பெத்லகேம்
யூதாவின் முக்கியமான இடம் பெத்லகேம்.
பெத்லகேமின் பெயர் கேள்விப்படாத கிறிஸ்தவர்கள் ஏறத்தாழ இருக்கவே முடியாது. மறக்க நினைத்தாலும் கிறிஸ்மஸ் காலங்களில் பிள்ளைகள் நாடகங்கள் நடத்தியோ, சபையில் செய்தி சொல்லியோ பெத்லகேமை நினைவுபடுத்தி விடுவார்கள்.
அகழ்வாரய்ச்சிகள் சரிவரத் துவங்குவதற்கு முன்பாகவே பெத்லகேம் இயேசு பிறந்த இடம் என்பதால் பிரதானப்படுத்தப் பட்டு, கிறிஸ்தவர்களால் புனித இடம் என்று பிரகடனப்படுத்தப் பட்டு விட்டது.
பெத்லகேம் ஒரு உணர்ச்சிப்பூர்வமான நகரம். கிறிஸ்தவர் களில் பலர் இன்றும் புனித யாத்திரை செல்கையில் பெத்லகேமில் கால்வைத்தவுடனேயே கைகால்களை உதறிக்கொண்டு மயங்கி விழுந்து விடுவதுண்டு. எழுந்தவுடன் உத்திரவாதமாக பாலகனாக இயேசு காட்சியளித்தார். கையை காட்டி என்னை கூப்பிட்டார் என்பார்கள்.
இவ்வளவு புனிதமாக கொண்டாடப்படும் நகரத்தில் கடப் பாரை மற்றும் உளிகளைக் கொண்டு அகழ்ந்தாராயப் போகிறேன் என்று புறப்பட்டால் என்னாகும் யோசித்துப் பாருங்கள். அப்படிப் போகிறவர்களை அகழ்ந்து ஆராய்ந்து விடுவார்கள்.
எனவே, அங்கு நகரைத் தோண்டிப்பார்க்கவோ, அல்லது சுவர்களை குடைந்து பார்க்கவோ அனுமதி கிடைப்பது கடினம். ரொம்பவும் கெஞ்சினால் இரண்டு கைப்பிடி மண் வேண்டுமானால் அள்ளிக்கொள்ள பெரிய மனசு பண்ணி அனுமதிப்பார்கள்.
சரி. இனி பெத்லகேமைப் பற்றி ஒரு சில செய்திகள் பார்க்கலாமா?
பெத்லகேம் என்ற பெயரில் இரண்டு ஊர்கள் இருந்தி ருக்கின்றன. ஒன்று யூதாவிலிருந்த பெத்லகேம். மற்றது செபுலோ னுக்குச் சொந்தமானது. இரண்டு மூன்று ஊர்கள் ஒரே பெயரில் இருந்தால் ஒவ்வொன்றையும் வித்தியாசப்படுத்துவதற்காக வெவ்வேறு இன்ஷியல்கள் கொடுப்பது நம்மூர் பழக்கம். T. கல்லுப் பட்டி. G. கல்லுப்பட்டி மாதிரி.
இப்படி இன்ஷியல் கொடுக்க வேண்டுமானால் யூதா பெத்லகேமுக்கு J.பெத்லகேம் என்றும், செபுலோன் பெத்லகே முக்கு Z.பெத்லகேம் என்றும்தான் பெயர் கொடுக்க வேண்டும்.
இந்த பெத்லகேம்களுள் J. பெத்லகேமில் தான் இயேசு பிறந்தார்.
இந்த பெத்லகேம் எருசசேமிலிருந்து சரியாக தென்மேற் கில் ஆறாவது மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இன்னும் துல்லிய மாக சொல்வதானால் எருசலேமிலிருந்து எபிரோன் செல்லும் சாலையிலிருக்கிறது அதில் ஒரு பத்து மைல் பயணம் செய்து காரை நிறுத்துவீர்களானால் அங்கே கண்ணை மூடிக்கொண்டு இறங்கி விடலாம். அதுதான் பெத்லகேம்.
