நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் (1 பேதுரு 1:13-25)
வேதாகமத்தைப் படிக்கும் மாணவருக்கு, விரிவான கற்பனையொன்று மதிப்புமிக்க ஆதார மூலமாக உள்ளது. இதனுடன் அவர், வேறுவகையில் தாம் இழந்தவராக இருக்கக் கூடிய உலகங்களில் பிரவேசித்து அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். முதல் நூற்றாண்டு ஆசிய மைனர் பகுதியில் சிமிர்னா, எபேசு அல்லது பெர்கமு போன்ற மாபெரும் நகரங்கள் ஒன்றில், 1 பேதுரு நிருபத்தின் முதல் வாசகர்களாக இருத்தல் பற்றிக் கற்பனை செய்து பாருங்கள் முதல் நூற்றாண்டின் ஆசியா மைனர் பகுதியில் மாத்திரமே, 1 பேதுரு நிருபத்தில் உள்ள வார்த்தைகளின் வலிவை நாம் புரிந்து கொள்ள முடியும்
நீங்கள் பிரவேசித்துள்ள உலகத்தில் சபை புதியதாக உள்ளது. கிறிஸ்துவின் சிலுவை மரணம், நினைவுகூரக்கூடிய காலத்திற்குள் நடைபெற்றுள்ளது. உங்கள் நகருக்கு வந்த முதல் பிரசங்கியாரை நீங்கள் நினைவில் வைத்திருக் கிறீர்கள். முதலில் அவர் ஆர்வத்தைத் தூண்டுபவராக மாத்திரமே இருந்தார், ஆனால் நீங்கள் திகைப்படையும்படி, அவரது சற்குணமும் செய்தியும் மனதை ஈர்ப்பவையாக உள்ளன. அவர், ஒரே தேவன்தாம் இருக்கிறார் என்றும் எல்லா மனிதர்களும் அவருக்கு எதிராகப் பாவம் செய்து அவருக்கு விரோதிகள் ஆனோம் என்றும் கூறினார். மேலும் அவர், ஆண்டவராகிய கிறிஸ்து என்ற மீட்பரைத் தேவன் அனுப்பினார் என்றும் கூறினார். நம்பிக்கை, அன்பு, ஆகியவற்றின் அந்தச் செய்தியைக் கேட்டு, நீங்கள் கிறிஸ்தவரானீர்கள்
பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் கடந்துள்ளன. நீங்களும் மற்றவர்களும் உங்கள் சமூகத்தின் மதப் பாரம்பரியங்களைக் கைவிட்டுள்ளதால், உங்கள் நண்பர்களில் சிலர் உங்கள்மீது கசப்புணர்வு கொண்டவர்கள் ஆகியுள்ளனர். உறவினர்களும் அயலகத்தவர்களும் உங்களை ஒரு மதி யீனர் என்று அழைக்கின்றனர்; நீங்கள் சேவிக்கும் தேவனைப் பற்றி நகர அலுவலர்கள் உங்களைக் கேள்விக் கேட்கின்றனர். உங்கள் சக கிறிஸ்தவர்களில் சிலர், கிறிஸ்துவைத் துறந்துவிட்டு, விசுவாசம் உள்ளவர்களின் வாழ்வைப் பரிதவிப்பிற்கு உள்ளாக்குவது காண்பதற்கு வேதனை நிறைந்ததாக உள்ளது
இந்த உலகத்தில் கிறிஸ்தவர்கள் ஊக்குவிக்கப்படுதலுக்குப் பெரும் விருப்பம் கொண்டுள்ளனர்; 1 பேதுரு போன்ற நிருபம் ஆவிக்குரிய வகையிலான வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றிற்கு இடையில் வேறுபாட்டை அர்த்தப்படுத்த முடிந்தது. பேதுருவின் செய்தி எளிமையாக உள்ளது நீங்களும் உங்கள் சக கிறிஸ்தவர்களும் வைராக்கியத்தில் இளைப்படைந்து விடக்கூடாது. "நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த
புத்தியுள்ளவர்களாயிருந்து” என்று நிருபம் கூறுகிறது (1:13), தேவன் தமது மக்களிடத்தில் இருந்து பரிசுத்தத்தைக் காட்டிலும் குறைவற்றதை விரும்புகிறார் மற்றும் எதிர்பார்க்கிறார். இதற்குப் பேதுரு 1:16ல் லேவியராகமத்தைச் சுட்டிக்காண்பித்தல் மூலம் மறுவலிவூட்டுகிறார்: “நான் பரிசுத்தர்; ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” (லேவியராகமம் 11:44; 19:2; 20:7).
