அஸ்கலோன்
"இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த நகரம் அஸ்கலோன் ஏன் தெரியுமா?"
"தெரியாதே!"
"பெயரிலேயே 'லோன்' இருக்கிறதே.”
வேதாகமம் சம்மந்தமான ஒரு கடி ஜோக்காக வேண்டு மானால் அஸ்கலோன் பற்றி இப்படிச் சொல்லலாம். ஆனால் நிஜத்தில் அஸ்கலோன் என்பது ஆட்டு லோன். மாட்டுலோன் மாதிரிப்பட்ட சமாச்சாரமல்ல.
நகரம்!
பெலிஸ்தியர்களின் புகழ் பெற்ற நகரம்.
இந்தியாவுக்கு ஐந்து புகழ்பெற்ற நகரங்கள், பம்பாய், சென்னை, டெல்லி, கல்கத்தா மற்றும் நீங்கள் வசிக்கும் ஊர் (அது ஆட்டுவாம்பட்டியாயிருந்தாலும் சரிதான்) என்று இருப்பதைப் போல, பெலிஸ்தியர்களுக்கும் புகழ் பெற்ற நகரங்கள் ஐந்து.
அதில் ஒன்று தான். இந்த அஸ்கலோன்.
மீதி?
அஸ்தோத், காத், காசா, யோப்பா என்பவை.
அஸ்கலோனை சிலர் நாகரீக சீமாட்டி பாணியில் எஸ்க
லோன் (Eskelon) என்றும், சிலர் அக்ஷலோன் என்று தும்மல்
சத்தத்திலும் அழைப்பதுண்டு.
மற்றப்படி இதன் பூர்வீகப் பெயரே அஸ்கலோன்தான். தற்காலத்தில் இதற்கு ஸ்பெல்லிங்கை மட்டும் மாற்றி Asqalon என்றழைக்கிறார்கள். (பழைய ஸ்பெல்லிங் Askelon)
அஸ்கலோன் ஒரு நெய்தல் நகரம், நெசவு இல்லை சார். கடல் சார்ந்த நகரம்.
இது மத்தியதரைக் கடலையொட்டி நேர்த்தியாக அமைந்த ஒரு துறைமுகப்பட்டிணம்.
கானானிய வரைபடத்தில் சீதோனில் விரலை வைத்து அப்படியே வழுக்கிக் கொண்டே வருவீர்களானால் தீரு. அக்கோ, தோர், மிக்தால், யோப்பா என்று வந்து கடைசியாக அஸ்கலோனில் விழுவீர்கள்.
வரைபடத்தில் இடம் குறிக்கவும் சட்டென கண்டு கொள்ளவும் வசதிமிக்க நகரம் இந்த அஸ்கலோன்.
இது காசாவிலிருந்து இருபது கி.மீ. வடக்கிலும் அஸ்தோத் திலிருந்து பதினெட்டு கி.மீ. தெற்கிலும் அமைந்துள்ளது.
இதன் சூரிய திசையில் மத்திய தரைக்கடலும், மேற்கில் எக்லோன், லாகீஷ், எபிரோன் போன்று புகழ்பெற்ற நகரங்களும் அமைந்துள்ளன. (எக்லோனும் இந்தியர்களுக்கு பிடித்த நகரம் தான் இல்லையா?)
இந்நகரின் குவிந்த கிழக்குப் பகுதி மத்தியதரைக்கடலில் இருப்பதினால் ஒரு காலத்தில் இது ஒரு இயற்கை துறைமுகமாக கொடிகட்டிப் பறந்தது. கடல் வாணிபத்தில் நிறைய லாபம் கிடைத்தது. பணப்புழக்கம் சரளமாக இருந்தது.
இப்போது இதுவும் சீதோனைப் போலவே ஒரு சாயம் போன துணிமாதிரி ஆகிவிட்டது.
கடற்கரையிலிருந்தாலும் ஒரு உப்பைக்கூட வெளியூரி லிருந்து வாங்க வேண்டிய பரிதாப நிலையில் இன்று கேட்பாரற்று கிடக்கிறது அஸ்கலோன். பாவம்!
வாழ்ந்திருந்த காலத்தில் அஸ்கலோனின் நிலையே வேறு. நான் 'அஸ்கலோன் வாசி' என்று யாராவது சொன்னால்கூட ஜார்ஜ் புஷ் அளவுக்கு மரியாதை கிடைக்கும்.