பெத்லகேமுக்கு பூர்வீகப்பெயரே இது அல்ல. மும்பைக்கு பாம்பே என்றும் கொல்கத்தாவிற்கு கல்கத்தா என்றும் பழைய பெயர்கள் இருப்பதைப்போல எருசலேமுக்கும் பழைய பெயர் ஒன்று உண்டு.
எப்பிராத்தா!
ஆம் இதுதான் பெத்லகேமின் பூர்வாங்கப்பெயர்.
ஆதி 35:19
ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியில் அடக்கம் பண்ணப் பட்டாள்.
என்று வேதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது பாருங்கள். இன்னும் சங்கீதம் 48 : 7 மற்றும் சங்கீதம் 132 : 6 ஆகிய வசனங்களில் எப்பிராத்தா என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் இந்த பெத்லகேமைப் பற்றித்தான்.
எப்பிராத்தா தான் பெத்லகேம் என்று தெரிந்து கொண்ட பின் சங்கீதம் 132 : 6, 7 ஆகிய வசனங்களை படித்துப்பாருங்கள். தாவீது எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்று தெரியும்.
சங்கீதம் 132 : 6, 7
இதோ நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக்கண்டோம்.
அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம்.
என்ன தெரிகிறது. இயேசு பெத்லகேமில் பிறப்பார் என்பதும். அவர் பிறப்பின் செய்தியை மேய்ப்பர்கள் வயல்வெளி யில் கேட்பார்கள் என்றும், ராஜாக்கள் அவரை வந்து பணிவார்கள் என்றும் முன்னுரைத்துள்ளது தெரிகிறதல்லவா? ஆம். தாவீது பாட்டிலேயே அர்த்தம் சொல்லும் தீர்க்கதரிசி.
இயேசு கிறிஸ்துவுக்கு மாத்திரமல்ல, தாவீதுக்கும் பிறந்த ஊர் இந்த பெத்லகேம்தான். J. பெத்லகேம்.
பெத்லகேம் என்பதற்கு எபிரேய மொழியில் ஒரு வித்தி யாசமான அர்த்தம் உண்டு. அப்பத்தின் வீடு. ஆனால் பெத்லகேம் என்பதற்கு அராபிய மொழியில் அர்த்தம் என்ன தெரியுமா? மாம்சத்தின் வீடு என்பது.
தெரிந்து வைத்தார்களா அல்லது தெரியாமலேயே தீர்க்க தரிசனமாக வைத்தார்களா என்று தெரியவில்லை.
மனிதர்களுக்காக அப்பமாக தன் மாம்சத்தை கொடுத்த இயேசு பிறந்த ஊர் பெத்லகேம் என்பது எவ்வளவு பொருத்தம் பாருங்கள். எபிரேயுவிலே பார்த்தாலும் சரி. அரபு மொழியில் பார்த்தாலும் சரி. பெத்லகேம் பொருத்தமான பெயர்தான். இல்லையா?
எப்பிராத்தா என்பதற்கு செழுமையானது என்று பொருள். பெத்லகேமைச் சுற்றிலும் வயல்நிலங்கள் அதிகம். பெத்ல கேமியர்களில் எண்பது சதவீதம் பேர் விவசாயிகள்தான்.
மிகவும் பசுமையும் செழிப்புமான வயல்களைக் கொண்டி ருந்ததாலேயே பெத்லகேமுக்கு அப்பத்தின் வீடு என்று காரணப் பெயர் உண்டாயிருந்தது.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ரூத் வேலை செய்த போவாஸின் வயல்நிலம் இந்த பெத்லகேமில் தான் இருந்தது. வாசித்துப்பாருங்கள். ரூத் 1 : 22
ரூத் 1 : 22
நாகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள். வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லகேமுக்கு வந்தார்கள்.
பெத்லகேமியர்களின் மற்றொரு பிரதானமான பணி ஆடு களை மேய்ப்பது. மந்தை மேய்ப்பர்கள் கூட்டம் கூட்டமாக வசித்த தும் இங்குதான். பெத்லகேமைச் சுற்றிலும் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக காணப்பட்டது தான் இதற்கு காரணம்.
