பிரசங்க குறிப்புகள் Vol.15
1. கர்த்தர் தம்முடைய ஜனத்தாருக்கு
1. கேடகம் (ஆதி 15:1)
2. மகாபெரிய பலன் (ஆதி 15:1)
3. எரிச்சலுள்ள தேவன் (யாத் 20:5)
4. கிருபையுள்ளவர் (யாத் 22:27)
5. பரிசுத்தமுள்ளவர் (லேவி 11:4445)
6. அவர்களுடைய பங்கு (எண் 18:20)
7. அவர்களுடைய சுதந்தரம் (எண் 18:20)
2. புறஜாதியாரை அழித்துப்போடும் 10 காரியங்கள்
1. நெருங்கிய உறவினரைத் திருமணம் செய்துகொள்ளுதல் (லேவி 18:318,24; லேவி 20:1123)
2. அசுத்தமான ஸ்திரீகளோடு உறவு வைத்துக் கொள்வது. (லேவி 18:19; லேவி 20:18,23)
3. விபசாரம் (லேவி 18:20,2429; லேவி 20:10)
4. மனுஷரைப் பலியிடுதல் (லேவி 18:21, 2429; லேவி 20:16,23)
5. ஓரினச்சேர்க்கை (லேவி 18:2229; லேவி 20:13)
6. மிருகத்தோடு புணருவது (லேவி 18:2329; லேவி 20:1516)
7. பில்லிசூனியம் (லேவி 20:6,2327; உபா 18:912)
8. பெற்றோரைச் சபிப்பது (லேவி 20:9,23)
9. விக்கிரகாராதனை(யாத் 23:24; உபா 7:4,16,25; உபா 12:23,2931)
10. இஸ்ரவேலருக்குத் தடைபண்ணப்பட்டிருக்கும் எல்லாப் பாவங்களும் (உபா 9:45; உபா 23:1718; உபா 29:18)
3. பரிசுத்த வேதாகமத்தில் அந்நிய தேவர்களைப்பற்றியும், அவர்களை ஆராதிக்கிறவர்களைப்பற்றியும் 8 செய்திகள் சொல்லப்பட்டிருக்கிறது.
1. அந்நிய தேவர்களை ஆராதிக்கக்கூடாது. (யாத் 20:3)
2. அந்நிய தேவர்களை உருவாக்குதல். (யாத் 20:4; யாத் 32:4,20; உபா 4:23; ஏசா 40:1920; ஏசா 44:917; ஆப 2:18; அப் 19:2425)
3. அந்நிய தேவர்களை உருவாக்குவது தடைபண்ணப்பட்டிருக்கிறது (யாத் 20:4; யாத் 34:17)
4. அந்நிய தேவர்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள்.
(1) பொன்னும் வெள்ளியும் (யாத் 32:34; சங் 115:47; சங் 135:1517; ஏசா 2:20; ஏசா 30:22; ஏசா 31:7; ஓசி 8:4)
(2) மரமும், கல்லும் (லேவி 26:1; உபா 4:28; 2இராஜா 19:18; ஏசா 37:19; ஏசா 44:1319; ஏசா 45:20; எசே 20:32)
5. அந்நிய தெய்வங்களுக்கு பல பெயர்கள் உள்ளன.
6. விக்கிரகாராதனை முறைமைகள் வெவ்வேறாக இருக்கும்.
7. விக்கிரகங்களின் அளவும், ரூபமும் (ரோமர் 1:2127; வெளி 9:2021. உபா 4:1516)
8. விக்கிரகங்களை ஆராதிப்போருக்கு வரும் முடிவு (2கொரி 6:911; கலா 5:1921; வெளி 21:8; வெளி 22:15)
4. பரிசுத்த வேதாகமம் கூறும் மிக முக்கியமான 35 அந்நிய தெய்வங்களைப்பற்றியும், அவைகளின் பெயர்களைப்பற்றியும்
1. மோளேகு அம்மோனியரின் தேசிய தெய்வம். இது மோவாபியரின் காமோஸ் தெய்வத்தைப் போன்றது. (லேவி 18:21; லேவி 20: 25; 1இராஜா 11:57,33; 2இராஜா 23:1013; எரே 32:35; ஆமோ 5:26; அப் 7:43).
2. பாகால் மேற்கு ஆசியாவில் புறஜாதியார் மத்தியில் பிரபலமாக இருந்த தெய்வம். இது சூரிய தெய்வமென்றும் அழைக்கப்பட்டது. (எண் 22:41;நியா 2:13; நியா 6:2532; 1இராஜா 16:3132; 1இராஜா 18:1926,40; 1இராஜா 19:18; 1இராஜா 22:53; 2இராஜா 3:2; 2இராஜா 10:1828; 2இராஜா 11:18; 2இராஜா 17:16; 2இராஜா 21:3; 2இராஜா 23:45; 1நாளா 4:33; 1நாளா 5:5; 1நாளா 8:30; 1நாளா 9:36; 2நாளா 23:17; எரே 2:8; எரே 7:9; எரே 11:13,17; எரே 12:16; எரே 19:5; எரே 23:13,27; எரே 32:29,35; ஓசி 2:8; ஓசி 13:1; செப் 1:4; ரோமர் 11:4). பாகாலின் பலிபீடங்கள் உயர்ந்த மேடையில் இருக்கும். சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காண்பதற்கு வசதியாக பாகாலின் கோவிலை மலையுச்சியில் கட்டினார்கள்.
3. பாகால்பேரீத் சேகேமியரின் தெய்வம். பாகாலின் உடன்படிக்கை என்பது இதன் பொருள். (நியா 8:33; நியா 9:4)
4. பாகால்கள் பாகாலின் பன்மைப்பெயர். (நியா 2:11; நியா 3:7; நியா 8:33; நியா 10:6,10; 1சாமு 7:4; 1சாமு 12:10; 1இராஜா 18:18; 2நாளா 17:3; 2நாளா 24:7; 2நாளா 28:2; 2நாளா 33:3; 2நாளா 34:4; எரே 2:23; எரே 9:14; ஓசி 2:13,17; ஓசி 11:2)
5. பாகால்சேபூப் இந்த எபிரெய வார்த்தைக்கு வண்டுகளின் தெய்வம் என்று பொருள். இது எக்ரோனின் தேவன் என்றும் அழைக்கப்பட்டது. (2இராஜா 1:23,6,16) பாகால்சேபூப் வண்டுகளை உற்பத்தி செய்கிறவன். வண்டுகளுக்கு எதிராக இந்தத் தெய்வம் தங்களைப் பாதுகாக்கும் என்று எக்ரோனியர் நம்பினார்கள். வண்டுகளினால் கிழக்கு தேசத்தில் மிகப்பெரிய வாதைகள் வரும் என்பது ஜனங்களுடைய நம்பிக்கை. வண்டுகள் இந்தத் தெய்வத்தின் பிரதிநிதிகள் என்று நம்பினார்கள். மழை, இடி, மின்னல் ஆகிய இயற்கை தெய்வங்களைப் போன்று, பாகால்சேபூபும் ஒரு வல்லமையான தெய்வம் என்பது ஜனங்களுடைய நம்பிக்கை. ஆகையினால் அகசியா ராஜா பாகால்சேபூபிடம் தன் விண்ணப்பத்திற்குப் பதில் எதிர்பார்த்தான்.