அஸ்கலோனின் மண்ணெல்லாம் ஐசுவரியம். அஸ் கலோனின் மிகச்சாதாரண குடிமகன்கூட நாலு விரலில் மோதிரம் போட்டுக் கொஞ்சம் தொந்தி வைத்திருந்தான்.
அஸ்கலோனின் இந்த செழுமைக்கு என்ன காரணம்?
அஸ்கலோனின் இருபுறமும் இருந்து பணம்கொட்டியது தான் காரணம். அஸ்கலோனின் குவிந்த கிழக்குப் பகுதி வியாபாரத் துறைமுகம். மேற்கேயிருந்த நகரின் நிலப்பகுதியெல்லாம் செழிப் பான விவசாயம். பிறகு வசதிக்கு என்ன குறை?
அஸ்கலோனின் உள்ளார்ந்த பகுதியின் விவசாயம் வெகு செழிப்பானது. அக்காலத்தின் மிகத்தரம் வாய்ந்த ஆப்பிள்களும், அத்திப்பழங்களும் அஸ்கலோனில் விளைந்தவைதான். இதன் இன்னொரு விசேஷமான விளைபொருள் சிறிய வெங்காயம். இந்த சிறிய வெங்காயத்தின் பெலிஸ்தியப் பெயர் 'ஸ்காலியோன்' (Scallion) இதைக் கொண்டு தான் 'அஸ்கலோன்' என்ற பெயரும் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியை ‘முத்துநகர்’, மதுரையை 'கோயில்நகர்', பெங்களூரை 'தோட்ட நகர்' என்றழைப்பதைப் போல அஸ்கலோனுக்கு பெயரிட வேண்டுமானால் வெங்காய நகர் என்று பெயரிடலாம். ஊருக்குள் நுழைந்தாலே அத்தனை வெங்காய நெடி.
அஸ்கலோன் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்று.
இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் பயணம் செய்த காலத்தி லேயே இது பெலிஸ்தியர்களின் புகழ்பெற்ற நகரமாயிருந்தது.
யோசுவா 13 : 3ல் இதன் பெயர் குறிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
இதற்கும் முந்திய எகிப்திய சாசனக் குறிப்புகளிலும் அஸ்கலோன் நகரின் பெயர் அடிபடுகிறது.
கி.பி. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கு ஆராய்ச்சி செய்த J. கார்ஸ்டிராங் J.D.S. பென்டல்பாரி ஆகியோரின் அகழ் வாராய்வுகளில் கிடைத்த எகிப்திய குறிப்புகள், அஸ்கலோனில் நடைபெற்ற வாணிபத்தையும், வளத்தையும பற்றி குறிப்பிடு வதுடன் அண்டை நாடான எகிப்தில் இஸ்ரவேலர் அடிமையா யிருந்ததையும், பார்வோனுக்கு எதிராக கலகம் செய்ததையும் கூடக் குறிப்பிட்டுள்ளன.
இந்தக் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து, அஸ்கலோன் இஸ்ரவேலர் எகிப்தில் கலகம் செய்த காலத்திலேயே புகழ்பெற்ற நகரமாயிருந்தபடியினால் அதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தீர்மானமாக கருதினார்கள்.
ஆனால் இதற்கும் நானூறு வருடங்களுக்கு முன்னிருந்த காலத்தைச் சேர்ந்த ‘அமர்னா' என்ற பட்டணத்திலிருந்த கிடைத்த குறிப்புகளிலும் அஸ்கலோனின் பெயர் இருக்கிறது.
முடிவாய் என்னதான் சொல்லுகிறீர்கள் கார்ஸ்டிராங்?
"அஸ்கலோன் கி.மு. 2000 ஆண்டுகளுக்கும் முன்பாகவே இருந்த பட்டினம். ஆனால் அது அப்போது கானானிய நகரமா யிருந்தது. பிற்பாடு கி.மு. 1300 வாக்கில்தான் இதற்குள் பெலிஸ் தியர்கள் நுழைந்து, பிடித்துக் கொண்டனர்.”
அஸ்கலோன் உலகின் பழமையான வாணிப நகர மென்பதில் சந்தேகமில்லை.