அக்காலத்தில் வெளியூர்களில் ஆடு வளர்ப்பவர்கள் கூட தங்கள் ஆடுகளை பெத்லகேமின் மந்தை மேய்ப்பர்கள் வசம் ஒப்ப டைத்து கூலிக்கு மேய்த்து தரச்சொல்வதுண்டு. எருசலேம் அருகிலி ருப்பதால் எருசலேம் ஆலயத்தில் பலிகளுக்காக வளர்க்கப்படும், அல்லது நேர்ந்து விடப்பட்ட ஆடுகளையும் கூட இந்த மேய்ப்பர் கள் வசம்தான் ஒப்படைத்து மேய்க்க சொல்வதுண்டு. பெத்லகேம் விவசாயத்திற்கு மாத்திரமல்ல. ஆடு வளர்ப்பிற்கும் பெயர்பெற்ற இடமாக விளங்கியது.
இங்கு வளரும் ஆடுகள் கொழுமையும் சிறப்புமாக வளரும். எனவேதான் அராபியர்களுக்கு இவ்வூரை நினைத்தவுடன் இறைச்சி ஞாபகத்திற்கு வந்திருக்கிறது. இறைச்சியின் வீடு என்று பொருள் கொள்ளும்படியாக பெத்லகேம் என்றழைத்தனர். முடிந் தால் இந்த வருடம் கிறிஸ்மஸிற்கு பெத்லகேமில் கொஞ்சம் இறைச்சி வாங்கிப் பாருங்கள்.
பெத்லகேமில் நிறைய குகை வீடுகளை இன்றும் கூட நீங்கள் பார்க்கலாம். அதென்ன குகை வீடு?
பெத்லகேமைச் சுற்றிலும் உள்ள சிறு குன்றுகளை கொஞ் சம் சுரண்டி நிறைய குகைகளை ஏற்படுத்தியிருந்தார்கள். இவை பெரும்பாலும் ஆடுகளை அடைக்கும் இடமாகவே பயன்படுத்தப் பட்டது. சில விசாலமான குகைகளில் மந்தை மேய்ப்பர்கள் ஆடுகளோடு ஆடுகளாக படுத்திருப்பார்கள். ஓரத்தில் கொஞ்சம் சட்டி, பானை என்று வைத்து தங்களுக்கு வீடுகளாகவும் பாவித்து வந்தனர்.
இதுபோன்ற குகைக் கொட்டில் ஒன்றில்தான் இயேசு பிறந்தார்.
முற்பிதாக்களின் காலம் தொட்டே மிகவும் பிரதானமாக வழங்கப்பட்டு வந்த ஊர் இந்த பெத்லகேம். பின்னே, தானியத் திற்கும், இறைச்சிக்கும் பஞ்சமில்லாத ஊர் என்றால் யார் தான் கொண்டாடமாட்டார்கள்?
இல்லையில்லை. இவற்றையும் தாண்டி நிறைய சிறப்புகள் இந்த ஊருக்கு உண்டு. யாக்கோபின் மனைவியாகிய ராகேலின் கல்லறை இங்குதான் இருக்கிறது. (ஆதி 35 : 16-19), ரூத் தானியம் சேகரித்த போவாஸின் வயல்நிலம் இங்குதானிருக்கிறது. இஸ்ர வேலின் நிகரற்ற ராஜா தாவீது பிறந்த ஊர் இதுதான். இவை யெல் லாவற்றையும் விட இன்னும் மேலான சிறப்பு-இயேசு இங்கு பிறந் ததுதான்.
இஸ்ரவேலின் ஊர்களுக்குள் பெத்லகேம் ரொம்பவும் அமைதியான ஆரவாரமற்ற ஊர். என்றாலும் பெத்லகேமும் கி.பி. 135ல் பெரிய ஒரு சோதனையை சந்தித்தது.
ஹாட்ரியன் என்ற ரோமச்சக்கரவர்த்தி யூதர்களின் கலகத்தை அடக்குவதற்காக யூதாவுக்கு வந்து எருசலேமையும், பெத்லகேமையும் முற்றுகையிட்டான்.
பலநாள் முற்றுகைக்குப் பின் யூதர்கள் துவண்டுபோன நிலையில், ஹாட்ரியன் எருசலேமைத் தாக்கி அதை தரைமட்டமாக் கினான். எருசலேமுக்கே இந்த கதியென்றால் சின்னஞ்சிறு ஊரா கிய பெத்லகேமின் நிலைபற்றிக் கேட்கவா வேண்டும்? தவிடு பொடியாகி விட்டது.