6. பெயல்செபூல் இது அசுத்த ஆவிகளுக்குத் தலைவன் என்று யூதர்கள் கருதினார்கள். (மத் 10:25; மத் 12:27); பரிசேயர்கள் பெயல்செபூலைப் பிசாசுகளின் தலைவன் என்று அழைத்தார்கள். (மத் 12:24; மாற்கு 3:22; லூக்கா 11:15); இயேசு இவனை சாத்தான் என்று கூறினார் (லூக்கா 11:18).
7. அஸ்தரோத் கானானியருடைய பெண் தெய்வம். சந்திரனுடைய பெயர் இதற்கு வழங்கப்படுகிறது. (நியா 2:13; நியா 10:6; 1சாமு 7:34; 1சாமு 12:10; 1சாமு 31:10; 1இராஜா 11:5,33; 2இராஜா 23:13). இந்தத் தெய்வம் நிர்வாணமாக இருக்கும். இவளுடைய கண் புருவத்தில் சந்திரனின் பிறை வடிவம் இருக்கும். ஜன உற்பத்திக்கு உகந்த தெய்வமென்று ஜனங்கள் இதை வழிபட்டார்கள். புறாக்கள் இவளுடைய புனிதமான பறவைகளாகும்.
8. ஆசேரா கானானியருடைய தெய்வம். பாகாலின் மனைவி.
9. பேல் பாபிலோனியரின் தெய்வம். (ஏசா 46:1; எரே 50:2; எரே 51:44)
10. காமோஸ் மோவாபியரின் தெய்வம். அம்மோனியருக்கு மோளேகைப் போன்றது. (நியா 11:24; 1இராஜா 11:7,33; 2இராஜா 23:13; எரே 48:7,13,46)
11. பொன் கன்றுக்குட்டி இஸ்ரவேலரில் பின்வாங்கிப் போனவர்களுடைய தெய்வம் (யாத் 32:435; உபா 9:1621; நெகே 9:18; சங் 106:19)
12. பெத்தேல், தாண் ஆகியவற்றின் பொன் கன்றுக்குட்டி இஸ்ரவேலரில் பின்வாங்கிப் போனவர்களுடைய தெய்வம். (1இராஜா 12:2832; 2இராஜா 10:29; 2இராஜா 17:16; 2நாளா 11:15; 2நாளா 13:8; ஓசி 8:56; ஓசி 10:5; ஓசி 13:2)
13. மெரொதாக் பாபிலோனியரின் தெய்வம். (எரே 50:2)
14. நேபோ பாபிலோனியரின் தெய்வம். (ஏசா 46:1)
15. நிகுஸ்தான் வெண்கல சர்ப்பம். இஸ்ரவேலரில் பின்வாங்கிப் போனவர்களுடைய தெய்வம். (2இராஜா 18:4)
16. வலை, பறி இஸ்ரவேலரில் பின்வாங்கிப் போனவர்களுடைய தெய்வம் (ஆப 1:1517)
17. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இஸ்ரவேலரில் பின்வாங்கிப் போனவர்களுடைய தெய்வம். (உபா 4:19; 2இராஜா 17:16; 2இராஜா 21:35; 2நாளா 33:1516; செப் 1:45; அப் 7:42)
18. சுக்கோத் பெனோத் (2இராஜா 17:30) பாபிலோனின் பெண்தெய்வம். பேலின் மனைவி.
19. நேர்கால் கூத்தின் மனுஷருடைய தெய்வம். (2இராஜா 17:30). அசீரியர் மத்தியில் இந்தத் தெய்வம் பிரபலமானது.
20. ஆஷிமா ஆமாத்தின் தெய்வம். ஆட்டின் ரூபமுடையது.
21. நிஸ்ரோக் (2இராஜா 19:37) அசீரியரின் தெய்வம். நினிவேயில் இதன் கோவில் உள்ளது.
22. நிபேகாஸ் ஏவியவரின் தெய்வம். (2இராஜா 17:31). இதன் தலை நாயின் உருவமுடையது.
23. தர்காக் ஏவியரின் மற்றொரு தெய்வம். (2இராஜா 17:31) இது கழுதை உருவமுடையது.
24. ரிம்மோன் சீரியரின் தெய்வம். (2இராஜா 5:18)
25. அத்ரமலேக் (2இராஜா 17:31) மோளேகைப் போன்றது. சேபாராவியரின் தெய்வம்.
26. அன்னமலேக் (2இராஜா 17:31) சேபாராவியரின் மற்றொரு தெய்வம். குதிரையின் ரூபமுடையது. இதற்கு நரபலியிட்டார்கள்.
27. வார்ப்புக்கள் (எண் 33:52; ஏசா 2:16; எசே 8:10)
28. எகிப்தியரின் தெய்வங்கள் மிருகங்கள் (யாத் 12:12)
29. தேவர்களின் நட்சத்திர ராசி (ஆமோஸ் 5:26) ரெம்பான் (அப் 7:43)
30. யூப்பித்தர் கிரேக்கரின் பிரதான தெய்வம். (அப் 14:1213; அப் 19:35)
31. மெர்கூரி ரோமரின் வியாபார தெய்வம். (அப் 14:12)
32. அறியப்படாத தேவன் கிரேக்கருடைய தேவன் (அப் 17:23)
33. தியானாள் கிரேக்கருடைய தேவதை (அப் 19:2425)
34. தாகோன் பெலிஸ்தருடைய தேசிய தெய்வம். சிறிய மீன் வடிவத்தில் இருக்கும்.
35. மிருகத்தின் சொரூபம் (வெளி 13)
இவைதவிர, அந்நிய தெய்வங்கள், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்கள், உளியால் செதுக்கப்பட்ட தெய்வங்கள் என்று பல தெய்வங்களைப் பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலரின் பட்டணங்களின் இலக்கமும், அவர்களுடைய தேவர்களின் இலக்கமும் சரியென்று எரேமியா தீர்க்கதரிசி கூறியிருக்கிறார். (எரே 2:28). விக்கிரகங்களை ஆராதிப்பது பிசாசுகளின் ஆராதனை என்று கூறப்பட்டிருக்கிறது. (லேவி 17:7; உபா 32:17; 2நாளா 11:15; சங் 106:37; 2கொரி 10: 78,2021; வெளி 9:2021).
