள்

4. அதின் பலகைகள்

5. அதின் தாழ்ப்பாள்கள்

6. அதின் தூண்கள்

7. அதின் பாதங்கள்

8. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல் மூடி

9. தகசுத்தோல் மூடி

10. மறைவின் திரைச்சீலை

11. சாட்சிப்பெட்டி

12. அதின் தண்டுகள்

13. கிருபாசனம்

14. மேஜை

15. அதின் எல்லாப் பணிமுட்டுகள்

16. சமுகத்தப்பங்கள்

17. சுத்தமான குத்துவிளக்கு

18. வரிசையாய் ஒழுங்குபடுத்தப்பட்ட அதின் அகல்கள்

19. அதின் எல்லாப் பணிமுட்டுகள்

20. வெளிச்சத்திற்கு எண்ணெய்

21. பொற்பீடம்

22. அபிஷேக தைலம்

23. சுகந்த தூபவர்க்கம்

24. வாசஸ்தலத்தின் வாசல் தொங்குதிரை

25. வெண்கலப் ப-பீடம்,

26. அதின் வெண்கலச் சல்லடை

27. அதின் தண்டுகள்

28. அதின் சகல பணிமுட்டுள்

29. தொட்டி

30. அதின் பாதம்

31. பிரகாரத்தின் தொங்குதிரைகள்

32. அதின் தூண்கள்,

33. அதின் பாதங்கள்

34. பிராகாரத்து வாசல் மறைவு

35. அதின் கயிறுகள்

36. அதின் முளைகள்

37. ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வேலைக்கடுத்த சகல பணிமுட்டுகள்

38. பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்கடுத்த வஸ்திரங்கள்

39. ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள்

40. அவன் குமாரரின் வஸ்திரங்கள்.

10. ஆசரிப்புக்கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவது சம்பந்தமாக கர்த்தர் மோசேக்கு கொடுத்த 8 கட்டளைகள்

1.முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம் பண்ணு. (யாத் 40:2). எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் புறப்பட்டு இந்த நாளோடு பதினொன்றரை மாதம் ஆயிற்று (யாத் 12:40-41; எண் 33:1-3).

2. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தில் சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்துவை. (யாத் 40:3).

3.மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வை. (யாத் 40:4).

4.குத்துவிளக்கைக் கொண்டு வந்து, அதின் விளக்குகளை ஏற்று.

5. பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாச-ன் தொங்குதிரையைத் தூக்கி வை. (யாத் 40:5).

6.தகன ப-பீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வை. (யாத் 40:6).

7. தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் ப-பீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்துவை (யாத் 40:7).

8. சுற்றுப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகார வாசல் தொங்குதிரையைத் தூக்கிவை. (யாத் 40:8).

11. வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையையும் அபிஷேகம்பண்ணுவது சம்பந்தமாக கர்த்தர் மோசேக்கு கொடுத்த 3 கட்டளைகள்

1. அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப் படுத்துவாயாக. (யாத் 40:9).

2.தகனப-பீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக (யாத் 40:10).

3.தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப் படுத்துவாயாக. (யாத் 40:11).

12. ஆசாரியரை பரிசுத்தம்பண்ணுவது சம்பந்தமாக கர்த்தர் மோசேக்கு கொடுத்த 4 கட்டளைகள்

1.ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாச-ல் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம் பண்ணுவிப்பாயாக. (யாத் 40:12).

2. ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம் பண்ணி, அவனைப் பரிசுத்தப் படுத்துவாயாக. (யாத் 40:13).

3.அவன் குமாரரை வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்துவாயாக. (யாத் 40:14).

4.அவர்கள் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்பண்ணினபடியே, அபிஷேகம்பண்ணுவாயாக (யாத் 40:15).

13. சுகந்த வாசனையான பலிகள்

பரிசுத்த வேதாகமத்தில் பலிகளையும் காணிக்கைகளையும் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை இரண்டு வகைப்படும். அவையாவன :

1.சுகந்த வாசனையான பலிகள் (லேவி 1:1-3:17)

2.சுகந்த வாசனையல்லாத பலிகள் (லேவி 4:1-6:7)

சுகந்த வாசனையான பலிகளை மூன்று விதமாக பிரிக்கலாம். அவையாவன:

1.சர்வாங்க தகனபலிகள் - மிருகஜீவன்கள்

2.சர்வாங்க தகனபலிகள் - போஜனப்பலிகள்

3. சமாதான பலிகள்

சர்வாங்க தகனபலிகளாக செலுத்தப்படும் மிருகஜீவன்களை மூன்று வகையாக பிரிக்கலாம் (லேவி 1:1-17) அவையாவன :

1. காளைகள் (லேவி 1:1-9)

2.செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் (லேவி 1:10-13)

3.காட்டுப்புறாக்களும், புறாக்களும் (லேவி 1:14-17)

சர்வாங்க தகனபலிகளாக செலுத்தப்படும் போஜனபலிகளை ஐந்து வகையாக பிரிக்கலாம் அவையாவன : (லேவி 2:1-16)

1. மெல்லியமாவு, எண்ணெய், தூபவர்க்கம் (லேவி 2:1-3)

2. புளிப்பில்லா அதிரசங்கள் (லேவி 2:4)

3. புளிப்பில்லா அடைகள் (லேவி 2:5-6)

4.பொறிக்கும் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட அடைகள் (லேவி 2:7-9)

5. முதற்கனிகள் (லேவி 2:12-16)

சமாதான பலிகள் மூன்று வகைப்படும் அவையாவன: (லேவி 3:1-17)

1. மாடு, காளை, பசு (லேவி 3:1-6)

2. ஆட்டுக்குட்டிகள் (லேவி 3:7-11)

3. வெள்ளாடுகள் (லேவி 3:12-17)

14. சுகந்த வாசனையல்லாத பலிகள்

சுகந்த வாசனையல்லாத பலிகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். அவையாவன : (லேவி 4:1-6:7)

1.பாவநிவாரண பலிகள் - மிருகஜீவன்கள் மட்டும். (லேவி 4:1-35):

2. குற்றநிவாரண பலிகள் (லேவி 5:1-6:7)

பாவநிவாரண பலிகளாக செலுத்தப்படும் மிருகஜீவன்களை நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அவையாவன : (லேவி 4:1-35)

1.ஆசாரியருக்காகக் காளைகள் (லேவி 4:1-12)

2.ஜனங்களுக்காகக் காளைகள் (லேவி 4:13-21)

3.பிரபுக்கள் அறியாமல் செய்த பாவத்திற்காக இளங்கடா (லேவி 4:22-26)

4. சாதாரண ஜனங்கள் அறியாமல் செய்த பாவத்திற்காக வெள்ளாடுகளின் பழுதற்ற பெண்குட்டி (லேவி 4:27-35)

குற்றநிவாரண பலிகளை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன : (லேவி 5:1-6:7)