இதுபோதாதென்று பெத்லகேமிலிருந்த குகை குடியிருப்பு
களை காலிசெய்துவிட்டு அங்கே நிறைய விக்கிரகக் கோவில்
களையும் கட்டினான். குறிப்பாக அதோனியா என்ற பெண்
தேவதையின் கோவில்களையே பிரதானமாக பெத்லகேமில்
கட்டினான்.
இவையாவும் ஏறத்தாழ 200 ஆண்டுகள் வரையும் பெத்லகேமில் இருந்தன.
பிற்பாடு கி.பி. 325ல் ரோம சாம்ராஜ்ஜியத்திற்கு சக்கரவர்த் தியாக பட்டமேற்றவர் கான்ஸ்டன்டைன். இவரது தாயார் ஹெலன். இந்த அம்மையார் எப்படியோ இயேசுவை அறிந்து அவரை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக கிறிஸ்தவ மதம்தான் ரோம சாம்ராஜ்ஜியத்தின் மதம் என்று பிரகடனம் செய்தார்கள். உங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நீங்கள் கிறிஸ்த வர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டமே இயற்றியி ருந்தார். ரோம சாம்ராஜ்யத்தின் சட்டங்களை மீற யாருக்கும் தைரியம் இருந்ததில்லை. எனவே, கான்ஸ்டன்டைன் உட்பட, யாவரும் கிறிஸ்தவர்களானார்கள்.
கிறிஸ்தவ மதமும் ரோம அரசாங்கத்தின் மதமாக அறிவிக் கப்பட்டது.
தில் ஒரு முறை தாயார் ஹெலன் எருசலேம் இவர் காலத்தில் மற்றும் புனித இடங்களை பார்வையிட யூதாவுக்கு போனபோது பெத்லகேம் மற்றும் எருசலேமில் ஹாட்ரியன் நிறுவிய அருவெறுப் புகளை கண்ணுற்றார். அவ்வளவுதான் பிளட்பிரஷர் தலைக்கேற, உடனே ஸ்பாட் ஆக்ஷன் எடுத்து, தான் பயணத்தை முடிக்கு முன்பாக பெத்லகேம் மற்றும் எருசலேமிலிருந்து இவை யாவும் அகற்றப்பட்டுவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆட்சியாளர்கள் வருகிறார்கள் என்றால் இரவோடிரவாக சாலைகள் உருவாகிவிடுவதும், வீதிகள் சுத்தமாகிவிடுவதும் நாம் பார்க்காததா என்ன? அப்படியே ஹெலன் அரசியார் சொன்ன மாத்திரத்தில் பெத்லகேமும் எருசலேமும் துடைத்துப்போட்ட மாதிரி சுத்தமாகிவிட்டன. அதோனியர் என்ற பெண்தேவதை போன இடமே தெரியவில்லை.
இதுபோதாதென்று எருசலேமிலும், பெத்லகேமிலும் மூன்று இடங்களில் பேராலயங்கள் கட்ட வேண்டுமென்று வரை படமே வரைந்து காட்டிவிட்டார் ராணியார்.
மகாராணியார் கட்டளையிட்ட மூன்று இடங்கள் முறையே, இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கல்வாரியில் குறிக்கப்பட்ட இடமும், இயேசுவின் உடல் அடக்கம் பண்ணப் பட்ட இடமும், இயேசு பிறந்த இடமான பெத்லகேமும் ஆகும்.
இயேசு பிறந்த இடத்தை சரியாக கண்டுபிடித்து கட்ட வேண்டும் என்று கான்ஸ்டன்டைன் விரும்பியதால் அதைக் கண்டுபிடிக்க அவர் பல ஆதாரங்களையும், ஆவணங்களையும் திரட்ட வேண்டியதாயிற்று.