5. புறஜாதி ஜனங்கள் விக்கிரகங்களை ஆராதிக்கும்போது என்னென்ன செய்கிறார்கள் என்பது பற்றிய 16 குறிப்புகள்
1. விக்கிரகங்களிடம் ஜெபம் பண்ணுகிறார்கள் (நியா 10:14; 1இராஜா 18:2529; ஏசா 16:12; ஏசா 44:17; ஏசா 45:20; ஏசா 46:7; யோனா 1:5)
2. மனுஷரைப் பலியிடுகிறார்கள் (லேவி 18:21; லேவி 20:25; உபா 12:31; உபா 18:10; 2இராஜா 3:2627; 2இராஜா 16:3; 2இராஜா 17:1718; 2இராஜா 21:6; 2இராஜா 23:10; 2நாளா 28:3; 2நாளா 33:6; சங் 106:3738; ஏசா 57:5; எரே 7:31; எரே 19:47; எரே 32:35; எசே 16:2021; எசே 20:2631; எசே 23:3739; மீகா 6:7)
3. மரித்தோருக்காக சடங்குகளை செய்கிறார்கள் (உபா 14:1)
4. அநீதியான கிரியைகள் நடப்பிக்கிறார்கள். (யாத் 32:6,25; எண் 25:13; 1இராஜா 14:24; 1இராஜா 15:12; 2இராஜா 17:30; 2இராஜா 23:7; எசே 16:17; எசே 23:144; ஓசி 4:1214; ஆமோ 2:8; மீகா 1:7; ரோமர் 1:1832; 2கொரி 10:78; 1பேதுரு 4:34; வெளி 2:1422; வெளி 9:2021; வெளி 14:8; வெளி 17:16)
5. விலங்குகளைப் பலியிடுகிறார்கள் (யாத் 32:6; 1இராஜா 18:26; அப் 14:13)
6. இரத்தபான பலிகளை செலுத்துகிறார்கள். (உபா. 32:38; சங் 16:4; ஏசா 57:6; ஏசா 65:11; எரே 7:18; எரே 19:13; எரே 32:29; எரே 44:1725; எசே 20:28; சக. 9:7)
7. போஜனபலிகளை செலுத்துகிறார்கள் (ஏசா 57:6; எசே 16:19)
8. சமாதான பலிகளை செலுத்துகிறார்கள் (யாத் 32:6)
9. தூபவர்க்கங்களைக் காண்பிக்கிறார்கள் (1இராஜா 12:33; 2நாளா 30:14; 2நாளா 34:25; ஏசா 65:3; எரே 1:16; எரே 11:12,17; எரே 44:3; எரே 48:35; எசே 16:18; எசே 23:41)
10. விக்கிரகங்களைத் துதிக்கிறார்கள். (நியா 16:24; தானி 5:4)
11. விக்கிரகங்களுக்கு முன்பு ஆடிப்பாடுகிறார்கள் (யாத் 32:18)
12. விக்கிரகங்களுக்கு வாத்தியங்களை இசைக்கிறார்கள் (தானி 3:57)
13. தங்கள் சரீரங்களைக் கீறிக்கொள்ளுகிறார்கள் (1இராஜா 18:28)
14. முழங்கால்படியிட்டு விக்கிரங்களை முத்தம் செய்கிறார்கள் (1இராஜா 19:18; 2இராஜா 5:18; யோபு 31:27; ஓசி 13:2)
15. தசமபாகங்களும், காணிக்கைகளும் செலுத்துகிறார்கள் (2இராஜா 23:11; தானி 11:38; ஆமோ 4:45)
16. விக்கிரகங்களுக்கு பண்டிகைகளை ஆசரிக்கிறார்கள் (1இராஜா 12:32; எசே 18:6,1115; எசே 22:9; தானி 3:23)
விக்கிரகங்கள் மனுஷருடைய கிரியைகளாகும். (ஏசா 2:8; ஏசா 40:1920; எரே 10:19; ஓசி 8:6; ஓசி 13:2; ஆமோ 5:26). விக்கிரகாராதனை வீணானது. (உபா 4:16; ஓசி 4:12; ஏசா 44: 910).
6. ஆசரிப்புக்கூடாரத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள்.
1. பொன்
2. வெள்ளி
3. வெண்கலம்
4. இளநீலநூல்
5. இரத்தாம்பரநூலும், தூபவர்க்கமும்
6. சிவப்புநூல்
7. மெல்-ய பஞ்சுநூல்
8. வெள்ளாட்டுமயிர்
9. தகசுத்தோல்
10. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல்
11. சீத்திம் மரம்
12. விளக்கெண்ணைய்
13. அபிஷேகதைலத்துக்குப் பரிமள வர்க்கங்கள்
14. கோமேதக்கற்கள்
15. ரத்தினங்கள் (யாத் 28:1529)
7. உடன்படிக்கைப் பெட்டிக்கு உள்ள 18 பெயர்கள்
1. பெட்டி (யாத் 25:10)
2. தேவனுடைய பெட்டி (1சாமு 4:1122; 2சாமு 6:212)
3. கர்த்தராகிய தேவனுடைய பெட்டி (1நாளா 13:6)
4. நமது தேவனுடைய பெட்டி (1நாளா 13:3)
5. இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டி (1சாமு 5:76:3)
6. கர்த்தருடைய பெட்டி (1சாமு 6:17:1)
7. கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டி (1இராஜா 2:26)
8. உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டி (யோசு 4:5)
9. சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டி (யோசு 3:13)
10. உடன்படிக்கைப்பெட்டி (யோசு 3:6)
11. தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டி (நியா 20:27; 1நாளா 16:6)
12. கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி (எண் 10:33; உபா 31:9)
13. உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி (உபா 31:26; யோசு 3:3)
14. சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி (யோசு 3:11)
15. சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி (1சாமு 4:4)
16. சாட்சிப்பெட்டி (யாத் 25:22; யாத் 26:33,34)
17. உமது வல்லமை விளங்கும் பெட்டி (2நாளா 6:41; சங் 132:8)
18. பரிசுத்தப்பெட்டி (2நாளா 35:3)
8. வெண்கல பலிபீடத்தின் 20 பிரமாணங்கள்
1. சீத்திம் மரத்தால் ப-பீடத்தை உண்டு பண்ணுவாயாக (யாத் 27:1).
2. ஐந்து முழ நீளம் 7.5 அடி
3. ஐந்து முழ அகலம் 7.5. அடி
4. பலிபீடம் சதுரமாக இருக்க வேண்டும்.
5. மூன்று முழ உயரம் 4.5 அடி
6. பலிபீடத்தின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக (யாத் 27:2).
7. பலிபீடத்தை வெண்கலத் தகட்டால் மூடுவாயாக.
8. பலிபீடத்தின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் உண்டாக்குவாயாக. (யாத் 27:3).
9. இரத்தத்திற்கும், தண்ணீருக்கும் கிண்ணிகளை உண்டாக்குவாயாக.
10. மாம்சத்திற்கு முள்துறடுகளை உண்டாக்குவாயாக.
11. நெருப்புக்கு நெருப்புச்சட்டிகளை உண்டாக்குவாயாக.
12. பலிபீடத்தின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக. (யாத் 27:4).
13. வலைப்பின்னல் போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணுவாயாக.
14. சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்குவாயாக.
15. சல்லடை ப-பீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப் ப-பீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக. (யாத் 27:5).