பரிசுத்த தன்மை! நேர்மையாகக் கூறுவதென்றால் இது, இந்தக் கிறிஸ்தவர்கள்
தங்களுடன் தொடர்புபடுத்தக் கடினமான வார்த்தையாக உள்ளது. அவர்கள்
எவ்வாறு பரிசுத்தமாயிருக்க வேண்டி உள்ளது? இந்தக் கேள்விக்குப் பேதுருவின்
பதில், அவரது வாசகர்களின் வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கும் மூன்று
அனுபவங்களைக் கவனத்தில் ஈர்ப்பதாக உள்ளது: கீழ்ப்படிதல், மீட்பு மற்றும்
மறுபடியும் ஜெநிப்பிக்கப்படுதல்.
பரிசுத்த பிள்ளைகளைப் போலக் கீழ்ப்படிந்திருத்தல் (1:13-17)
நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு துன்புறுதலும் கிறிஸ்தவமும் உண்மையில் உள்ளதைக் காட்டிலும் கோட்பாட்டளவில் மிக அதிகமாக உறவுபடுத்தப்பட்டுள்ளன. இது பேதுரு எழுதிய இந்த நிருபத்தின் முதல் வாசகர்களுக்கு வேறுபட்டதாக இருந்தது. ஒரு சகோதரர், நகரின் மையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, அவரது பின்புறத்தில் இருந்து அவரது உடை உரியப்பட்டு, ஒரு தூண்மீது அவர் வளைத்துக் கட்டப்பட்டு அடிக்கப்படும் போது, துன்புறுதல் என்பது உண்மை நிலையாக இருந்தது ஒரு சகோதரி, தனது பெற்றோர்களால் தவிர்க்கப்படுவதாக, தனது குடும்ப உறுப்பினர்கள் தன்னுடன் பேசாதிருப்பதாக, தனது பிள்ளைகளுக்கு நண்பர்கள் யாரும் இல்லாதிருப்பதாகக் கூறிய போது, துன்புறுதலே வாழ்வாக இருந்தது பேதுரு எழுதிய இந்த நிருபத்தின் முதல் வாசகர்கள் தங்கள் காலத்தைப் பின்னோக்கித் திரும்பிப்பார்த்து கடந்த காலத்தில் சகித்திருந்த கிறிஸ்தவர்களின் துன்பத்தைக் கண்டு தங்கள் தலைகளைக் குலுக்கக் கூடாதிருந்தது. அவர்கள் தங்கள் முதுகுகளின் மீதிருந்த தழும்புகளை மாத்திரம் காண்பிக்க முடிந்தது
தழும்புகள் மற்றும் வேதனை ஆகியவற்றிற்குப் பேதுரு எவ்வாறு பதில் செயல் செய்தார்? கிறிஸ்தவர்கள் தேவனிடத்தில் கீழ்ப்படிதலாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார் (1:14), அவர்கள் புதுப்பிக்கப்பட்ட வைராக்கியத்துடன் தங்கள் வாழ்வில் இருந்து பாவத்தை வெளியேற்றி முத்திரையிட்டு பரிசுத்தத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார். அக்கினி பொன்னைப் புடமிடுவது போல், துன்புறுதல் அவர்களைச் சுத்தி கரித்துப் புடமிடும் என்று அவர் கூறினார் (1:7). 1 பேதுரு நிருபத்தில் நாம் உணர்விழந்த நிலை எதையும் எதிர்கொள்வதில்லை. பேதுரு, "விரோதியானவன் ஒரு சண்டையை விரும்பினால், அவனுக்கு நாம் அதைக் கொடுப்போம் பரிசுத்தத்தைக் கொண்டு நாம் துன்மார்க்கத்துடன் போரிடுவோம்" என்று கூறுவதாகக் காணப்பட்டார்
பேதுரு கீழ்ப்படிதல் மற்றும் பரிசுத்தம் ஆகியவற்றை அவற்றுக்கு எதிரானவற்றிற்கு அடுத்ததாக வைத்தது மிக அரிதாகவே தற்செயலானதாக இருக்க முடியும் (1:14, 15). பரிசுத்த தன்மை என்பது மனதின் ஒரு நிலையல்ல அது வாழ்க்கையின் ஒரு வழியாகவே இருக்கிறது. பரிசுத்தத்திற்கு, குறைந்தது இரு விஷயங்களாவது தேவைப்படுகிறது. முதலாவது, அதற்குத் தாழ்மை தேவைப்படுகிறது. நம்மை நாமே இயக்கிக் கொள்வதற்கு ஆதாரவளங்களோ அல்லது ஞானமோ நம்மிடத்தில் இல்லை என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். இரண்டாவது, அது (பரிசுத்தம்) நம்பிக்கை வைத்தல் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. நாம் அச்சமின்றி நம்மையே இன்னொருவரின் வழிகாட்டுதலுக்கு ஒப்புக்கொடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். "... கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து” (1:14) என்று பேதுரு கூறுகையில், அவர் ஒரு பிள்ளையின் உருவகத்தை நினைவூட்டியதில் வியப்பெதுவும் இல்லை.