இன்றைக்கும் பெத்லகேமுக்கு பயணம் போனீர்களானால் கைடுகள் இயேசுபிறந்த இடமாக ஆளாளுக்கு ஒரு இடத்தை காட்டுவார்கள். ஒவ்வொருமுறை போகும்போதும் ஒவ்வொரு இடத்தை பார்க்கவேண்டியிருக்கும். தரையில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர வடிவத்தை அமைத்து சுற்றிலும் மெழுகுவர்த்தி ஏற்றி, "இங்கேதான்.. இங்கேதான் இயேசு பாலகனாக பிறந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தார்" என்று கூசாமல் சொல்லுவார்கள்.
பலமுறை எருசலேம் புனிதபயணம் மேற்கொண்டு, பலரையும் அழைத்துக்கொண்டு போய் டிராவலர்ஸ் ஊழியம் செய்து வரும் என்னுடைய ஊழிய நண்பர் ஒருவரை நான் ஒரு முறை சந்திக்க நேரிட்டபோது, அவர் என்னையும் தன்னுடைய பிரயாணக் குழுவில் எப்படியாவது சேர்த்துக்கொள்ள வேண்டு மென்று பிரயாசமெடுத்து பேசிக்கொண்டிருந்தார்.
"பாருங்க தம்பி, எருசலேமில் கைடுகள் ஒரே ஏமாற்றுத் தான். என்னென்னதான் சொல்வது என்றே இல்லாமல் ஏதாவது இடங்களை காட்டி இங்குதான் மரியாள் திரிகை திரித்தார். இதுதான் யோசேப்பு வேலைசெய்த பட்டரை என்றெல்லாம் பீலா விடுவார்கள். நம்பக்கூடாது. எங்கள் பயணக்குழு அப்படியல்ல ஒவ்வொன்றையும் நாங்களே ஆராய்ந்து சரியாக கண்டுபிடித்திருக் கிறோம். எனவே நாங்கள் போகும்போது கைடு வைத்துக் கொள்வதில்லை. உதாரணமாக பாருங்கள், இயேசு பிறந்த இடமாக கைடுகள் மூன்று வெவ்வேறு இடத்தை காட்டினார்கள். என்ன செய்தேன்?
சரியான இடத்தை நாமே கண்டுபிடிக்க வேண்டுமென்று அவர்கள் காட்டிய ஒவ்வொரு இடத்திலும் ஆவியில் நிறைந்து ஜெபம் செய்தேன். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஜெபம் செய்யும் போது மாத்திரம் ஸ்பஷ்டமாக ஒரு குழந்தை அழும் சத்தம் என் காதுகளில் கேட்டது. ஆவியானவரும் மெல்லிய குரலில் என் காதுகளில் அழுகிறது யார் தெரிகிறதா? இயேசு பாலகன் தான் என்றார். எனவே இதுதான் சரியான இடம் என்று தெரிந்து கொண்டேன். நீங்களும் எங்களுடன் வந்தால் சரியான இடங்களை காட்டு வோம்" என்றார் எருசலேமின் கைடுகளுக்கு கொஞ்சமும் சளைக் காமல்.
இப்போதே இவ்வளவு குழப்பங்களானால் அக்காலத்தில் எப்படி இருந்திருக்கும்? ஆனாலும் கான்ஸ்டன்டைன் மன்னனான தால் ஆதாரங்களையும் ஆவணங்களையும் சேகரிப்பதில் அவருக்கு சிரமம் அதிகமாக ஏற்படவில்லை.
கிறிஸ்தவ மற்றும் பாரம்பரிய ஆதாரங்கள் இயேசு பிறந்த தாக காண்பித்த இடத்தில் ஹாட்ரியன் கட்டியிருந்த விலையுயர்ந்த அதோனியா என்ற பெண் தேவதையின் கோவில் இருந்தது.
எனினும் நிர்தாட்சண்யமாக அதை தகர்த்தெறிந்து விட்டு அங்கே மிகவும் விசேஷித்த பேராலயம் ஒன்றைக் கட்டினார் கான்ஸ்டன்டைன்.
ஆலயம் சாதாரணமானதல்ல. மிகவும் விலையுயர்ந்த பளிங்கு கற்களும், சுத்தப்பொன்னும், வெள்ளியும் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டு ராஜாவே தனிக்கவனம் செலுத்திக் கட்டினது. எனவே பிரமாண்டம் தெரிகிறது.