1. ஐசுவரியவான்களுக்குக் குற்றநிவாரண பலியாக ஆடுகளிலாவது, வெள்ளாடுகளிலாவது ஒரு பெண்குட்டி. (லேவி 5:1-6)

2. ஏழைகளுக்குக் குற்றநிவாரண பலியாக இரண்டு காட்டுப்புறாக்கள், இரண்டு புறாக்குஞ்சுகள் - ஒன்று பாவநிவாரண பலியாகவும், மற்றொன்று சர்வாங்க தகனபலியாகவும். (லேவி 5:7-10)

3. மிகவும் ஏழைகளுக்குக் குற்றநிவாரண பலியாக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கு. (லேவி 5:11-13)

4. அறியாமல் பாவத்திற்குட்பட்டவனுக்குக் குற்ற நிவாரண பலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவும், அவன்மீது சுமத்தப்படும் சேக்கல் கணக்கான அபராதமும் (வெள்ளி). (லேவி 5:14-19)

5.திருடுகிறவனுக்குக் குற்ற நிவாரண பலியாகத் திருட்டின் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவும், அவன்மீது சுமத்தப்படும் சேக்கல் கணக்கான அபராதமும் (வெள்ளி). (லேவி 6:1-7)

15. பலிகளைப்பற்றி ஒரு சில செய்திகள்

பலிகளில் இரண்டு வகைகள் உள்ளன.

1. சுகந்த வாசனையான பலிகள்

2. சுகந்த வாசனையல்லாத பலிகள்.

பலிகளைச் செலுத்துகிறவர்களில் இரண்டு பிரிவினர் உள்ளனர்.

1. தனிநபர்கள். (லேவி 1:2,10; லேவி 2:1; லேவி 3:1)

2. சபையார் எல்லோரும் (லேவி 4:13-21; லேவி 16:1-34; எண் 19)

பலிகளைச் செலுத்துவதற்கு இரண்டு விதங்கள் உள்ளன.

1. மனோற்சாகம் (லேவி 1:1-3:17)

2. கட்டளையிடப் பட்டிருக்கிற பிரகாரம் (லேவி 4:1-6:7)

16. பலிகளை செலுத்தவேண்டிய விதம்

1. சர்வாங்க தகனபலிகளை முழுவதுமாகக் தகிக்க வேண்டும். (லேவி 1:6-17; லேவி 6:8-12) அதன் ஒரு பகுதி ஆசாரியருடைய பாகமாக இருந்தால் அதைத் தகிக்கக்கூடாது.

2.போஜனப்பலிகளின் ஒரு பகுதி தகிக்கப்படவேண்டும். தகிக்கப்படாத பகுதி ஆசாரியருக்குரியது. (லேவி 2:1-16; லேவி 6:14-18)

3.ஆசாரியருக்குரிய போஜனப்பலிகள் முழுவதுமாகத் தகிக்கப்படவேண்டும். (லேவி 6:19-23)

4.சமாதானப் பலிகளின் ஒரு பகுதி சுட்டெரிக்கப்பட வேண்டும். அதின் ஒரு பகுதியை ஆசாரியரும், பலி செலுத்துகிறவரும் புசிக்க வேண்டும். (லேவி 3:1-17; லேவி 7:11-21,28-38)

5. பாவநிவாரண பலியைப் பாளயத்திற்கு உள்ளே ஒரு பகுதியையும், பாளயத்திற்குப் புறம்பே ஒரு பகுதியையும் சுட்டெரிக்க வேண்டும். (லேவி 4:1-35; லேவி 6:24-30; லேவி 8:14-17)

6.குற்ற நிவாரண பலியின் ஒரு பகுதியைச் சுட்டெரிக்க வேண்டும். மற்றொரு பகுதியைப் புசிக்கவேண்டும். (லேவி 5:1-6:7; லேவி 7:1-10)

17. பலியாக செலுத்தப்படும் மிருகஜீவன்கள்

1. மந்தை (லேவி 1:1-9; லேவி 16:1-34; எண் 19)

2.செம்மறியாடுகளும், ஆடுகளும் (லேவி 1:1-13; லேவி 3:7-11)

3.வெள்ளாடுகளும், அதன் குட்டிகளும் (லேவி 1:10-13; லேவி 4:27-35)

4. புறாக்கள் (லேவி 5:7-10; ஆதி 15:9)

5. காட்டுப்புறாக்கள் (லேவி 5:7-10)

பலியாக செலுத்தப்படும் மிருகங்களைப்பற்றிய பிரமாணங்கள்

1. சுத்தமான மிருகஜீவன்களாக இருக்க வேண்டும். (ஆதி 8:20)

2.பழுதற்ற மிருகஜீவன்களாக இருக்க வேண்டும். (லேவி 22:18-25)

3.குறைந்தபட்சம் எட்டு வயது நிரம்பியதாக இருக்க வேண்டும். (லேவி 22:27; லேவி 23:12)

18. போஜனபலி லேவி 2:1-10

இந்த அதிகாரத்தில் போஜனபலியைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதியாகமத்தில் முதன் முதலாக போஜனபலி செலுத்தப்பட்டதைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ""காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்'' (ஆதி 4:3).

கர்த்தரிடத்தில் தான் வைத்திருக்கிற பக்தியை வெளிப்படுத்திக் காண்பிப்பதற்காகவும், கர்த்தர் தனக்கு கொடுத்திருக்கிற ஏராளமான நன்மைகளுக்கு அவருக்கு நன்றி சொல்லும் வண்ணமாகவும், இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு போஜனபலியை செலுத்துகிறார்கள்.

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு போஜனபலியைப்பற்றிய பிரமாணத்தை சொல்லுகிறார். இஸ்ரவேல் புத்திரரில் சாதாரண ஏழைகளாகயிருக்கிறவர்கள் போஜனபலியை செலுத்துகிறார்கள். இவர்களால் காளை வெள்ளாட்டுக்கடா போன்ற மிருகங்களை சர்வாங்க தகனபலியாக செலுத்த முடியாது. அந்த அளவுக்கு இவர்களிடத்தில் பொருளாதார வசதி இருக்காது.

இஸ்ரவேல் ஜனத்தாரில் சாதாரண ஏழைகளாகயிருக்கிறவர்கள் தங்கள் அன்றாட போஜனத்திற்காக அப்பம் புசிக்கிறார்கள். இவை மெல்லிய மாவினாலும், எண்ணெயினாலும் செய்யப்பட்டவை. தாங்கள் அன்றாடம் புசிக்கிற அப்பங்களை, இவர்கள் கர்த்தருக்கு போஜனபலியாக செலுத்துகிறார்கள். கர்த்தரும் இவர்கள் செலுத்துகிற போஜனபலியை அங்கீகரிக்கிறார்.