Dr. ஹென்றி ஜேம்ஸ் என்பவர் கி.பி. 1906ல் எகிப்தில் அகழ் வாராய்ச்சி செய்தார். இவர்தான் புகழ்பெற்ற மெனப்தா கல்வெட் டைக் கண்டுபிடித்தவர். மெனப்தா கல்வெட்டு என்பது கி.மு. 1200 ஐச் சேர்ந்தது. பழைய இஸ்ரவேலின் வரலாற்றைப் பற்றி பல பயனுள்ள குறிப்புகளை தந்ததும் இந்த மெனப்தா கல்வெட்டுத் தான்.
யோசுவா அஸ்கலோன் மேலே சீட்டுப்போட்டு யூதா அதைப்பிடிக்க வேண்டும் என்று சொன்னதையும் அதன்படியே யூதர் அஸ்கலோனைப் பிடித்தார்கள் என்பதையும் நியா 1 : 18ல் வாசிக்கிறோம்.
யூதா பிடித்துக் கொண்ட ஐஸ்வரிய நகரமான அஸ்கலோன் வெகுகாலம் அவர்கள் கையில் நிலைக்கவில்லை. ஐசுவரியத்தின் புத்தியே அதுதானே?
இதற்கு இஸ்ரவேலரின் பொல்லாத நடவடிக்கைகளே காரணம் என்று வேதம் சொல்லுகிறது. (நியா 13 : 1)
வேதம் ஒற்றை வரியில் முடித்துவிட்ட இந்தச் செய்தியை மெனப்தாவின் கல்வெட்டுக் குறிப்பு சற்று விளக்கமாக கூறுகிறது பாருங்கள்.
"தங்கள் தேவனை ஆராதிக்க வேண்டுமென்று பக்தி வைராக்கியமாய் புறப்பட்ட இஸ்ரவேலர்கள் தாங்கள் பிடித்து ஆண்ட தேசங்களில் அப்படி நடந்து கொள்ளவில்லை. மாறாக, அந்தந்த தேசங்களிலிருந்த கடவுள்களையே தாங்களும் ஆராதிக் கவும், வழிபடவும் செய்தனர். அவர்களது ஆட்சியும் மனம் போன படியே நடந்து வந்தது. தாங்கள் வெற்றியே அடைந்து வருவதால் தங்களுக்கு சமானம் யாருமில்லை என்றெண்ணி ஏனைய சுற்றுப் புற தேசங்களுக்கும், குடிகளுக்கும் பெருந்தொல்லை கொடுத்து வந்தனர். கோயில்களில் நரபலிகளும், பிற அருவெறுப்பான ஆராதனைகளும் பஞ்சமின்றி நடந்து வந்தன."
மேற்கண்ட மெனப்தாவின் குறிப்புகள் இஸ்ரவேலரின் மீறுதல்களை தெளிவாக படம்பிடித்துக் காட்டுகின்றன. இப்படிப் பட்ட பொல்லாங்குகளினால் தான் கர்த்தர் இஸ்ரவேலரை மீண்டும் பெலிஸ்தியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
அஸ்கலோனில் அகழ்வாராய்ச்சி கி.பி. 1920ல் துவங்கியது. நமக்கு அதிகம் பரிச்சயமான Dr.J. கார்ஸ்டிராங் என்பவர்தான் இங்கும் சுமார் நான்காண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார்.
இவரது ஆராய்ச்சியில் அஸ்கலோனின் வடமேற்கு பகுதியில் சுமார் 3 அடி உயரமுள்ள கல் சிற்பம் கிடைத்துள்ளது.
மீதி இடங்களில் கிடைத்த சிலைகளுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. மற்ற இடங்களில் பெருவாரியாய் கிடைத்த சிலைகள் கடல்கன்னி வடிவிலானது. மேலே பெண்ணா கவும், இடுப்புக்கு கீழே மீனாகவும் இருக்கும். இந்த பெண் தேவதை யின் பெயர் தெர்ஸெட்டோ என்பதாகும். பெலிஸ்தியர் களிடையே ரொம்பவும் புகழ்பெற்ற தெய்வம். அதிகமாக அஸ்க லோனியர்கள் இதைத்தான் ஆராதித்தார்கள்.
ஆனால் அஸ்கலோனின் வடமேற்கு பகுதியில் கிடைத்த 3 அடி உயரச்சிலை தெர்ஸெட்டோ என்ற மெர்மெய்டினுடைய தல்ல. சிலையில் இருந்தவர் எலிவடிவக் கடவுள்.