16. ப-பீடத்துக்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளைப் பண்ணுவாயாக. (யாத் 27:6).
17. தண்டுகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.
18. ப-பீடத்தைச் சுமக்கத்தக்கதாக அந்தத் தண்டுகளை அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே பாய்ச்சுவாயாக. (யாத் 27:7).
19. பலகைகளை உள் வெளிவிட்டுப் பலகைகளினாலே பண்ணுவாயாக. (யாத் 27:8).
20. மலையில் காண்பிக்கப்பட்டபடியே பலிபீடத்தைப் பண்ணுவாயாக. (யாத் 27:8; யாத் 25:40; யாத் 26:30; எபி 8:5).
9. வெளிப்பிரகாரம் உண்டுபண்ணுவது குறித்த 16 பிரமாணங்கள்
1. வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தை உண்டு பண்ணுவாயாக (யாத் 27:9).
2. தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்-ய பஞ்சுநூலால் செய்யப்பட்ட தொங்கு திரைகள் இருக்கவேண்டும்.
3. தொங்குதிரைகளின் நீளம் 150 அடி.
4. தொங்குதிரைகளின் அகலம் 75 அடி (யாத் 27:12)
5. வெளிப்பிராகாரத்திற்கு வெண்கலத்தினாலே இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும். (யாத் 27:10).
6. தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளியினால் செய்யப்பட வேண்டும்.
7. வடபக்கத்தின் நீளத்திற்கு •நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்க வேண்டும். (யாத் 27:11).
8. தொங்குதிரைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது வெண்கலப் பாதங்களும் பண்ண வேண்டும்.
9. தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.
10. பிரகாரத்தின் மேற்பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான (75 அடி) தொங்குதிரைகள் இருக்க வேண்டும்;
11. பிராகாரத்தின் கடைசியில் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும். (யாத் 27:12).
12. சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பதுமுழ (75 அடி) அகலமாயிருக்கவேண்டும். (யாத் 27:13).
13. ஒரு புறத்திற்குப் பதினைந்து முழ நீளமான (22.5அடி) தொங்குதிரைகள் இருக்க வேண்டும். (யாத் 27:14).
14. தொங்குதிரைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
15. மறுபுறத்துக்குப் பதினைந்து முழ நீளமான (22.5 அடி) தொங்குதிரைகள் இருக்க வேண்டும். (யாத் 27:15).
16. தொங்குதிரைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
10. பிரகாரத்தின் வாசல்களும், தூண்களும் செய்யப்படவேண்டிய விதத்தைப்பற்றிய 7 குறிப்புகள்
1. பிராகாரத்தின் வாசல் 30 அடி அகலம். (யாத் 27:16).
2. பிராகாரத்தின் வாசலுக்கு இளநீல நூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்-ய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல் வேலையாய்ச் செய்யப்பட்ட தொங்குதிரையை உண்டுபண்ணவேண்டும்.
3. பிராகாரத்தின் வாசலுக்கு நாலு தூண்களை உண்டுபண்ண வேண்டும்.
4. பிராகாரத்தின் தூண்களுக்கு நாலு பாதங்கள் இருக்கவேண்டும் (யாத் 27:16,17).
5. சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண்கட்டப்பட்டிருக்க வேண்டும் (யாத் 27:17).
6. அவைகளின் கொக்கிகள் வெள்ளியினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
7. அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
11. பிரகாரத்தில் மொத்தம் 69 தூண்கள்
பிரகாரத்தில் மொத்தம் 69 தூண்கள் உள்ளன. அவை பிரகாரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கர்த்தர் சொன்ன பிரகாரமாக வைக்கப்படுகிறது.
1. பிராகாரத்தின் தென்பகுதியில் 20 தூண்கள் (யாத் 27:910)
2. பிராகாரத்தின் வடக்கு பகுதியில் 20 தூண்கள் (யாத் 27:11)
3. பிராகாரத்தின் மேற்குபகுதியில் 10 தூண்கள் (யாத் 27:12)
4. பிராகாரத்தின் கிழக்கு அல்லது வாயில் பகுதியில் 10 தூண்கள் (யாத் 27:1416)
5. உள் மூடுதிரையில் 4 தூண்கள் (யாத் 26:32)
6. வெளி மூடுதிரையில் 5 தூண்கள் (யாத் 26:37)
12. நியாயவிதி மார்ப்பதக்கத்தில், உள்ள பன்னிரண்டு கற்கள்
நியாயவிதி மார்ப்பதக்கத்தில், பன்னிரண்டு கற்கள் பதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பத்தியிலும் மூன்று கற்கள் வீதமாக, நான்கு பத்திகளில் அவை பதிக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:
முதலாம் பத்தி (யாத் 28:17)
1. பத்மராகமம் (நஹழ்க்ண்ன்ள்) ரூபன் (ஆதி 29:32)
2. புஷ்பராகம் (பர்ல்ஹக்ஷ்) சிமியோன் (ஆதி 29:33).
3. மாணிக்கம் (ஈஹழ்க்ஷன்ய்ஸ்ரீப்ங்) லேவி (ஆதி 29:34).
இரண்டாம் பத்தி (யாத் 28:18)
4. மரகதம் (ஊம்ங்ழ்ஹப்க்) யூதா (ஆதி 29:35).
5. இந்திரநீலம் (நஹல்ல்ட்ண்ழ்ங்) தாண் (ஆதி 30:6).
6. வச்சிரம் (உண்ஹம்ர்ய்க்) நப்தலி (ஆதி 30:8).
மூன்றாம் பத்தி (யாத் 28:19)
7. கெம்பு (கண்ஞ்ன்ழ்ங்) காத் (ஆதி 30:11).
8. வைடூரியம் (ஆஞ்ஹற்ங்) ஆசேர் (ஆதி 30:13).
9. சுகந்தி (ஆம்ங்ற்ட்ஹ்ள்ற்) இசக்கார் (ஆதி 30:18).
நான்காம் பத்தி (யாத் 28:20)
10. படிகப்பச்சை (இங்ழ்ஹ்ப்) செபுலோன் (ஆதி 30:20).
11. கோமேதகம் (ஞய்ஹ்ஷ்) யோசேப்பு (ஆதி 30:24).
12. யஸ்பி (ஓஹள்ல்ங்ழ்) பென்யமீன் (ஆதி 35:1619).
மார்ப்பதக்கத்தின் நான்கு மூலைகளிலுமுள்ள நான்கு வளையங்கள். மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்க வேண்டும். அது ஏபோத்தி-ருந்து நீங்கக்கூடாது. ஆகையினால் அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீலநாடாவினால் கட்ட வேண்டும்.
13. ஊரீம், தும்மீம் ஆகியவற்றைப்பற்றி 9 குறிப்புகள்
பரிசுத்த வேதாகமத்தில் ஊரீம், தும்மீம் ஆகியவற்றைப்பற்றி ஒரு சில செய்திகள் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
1. இவற்றைச் செய்யுமாறு தேவன் மோசேக்கு எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. நியாயவிதி மார்ப்பதக்கத்தில் இவற்றை வைக்குமாறு தேவன் மோசேக்குக் கூறியிருக்கிறார். (யாத் 28:16,30).