துரதிர்ஷ்ட வசமாகச், சில கிறிஸ்தவர்கள் சீஷத்துவம் என்பது, நமது பரிசுத்தத்திற்குப் பொறுப்பெடுத்துக் கொண்டுள்ள இன்னொருவருக்கு, நாம் கேள்வியெதுவும் கேட்காமல் நம்மையே இணங்கச் செய்தல் என்று அர்த்த மாகிறதென்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். பேதுரு கட்டளை இட்ட, பிள்ளையிடம் உள்ளது போன்ற விசுவாசம், தேவனுடன் கிறிஸ்தவரின் உறவில் தாழ்மை மற்றும் நம்பிக்கை வைத்தல் ஆகியவற்றைக் கேட்டுக்கொள்கிறது. நமது வாழ்வை வழிநடத்துவதில் தேவனுடைய உரிமைகளை வேரொரு நபர் எடுத்துக்கொள்ள அனுமதித்தல் என்பது விக்கிரகாராதனையுடன் விளையாடுவதாக உள்ளது. அது பரிசுத்த தன்மையுடன் இருப்பதற்கான போராட்டத்தை விட்டுவிடுதலாக உள்ளது. நம்பிக்கை வைத்தல், தாழ்மை மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவை செயலற்ற தன்மைக்கு எதிரானவைகளாக உள்ளன. கிறிஸ்துவின் சீஷர் தேவனுடைய சித்தத்தைத் தேடிப்பிடித்து அதன்படி வாழ்கிறார்
நற்தன்மையுடன் இருந்த இந்த கிறிஸ்தவர்களின் நிகழ்கால வாழ்வானது அவர்கள் அறிந்திருந்த பழைய வாழ்வின் குணங்களுடன் மிகவும் நேரெதிரானதாக இருந்தது. அவர்களின் மேன்மையான தற்போதைய வாழ்வு சுய சாட்சி உடையதாக இருந்தது. அதனால் தான் பேதுருவின் வாசகர்கள், தங்களை இந்த உலகம் ஏளனம் செய்து, விடாது துரத்தியது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதிருந்தனர். அதைத் தேவன் ஏன் அனுமதித்தார்? அவர்கள் ஏன் துன்புற வேண்டியிருந்தது? இந்தக் கேள்விகள் மிகப்பழையனவாக இருக்கின்றன. அவசர மாகப் பிறந்த பெரும் ஏக்கத்தில், யோபு"சர்வ வல்லவர் நியாயத்தீர்ப்புக்கென்று காலங்களை ஏன் நியமிக்கவில்லை? அவரை அறிந்தவர்கள் அந்த நாட்களுக்காக ஏன் வீணாக எதிர்நோக்க வேண்டியதிருக்கிறது? என்று கேட்டார் (யோபு 24:1 NIV). துன்மார்க்கரின் வாழ்வை சங்கீதக்காரர் கண்ணோக்கியபின்பு, அவர் “என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று என்று அறிக்கையிட்டார் (சங்கீதம் 73:2, 3; NIV)
துன்புறுதல் பற்றிய பேதுருவின் புரிந்து கொள்ளுதல், யோபுவின் நண்பர்களுடைய புரிந்து கொள்ளுதலுக்கு ஒப்பானதாக இருக்கிறது. எலிப்பாஸ் (யோபு 5:17) மற்றும் எலிகூ (யோபு 33:19) ஆகியோர், துன்புறுதலானது தேவனு டைய ஊழியக்காரர்களைப் பரிசுத்தமாக்கி அவர்களுக்குச் சகிப்புத் தன்மையை அளிப்பதற்கானதாக இருந்தது என்று வாதிட்டிருந்தனர். அக்கினியானது பொன்னைப் புடமிடுவது போல, துன்புறுதலானது கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைப் புடமிடுகிறது என்ற பேதுருவின் கருத்து, இதைப்போன்ற பதிலாக உள்ளது. எல்லா உபத்திரவமுமே தேவனிடத்தில் இருந்து வரும் சிட்சித்தலாக
இருப்பதில்லை, ஆயினும் அது கிறிஸ்தவர்களுக்குப் பயன்நிறைந்ததாக இருக்கலாம். துன்புறுதலுக்குப் பேதுருவின் பதிலானது, தேவன் பட்சபாத மற்ற வகையில் நியாயந் தீர்ப்பார் என்பதற்கான நிறைவான நினைவூட்டுதலாக உள்ளது (1:17), இந்த இடத்தில் அவரது பதில் சங்கீதம் 73க்கு இணையானதாக உள்ளது. சங்கீதக்காரர், துன்மார்க்கரின் வளமை தற்காலிகமானது என்று முடிவுசெய்தார். செயல்விளைவில் பேதுருவும் இதையே செய்தார்