கி.மு.529ல் நேப்லஸ் பகுதியைச் சேர்ந்த சமாரியங்கள் கிறிஸ்தவ அரசாங்கத்திற்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராகப் புரட்சி செய்தனர்.
காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் ஒளிந்திருந்த இவர்கள் திடீர் திடீர் என்று நகரங்களுக்குள்ளும் கிராமப்புறங்களுக் குள்ளும் புகுந்து தாக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அப்படி அவர்கள் ஒருமுறை தாக்கியது பெத்லகேமை.கி.பி. 529ல் இவர்கள் பெத்லகேமுக்குள் புகுந்து அந்த ஊரையும் சமீபத் திலிருந்த பகுதிகளையும் குறையாடினர். இந்த தாக்குதலில் கான்ஸ்டன்டைனின் ஆலயம் அதிகமாக பாதிக்கப்பட்டு தீயும் இடப்பட்டது.
சிலகாலம் அப்படியே விடப்பட்டிருந்த ஆலயம், எருசலே மிலிருந்த மதிப்பு வாய்ந்த கிறிஸ்தவ பெரியார் புனித சப்பாஸ் என்பவரின் கண்களின் கவனத்தைப் பாதித்தது. பெத்லகேமின் ஜனங்களை கூட்டி அப்போது ரோமின் சக்கரவர்த்தியாயிருந்த ஜஸ்டியனிடம் சென்று முறையிடக் கோரினார். பெத்லகேமின் ஜனங்கள் தாங்கள் யாவரும் சக்கரவர்த்தியிடம் செல்வதைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்த பெரியவராகிய சப்பாஸ் அவர்களே தங்கள் சார்பாக சென்று ராயனை சந்திப்பது நல்லது என்று கருதினர்.
அவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு புனித சப்பாஸ் ரோம ராயனாகிய ஜஸ்டினை சந்தித்து பெத்லகேமின் ஆலயத்தை புதுப்பித்து தர வேண்டினார்.
அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ரோமராயன் நிறையப் பொருளுதவியுடன் அவனது பிரதானிகளில் ஒருவனை மீண்டும் இந்த ஆலயத்தை புதுப்பிக்க நியமித்தான்.
இந்தப் பிரதானியின் மேற்பார்வையில் முந்தைய ஆலயத்தை காட்டிலும் அதிக அழகான ஆலயம் கட்டப்பட்டது. ஆனாலும் பெத்லகேமின் ஆலயத்தை பார்வையிட்ட ரோமராய னுக்கு இதில் திருப்தியில்லை.
இது தான் கொடுத்த பொருட்களுக்கு ஏற்ற ஆலயம் அல்ல என்று கண்டுகொண்டான். (காண்ட்ராக்டர் மேனியா?)
தான் கொடுத்த பணத்தை பிரதானி பெருவாரியாக சுருட்டிக் கொண்டு விட்டதாக குற்றம்சாட்டி அவனை பெத்ல கேமிலேயே சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். பாவம், பிரதானி சுருட்டிக்கொண்ட பணத்தை அனுபவிக்க முடியாமலேயே தலை யை இழந்தான். ராஜாவிடம் போய் கைவரிசையை காட்டலாமா?
இன்றைக்கு நீங்கள் பெத்லகேம் போனாலும் தலையில்லாத இந்த பிரதானி கட்டிய ஆலயத்தைப் பார்க்கலாம்.
இயேசுகிறிஸ்து பிறந்த ஊர் உண்மையிலேயே புனிதமா
னது மாத்திரமல்ல. வரலாற்று சிறப்பு மிக்கதும் கூட. ஆனால் - ஜீவ அப்பமான இயேசுவை தன்னிலே கொண்டிருக்கி றதும், அதைப்பிறருக்கு பகிர்ந்து கொடுக்கிறதுமான அப்பத்தின் வீடுகளாகிய இருதயங்கள் தான் அதனினும் மேலானது என்பது என் அபிப்ராயம்.
என்ன சொல்கிறீர்கள்?
மூலம்: ஆழங்கள் சொல்லும் சாட்சிகள்
ஆசிரியர்: சகோ.வின்சென்ட் செல்வகேமார்