இன்னும் அதே ஆழத்தில் ஆராய்ந்த போது சிறிய அளவிலான எலிச் சிலைகளை ஏராளமாக கண்டுபிடித்தனர். கட்டை, கல், உலோகம் என்று எல்லா ரகங்களிலும் எலிச்சிலைகள், யாராவது பெலிஸ்திய அரசியல்வாதி எலிச்சின்னத்தில் நின்றானோ என்னவோ என்றெண்ணுமளவிற்கு சில சுவர்களில் கூட எலி உருவங்கள்.
பெலிஸ்திய கடவுள்களைப் பற்றிய குறிப்புகள் ஒன்றில் கூட எலியைப்பற்றி தெய்வீகமான ஒன்றும் குறிப்பிடப்பட வில்லை. அஸ்கலோனின் புகழ்பெற்ற கடவுள்களெல்லாம் தெர்ஸெட்டோ மற்றும் தபே போன்றவைதான்.
அப்படியானால் இந்த எலிவடிவ சிலைபற்றிய காரியம் தான் என்ன?
கார்ஸ்டிராங் இதுபற்றி அறிய நிறையவே பாடுபட்டார். இறுதியில் லாகீஷில் கிடைத்த கல்லறைக் குறிப்புகளில் இதற்கு விடை கிடைத்தது.
கல்லறைக் குறிப்பு சொல்கிறது.
"எப்பிராயீமர்களின் தேவனுடைய புனிதப் பெட்டியை எங்கள் தேசத்திற்குள் கொண்டு வந்த நாளிலிருந்து கடுமையான மூலவியாதி தேசமெங்கும் பரவியது. சிறியவர், பெரியவர் என்று பாகுபாடின்றி யாவரையும் இந்த நோய் தாக்கியது. இதுவும் தவிர எங்கிருந்தது வந்தன என்று யாரும் அறிய முடியாதபடி ஆயிரக் கணக்கான எலிகள் தேசமெங்கும் பரவி பயிர்களை நாசம் செய்தது. மட்டுமின்றி எங்கள் சேமிப்பு தானியங்களையும் சேதப்படுத்தியது. இதன் காரணம் அறிய வேண்டி பெலிஸ்திய பிரபுக்கள் தாகோன் பூசாரிகளிடம் விசாரித்தனர். தாகோனின் பிரதான பூசாரிகள் எழுபது பேரும் ஒருமித்து இந்த வாதையின் காரணம் எப்பிராயீமர் களின் தேவனுடைய பெட்டி தான் என்றனர். இதை திரும்ப அனுப்பிவிடுவதே நன்மையானது என்றும், அப்படி அனுப்பும் போது வெறுமையாய் அனுப்பாமல் மூல வியாதிக்கென்று சுரூபங்களும், எலிகளுக்கென்று சுரூபங்களும் செய்து அதையும் பெட்டியில் வைத்து அனுப்ப வேண்டும் என்றனர். இதுவும் தவிர தேசத்தில் எங்கெல்லாம் மூலவியாதியும், எலிகளும் நிரம்ப உள்ளனவோ அங்கெல்லாம் அதே சாயலான சுரூபங்களை செய்து அவற்றிற்கு ஆராதனை செய்துவர வேண்டும். இப்படி மூன்று பவுர்ணமி காணும் வரை செய்தால் இனி இந்த வாதை என்றும் திரும்பாது என்றனர். அது முதல் வாதை கண்ட வீடுகள் தோறும், கிராமங்கள் தோறும் சுரூபங்களை செய்து வைத்துக் கொண்ட னர்.''
லாகீஷின் கல்வெட்டுக் குறிப்பில் காணப்படும் அதே சம்பவம் வேதப்புத்தகத்திலும் காணப்படுகிறது பாருங்கள்.
ஆகையால் நீங்கள் மூலவியாதியின் சாயலாக ரூபங்களை யும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப் போட்ட சுண்டெலியின் சாயலான ரூபங்களையும் உண்டு பண்ணி இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையை செலுத்துங்கள். (1 சாமு 6:5)
சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களை அபரிமிதமாய் செய்ததைப் பற்றி 1சாமு 6: 18ல் வாசிக்கலாம்.