தேவபக்தியுள்ளவர்கள் தங்கள் பலனைப் பெற்றுக்கொள்வார்கள், மற்றும் துன்மார்க்கர்கள் கடைசி நாளில் எல்லாத் தவறுகளும் நேராக்கப்படும்போது தேவனுடைய கோபத்தை ருசிபார்ப்பார்கள். நிகழ்காலத்தில், பரிசுத்த மாயிருக்க துன்புறுதல் பற்றிய விஷயத்தைத் தீர்மானித்தல் என்பது அவசிய மற்றதாக உள்ளது. "இந்த பூமியில் நீங்கள் பரதேசிகளாக இருக்கிறீர்கள்” என்று பேதுரு தமது வாசகர்களுக்குக் கூறினார். தாழ்மை, நம்பிக்கை வைத்தல் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவை யாவும் “இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் மற்றும் “பயத்துடனே” என்ற வார்த்தைகளில் காணப்படுகின்றன. செயல் விளைவில் பேதுரு, "வாழ்வின் சிக்கலான விஷயங்கள் எல்லாவற்றிற்கும் நீங்கள் பதில்களைக் கொண்டிராதிருக்கலாம், ஆனால் நீங்கள் பின்வரும் பதிலைக் கொண்டுள்ளீர்கள்: சிருஷ்டிப்பின் தேவன் உங்களை அறிகிறார், உங்கள் மீது அன்புகூருகிறார் மற்றும் உங்களை மீட்டு இருக்கிறார்
கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்படுதல் (1:18-21)
1:14 மற்றும் 1:18 ஆகிய இரு வசனங்களிலும் பேதுரு, தமது வாசகர்களுக்கு அவர்கள் வாழ்வின் முந்திய வழிகளைப் பற்றிக் குறிப்பிட்டார். 14ம் வசனம் அவர்களின் முந்திய விருப்பங்களினுடைய அறியாமையைப் பற்றிப் பேசிற்று மற்றும் 18ம் வசனம் அவர்கள் தங்கள் முன்னோர்களிடமிருந்து பாரம்பரிய மாகப் பெற்றிருந்த வீணான வாழ்வு நடத்தையைப் பற்றிப் பேசியது. தேவனின்றி மக்களின் வாழ்வு அறியாமை மற்றும் இலக்கில்லாத வகை ஆகியவற்றிற்குச் சாய்கிறது, ஒருக்காலும் ஒழிந்து போகாத பசிகளை அன்றாடம் தீர்க்கும் ஒரு வெறுமையான வகையான நாளைக் கழிக்க அது சாய்கிறது.
நமது தற்கால உலகத்தினால் கற்பனை செய்யப்படும், புத்திசாலித்தன மான, நவீனமான மற்றும் தைரியமானவையாக உள்ள பல விஷயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்வை நசுக்கி அதில் இருந்து சந்தோஷத்தை எடுத்துப் போட்டுள்ளவற்றின் வெறும் விரிவாக்கங்களாகவே உள்ளன. சிந்தை இன்றிப் பெருவிருப்பங்களைப் பின்பற்றுதல், அடிமைப்படுத்தி அழிக்கிறது. பிற்பாடு பேதுரு, கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் செய்கிறவர்களைப் பற்றிப் பின்வருமாறு எழுதினார்: "எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே” (2 பேதுரு 2:19; NIV)
இந்தக் கிறிஸ்தவர்கள் அறிந்திருந்த அடிமைப்படுத்தும், சிறுமைப்படுத்தும் முந்திய வாழ்விற்கும் கிறிஸ்துவுக்குள் இவர்கள் மகிழ்வுடன் அனுபவிக்கும் சுயாதீனத்திற்கும் இடையில் ஒரு கூர்மையான வேறுபாட்டைப் பேதுரு வரைவளவில் காண்பித்தார். அவர்கள் மீட்கப்பட்டு இருந்ததைப்
பேதுரு அவர்களுக்கு நினைவூட்டினார். "மீட்கப்படுதல்” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையானது, மீட்புத்தொகை செலுத்தப்படுதல் என்பதற்குக் கிரேக்க நாட்டின் உலகப்பிரகாரமான எழுத்தாளர்கள் பயன்படுத் திய வார்த்தையாக இருந்தது. செல்வமிக்க அல்லது அதிகாரம் நிறைந்த ஒரு மனிதர், கடற் கொள்ளையர்களின் குழுவிற்கோ அல்லது வழிப்பறித் திருடர்களின் கூட்டத்திற்கோ, ஒரு பெரிய தொகையைக் கொண்டு வரலாம். ரோம வரலாற்றாளரான சுயூட்டோனியஸ் என்பவர், கி.மு. 74ல் ஜூலியஸ் சீஸரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்துரைத்தார் இளைஞனாயிருந்த சீஸர், சொல்லாடல் கலையைக் கற்பதற்காக, ஏஜியன் கடலில் உள்ள ரோட்ஸ் என்ற தீவுக்குச் செல்லும் வழியில் இருந்தார். அவரது கப்பல் கடற்கொள்ளையர்களின் கைகளில் விழுந்தபோது, சீஸர் தம்மை மீட்கும் பொருளாக ஐம்பது தாலந்து தங்கம் வேண்டி மிலேத்து நகருக்கு ஆள் அனுப்பினார். மிலேத்து நகரில் இருந்தவர்கள் அந்தப் பெருந்தொகையைச் செலுத்தினர், பின்பு கடற்கொள்ளையர்கள் சீஸரை விடுவித்தனர்.