கர்த்தர் தம்முடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும் தங்களுக்கு போஜனம் கொடுத்து, தங்களை பராமரிக்கிறார் என்பதை இஸ்ரவேல் ஜனத்தார் நன்றியுள்ள இருதயத்தோடு அங்கீகரிக்கிறார்கள். தங்களுடைய போஜனத்திற்கு தாங்கள் கர்த்தரையே நம்பியிருப்பதையும் இதன் மூலமாக உறுதிபண்ணுகிறார்கள். தங்களுக்கு தேவையான அன்றாட போஜனத்தை கர்த்தர் தாமே தமது கிருபையினாலே தங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று பயபக்தியோடு விண்ணப்பம்பண்ணுகிறார்கள்.

கர்த்தர் தங்களுக்கு போஜனம் கொடுக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் அந்தப் போஜனத்தை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்பண்ணி புசிக்கிறார்கள். அதே வேளையில் புசிப்பதற்கு அப்பமில்லாமல் பசியோடிருக்கும் தரித்திரரரை நினைவுகூர்ந்து, தங்களிடத்திலுள்ள போஜனத்தை அவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறார்கள். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். கர்த்தர் தாம் பட்ட கடனை திருப்பி செலுத்துவார்.

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு போஜனபலியை செலுத்தும்போது, கர்த்தர் அவர்களுடைய பலியை அங்கீகரிக்கிறார். தமக்கு செலுத்தப்படும் போஜனபலியானது எப்படிப்பட்டதாயிருக்கவேண்டும் என்பதையும் கர்த்தர் தம்முடைய பிரமாணத்தில் சொல்லுகிறார். கானான் தேசத்தில் மெல்லிய மாவும், எண்ணெயும் தாரளமாய்க் கிடைக்கிறது.

""உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்; அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; அது ஒ-வமரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசம். அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவு படாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்'' (உபா 8:7-9).

கர்த்தருக்கு போஜனபலியாகிய காணிக்கையை செலுத்துகிறவர், அதை மெல்லிய மாவாக செலுத்தவேண்டும். அந்த மாவின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போடவேண்டும்.

கர்த்தர் இந்த வசனப்பகுதியில் நான்குவிதமான போஜனபலிகளைப்பற்றிச் சொல்லுகிறார். அவையாவன : 1. அடுப்பில் சுடப்படாத மெல்லியமாவு 2. அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி. 3. தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி. 4. பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி.

தமக்கு காணிக்கையாக செலுத்தப்படும் போஜனபலியானது, எவ்வாறு செலுத்தப்படவேண்டும் என்றும் கர்த்தர் சொல்லுகிறார். அதன் விவரம் வருமாறு :

""போஜனபலியாகிய காணிக்கை மெல்-ய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின் மேல் தூபவர்க்கம் போட்டு, அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் ப-பீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக் கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனப-'' (லேவி 2:1,2) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

போஜனபலி மிருகஜீவன்களின் மாம்சத்தைக் குறிக்காது. (லேவி 1:1-17). அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின் மேல் தூபவர்க்கம் போடப்பட்டிருக்கும். ஞாபகக்குறியாகப் போஜனபலியின் ஒரு பகுதி தகனிக்கப்படும். (லேவி 2:2) மீதியாயிருப்பது ஆசாரியருடைய ஊழியங்களுக்காக அவர்களைச் சேரும். (லேவி 2:3). மெல்லிய மாவு என்பது கோதுமை மாவைக்குறிக்கிறது.

கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்தப்படும் போஜனபலிகளைப்பற்றிய விவரம் வருமாறு :

1. மெல்லியமாவு, எண்ணெய், தூபவர்க்கம் (லேவி 2:1-3)

2. புளிப்பில்லாத அதிரசம் (லேவி 2:4)

3. புளிப்பில்லாத அடை (லேவி 2:5-6)

4. எண்ணெயில் பொறிக்கப்பட்ட அடை (லேவி 2:7-9)

5.விளைச்சலின் முதற்கனி. (லேவி 2:12-16)

கர்த்தருக்கு செலுத்தப்படும் போஜனபலியானது, அடுப்பில் பாகம்பண்ணப்பட்டதாகவும், தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்டதாகவும் அல்லது பொரிக்குஞ்சட்டியில் பாகம்பண்ணப்பட்டதாகவும் இருக்கலாம்.

கர்த்தர் வெவ்வேறு விதமான போஜனபலிகளைப்பற்றியும் இந்த வசனப்பகுதியில் சொல்லுகிறார்.

""நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனப-யானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்-ய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக'' (லேவி 2:4)

""நீ படைப்பது தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனப-யானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்-ய மாவினால் செய்யப்பட்டதாயிருப்பதாக. அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக; இது ஒரு போஜனப-'' (லேவி 2:5,6).

""நீ படைப்பது பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனப-யானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்-ய மாவினால் செய்யப்படுவதாக'' (லேவி 2:7).

இஸ்ரவேல் புத்திரர் குறைந்த செலவில் கர்த்தருக்கு போஜனபலியை காணிக்கையாக செலுத்துகிறார்கள். ஆனாலும் இந்தப் பலியை செலுத்தும்போதும், கர்த்தர் சொன்ன பிரகாரம் இதை செலுத்தவேண்டும்.

கர்த்தருக்கு போஜனபலியாகிய காணிக்கையை செலுத்துமாறு கொண்டு வருகிறவனே, அதை ஆசாரியரிடத்தில் கொடுக்க வேண்டும். ஆசாரியன் அந்தப் போஜனபலியை பலிபீடத்தண்டையில் கொண்டு வரவேண்டும்.

அந்தப் போஜனப-யி-ருந்து ஆசாரியன் ஞாபகக்குறியாக ஒரு பங்கை எடுத்துப் ப-பீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்தவாசனையான தகனப- (லேவி 2:8,9).

போஜனபலிகளெல்லாம் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்பட வேண்டும். அது அவர்களுடைய ஊழியத்திற்குக் காணிக்கையாகும். போஜனபலியிலிருந்து ஒரு பகுதியை எடுத்து, அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகத் தகனிக்கவேண்டும் (லேவி 2:2-3,8-10,14-16). போஜன பலிகளெல்லாம் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான பலி என்று அழைக்கப்படுகிறது. மிருகஜீவன்களின் பலிகளில் சிலவும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான பலிகளாகும்.

இஸ்ரவேல் புத்திரர் செலுத்துகிற போஜனபலியில் ஒரு பகுதி பலிபீடத்தின்மேல் தகனிக்கப்படுகிறது. ஆசாரியரே இந்தப் போஜனபலியை தகனிக்கிறார். இது ஞாபகக்குறியாக தகனிக்கப்படுகிறது. கர்த்தர் தங்களுக்கு போஜனம் கொடுத்து தங்களை அதிகமாய் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை நினைவுகூரும் வண்ணமாக, இஸ்ரவேல் புத்திரர் கொண்டு வரும் போஜனபலியின் ஒரு பகுதி, கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தகனிக்கப்படுகிறது.