பொன்னால் செய்த செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி, நாட்டிலுள்ள கிராமங்கள் மட்டும், கர்த்தருடைய பெட்டிளை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல் மட்டும் ஐந்து அதிபதிகளுக்கும், பெலிஸ்தர்களின் சகல ஊர்களின் இலக்கத்திற்கும் சரியாயிருந்தது. (1சாமு 6 : 18)
இங்கு கண்டெடுத்த சிலைகளை கார்பன் டேட்டிங் முறையில் ஆராய்ந்து அவை கி.மு. 1150ம் ஆண்டைச் சேர்ந்தென்று கண்டுபிடித்துள்ளனர்.
ஆம். அது சாமுவேலின் காலம் தான்.
சுண்டெலிகள் இப்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் தானியமெல்லாம் கடிக்காமல் சாதுவாய் உட்கார்ந்திருக்கின்றன.
கி.மு.800ல் பெலிஸ்தியர்கள் மிகவும் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர்.
இதன் செழுமைக்கு அஸ்தோத். அஸ்கலோன் என்ற பட்டணங்களில் நடைபெற்று வந்த கடல் வாணிபம் மட்டும் காரணமல்ல.
பின்னே?
இரும்படிக்கும் பட்டறைகளும் ஒரு பிரதான காரணம்.
பெலிஸ்தியர்கள் இரும்பைக் கொண்டு ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் செய்வதை அறிந்தும், அத்துறையில் சிறந்தும் விளங்கினர். எபிரெயர்கூட பகை மறந்து, ஆயுதங்களுக்காக பெலிஸ்திய கருமான்களிடம்தான் போக வேண்டியிருந்தது என்று 1சாமு 13: 20 கூறுகிறது.
இவ்விதம் இரும்பு சார்ந்த துறையில் பெலிஸ்தியர்கள் அக் காலத்தில் சிறந்து விளங்கினர். இந்த இரும்புக் கனிமங்கள் அஸ்தோத்தைத் சுற்றிலும் இருந்த பகுதியிலேதான் அதிகமாய் கிடைத்தன.
இதனால் இடநெருக்கடியும், ஜனநெருக்கடியும், நெரிசல் சந்தடியும் அஸ்தோத்திலே அதிகமாயிருந்தது. சதுர அடி லட்சம் ரூபாய் விலை சொன்னாலும் இடம் வாங்கப் போட்டியிருந்தது.
சுற்றிலும் இரும்படிக்கிற சத்தம் தாளமுடியாமலோ என்னவோ, அஸ்தோத்திலிருந்த தலைநகரை அஸ்கலோனுக்கு மாற்றிக் கொண்டான் வென்அம்மான் என்ற பெலிஸ்திய மன்னன்.
இவன் இப்படிச் செய்வதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது அஸ்தோத் தலைநகராயிருந்த போதே ஆமோஸ் தீர்க்க தரிசியினால் இது முன்னுரைக்கப்பட்டுள்ளது.
நான் குடிகளை அஸ்தோத்திலும் செங்கோல் செலுத்து கிறவனை அஸ்கலோனிலும் இராதபடி சங்காரம் பண்ணி... ஆ CLOTG 1:8
இந்த தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட காலத்தில் 'செங்கோல் செலுத்துகிறவன்' அஸ்தோத்தில் தான் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தேவன் சங்காரம் பண்ணும் நாளில் குடிகளின் பெருக்கம் அஸ்தோத்திலும், இராஜா அஸ்க லோனிலும் இருப்பார்கள் என்பதை மேற்கண்ட வசனம் எவ்வளவு துல்லியமாய் முன்னறிவிக்கிறது பாருங்கள்!
T.C. மிட்செல்லி என்பவர் அஸ்தோத்தை ஆராய்ந்த போது இந்நகரில் மட்டும் சுமார் நாலாயிரம் இரும்பு ஆயுதங்கள் செய்யும் பட்டறைகள் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடித் துள்ளார்.
அஸ்கலோனின் வரலாற்றை ஆராய்ந்தால் அது பெர்ஸியர்.
ரோமர் போன்றவர்களின் படையெடுப்புக்குள்ளான போதும் நல்ல ஒரு துறைமுகப் பட்டினமாகவே விளங்கி வந்தது தெரிகிறது. இப்பட்டணத்திற்கு மொத்த அழிவு கி.பி 1270ல் தான் வந்தது.