வெள்ளியும் பொன்னும், செல்வந்தர்கள் மற்றும் அதிகாரம் நிறைந்தவர்கள் ஆகியோரை மீட்கும் பொருளாக இருந்தது, ஆனால் பேதுரு, தமது வாசகர்களின் மாம்சப்பிரகாரமான சைகளின் அடிமைத் தளையிலிருந்து அவர்களை மீட்கச் செலுத்தப்பட்ட பொருள் மிகவும் விலையேறப்பெற்றது என்று அவர்களுக்கு நினைவூட்டினார் - அது தேவகுமாரனுடைய இரத்தமாகும் (1:18, 19). இதைப் பவுல் பின்வருமாறு சொற்றொடராக்கினார்: "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2 கொரிந்தியர் 5:21).
பேதுரு கிறிஸ்துவைக் குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி என்று குறிப்பிட்டார் (1:19), வெளிப்படுத்தின விசேஷம் 5:8ல் “ஆட்டுக்குட்டி" என்ற இதே வார்த்தை கிறிஸ்துவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் கிரேக்க மொழியில் இவ்வார்த்தை சற்றே மாற்றப்பட்டுள்ளது, அது "சிறு ஆட்டுக்குட்டி என்று அர்த்தப்படுகிறது. புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் கிறிஸ்துவைக் குறிப்பிடும்போது, மிகவும் அன்பார்ந்த சொற்றொடர்களைப் பயன்படுத்தினர் நடபடிகள் புத்தகத்தில் பலமுறைகள் (3:13, 26; 4:27, 30) அவர் “ஊழியர்” என்று அழைக்கப்பட்டுள்ளார் (KJV வேதாகமம் நடபடிகள் 3:13, 26ல் “குமாரன்" என்ற வார்த்தையைக் கொண்டுள்ளது மற்றும் 4:27, 30ல் அது இவ்வார்த்தையை பிள்ளை” என்று மொழிபெயர்த்துள்ளது). முதல் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் இரண்டாம் நூற்றண்டின் முற்பகுதி ஆகிய காலகட்டங்களில் இருந்த கிறிஸ்தவர்கள், கர்த்தரைப் பற்றி எழுதியபோது, அவர்கள் அவரை “பிள்ளை என்று அடிக்கடி அழைத்தனர். “ஆட்டுக்குட்டி” மற்றும் "பிள்ளை” என்பது போன்ற வார்த்தைகள், கிறிஸ்துவை விலைமதிப்பற்றவர் மற்றும் குற்றமற்றவர் என்று நினைக்கும்படி நம்மைக் கட்டாயப்படுத்துகின்றன.
பவுல், கிறிஸ்துவை நமது பஸ்கா என்று குறிப்பிட்டார் (1 கொரிந் தியர் 5:7), கிறிஸ்துவுக்கும் பஸ்கா பலிக்கும் உள்ள அதே தொடர்பு, அவரது எலும்புகளில் ஒன்றும் முறிபடவில்லை என்று யோவான் தமது சுவிசேஷத்தின் 19:36ல் எழுதும் போது, அங்கு காணப்படுகிறது. 1:18-21ல் பஸ்கா பற்றிய வெளிப்படையான குறிப்பு எதுவும் இல்லாதிருக்கையில், "குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி” என்ற பேதுருவின் குறிப்பு, நம்மை இயல்பாகவே, யாத்திராகமம்
12ல் ஆட்டுக்குட்டி அடிக்கப்படுதல் மற்றும் ஆட்டுக்குட்டியின் இரத்தம் தெளிக்கப்பட்ட வீடுகளின்மீது தேவன் கடந்து செல்லுதல் ஆகியவற்றிற்குப் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. ஆட்டுக்குட்டியின் இரத்தம், பாவியை மீட்டுள்ளது, அவரை முழுமையாக்கி, சாத்தான் என்ற அழிப்பவரின் வல்லமையில் இருந்து அவரை (பாவியை] விடுவித்துள்ளது.