2. ஆரோனுக்கு ஆசாரிய வஸ்திரம் தரிக்கப்பட்ட போது, மோசே ஊரீம், தும்மீம் ஆகியவற்றை நியாயவிதி மார்ப்பதக்கத்தில் வைத்தார். ஆகையினால், இவை ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கவேண்டும் (லேவி 8:8).
3. தேவனுடைய செய்தியைக் கூறுவதற்கும், அவருடைய நியாயத்தீர்ப்பை அறிவிப்பதற்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலிருக்கும் ஊரீம், தும்மீம் ஆகியவை பயன்படுத்தப்பட்டது. ஒன்றில் ""ஆம்'' என்றும், மற்றொன்றில் ""இல்லை'' என்றும் எழுதப்பட்டிருக்கலாம் என்பது சிலருடைய கருத்து. இதன் வாயிலாகப் பிரதான ஆசாரியர் தேவனிடமிருந்து பதிலைப் பெற்றுக்கொண்டார்.
4. ஊரீம், தும்மீம் ஆகியவற்றைச் செய்தது மோசேயா, தேவனா அல்லது அவர்களுடைய காலத்திற்கு முன்பே இவை வழக்கத்தில் இருந்ததா என்பது தெரியவில்லை.
5. யோசுவாவிற்குத் தேவனுடைய ஆலோசனையைக் கொடுப்பதற்காகப் பிரதான ஆசாரியர் ஊரீமைப் பயன்படுத்தினார். (எண் 27:1823).
6. பிரதான ஆசாரியர் ஊரீம், தும்மீம் ஆகியவற்றை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்று லேவிக்கு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது. இக்கட்டான சமயங்களில் இவற்றைப் பயன்படுத்தலாம். (உபா 33:8).
7. பாபிலோன் சிறையிருப்பிற்குப் பின்பு, ஊரீம், தும்மீம் ஆகியவை பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. (எஸ்றா 2:63; நெகே 7:65).
8. இவை கற்களாக இருக்கலாம். மார்ப்பதக்கமும் இவையும் வெவ்வேறானவை. (யாத் 28:30).
9. ஊரீம், தும்மீம் ஆகியவை மூலமாகத் தேவனுடைய பதிலைப் பெறுவதற்கு ""சீட்டுப்போடுதல்'' (லேவி 16:8; யோசு 18:610; 1சாமு 14:42; 1நாளா 24:31; 1நாளா 25:8; 1நாளா 26:1314) என்னும் வாக்கியமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீட்டுப் போடும்பொழுது சீட்டு ""விழுந்தது'' என்று வரும்போது அது தேவனுடைய பதிலைக் குறிக்கிறது. (யோசு 18:11; யோசு 19:10) விழுந்தது என்பதற்கு ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. (யோசு 18:11; யோசு 19:1, யோசு 19:24,32,40; யோசு 21:4)
நீதிமொழிகள் புஸ்தகத்தில் ஊரீம், தும்மீம் ஆகியவற்றைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. ""சீட்டு மடியிலே போடப்படும். காரியசித்தியோ கர்த்தரால் வரும்'' (நீதி 16:33, நீதி 18:18)
சீட்டு என்பதற்கான எபிரெய வார்த்தை ""கோரல்'' என்பதாகும். இதற்கு கல், சீட்டு, பங்கு என்று பொருள். சீட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பதைத் தேவனுடைய சித்தமாகவே கருதினார்கள். தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக பிரதான ஆசாரியர் ஊரீம், தும்மீம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேவனுடைய செய்தியைப் பெற்றுக் கொண்டு, அதை இஸ்ரவேல் ஜனத்தாரிடம் கூறினார்.
14. ஊரீம் தும்மீம் பயன்படுத்தப்பட்ட 11 சந்தர்ப்பங்கள்
இஸ்ரவேல் ஜனத்தார் ஊரீம் தும்மீம் ஆகியவை மூலமாக தேவனுடைய செய்தியை பல சந்தர்ப்பங்களில் பெற்றிருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு :
1. கானான் தேசத்திற்குள் யோசுவா இஸ்ரவேல் ஜனத்தாரை வழிநடத்தினார். அப்போது ஊரீம், தும்மீம் ஆகியவை அவருடைய செயல்களை வழிநடத்திற்று (எண் 27:1824).
2. ஆகானுடைய விஷயத்தில் யோசுவா இவற்றைப் பயன்படுத்தினார். (யோசு 7:1418) கிபியோனுடைய விஷயத்தில் இதைப் பயன்படுத்தவில்லை (யோசு 9).
3. கானான் தேசத்தைக் கோத்திரத்தாருக்குப் பங்கு பிரித்துக் கொடுப்பதில் இவை பயன்படுத்தப்பட்டன. (எண் 34:17, யோசு 17:4). சில குறிப்பிட்ட பகுதிகளை யார் பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் விசேஷ கட்டளைகளும் இவற்றின் மூலமாகவே இஸ்ரவேல் ஜனத்தாருக்கு வெளிப்படுத்தப்பட்டது. (யோசு 18:410). சீட்டுப்போட்டு தேவனுடைய சித்தத்தைத் தெரிந்து கொண்ட சம்பவங்கள் வேதாகமத்தில் பல இடங்களில் கூறப்பட்டிருக்கிறது. (எண் 26:5556; எண் 33:54; எண் 34:13; எண் 36:23; யோசு 13:6; எண் 14:2; எண் 15:1; எண் 16:1; எண் 17:12,1417; எண் 18:11, 18; எண் 19:1,10,17,24,32,40,51; எண் 21: 410,20,40; நியா 1:3; நியா 20:9)
4. லேவியருக்கு சில பட்டணங்களைத் தெரிந்தெடுப்பதற்கு இவை பயன்படுத்தப்பட்டன. (1நாளா 6:54, 6165)
5. ஆசாரியத்துவத்தின் முறைமைகளில் வந்த பிரச்சனைகள் இவற்றின் மூலமாகத் தீர்த்து வைக்கப்பட்டன. (1நாளா 24:57; 1நாளா 26:9)
6. யோசுவாவிற்குப் பின்பு, கர்த்தரிடம் விசாரிப்பதற்கு இஸ்ரவேல் ஜனத்தார் இவற்றைப் பயன்படுத்தினார்கள். (நியா 1:12; நியா 20:18,2628)
7. இவற்றின் மூலமாகச் சவுல் ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (1சாமு 10:2022)