ஆசரிப்புக்கூடாரத்தில் கர்த்தருடைய ஊழியத்தை செய்கிற ஆசாரியருக்கும் போஜனம் கிடைக்கவேண்டும். இஸ்ரவேல் புத்திரர் கொண்டு வரும் போஜனபலியில் ஒரு பகுதி கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகனபலியாக, பலிபீடத்திலே தகனிக்கப்படுகிறது.

அந்தப் போஜனப-யில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனப-களில் இது மகா பரிசுத்தமானது (லேவி 2:3,10).

19. மகாபரிசுத்தமான காரியங்கள்

1. மகா பரிசுத்த ஸ்தலம் (யாத் 26:33-34)

2.வெண்கல பலிபீடம் (யாத் 29:37; யாத் 40:10)

3. பொன்பலிபீடம் (யாத் 30:10)

4.ஆசரிப்புக் கூடாரமும், அதன் பணிமுட்டுகளும், பாத்திரங்களும் (யாத் 30:29; யாத் 4:4,19)

5. தூபவர்க்கம் அல்லது சுகந்தவாசனை (யாத் 30:36)

6. எல்லா போஜனபலிகளும், அதன் ஒரு பகுதி அக்கினியினால் தகனிக்கப்படும். (லேவி 2:3,10; லேவி 6:17; லேவி 10:12; எண் 18:9)

7.பாவநிவாரண பலிகள் (லேவி 6:17,25,29; லேவி 10:17; எண் 18:9)

8.குற்றநிவாரண பலிகள் (லேவி 6:17; லேவி 7:1,6; லேவி 14:13; எண் 18:9)

9. சமுகத்தப்பம் (லேவி 24:9)

10.கர்த்தருக்காக அர்ப்பணிக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் (லேவி 27:28)

பரிசுத்த வேதாகமத்தில், மகாபரிசுத்தமான நபர்களைப்பற்றியும், மேலும் சில காரியங்களைப்பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நியாயப்பிரமாணத்தின் பிரகாரம் மகாபரிசுத்தமானவை. அவற்றின் விவரம் வருமாறு :

1. பரிசுத்தப்பூமி (யாத் 3:5)

2. சபைகூடுதல் (லேவி 23; யாத் 12:16)

3. தேவனுடைய வாசஸ்தலம் (யாத் 15:13)

4. ஓய்வுநாள் (யாத் 16:23; யாத் 20:8; யாத் 35:2)

5.தேசம் (யாத் 19:6; உபா 7:6; உபா 14:2,21)

6.மனுஷர் (லேவி 11:44; யாத் 22:31; யாத் 29:37)

7. ஆசரிப்புக்கூடார ஸ்தலம் (யாத் 26:33)

8. வஸ்திரங்கள் (லேவி 16:4;யாத் 28:2-4)

9. பொருட்கள் (லேவி 22:2; யாத் 28:38)

10. வரங்கள் (யாத் 28:38)

11. கிரீடம் (யாத் 29:6; யாத் 39:30)

12.பலிகள் (லேவி 23:20; யாத் 29:33-34)

13. அபிஷேகதைலம் (யாத் 30:25)

14. தூபவர்க்கம் (யாத் 30:37)

15. பரிசுத்த ஸ்தலம் (லேவி 16:33)

16. தேவன் (லேவி 19:2; லேவி 20:7,26; லேவி 21:8)

17. முதற்கனிகள் (லேவி 19:24)

18. தேவனுடைய நாமம் (லேவி 20:3; லேவி 22:2,32)

19. ஆசாரியர்கள் (லேவி 21:6-8)

20. போஜனபலிகள் (லேவி 22:2-16)

21. தசமபாகங்கள் (லேவி 27:30-32)

22. தண்ணீர் (எண் 5:17)

23. நசரேயர் (எண் 6:5-8)

24. அசைவாட்டப்படும் பலிகள் (எண் 6:20)

25. தலையீற்று (எண் 18:17)

26. ஏறெடுக்கப்படும் பலிகள் (எண் 18:19)

27. கருவிகள் (எண் 31:6)

28. பாளயம் (உபா 23:14)

20. போஜனபலியாகிய காணிக்கையைக் குறித்த

கட்டளைகள்

1.போஜனப-யாகிய காணிக்கை மெல்-ய மாவாயிருப்பதாக. அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின் மேல் தூபவர்க்கம் போடவேண்டும் (லேவி 2:1)

2. அதை ஆசாரியர்களிடத்தில் கொண்டு வருவானாக; ஆசாரியன் அதைப் ப-பீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன் (லேவி 2:2)

3. அந்தப் போஜனப-யில் மீதியாயிருப்பது ஆசாரியரைச் சேரும். இது மகா பரிசுத்தமானது. ஆசாரியர்கள் இதைப் புசிக்கலாம். (லேவி 2:3)

4.போஜனபலி அடுப்பில் பாகம்பண்ணப் பட்டதானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்-ய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக. (லேவி 2:4)

5.போஜனபலி தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்டதானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்-ய மாவினால் செய்யப் பட்டதாயிருப்பதாக. (லேவி 2:5)

6.போஜனபலியைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக. (லேவி 2:6)

7.போஜனபலி பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்டதானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்-ய மாவினால் செய்யப்படுவதாக. (லேவி 2:7)

8. இப்படிச் செய்யப்பட்ட போஜனப-யைக் கர்த்தருக்குச் செலுத்துவாயாக. (லேவி 2:8)

9.ஆசாரியன் அதைப் ப-பீடத்தண்டையில் கொண்டுவந்து, அந்தப் போஜனப-யி-ருந்து ஞாபகக்குறியாக ஒரு பங்கை எடுத்துப் ப-பீடத்தின்மேல் தகனிக்கக் கடவன் (லேவி 2:8-9)

10. இந்தப் போஜனப-யில் மீதியானது ஆசாரியரைச் சேரும். இது ஆசாரியருடைய பங்கு. அவர்கள் இதைப் போஜனம் பண்ணலாம். (லேவி 2:10)

11. நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனப-யும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக. (லேவி 2:11)

12. முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம். ஆனாலும், ப-பீடத்தின்மேல் அவைகள் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படலாகாது. (லேவி 2:12)

13. நீ படைக்கிற எந்த போஜனப-யும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக

14. நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக. (லேவி 2:13)

15. முதற்பலன்களை போஜனப-யாகக் கொண்டுவரக்கடவாய். (லேவி 2:14)

16. போஜனபலியின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; (லேவி 2:15)

17. ஆசாரியன் போஜனபலியில் ஞாபகக் குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக் கடவன். (லேவி 2:16)

21. சமாதான பலிகளை படைப்பது சம்பந்தமான பிரமாணம்

1. சமாதானபலியை அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக் கடவன்.

2. அது பழுதற்றிருக்க வேண்டும்.

3. பலிசெலுத்துகிறவன் ப-யின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன். (லேவி 3:2).

4.ஆசாரியர் அதின் இரத்தத்தைப் ப-பீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக் கடவர்கள்.

5.சமாதான ப-யிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீர-ன்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனப-யாக பலிசெலுத்துகிறவன் செலுத்துவானாக. அதை ஆசாரியன் ப-பீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின் மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனப-யின் மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள். (லேவி 3:3-6).