கிறிஸ்துவில் தேவனுடைய மாபெரும் மீட்புச் செயலானது உலகத்தோற்றத்தில் இருந்தே திட்டமிடப்பட்டு இருந்தது, ஆனால் கடைசிநாட்களாகிய, முடிவுக்காலமான இப்போது அது முழுமையாக்கப்பட்டது (1:20). பழைய ஏற்பாடு முழுவதும் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றத்திற்கான முன்னெதிர்பார்ப்பின் ஆவியொன்றைக் கொண்டுள்ளது தாவீதின் சந்ததியும் கிளையுமானவர், அரியணையில் மீண்டும் அமருவார், தேவன் தமது மக்கள்மீது ஆட்சி செலுத்துவார். மனிதர்களின் இருதயங்களில் ஒரு புதிய உடன்படிக்கை எழுதப்படும் (எரேமியா 31:33). புலியும் வெள்ளாட்டுக்குட்டியும் ஒன்றாகப் படுத்துப் புரளும் (ஏசாயா 11:6). தேவனுடைய வாக்குத்தத்தங்கள் யாவும் கடைசிக் காலங்களில் அவர்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன என்று பேதுரு தமது வாசகர்களுக்குக் கூறினார். அவர்கள் எல்லாவற்றிற்கும் சுதந்தரவாளிகளாக இருப்பார்கள் என்று அவர்களுக்கு அவர் உறுதியளித்தார். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலமாகக் கிறிஸ்தவர்களுக்குத் தரப்பட்டுள்ள விசுவாசமும் நம்பிக்கையும் இயல்பாகவே பரிசுத்தத்தை உண்டாக்குகிறது
அழிவில்லாத வித்தினாலே பிறத்தல் (1:22-25)
ஞானஸ்நானம்” என்ற வார்த்தை 1 பேதுரு நிருபத்தில் ஒரே ஒருமுறை (3:21) மட்டுமே உள்ளது என்றாலும், வேதாகமத்தைக் கவனமாகப் படிக்கும் மாணவர்கள், ஞானஸ்நானம் என்பதே இந்த நிருபத்தில் மேலாதிக்கம் பெற்ற ஆய்வுக்கருத்தாக உள்ளது என்பதை நீண்டகாலமாக உணர்ந்து அறிந்து இருக்கின்றனர். இந்த நிருபமானது, புதிதாக மனமாறிய ஒருவர் ஞானஸ்நானம் பெறுகையில் தொடக்க கால சபை நடத்துனர்கள் கூறிய வார்த்தைகளின் தழுவலாக உள்ளது என்ற கருத்தைக் கொண்டிருக்கும் அளவுக்குத் தொலைவில் செல்கின்றனர். ஒருவர் ஞானஸ்நானம் பெற்றபோது, அவர் புதிதாகப் பிறந்தார். ஞானஸ்நானம் பெற்று எழுந்து வரும் கிறிஸ்தவர் “புதிய ஜீவனுள்ளவராக" நடந்து கொள்ள வேண்டியவராக இருக்கிறார் என்று பவுல் கூறியபோது (ரோமர் 6:4), அவர் இந்த பேச்சுருவத்தை இன்னும் சற்றுத் தூரம் எடுத்துச் சென்றார். பேதுரு (1:3ல் செய்திருந்தது போலவே) “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் னுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே” (1:23) என்ற வார்த்தைகளில் கிறிஸ்தவ ஞானஸ்நானத்தைக் குறிப்பிட்டார் என்பதில் சந்தேகம் இல்லை
பேதுரு "நீங்கள்.. சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக் களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால் ..." (1:22) என்று கூறிய போது, கிறிஸ்தவர்கள் தங்கள் தகுதியினால் இரட்சிப்பை ஈட்டுகின்றனர் என்று கருத்துத் தெரிவிக்க நோக்கம் கொண்டிருக்கவில்லை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்வந்த முதல் பெந்தெகொஸ்தே நாளன்று, பேதுரு "மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை
இரட்சித்துக்கொள்ளுங்கள்!" என்று புத்திகூறியிருந்தார் (நடபடிகள் 2:40). தேவனுடைய கிருபையால் மன்னிப்பும் நித்தியஜீவனும் வழங்கப்பட்டுள்ளது இது, கேள்விப்படும் நபர், அளிக்கப்படும் கொடையை நெருங்கி அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருத்துரைத்து, கிருபையின் உபதேசத்தை சமரசம் செய்வதில்லை. இதையே, பேதுரு அவர்களுக்கு “உங்கள் ஆத்துமாக் களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால்” என்று கூறிய போது அர்த்தப்படுத்தினார். அவர்கள் நம்பிக்கை மற்றும் கிருபையின் செய்தியை விசுவாசித்திருந்தனர் மற்றும் கர்த்தர் கட்டளையிட்டவற்றைச் செய்திருந்தனர்