8. யுத்தத்தில் இவற்றின் மூலமாகத் தேவனிடம் விசாரித்து சவுல் பதிலைப் பெற்றுக் கொண்டார். (1சாமு 14:3646)
9. சவுல் பாவம் செய்த பின்பு, இவற்றின் மூலமாகத் தேவன் அவருக்குப் பதில் தரவில்லை. (1சாமு 28:6)
10. தாவீது இவற்றின் மூலமாகத் தேவனை விசாரித்து பதிலைப் பெற்றுக் கொண்டார். (1சாமு 22:1015; 1சாமு 30:8; 2சாமு 2:1; 2சாமு 5:19,2325; 1நாளா 14:10,1417)
11. தேவனிடத்தில் விசாரிப்பதற்குத் தாவீது ஒருபோதும் பயப்படவில்லை. (1நாளா 21:30)
16. கர்த்தருடைய 33 நித்திய கட்டளைகள்
ஆசாரிய ஊழியம் ஆரோனுக்கும் அவருடைய குமாரருக்கும் நித்திய கட்டளையாகயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதுபோல வேறு சில காரியங்களும் கர்த்தருடைய நித்திய கட்டளையாயிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
1. பஸ்கா (யாத் 12:14,24)
2. புளிப்பில்லா அப்பப்பண்டிகை (யாத் 12:17)
3. நித்திய விளக்கு (யாத் 27:21; லேவி 24:3)
4. ஆசாரியருடைய நிர்வாணம் மூடப்படுதல் (யாத் 28:43)
5. ஆசாரியத்துவம் (யாத் 29:9; யாத் 40:15)
6. ஏறெடுத்துப் படைக்கும் படைப்பு (யாத் 29:28; லேவி 10:15; எண் 18:8, 11, 19)
7. பலிகள் (யாத் 29:42)
8. தூபம் எரிதல் (யாத் 30:9)
9. பலிபீடத்தில் பாவநிவாரண பலி (யாத் 30:10)
10. ஊழியம் செய்வதற்கு முன்பாகச் சரீரங்களைக் கழுவுதல் (யாத் 30:21)
11. பரிசுத்த அபிஷேகத்தைலம் (யாத் 30:31)
12. தேவனுக்கும், இஸ்ரவேலருக்கும் நடுவில் ஓய்வுநாள் நித்திய உடன்படிக்கையின் அடையாளம். (யாத் 31:1617)
13. கொழுப்பையும், இரத்தத்தையும் புசிக்கக்கூடாது. (லேவி 3:17)
14. பீடத்தின்மேல் அக்கினி (லேவி 6:13)
15. போஜனபலிகள் (லேவி 6:1820)
16. ஆசாரியருடைய சொந்த பலிகள் (லேவி 6:22)
17. ஆசாரியருடைய பங்குகள் (லேவி 7:3436)
18. தேவனுடைய சமுகத்தில் ஊழியம் செய்யும்போது மதுஅருந்தி வெறித்திருக்கக் கூடாது. (லேவி 10:9)
19. பாவநிவாரண நாள் (லேவி 16: 2934)
20. பிசாசுகளை ஆராதிக்கக்கூடாது. (லேவி 17:7)
21. தேவனுக்கு முதற்கனியின் பலன்கள் (லேவி 23:14)
22. பெந்தெகொஸ்தே நாளை ஆசாரிப்பது. (லேவி 23:21)
23. கூடாரங்களின் பண்டிகை (லேவி 23:41)
24. சமுகத்தப்பம் (லேவி 24:69)
25. லேவியரின் பங்குவீதங்கள் (லேவி 25:34)
26. எக்காளங்களின் பண்டிகை (லேவி 10:8)
27. இஸ்ரவேல் தேசத்தில் சுதேசிக்கும், பரதேசிக்கும் ஒரே பிரமாணம். (எண் 15:15)
28. உப்பின் உடன்படிக்கை (எண் 18:19)
29. லேவியர் ஆசரிப்புக்கூடாரத்தில் சேவை செய்ய வேண்டும். (எண் 18:23; உபா 18:5)
30. கிடாரியின் சாம்பலைப் பற்றிய பிரமாணங்கள். (எண் 19:10)
31. ஆசாரிய ஊழியத்திற்குப் பின்பு வஸ்திரங்களைத் தோய்த்தல். (எண் 19:21)
32. பினெகாசிற்கு நித்திய ஆசாரிய பட்டம். (எண் 25:13)
33. கட்டளைகள் (உபா 7:9; உபா 29:29)
17. கர்த்தர் அபிஷேகம் செய்த 22 சம்பவங்கள்
கர்த்தர் ஆரோனையும் அவருடைய குமாரரையும் அபிஷேகம் பண்ணியதுபோல, வேறு சில நபர்களையும், பொருட்களையும் அபிஷேகம்பண்ணியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு :
1. பிரதான ஆசாரியனாக ஆரோன். (யாத் 28:41; யாத் 29:7; யாத் 30:30; யாத் 40:13; சங் 133:2)
2. ஆசாரியர்களாக ஆரோனுடைய குமாரர்கள். (யாத் 28:41; யாத் 29:29; யாத் 30:30; யாத் 40:15)
3. அடைகள் (யாத் 29:2; லேவி 2:4; எண் 6:15)
4. அதிரசங்கள் (லேவி 7:12)
5. வெண்கல பலிபீடம் (யாத் 29:36; யாத் 40:10; லேவி 8:11; எண் 7:1)
6. வாசஸ்தலம் (யாத் 30:26; யாத் 40:9; லேவி 8:10; எண் 7:1)
7. வெண்கலத்தொட்டி (யாத் 40:11)
8. வாசஸ்தலத்தின் பணிமுட்டுகள் (எண் 7:1)
9. மேசியா (1சாமு 2:10,35; சங் 2:2; சங் 45:7; ஏசா 61:1; லூக்கா 4:18; அப் 10:38)
10. சவுல் (1சாமு 9:16; 1சாமு 10:1; 1சாமு 15:1)
11. தாவீது (1சாமு 16:313; 2சாமு 2:4; 2சாமு 5:3)
12. அப்சலோம் (2சாமு 19:10)
13. சாலொமோன் (1இராஜா 1:3445; 1இராஜா 5:1)
14. ஆசகேல் (1இராஜா 19:15)
15. எலிசா (1இராஜா 19:16)
16. யெகூ (2இராஜா 9:36,12; 2நாளா 22:7)
17. யோவாஸ் (2இராஜா 11:2,12; 2நாளா 23:11)
18. யோவாகாஸ் (2இராஜா 23:30)
19. கோரேசு (ஏசா 45:1)
20. லூசிபர் (எசே 28:14)
21. ஏனோக்கும், எலியாவும் (சக 4:14)
22. பவுல் (2கொரி 1:21)
18. ஒவ்வொரு நாளும் பலிபீடத்தில் நடைபெறும் 12 காரியங்கள்
1. கர்த்தருடைய சந்நிதானத்தில் அடிக்கப்படும் காளை மரிக்கும் இடம். (யாத் 29:1011, 36).
2. கர்த்தருடைய சந்நிதானத்தில் அடிக்கப்படும் காளையின் இரத்தத்தில் ஒருபகுதி பலிபீடத்தின் கொம்புகள்மீது இடப்படும். (யாத் 29:12).
3. கர்த்தருடைய சந்நிதானத்தில் அடிக்கப்படும் காளையின் இரத்தத்தில் ஒருபகுதி போக, மற்ற இரத்தம் முழுவதும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றப்படும்.