6. பலிசெலுத்துகிறவன் ஆட்டுக்குட்டியைப் ப-யாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன் (லேவி 2:7).

7. பலிசெலுத்துகிறவன் ப-யின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; (லேவி 3:8).

8.ஆசாரியர் அதின் இரத்தத்தைப் ப-பீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

9.சமாதான ப-யிலே அதின் கொழுப்பையும், நடுவெலும்பி-ருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீர-ன்மேல் இருக்கிற ஜவ்வையும் ஆசாரியன் ப-பீடத்தின் மேல் தகனிக்கக்கடவன்; (லேவி 3:9-11).

10. பலிசெலுத்துகிறவன் செலுத்துவது வெள்ளாடாயிருக்குமானால், அவன் அதை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன். (லேவி 3:12).

11. பலிசெலுத்துகிறவன் அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; (லேவி 3:13).

12. ஆசாரியர் அதின் இரத்தத்தைப் ப-பீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

13. அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மே-ருக்கிற கொழுப்பு முழுவதையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீர-ன்மேல் இருக்கிற ஜவ்வையும் ஆசாரியர் ப-பீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவர்கள்; (லேவி 3:14-16).

14. கொழுப்பையாவது இரத்தத்தையாவது உங்கள் தலைமுறைதோறும் நீங்கள் புசிக்கலாகாது (லேவி 3:17).

22. பலி மிருகங்கள்

சர்வாங்க தகனபலிகளாக செலுத்தப்படும் மிருகங்கள் :

1. காளை - நான்கு வயதிற்கு மேற்பட்டது. (லேவி 1:3; லேவி 8:2; லேவி 16:3)

2.செம்மறியாடு அல்லது வெள்ளாடு (லேவி 1:10; லேவி 9:2; லேவி 16:3,5-28)

சமாதானபலிகளாக செலுத்தப்படும் மிருகங்கள் :

1. காளை அல்லது பசு (லேவி 3:1)

2. ஆட்டுமந்தையிலுள்ள ஆண் அல்லது பெண் அல்லது குட்டி (லேவி 3:6-7,12)

பாவநிவாரணபலிகளாக செலுத்தப்படும் மிருகங்கள் :

1.இளங்காளை - நான்கு வயதிற்கு மேற்பட்டது (லேவி 4:3-4,8,12-21)

2. இளங்காடா (லேவி 4:23)

3. ஆடுகளிலாவது, வெள்ளாடுகளிலாவது ஒரு பெண்குட்டி அல்லது குட்டி (லேவி 5:6)

4. இளங்காளை (லேவி 9:2)

குற்றநிவாரணபலிகளாக செலுத்தப்படும் மிருகங்கள் :

1.பெண்குட்டி அல்லது குட்டி (லேவி 5:6)

2.ஆட்டுக்கடா (லேவி 5:15,18; லேவி 6:6)

மனோற்சாகமாக செலுத்தப்படும் பலிகள் :

1.சர்வாங்க தகனபலிகள் - மாடுகளிலாகிலும், ஆடுகளிலாகிலும், வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆண் (லேவி 22:18-21).

2.விசேஷித்த பொருத்தனைகள் - மாடுகளிலாகிலும், ஆடுகளிலாகிலும், வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆண். (லேவி 22:18-21,27)

3. மாடு - நான்கு வயதிற்கு மேற்பட்டது. (லேவி 22:23)

4. வெள்ளாடுகளில் ஆண் அல்லது குட்டி (லேவி 22:23)

பண்டிகைகாலத்துப் பலிகள்

1. பஸ்கா பண்டிகை - ஆண் ஆட்டுக்குட்டி (யாத் 12:5)

2.பெந்தெகொஸ்தே - ஒன்பது ஆட்டுக்குட்டிகள், ஒரு காளை, இரண்டு ஆட்டுக்கடாக்கள், ஒரு வெள்ளாட்டுக்கடா (லேவி 23:18-19)

23. இரத்தம் பூசப்பட்ட ஒரு சில இடங்கள்

ஏழுதரம் என்பது ஒரு பரிபூரணமான கிரியையின் நிறைவைக் குறிக்கும்.

பரிசுத்த வேதாகமத்தில் இரத்தம் பூசப்பட்ட ஒரு சில இடங்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :

1.சுகந்த தூபபீடத்து கொம்புகள் (லேவி 4:7)

2. தகனபலிபீடத்தின் அடியில்

3. பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே (லேவி 4:6)

4. தகனபீடத்துக் கொம்புகள் (லேவி 4:30)

5.தகனபீடத்து மீது (லேவி 1:5,11; லேவி 3:2)

6. பலிபீடத்தின் பக்கத்தில் (லேவி 5:9)

7.பரிசுத்த ஸ்தலத்தில் (லேவி 6:30; லேவி 16:27)

8.ஆசாரியரின் வலதுகாதின் மடலில் (லேவி 8:23-24)

9.ஆசாரியரின் வலதுகையின் பெருவிரலில் (லேவி 8:23-24)

10. ஆசாரியரின் வலதுகாலின் பெருவிரலில் (லேவி 8:23-24)

11. வீடுகளின்மீது (லேவி 14:51-53)

12. சுத்திகரிக்கப்படும் நபருடைய வலது காதின்மீது (லேவி 14:25,28)

13. சுத்திகரிக்கப்படும் நபரின் வலதுகை பெருவிரல் (லேவி 14:25,28)

14. சுத்திகரிக்கப்படும் நபரின் வலதுகால் பெருவிரல் (லேவி 14:25,28)

15. கிருபாசனத்தின்மீது (லேவி 16:14-15)

16. ஆசரிப்புக்கூடாரத்திற்கு எதிரில் (எண்19:4)

17. ஜனங்களின்மீது (யாத் 24:6-8)

18. உடன்படிக்கைப் புஸ்தகம்மீது (யாத் 24:6-8)

19. ஆசாரியர்மீது (யாத் 29:21)

20. ஆசாரியரின் வஸ்திரங்கள்மீது (யாத் 29:21)

24. பாவநிவாரண பலிகள் சம்பந்தமான கட்டளைகள்

1. அபிஷேகம் பெற்ற ஆசாரியன், பாவஞ் செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையை பாவநிவாரண ப-யாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன் (லேவி 4:2-3).

2. அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாச-லே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன். (லேவி 4:4).

3.அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.

4. அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவரக்கடவன் (லேவி 4:5).

5. தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன் (லேவி 4:6).

6.ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின் மேல் பூசக்கடவன். (லேவி 4:7).

7.ஆசாரியன் காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாக இருக்கிற தகனப-பீடத்தின் அடியிலே ஊற்றிவிடக்கடவன்.