பிர்பாஸ் என்பவனது படையெடுப்பின் போது பிரபாஸ் அஸ்கலோனில் வெகு கொடூரமாக நடந்து கொண்டான்.
பட்டணத்தை முழுவதுமாக இடித்து, குட்டிச் சுவர்களும், மண்மேடுகளுமாக்கினான். பட்டணத்தை இடித்த கற்களை யெல்லாம் துறைமுகத்திற்குள் எறிந்து அதை பயன்படுத்த முடியாதபடி நாசம் செய்தான். அஸ்கலோனை பிடித்த யாரும் இதுவரை செய்யாத காரியம் இது.
அஸ்கலோனின் ஜீவனே துறைமுகம்தான்.
அதுவும் பாழ்பட்டபின்பு, அஸ்கலோன் செத்து குடிகளற்று பாழான மண்மேடாயிற்று.
கி.மு.2000லிருந்து ஒருபோதும் சந்தித்திராத நிலை அஸ்கலோனுக்கு சம்பவித்தது. இதுபற்றி சுமார் 1800 ஆண்டு களுக்கு முன்னரே வேதவசனம் முன்னறிவித்துள்ளது பாருங்கள்.
காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்... (செப் 2 : 6)
பிர்பாஸின் படையெடுப்புக்குப் பின் அஸ்கலோன் பாழானாலும் அதன் சுற்றுப்புறங்கள் செழிப்பான புல்வெளிகளும், தண்ணீரும் உள்ளதாய் காணப்பட்டதால் யூத மேய்ப்பர்கள் இங்கே கிடை போட்டு தங்கினர். அஸ்கலோனை மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தினர்.
செப்பனியா 2: 6-7
சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடிலும், ஆட்டுத்தோழங்களுமாகும்.. அவர்கள் (மேய்ப்பர்கள்) அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள். அஸ்க லோனின் வீடுகளிலே சாயங்காலம் படுத்துக் கொள்வார்கள்....?
செப்பனியா முன்னறிவித்துச் சொன்ன காலத்தில் இது நம்ப முடியாத, நகைப்புக்குரிய வார்த்தைகள்தான். காரணம் அவ்வளவு செழித்தோங்கியிருந்த பட்டணம் இந்த அஸ்கலோன். தொட்ட இடமெல்லாம் பொன் விளைந்துகொண்டிருந்தது.
ஆயினும் தேவனுடைய வார்த்தைக்கு முன்பாக செழிப்பா வது மண்ணாங்கட்டியாவது. வசனம் நிறைவேறியது. அஸ்கலோன் பாழானது.
1948-ல் இஸ்ரவேல் தனிநாடாக அறிவிக்கப்பட்டபோது அஸ்கலோன் எகிப்தியர் வசமாயிற்று. பிறகு 1967ல் நடைபெற்ற உலகப்புகழ்பெற்ற ஆறுநாள் போரில் இஸ்ரவேல், காசா மற்றும் அஸ்கலோன் பகுதிகளை வென்று தன் வசமாக்கிக் கொண்டது. யோசுவாவின் காலத்தில் பிடித்து பின் இழந்த அஸ்கலோனை யூதா மீண்டும் 1967ல் தான் பிடித்தது.
அந்த தேசம் (அஸ்கலோன்) யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும். (செப் 2 : 6
என்ற வேதாகமத்தின் வார்த்தையும் அச்சுப்பிசகாமல் நிறைவேறியது.
இன்று இஸ்ரவேல் தன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அஸ்க லோனை Garden City என்று அறிவித்து புதிய கட்டிடங்களை எழுப்பி நகரை சீர்ப்படுத்திக் கொண்டிருக்கிறது.
தேவனுடைய வார்த்தை நிறைவேறுதலுக்கு அஸ்கலோன் எப்படிப்பட்ட முன்னுதாரணம் பார்த்தீர்களா? இப்பேர்பட்ட பொய்யுரையாத வேதத்தை கைக்கொள்ளுகிற நாம் உண்மை யிலேயே பாக்கியசாலிகள் தானே.
மூலம்: ஆழங்கள் சொல்லும் சாட்சிகள்
ஆசிரியர்: சகோ.வின்சென்ட் செல்வகேமார்