4. காணிக்கையாகச் செலுத்தப்படும் காளையின் பகுதிகள் பலிபீடத்தின்மேல் தகித்துப்போடப்படும். (யாத் 29:13).
5. கடாவை அடித்து அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்க வேண்டும். (யாத் 29:16).
6. ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின் மேல் தகித்துவிடவேண்டும். (யாத் 29:1718).
7. இரண்டாவது ஆட்டுக்கடா அடிக்கப்பட்டு, அதின் இரத்தம் ஆரோன்மீதும், அவனுடைய குமாரர்மீதும் அவர்களுடைய வலதுகாது மடல், வலதுகையின் பெருவிரல், வலதுகாலின் பெருவிரல் ஆகியவற்றில் இடப்பட்டு, மற்ற இரத்தம் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கப்பட வேண்டும். (யாத் 29:1921).
8. காணிக்கைகளைப் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கவேண்டும். (யாத் 29:25)
9. பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவின் மாம்சத்தைப் பலிபீடத்தில் வேவித்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே ஆரோனும், அவனுடைய குமாரரும் புசிக்க வேண்டும். (யாத் 29:3133).
10. இரத்தம், சாம்பல் ஆகியவற்றிலிருந்து பலிபீடத்தைச் சுத்தி செய்ய வேண்டும். (யாத் 29:36).
11. பலிபீடத்தைப் பரிசுத்தப்படுத்தும்படி, அதை அபிஷேகம் பண்ண வேண்டும்.
12. புசிக்கப்படாத மீந்திருக்கும் பிரதிஷ்டையின் மாம்சம் மறுநாளில் பலிபீடத்தின்மீது சுட்டெரிக்கப்பட வேண்டும். (யாத் 29:34).
19. நியாயபிமானத்தில் தேவனும் இஸ்ரவேலரும்
ஏழுநாட்களுக்குப் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தம் செய்த பின்பு, அதை வேறுபிரித்து பரிசுத்தமாக்க வேண்டும் (யாத் 29:3637). இதன் பின்பு, ஒவ்வொரு நாளும் பலியிட வேண்டியவைகள் ஆரம்பமாகிறது (யாத் 29:3842; எபி 9:9; எபி 10:12).
கர்த்தர் ஓய்வுநாளைப்பற்றி சொல்லியிருக்கிற பிரமாணம் இஸ்ரவேல் புத்திரரோடு தொடர்புடையது. கர்த்தர் ஓய்வுநாள் பிரமாணத்தை இஸ்ரவேல் புத்திரருக்கு பிரத்தியேகமாக சொல்லியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:
1. நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி கூறுவாயாக. (யாத் 31:13).
2. நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்.
3. இது எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
4. இது உங்கள் தலைமுறைதோறும் அடையாளமாயிருக்கும்.
5. உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி இதை ஆசரிக்க வேண்டும்.
6. உங்களைக் கர்த்தர் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார்.
7. நீங்கள் ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக. (யாத் 31:14).
8. அது உங்களுக்குப் பரிசுத்தமானது.
9. இஸ்ரவேல் புத்திரர் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும். (யாத் 31:16).
10. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்க வேண்டும்.
11. அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும். (யாத் 31:17).
ஆரோனிடத்தில் ஆவிக்குரிய பின்மாற்றம் காணப்படுகிறது. அதைப்பற்றிய விவரம் வருமாறு :
1. ஜனங்கள் மோசேயைப் பற்றித் தவறாகக் கூறியதை ஆரோன் கவனித்துக் கேட்கிறார் (யாத் 32:1).
2. திரளான ஜனங்கள் விக்கிரகாராதனை செய்ய வேண்டுமென்று கூறியபோது, ஆரோனும் சம்மதம் தெரிவித்து, தன்னுடைய பெயர், புகழை ஸ்தாபிக்க விரும்புகிறார் (யாத் 32:1,22).
3. ஒரு விக்கிரகத்தைச் செய்வதற்கு ஆரோனும் ஜனங்களோடு சம்மதம் தெரிவிக்கிறார் (யாத் 31:2).
4. விக்கிரகத்தை வார்ப்பிக்க ஜனங்களிடத்திலிருந்து பொன்னணிகளைப் பெற்றுக் கொள்கிறார் (யாத் 31:4).
5. ஆராதனை செய்வதற்கு ஜனங்களுக்கு ஒரு பொன்கன்றுக்குட்டியை வார்ப்பிக்கிறார்.
6. பொன்கன்றுக்குட்டிக்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டுகிறார் (யாத் 31:5).
7. கன்றுக்குட்டிக்கு ஒரு பண்டிகையை நியமித்து, கன்றுக்குட்டியைக் கர்த்தரோடு ஒப்பிட்டுக் கூறுகிறார்.
8. கன்றுக்குட்டிக்குச் சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதான பலிகளைச் செலுத்துகிறார்(யாத் 31:6).
9. கன்றுக்குட்டியை ஆராதிக்கும்போது ஜனங்களைப் புசிக்கவும், குடிக்கவும், உட்கார்ந்து விளையாடவும் அனுமதிக்கிறார் (யாத் 32:6,19).
10. கன்றுக்குட்டியைப் பணிந்து கொள்கிறார் (யாத் 31:8).
11. இஸ்ரவேலரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டுவந்த தெய்வங்கள் இவைகளே என்று விக்கிரகங்களைக் குறித்துக் கூறுகிறார்.
12. ஆரோன் தான் செய்த பாவத்தை மற்றவர்கள்மீது சுமத்துகிறார் (யாத் 32:2123).
13. கன்றுக்குட்டி அக்கினியிலிருந்து தானாக வந்தது என்று பொய்கூறுகிறார் (யாத் 31:24).
14. தேவனுடைய கோபத்திற்கு முன்பாக ஜனங்களை நிறுத்திவிடுகிறார் (யாத் 32: யாத் 1114,25).
21. பரிசுத்த வேதாகமத்தில் தேவனுடைய புஸ்தகத்தைப்பற்றி
1. நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் (யாத் 32:32).
2. எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். (யாத் 32:33).
3. ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக. நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக. (சங் 69:28; சங் 109:13).
4. அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படும் உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். (தானி 12:1).
5. உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப் படுங்கள். (லூக்கா 10:20).
6. அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. (பிலி 4:3).
7. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும். ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என்பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். (வெளி 3:5).
8. ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். (வெளி 13:8; வெளி 17:8).
9. ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. (வெளி 20:1112).
10. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (வெளி 20:15).
11. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள். (வெளி 21:27).
12. ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார். (வெளி 22:1819).
22. கர்த்தருடைய ஜீவப்புஸ்தகத்தில் ஆரோனின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது காரணங்கள்
1. ஆரோன் மறுபடியும் பிறந்திருக்கிறார் (உபா 32:18).
2. ஆரோன் பரிசுத்தமானவர் (யாத் 19:6; யாத் 22:31; லேவி 11:4445; லேவி 21:68).