8.பாவநிவாரணப-யான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக் காய்களோடே கூடக் கல்லீர-ன்மேல் இருக்கிற ஜவ்வையும், சமாதானப-யின் காளையி-ருந்து எடுக்கிறதுபோல அதி-ருந்து எடுத்து, அவைகளைத் தகனப-பீடத்தின்மேல் தகனிக்கக்கடவன். (லேவி 4:8-10).

9. காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும், காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன். (லேவி 4:11-12).

10. இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்தால், சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் ப-யிடக் கொண்டுவரவேண்டும். (லேவி 4:13-14).

11. சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும். (லேவி 4:15).

12. அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவரக் கடவன். (லேவி 4:16).

13. தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளிக்கக்கடவன். (லேவி 4:17).

14. ஆசாரியன் ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் ப-பீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசக்கடவன். (லேவி 4:18).

15. ஆசாரியன் மற்ற இரத்தத்தையெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாச-ல் இருக்கிற தகனப-பீடத்தின் அடியிலே ஊற்றிவிடக்கடவன்.

16. அதின் கொழுப்பு முழுவதையும் அதி-ருந்து எடுத்து, ப-பீடத்தின்மேல் தகனிக்கக்கடவன். (லேவி 4:19-20).

17. காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், சுட்டெரிக்கக்கடவன் (லேவி 4:21).

18. ஒரு பிரபு தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் ப-யாகக் கொண்டு வரக்கடவன். (லேவி 4:22-23).

19. அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனப- கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்லக்கடவன். (லேவி 1:11, 4:24).

20. ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனப-பீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனப-பீடத்தின் அடியிலே ஊற்றிவிடக்கடவன் (லேவி 4:25).

21. ஆசாரியன் அதின் கொழுப்பு முழுவதையும், ப-பீடத்தின்மேல் தகனிக்கக்கடவன். (லேவி 3:3-5, 4:26).

22. சாதாரண ஜனங்களில் ஒருவன் தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் ப-யாகக் கொண்டுவரக்கடவன். (லேவி 4:27-28,32).

23. பாவநிவாரணப-யின் தலைமேல் பாவம் செய்த சாதாரண ஜனங்களில் ஒருவன் தன் கையை வைத்து, சர்வாங்க தகனப-யிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணப-யைக் கொல்லக்கடவன். (லேவி 1:11, லேவி 4:29,32-33).

24. ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனப-பீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தையெல்லாம் ப-பீடத்தின் அடியிலே ஊற்றிவிடக்கடவன் (லேவி 4:30,34).

25. ஆசாரியன் அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் ப-பீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன். (லேவி 3:3-5, லேவி 4:31,35).

25. ஒருவனை தீட்டுப்படுத்தும் காரியங்கள்

1. மரித்தோருடைய சரீரத்தைத் தொடுவது. (எண் 9:10; எண் 19:13)

2.அசுத்தமான நபரைத் தொடுவது. (லேவி 5:3; லேவி 22:4-6)

3.அசுத்தமான மிருகஜீவன்களைப் புசிப்பது (லேவி 11; உபா 14)

4.பிள்ளையைப் பெற்றிருக்கும் ஸ்திரீ (லேவி 12:1-8)

5. வியாதியஸ்தர் (லேவி 13:1-15:33)

6. தீட்டான வீடு (லேவி 14:34-57)

7.தானாக இறந்துபோன மிருகஜீவன். (லேவி 17:15)

8.ஆசாரியர் செய்யும் சில சேவைகள் (எண் 19)

9.நெருங்கிய உறவினரிடையே சேருதல். (லேவி 20:19-21)

10. மனுஷ எலும்பையாவது, பிரேதக் குழியையாவது தொடுதல் (எண் 19:16)

11. செத்துப்போன மனுஷனுடைய கூடாரத்தில் பிரவேசித்தல் (எண் 19:14)

26. பரிசுத்தவேதாகமத்தில் ஒரு சில பாவங்கள் ""குற்றங்கள்'' என்று அழைக்கப்படுகிறது.

1.ஆணையைக் குறித்து உண்மையில்லாதிருத்தல் (லேவி 5:1).

2.அசுத்தமானதைத் தொடுதல். (லேவி 5:2-3)

3. பதறி ஆணையிடுதல். (லேவி 5:4)

4.கர்த்தருக்குரிய பரிசுத்தமான சடங்குகளில் அறியாமையினால் குற்றம் செய்தல். (லேவி 5:15; லேவி 22:14-16)

5. தன் வசத்தில் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளில் அநியாயம் செய்தல். (லேவி 6:2-3; யாத் 22:9-13; எண் 5:6-27)

27. குற்றநிவாரண பலியாக செலுத்த வேண்டியவை

1. ஆடுகளில் ஒருபெண்குட்டி (லேவி 5:6)

2. வெள்ளாடுகளில் ஒரு பெண்குட்டி

3. காட்டுப்புறா (லேவி 5:7)

4. புறா

5. ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கு (லேவி 5:11).

6. ஆட்டுக்கடா (லேவி 5:15,18)

28. ஒருவன் எந்தெந்த காரியங்களிலெல்லாம் பொய்யாணையிடுவான்

1.தன் வசனத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளைப் பற்றி (லேவி 6:2,5)

2.கொடுக்கல் வாங்கலில் இடுக்கண் செய்தல். (லேவி 6:2,4)

3.ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்த் பரித்துக் கொள்ளுதல். (லேவி 6:2,4)

4.ஏமாற்றி ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளுதல். (லேவி 6:2,4)

5.காணாமற்போயிருந்து கண்டு எடுத்த பொருளைப் பற்றி (லேவி 6:3,4)

29.பரிசுத்த வேதாகமத்தில் குற்றநிவாரண பலிகளின் பிரமாணத்தைப்பற்றி

1.சில குறிப்பிட்ட பாவங்களைச் செய்தவன். (லேவி 6:1-5) தன் குற்றநிவாரண பலியைக் கொண்டு வரவேண்டும் (லேவி 5:6).

2.தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரணப-யாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண ப-யாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவர வேண்டும் (லேவி 5:6).

3.அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

4.ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண ப-யாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனப-யாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வரக்கடவன். (லேவி 5:7).

5.அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக. (யாத் 5:8)

6.அவன் பாவநிவாரண ப-க்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ப-பீடத்தின் பக்கத்தில் தெளிப்பானாக. (யாத் 5:8-9)

7.மீதியான இரத்தத்தைப் ப-பீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; (லேவி 5:9).

8.மற்றதை நியமத்தின்படியே அவன் தகனப-யாய்ச் செலுத்தக்கடவன். (லேவி 5:10).

9. இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். (லேவி 5:10).

10. இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டு வர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்-ய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; (லேவி 5:11).

11. அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனப-களைப்போல, ப-பீடத்தின் மேல் தகனிக்கக்கடவன்; (லேவி 5:12).

12. அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் (லேவி 5:13).

13. மீதியானது போஜன ப-யைப்போல ஆசாரியனைச் சேரும் (லேவி 5:13).

14. ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, அவன் மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணப-யாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, பரிசுத்தமானதைக் குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டிக் கொடுப்பானாக; (லேவி 5:15-16).

15. இதை ஆசாரியனுக்குக் கொடுப்பானாக. குற்றநிவாரண ப-யாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக் கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் (லேவி 5:16).

16. ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதினிமித்தம் அவன் குற்றநிவாரணப-யாக, பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக் கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். (லேவி 5:17-18).

17. ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, மனுஷருக்கு விரோதமாகவும் அநியாயம் செய்து பாவம் செய்தவன் தான் நஷ்டப்படுத்திய பொருளைத் திரும்பக் கொடுக்கக்கடவன். அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டிக் கொடுக்கக்கடவன். (லேவி 6:1-5).

18. தன் குற்றநிவாரணப-யாக, பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரண ப-யாகக் கொண்டு வருவானாக. கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன். (லேவி 6:6-7).

30. பரிசுத்த வேதாகமத்தில் சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணத்தைப்பற்றி

1.ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் சர்வாங்க தகனப-க்குரிய பிரமாணத்தைப் பற்றி கற்பிப்பாயாக. (லேவி 6:9).

2.சர்வாங்க தகனப-யானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் ப-பீடத்தின்மேல் எரியவேண்டும்.

3. ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, ப-பீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனப-யின் சாம்பலை எடுத்து, ப-பீடத்துப் பக்கத்தில் கொட்ட வேண்டும் (லேவி 6:10).

4.தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டு போய்க் கொட்டக்கடவன். (லேவி 6:11).

5.ப-பீடத்தின்மே-ருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்க வேண்டும்; (லேவி 6:12).

6.ஆசாரியன் காலைதோறும் அதின் மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனப-யை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான ப-களின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன். (லேவி 6:12).

7.ப-பீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது. (லேவி 6:13).

31. பரிசுத்த வேதாகமத்தில் போஜனபலியின் பிரமாணத்தைப்பற்றி

1.ஆரோனின் குமாரர் போஜனபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் ப-பீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும் (லேவி 6:14).

2.ஆசாரியன் போஜனப-யின் மெல்-ய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனப-யின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை ஞாபகக்குறியாகப் ப-பீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன். (லேவி 6:15).

3. இதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும் (லேவி 6:16,18).

4.இதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம் பண்ணவேண்டாம் (லேவி 6:17).

5.இது கர்த்தருக்கு இடப்படும் தகனங்களில் கர்த்தர் ஆசாரியருக்குக் கொடுத்த அவர்களுடைய பங்காகும்.

6.இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது. (லேவி 6:18).

32. பரிசுத்த வேதாகமத்தில் நித்தியபோஜனபலி சம்பந்தமான கட்டளைகள்

1. ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்கு நித்திய போஜனப-யாகச் செலுத்தக்கடவர்கள் (லேவி 6:20,22-23).

2.ஒரு எப்பா அளவான மெல்-ய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனப-யாகச் செலுத்தக்கடவர்கள்.

3.அது சட்டியிலே எண்ணெய்விட்டுப் பாகம்பண்ணப்படக்கடவது (லேவி 16:18,21).

4.பாகம்பண்ணப் பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனப-யாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவாய். (லேவி 16:21).

5.பிரதான ஆசாரியனும், மற்ற ஆசாரியரும் அவர்களுடைய ஸ்தானத்தில் அபிஷேகம் பண்ணப்படுகிறவர்களும் போஜன ப-யாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவர்கள். (லேவி 6:22).

6.அது முழுவதும் தகனிக்கப்பட வேண்டும்; (லேவி 6:22-23) அதைப் புசிக்கக்கூடாது. இயேசு கிறிஸ்துவின் பரிபூரண பலிக்கும் அவருடைய உயிர்த்தெழுதலுக்கும், அவர் பரமேறியதற்கும் இது அடையாளமாகும். (லூக்கா 24:39-53; அப் 1:9-11).

7.அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை (லேவி 6:20,22-23).

33. பரிசுத்த வேதாகமத்தில் பாவநிவாரண பலியின் பிரமாணத்தைப்பற்றி

1.நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் பாவநிவாரணப-யின் பிரமாணத்தைச் சொல்லுவாயாக. (லேவி 6:25).

2.சர்வாங்க தகனப- கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணப-யும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; (லேவி 6:25; லேவி 1:11).

3.பாவ நிவிர்த்திசெய்ய அதைப் ப-யிடுகிற ஆசாரியன் அதைப் புசிக்கக்கடவன்; (லேவி 6:26,29).

4. ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும் (லேவி 6:26).

5.அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; (லேவி 6:27).

6.அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும். (லேவி 6:27).

7.அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; (லேவி 6:28).

8. செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும். (லேவி 6:28).

9.எந்தப் பாவநிவாரணப-யின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப் பட்டதோ, அந்தப் ப- புசிக்கப்படலாகாது. (லேவி 6:30; லேவி 4:5-7,16-18; எபி 13:11). பிராகாரத்தில் தெளிக்கப்பட்ட பலியின் ஒரு பங்கைப் புசிக்கலாம். (லேவி 4:25,30,34; லேவி 6:26-30; லேவி 7:1-10).

10. அது அக்கினியிலே முழுவதுமாகத் தகனிக்கப்படவேண்டும் (லேவி 6:30).

34. பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படும் பலிகளைப்பற்றிய

1.போஜனபலிகளில் மீதமானது. (லேவி 2:1-3; லேவி 7:14)

2.இஸ்ரவேலரின் போஜனபலிகள் (லேவி 2:4-10)

3.பாவநிவாரண பலிகளின் மாம்சம். (லேவி 4:26; லேவி 6:26; லேவி 10:17)

4.குற்றநிவாரண பலிகளின் மாம்சம். (லேவி 7:6)

5.சமாதானபலிகளின் மாம்சம். (லேவி 7:15-17)

6.குஷ்டம் நீங்கி சுத்திகரிக்கப்பட்டவன் குற்றநிவாரண பலியாகக் கொண்டுவரும் ஆழாக்கு எண்ணெய் ஆசாரியனுக்குரியது. (லேவி 14:10-13)

7.மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம் பண்ணப்பட்ட இரண்டு அப்பங்கள். (லேவி 23:17-20)

8.சமுகத்தப்பம் (லேவி 24:9)

35. நொறுங்குகிறவர்களை நெருங்குகிற கர்த்தர்

சங்கீதம் 34:18

[18]நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.

1.நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்

சங்கீதம் 147:3

[3]இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார் , அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

சங்கீதம் 30:2; 6:2; 103:3; 107:20; ஏசாயா 19:22

2.நொறுங்குண்டவர்களை உயிர்ப்பிக்கிறார்

ஏசாயா 57:15

[15]நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும்...