பரிசுத்தம் என்பது புதிய பிறப்பின் சிந்தனையில் இருந்து ஒருக்காலும் தொலைவில் இருப்பது இல்லை. விதையானது அழிவற்றதாக உள்ளது, மற்றும் விசுவாசி சுத்திகரிக்கப் பட்டிருக்கிறார், பரிசுத்தமாக வாழவேண்டும் என்ற வேண்டுகோளின் மூலம் பேதுரு எதை அர்த்தப்படுத்தினார் என்று ஆசியா மைனர் பகுதியில் வாழ்ந்திருந்த மக்கள் புரிந்துகொண்டனரா? அவர்கள் தங்கள் உலகத்தின் மதிப்பீடுகள் மற்றும் நடக்கைகள் ஆகியவற்றிற்கு அறைகூவல் விடக்கூடிய ஏவுதல் மற்றும் தைரியம் ஆகியவற்றைக் கண்டறிந்தனரா? நாம் அவற்றைக் கண்டறிகிறோமா? ராக் இசை அல்லது நாட்டுப்புற இசை அல்லது மேற்கத்திய இசைப் பாடல்கள் இசைக்கப்படுவதைக் கவனித்துக் கேட்டல் என்பது ஒரு கல்வித்துவ அனுபவமாக உள்ளது. உடனடி நிறைவு என்பது நேரத்தின் அழைப்பாக உள்ளது. ஏதொன்றிற்கும் காத்திருக்க வேண்டாம் என்று நமக்குக் கூறப்பட்டுள்ளது. பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், உடனடி மனநிறைவிற்கான அழைப்பை மறுவலிவூட்டுகின்றன. பல இலட்சக்கணக்கான மக்கள், எது நல்லதென்று உணர்கின்றனரோ அதை இப்போதே செய்தல் என்பதைக் காட்டிலும் உயர்வான அழைப்பு எதையும் கொண்டிராது வாழ்கின்றனர்
கிறிஸ்தவர்கள் - பரிசுத்தமாக இருக்க வேண்டிய கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட உலகத்தில் வாழ்கின்றனர். பேதுருவின் வாசகர்களுக்கு, கிறிஸ்தவர்கள் என்ற வகையில் அவர்கள் அறிந்திருந்த பரிசுத்தமான வாழ்விற்கும், அவர்களின் அவிசுவாசத்தின் பழைய ஒழுக்கவீனமான வாழ்விற்கும் இடையிலான எல்லைக்கோடு மங்கலாக இருக்கவில்லை. ஒருவேளை நமது உலகம் மாறுபட்டு இருக்கலாம். பரிசுத்தம் மற்றும் பரிசுத்தமின்மை ஆகியவற்றிற்கு இடையிலான கோடு அடிக்கடி மங்கலாகி விடுகிறது. சிலவேளைகளில் கிறிஸ்தவர்கள் இந்த எல்லைக்கோடு மங்கலாவதற்குப் பங்களிக்கின்றனர். உலகம் அழைக்கிறபோது சிலர், "எல்லா வேடிக்கையில் இருந்தும் நம்மை நாம் நிச்சயமாகத் துண்டித்துக் கொள்ளவேண்டியதில்லை, அல்லவா? பரிசுத்தத்தின் இவ்விஷயத்தை நாம் மிகவும் அதிகமாகக் கருதாது இருப்போமாக” என்று கூறுகின்றனர். சில கிறிஸ்தவர்கள், “வெறி” என்ற மிகவும் அஞ்சத்தக்க நவீன அடைமொழியை உலகம் தங்கள் மீது வைத்துவிடுமோ என்று அஞ்சுவதாகக் காணப்படுகிறது அவர்கள் அரசரின் பிள்ளையாக இருத்தல் பற்றித் தீவிரமாக இருப்பதாக யாரேனும் நினைத்து விடுவார்களோ என்று பயப்படுவதாகக் காணப்படுகிறது
பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள், இன்றைய நாட்களின் இச்சை உணர்விற்கு நெடிய விருப்பம் கொண்டுள்ளதைக் காணுதல் என்பது கவலைக்குரியதாகவும் ஊக்கம் இழக்கச் செய்வதாகவும் உள்ளது. பழங்கால இஸ்ரவேல் மக்களுக்கு யோசுவாவின் வார்த்தைகள், நவீனகால சபைக்குப்
பொருத்தமானவையாக இருக்கலாம் "நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்” (யோசுவா 24:19) பரிசுத்தத்தின் அறைகூவலுக்கு நாம் தயாராக இருக்கிறோமா? அந்தக் கேள்விக்கு நாம் எவ்வாறு பதில் அளிப்போம் என்று நான் உறுதியாகக் கூற இயலாது மோசே இவ்வாறு பதில் அளித்தார்: "நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல ... நீ அந்த வார்த்தையின்படியே செய்யும் பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது” (உபாகமம் 30:11, 14)
பரிசுத்தமற்ற உலகத்தில் பரிசுத்தமாயிருப்பதற்காகப் போராடுகையில், கிறிஸ்தவர்கள் புத்துணர்வைத் தரவழைத்துக் கொள்ளக்கூடிய இரு ஆதாரமூலங்களைப் பேதுரு அளித்தார். முதலாவது, பரிசுத்தமானது பரிசுத்த நகரத்திற்குச் செல்லும் புனிதப்பயணத்தில் சகபயணிகளிடத்தில் சகோதர அன்பைக் கொடுத்துப் பெறுவதில் ஆதரவைக் காண்கிறது. பேதுரு, தமது வாசகர்களின் சுத்தமும் கீழ்ப்படிதலும் உண்மையான அன்பை விளைவித் திருந்தது என்று அறிந்தார் மற்றும் அவர் "சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்” என்று அவர்களுக்குப் புத்திகூறினார் (1:22)
இரண்டாவதாக, உலகத்தின் கனங்களும் பெருவிருப்பங்களும் தற்காலிக மானவையாக இருக்கையில், பரிசுத்தம் நித்தியமானதாக உள்ளது. "அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே” என்று பேதுரு கூறினார் (1:23), பின்பு அவர், ஏசாயா 40:6-8ல் இருந்து ஒரு அழகிய வசனப்பகுதியை மேற்கோள் காண்பித்தார், இது சங்கீதம் 103:15, 16ல் எதிரொலிக்கும் வேதவசனப் பகுதியாக உள்ளது “மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (1:24, 25).