3. ஆரோனின் பெயர் பரலோகத்தில் எழுதப்பட்டிருந்தது. (யாத் 32:3233).
4. ஆரோன் ஒரு தீர்க்கதரிசி. (யாத் 7:1).
5. ஆரோன் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார் (யாத் 7:117; யாத் 8:6,16; யாத் 11:10; யாத் 12:1; சங் 77:20).
6. பொன்கன்றுக்குட்டியைச் செய்யும் வரையிலும் தேவனுடைய கிருபை ஆரோனோடு கூட இருந்தது. (யாத் 24:14; யாத் 32:1).
7. சீனாய் மலையில் ஆரோன் தேவனைத் தரிசித்து அவரோடு புசித்துக் குடித்தவர் (யாத் 24:111).
23. பரிசுத்த வேதாகமத்தில், ""அகற்றுதல்'' என்னும் வார்த்தை 7 சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் விவரம்
1. சாபங்கள் (எண் 5:23)
2. வானத்தின் கீழுள்ள பெயர்கள் (உபா 9:14; உபா 29:20; 2இராஜா 14:27)
3. அமலேக்கைப் பற்றிய நினைவு (உபா 25:19)
4. மீறுதல்கள் (சங் 51:1; ஏசா 43:25; ஏசா 44:22)
5. அக்கிரமங்கள் (சங் 51:9)
6. பாவங்கள் (அப் 3:19)
7. மோசேயின் பிரமாணம் (கொலோ 2:1417)
24. ஆசரிப்புக்கூடாரத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற 8 பெயர்கள்
1. ஆராதனை செய்யும் ஆசரிப்புக் கூடாரம் (யாத் 27:21; யாத் 28:43; யாத் 29:4,1011)
2. ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலம் (யாத் 39:32; யாத் 40:2,6,29)
3. வாசஸ்தலம் (யாத் 40:28; எண் 1:50)
4. கர்த்தருடைய வாசஸ்தலம் (லேவி 17:4)
5. சாட்சியின் வாசஸ்தலம் (எண் 1:5053)
6. சாட்சியின் கூடாரம் (எண் 17:7)
7. கர்த்தருடைய வாசஸ்தலம் (யோசு 22:19)
8. தேவனுடைய ஆலயமாகிய வாசஸ்தலம் (1நாளா 6:48)
25. பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள தேவனுடைய 14 சரீர உறுப்புக்கள்
1. பின்பகுதிகள் (யாத் 33:23)
2. இருதயம் (ஆதி 6:6; ஆதி 8:21)
3. கைகளும், விரல்களும் (சங் 8:36; எபி 1:10; வெளி 5:17)
4. வாய் (எண் 12:8)
5. உதடுகளும், நாவும் (ஏசா 30:27)
6. பாதங்கள் (எசே 1:27; யாத் 24:10)
7. கண்கள் (சங் 11:4; சங் 18:24; சங் 33:18)
8. காதுகள் (சங் 18:6)
9. தலைமுடி, தலை, முகம், கைகள் (தானி 7:914; தானி 10:519; வெளி 5:17; வெளி 22:46)
10. இடுப்பு (எசே 1:2628; எசே 8:14)
தேவனுக்குச் சரீரப் பிரசன்னம் உள்ளது. (ஆதி 3:8; ஆதி 18:122) அவர் ஓரிடதிலிருந்து மற்றொரு இடத்திற்கு மற்ற நபர்கள் போவதுபோலவே போகிறார். (ஆதி 3:8; ஆதி 11:5; ஆதி 18:15,22,33; ஆதி 19:24; ஆதி 32:2432; ஆதி 35:13; சக 14:5; தானி 7: 914; தீத்து 2:13).
26.தேவனிடமுள்ள 3 காரியங்கள்
1. சத்தம் (சங் 29; வெளி 10:34)
2. சுவாசம் (ஆதி 2:7)
3. முகரூபம் (சங் 11:7)
27.பரிசுத்த வேதாகமத்தில் தேவன் செய்யும் 7 காரியங்கள்
1. வஸ்திரம் தரிக்கிறார். (தானி 7:914; தானி 10:519);
2. போஜனம் பண்ணுகிறார் (ஆதி 18:18; யாத் 24:11)
3. ஓய்வு எடுக்கிறார் (ஆதி 2:14; எபி 4:4)
4. பரலோகத்தில் வாசம்பண்ணுகிறார். (யோவான் 14:13; எபி 11:1016; எபி 13:14; வெளி 21)
5. சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார் (ஏசா 6; தானி 7:914; வெளி 4:15; வெளி 22:36)
6. நடக்கிறார் (ஆதி 3:8; ஆதி 18:18,22,33)
7. ஏறிப்போகிறார் (சங் 18:10; சங் 68:17; சங் 104:3; எசே 1)
28.பரிசுத்த வேதாகமத்தில் உள்ள தேவனுடைய 10 உணர்வுகள்
1. துக்கம் (ஆதி 6:6)
2. கோபம் (1இராஜா 11:9)
3. மனம்வருந்துதல் (ஆதி 6:6)
4. வைராக்கியம் (யாத் 20:5)
5. வெறுப்பு (நீதி 6:16)
6. அன்பு (யோவான் 3:16)
7. பரிதாபம் (சங் 103:13)
8. ஐக்கியம் (1யோவான் 1:17)
9. சந்தோஷம் (சங் 147:10)
10. உணர்வுகள் (கலா 5:2223).
29.தேவனுடைய 13 ஆள்தத்துவ பண்புகள்
1. தனிப்பட்ட ஆவி (சங் 143:10; ஏசா 30:1)
2. சிந்தை (ரோமர் 11:34)
3. ஞானம் (ஆதி 1:26; ரோமர் 11:33)
4. சித்தம் (ரோமர் 8:27; ரோமர் 9:19)
5. வல்லமை (எபே 1:19; எபே 3:7,20; எபி 1:3)
6. சத்தியம் (சங் 91:4)
7. விசுவாசமும், நம்பிக்கையும் (ரோமர் 12:3; 1கொரி 13:13)
8. நீதி (சங் 45:4)
9. உண்மை (1கொரி 10:13)
10. அறிவும், ஞானமும் (ஏசா 11:2; 1தீமோ 1:17)
11. சிந்தனை (ஏசா 1:18)
12. பகுத்தறிவு (எபி 4:12)
13. மாறாத தன்மை (எபி 6:17)
தேவன் தம்மைச் சரீரப்பிரகாரமாகப் பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். (ஆதி 18; ஆதி 32:2430; யாத் 24:911; யோசு 5:1315; ஏசா 6; தானி 7:913; எசே 1; அப் 7:5659; வெளி 45) மனுஷன் தேவனுடைய ரூபமாகவும், தேவனுடைய சாயலாகவும் இருக்கிறான். தேவனைக் காணமுடியாது. தேவனுடைய ரூபமாகவும், சாயலாகவும் இருக்கும் மனுஷன் மூலமாக நாம் தேவனை விளங்கிக்கொள்ள வேண்டும் (ரோமர் 1:20).