யோவான் 5:21; உபாகமம் 32:39; 1சாமுவேல் 2:6; சங்கீதம் 19:7

3.நொறுங்குண்டவர்களைப் பார்க்கிறார்

ஏசாயா 66:2

[2]என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்

நீதிமொழிகள் 15:3

4.நொறுங்குண்டவர்களின் காயங்கட்டுகிறார்

ஏசாயா 61:1

[1]கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்...

லூக்கா 4:18; 10:34; அப்போஸ்தலர் 16:33; யோபு 5:18; எரேமியா 30:17; எசேக்கியேல் 34:16; ஓசியா 6:1

5.நொறுங்குண்டவர்களிடம் வாசம்பண்ணுகிறார்

ஏசாயா 57:15

பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.

சங்கீதம் 80:1; 113:5; ஏசாயா 37:16; சகரியா 2:10; 8:3; 1தீமோத்தேயு 6:16

36. தீத்து

சில அறிவுரைகள்.

(1) நீ உன்னை நற்கிரியைகள் செய்ய மாதிரியாகக் காண்பி (மாதிரியாயிரு)

தீத்து 2:7

(2) நற்கிரியைகள் செய்ய பக்தி வைராக்கியமாயிரு (தீத்து 2:14

(3) நற்கிரியைகள் செய்ய ஆயுத்தமாயிரு ( தீத்து 3:1)

(4) நற்கிரியைகள் செய்ய ஜாக்கிரதையாயிரு ( தீத்து 3:8)

(5) நற்கிரியைகள் செய்ய பழகு ( தீத்து 3:14)

(6) நற்கிரியைகள் செய்ய ஆகாதவர்கள் (அவிசுவாசமுள்ளவர்கள்) ( தீத்து 1:16)

37.ஏன் புதிய வருடம் ?

1) கனி (கனி = நல்ல சுபாவங்கள்) கொடுப்போம் என்கிற எதிர்பார்ப்பு - லூக் 13:8,9

2) களிகூர்ந்து மகிழும்படி

சங் 90:14,15

3) பரிசுத்தமாய் வாழ்வோம் என்கிற எதிர்பார்ப்பு வெளி 22:11

4) ஊழியம் செய்வோம் என்கிற எதிர்பார்ப்பு - மத் 25:20

5) கர்த்தருக்கு முன்பாக நிற்கும்படியான அனுபவம் - 1 இராஜ 17:1

- நீதி 30:5

38. அனுதினமும்/தினந்தோறும் செய்ய வேண்டிய காரியங்கள்

1) கர்த்தரை துதிக்க வேண்டும் - சங் 35:28

2) ஜெபிக்க வேண்டும் - சங் 86:3

3) வேத வசனத்தை ஆராய வேண்டும் - அப் 17:11

4) சிலுவையை எடுத்து பின் செல்ல வேண்டும் - லூக் 9:23

5) அவர் சமுகத்தை தேட வேண்டும் - சங் 105:4

6) வசனத்துக்கு கீழ்படிய வேண்டும் - நீதி 8:34

7) ஒருவருக்கு ஒருவர் புத்தி சொல்ல வேண்டும் - எபி 3:13

8) சாக வேண்டும் (உலகத்துக்கு) - 1 கொரி 15:31

9) வேத வாசிப்பு காணப்பட வேண்டும் - யாத் 16:4

10) பொருத்தனை செலுத்த வேண்டும் - சங் 61:8

11) இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கிக்க வேண்டும் - அப் 5:42

12) சபைகளை குறித்து கவலை வேண்டும் - 2 கொரி 11:28

13) கர்த்தரை தேட வேண்டும் - ஏசா 58:2

14) தேவ பயம் காணப்பட வேண்டும் - நீதி 23:17

15) தேவாலயத்துக்கு சென்று துதிக்க வேண்டும் - லூக் 24:53

16) இரட்சிக்கபடுகிறவர்கள் சபையில் சேர வேண்டும் - அப்போ 2:47

17) கர்த்தரால் நடத்தபட வேண்டும் - ஏசா 58:11

18) கர்த்தருக்குள் மகிழ வேண்டும் - சங் 89:16

19) தேவாலயத்தில் தரித்திருக்க வேண்டும் - அப் 2:46

20) ஆசிர்வாதத்தை கேட்டு ஜெபிக்க வேண்டும் - மத் 6:11

21) பூரணம் அடைய வேண்டும் - 2 கொரி 4:16

39. முதலாவது செய்ய வேண்டிய காரியங்கள்

1) இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும் - மத் 10:37

2) தேவனுடைய ராஜ்யத்தை தேட வேண்டும் - மத் 6:33

3) அவருடைய நீதியை தேட வேண்டும் - மத் 6:33

4) தாய், தகப்பனை கனம் பண்ண வேண்டும் - எபேசி 6:1-3

5) தாழ்த்த பழக வேண்டும் - மாற் 9:35

6) கர்த்தருடை ஊழியக்காரருக்கு கொடுக்க வேண்டும் - 1 இராஜ 17:13

7) கீழ்படிய வேண்டும் - எபி 4:6

8) சகோதரன் உடன் ஒப்பரவாக வேண்டும் - மத் 5:24

9) நமது கண்ணில் உள்ள உத்திரத்தை (குறைகளை) பார்க்க வேண்டும் - மத் 7:5

10) உட்புறம் சுத்தம் செய்ய வேண்டும் -மத் 23:26

11) வாரத்தின் முதல் நாளை கனப்படுத்த வேண்டும் - ஏசா 58:13,14

12) சபை கூடி வர வேண்டும் - 1 கொரி 11:18

13) முதற்பலனை கர்த்தருடைய ஆலயத்துக்கு கொண்டு வர வேண்டும் - யாத் 34:26

14) முதல் வருகையில் எடுக்கபட வேண்டும் - 1 தெச 4:16

15) முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெற வேண்டும் - வெளி 20:6

40. நம்மில் பெருக வேண்டிய காரியங்கள்

1) விசுவாசம் - 2 தெச 1:3

2) கிருபை - 1 பேது 1:2

3) சமாதானம் - 1 பேது 1:2

4) அன்பு - பிலி 1:9

5) வேத வசனம் - அப் 12:24

6) தர்ம காரியம் - 2 கொரி 8:7

7) நற்கிரியைகள் - 2 கொரி 9:8

8) ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு - 2 தெச 1:3

9) எல்லா வித ஜாக்கிரதை - 2 கொரி 8:7

10) இரக்கம் - யுதா:2

11) மகிழ்ச்சி - பிலி 1:25

12) நம்பிக்கை - ரோ 15:13

13) கர்த்தருடைய கிரியைகள் (ஜெபம், வேத வாசிப்பு) - 1 கொரி 15:58

14) தைரியம் - 2 பேது 1:5-8

15) ஞானம்:- 2 பேது 1: 5-8

16) இச்சையடக்கம் - 2 பேது 1: 5-8

17) பொறுமை - 2 பேது 1: 5-8

18) தேவபக்தி - 2 பேது 1:5-8

19) சகோதர சிநேகம் - 2 பேது 1:5-8

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.