முடிவுரை
1:13-25ல் பேதுரு தமது வாசகர்களை, பரிசுத்தமான மக்களாக இருக்கும்படி வேண்டுகோள் விடுவித்தார் மற்றும் பரிசுத்தத்திற்கான மூன்று பாதைகளையும் அவர்களுக்கு அளித்தார்: கீழ்ப்படிதல், மீட்பு மற்றும் மறு பிறப்பு. பேதுரு நிருபத்தின் முதல் வாசகர்கள் வாழ்ந்திருந்த உலகமானது சில வகைகளில் இன்றைய நாட்களின் உலகம் போன்றதாகவும் மற்றவற்றில் கணிசமான அளவு மாறுபட்டதாகவும் இருந்தது. ஆசியா மைனர் பகுதியில் முதல் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில், கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவரல்லா தவர்கள் ஆகியோருக்கிடையிலான எல்லைக்கோடு மிகக்கூர்மையாக வரையப்பட்டிருந்தது. கிறிஸ்தவர்கள், “கிறிஸ்துவே ஆண்டவராக இருக்கிறார்” என்று கூறியதால், அவர்கள் ஏளனம் செய்யப்பட்டு சிலவேளைகளில் உடல் ரீதி யாக துன்புறுத்தப்பட்டனர். கிறிஸ்தவர்களின் உடல்ரீதியான மற்றும் உணர்வுரீதி யான துன்பம் ஆகியவற்றில் இருந்து விடுதலை எதையும் பேதுரு அளிக்கவில்லை இதற்கு நேர்மாறாக அவர் விஷயங்கள் இன்னும் மோச மாகலாம் என்று கூறினார். எது வந்தாலும், அவர்கள் தேவனுடைய மக்களாக இருந்தனர் என்று அவர்கள் அறிய வேண்டும் என்று அவர் விரும்பினார் மற்றும் தேவனுடைய அந்த மக்கள் பரிசுத்தமானவர்களாக இருந்தனர்
இருபதாம் நூற்றாண்டின் உலகமானது, கர்த்தருடைய நாமத்தைத் தரித்துக் கொண்டுள்ளவர்களின் பகுதியில் பரிசுத்த வாழ்விற்கு இதைவிட மாபெரும் தேவை எதையும் கொண்டிருப்பதில்லை. உடன்பாடுகள் அல்லது சாக்குப்போக்குகள் ஆகியவற்றிற்கு இடமில்லை. ஒருசில நவீன கிறிஸ்தவர்கள் (குறைந்தபட்சம் அமெரிக்காவில்), கிறிஸ்தவர்களாக இருப்பதற்காக உடல்ரீதி யான எதிர்த்தாக்குதலுக்கு பயப்பட்டாக வேண்டும். இன்றைய நாட்களில் பாவம் என்பது தனது கரங்களில் நம்மைப் பற்றிக் கொண்டு, நாம் மனிதர்களாகத் தானே இருக்கிறோம், எனவே நாம் நம்மிடத்தில் இருந்து அதிகமானவற்றை எதிர் பார்க்க இயலாது என்று நமக்குக் கூறுகிறது
கிறிஸ்தவர்கள் ஒருவர் பிறருக்குத் தேவைப்படுகின்றனர். நாம் உண்மை யான இருதயத்தோடு ஒருவர் மற்றவர்மீது அன்புகூர வேண்டும். உண்மையில், கிறிஸ்து தமது மக்கள் ஒருவர் பிறரிடம் இருந்து ஆதரவையும் பெலனையும் கண்டறியக்கூடிய வகையில் அவர்களை ஒரு பரிசுத்தமான கட்டிட மாகவே வடிவமைத்திருக்கிறார். அவர் ஏற்படுத்தியுள்ள கட்டிடமானது நிலைத்திருக்கிறது, அது உலர்ந்து விழுகிற புல்லின் மகிமையைப் போன்றது அல்ல. 2ம் அதிகாரத்தில் பேதுரு, கைகளால் வடிவமைக்கப் பட்டிராததும் ஜீவனுள்ள கற்களால் ஏற்படுத்தப்பட்டதுமான கட்டிடத்தைப் பற்றி அதி கமாக எழுதினார். இப்போதைக்கு நாம், தங்களின் முந்திய அறியாமையைத் தள்ளிவிட்டு ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களால் இந்தப் பரிசுத்த ஆலயம் வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்வோமாக.
