11ம் அதிகாரம் (vision of wars - தொடர்ச்சி)

11ம் அதிகாரம் (vision of wars - தொடர்ச்சி)

தானி 10ம் அதிகாரத்தில், கண்ட தரிசனத்தில் துக்கித்துக் கொண்டிருந்த தானியேலுக்கு, தேவதூதன் அளிக்கிற விளக்கம். 11 மற்றும் 12ம் அதிகாரங்களில் உள்ளது. இந்த விளக்கங்களெல்லாம் சரித்திர ரீதியாக பல நடந்து முடிந்தன: இனி நடக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதுதான் அந்திகிறிஸ்துவின் ஆட்சி, இதையெல்லாம் பார்க்கும் போது. நம் வேதம் சரித்திர ரீதியாகவும் குறைவில்லாதிருப்பதால், இந்த வேதவார்த்தைகளை இறை வேதம் என்று நம்புகிறோம். ஆமென். பொதுவான தரிசன சரித்திர நிகழ்வுகள்

1. தானியேல் தற்போது அங்கம் வகிக்கும் மேதிய - பெர்சிய சாம்ராஜ்யத்தில் இன்னும் 4 ராஜாக்கள் எழும்புவார்கள்.

2. அதற்குப் பின்பு. பராக்கிரமமுள்ள கிரேக்க ராஜாவான

அலெக்சாண்டர் வருவான் (தானி.11:3).

3. இவனுக்குப்பின். இவனின் ஆதிக்கம் தானி.8:22ன் படி நான்காய்ப் பிரியும்.

4. இந்த நான்கில் உள்ள சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையே யுத்தங்கள் (தானி.11:5-19).

5. தானி. 8:9ல் சொல்லப்பட்ட சின்ன கொம்பான சீரிய தேசராஜா.

அந்தியோகஸ் எபிபேன்ஸின் அட்டகாசம் (தானி.11:20-35),

6. அதன்பின் அந்தி கிறிஸ்துவின் கொடூரங்கள் (தானி.11:36 முதல் 12:13 வரை). 6.

இவைகளில் தானி. 11:35வரை எல்லாமே சரித்திரப் பூர்வமாய் முடிந்து விட்டன. இனி நடக்க வேண்டியது அந்தி கிறிஸ்துவின் ஆட்சிதான். இந்த தரிசனமெல்லாம் முழுக்க முழுக்க இஸ்ரேலரைக் குறித்ததே என்று முன் பகுதியில் எழுதியிருக்கிறேன். இந்த 11ம் அதிகார தரிசன விளக்கத்தை. ஆவியானவரின் ஒத்தாசையோடு ஒன்றன்பின் ஒன்றாய் அறிந்து கொள்வோம்.

தரிசன. ஆழமான சரித்திர விளக்கம்:

1. பெர்சிய தேச 4 ராஜாக்கள் (a) 2ம் கோரேஸ் (கி.மு.550-530) - see எஸ்றா 1:1: 2 நாளா 36:22.23.

(b) கேம்பிசெஸ் (கி.மு.529-522).

(c) 1ம் தரியு இஸ்டாஸ்பெஸ் (கி.மு.521-486) - see எஸ்றா 5:6.

(d) Artra Xerxes (அர்தசஷ்டா) - கி.மு. 486-465. see எஸ்றா 4.7:7:11-26. இவன் ஐஸ்வரியத்தில் பலமுள்ளவன். கிரேக்க ராஜ்யத்துக்கு விரோதமாய் எழும்பினான்.

2. இதற்குப்பின் மேதிய பெர்சிய ராஜ்யத்தை. கிரேக்க

பிடித்து. மூன்றாம் உலக மகா சக்கரவர்த்தி யானான். இவன் கி.மு.323ல் மரித்தான் (see தானி.7:6; 8:5-8: 21.22)

3. அதற்குப்பின் அந்த ராஜ்யம், அவனது தளபதிகளால் நான்காய் பிரிக்கப்பட்டன.

(a) தளபதி ஹேசன்டர் - மெஸிடோனியா பகுதி.

(b) தளபதி லிசிமாகஸ் - தீரேஸ் மற்றும் ஆசியர் மைனர் பகுதி.

(c) தளபதி 1ம் படோலெமி சோடேர் - எகிப்து பகுதி.

(d) தளபதி செலூகஸ் முதலாம் நிகேடர் - சிரியா மற்றும் மீதியான வடகிழக்குப் பகுதி.

3. எகிப்து பகுதி ராஜாக்களை, தென்திசை ராஜா என்றும், சிரியா பகுதி ராஜாக்களை. வடதிசைராஜா என்றும் வேதம் சொல்கின்றது. இந்த இருவருக்குமிடையில்தான் அடிக்கடி யுத்தங்கள் வரும்,

4. எருசலேம். ஆதியில் தென்திசை ராஜாவான, எகிப்தின் கீழ்தான் இருந்தது.

5. எகிப்திய முதலாம் படோலெமி சோடருக்குப்பின் (கி.மு.323-285), 2ம் படோலெமி வந்து கி.மு. 285 - 246 வரை ஆண்டான். இவன்

முதலாம் படோலெமியைவிட பலவான்.

6. சிரிய செலூகஸ் முதலாம் நிகேடருக்குப் பின் (கி.மு.312-281).

அந்தியோகஸ் 1ம் சேடர் ஆண்டார் (கி.மு.281-261).

7. யுத்தக்காரர்களாய் இருந்த, இந்த இரு தென்திசை வடதிசை ராஜாக்களும், தென் திசை ராஜாவான 2ம் படோலெமியின் மகளின் திருமணத்தில் சம்பந்தியாய் ஒன்று சேர்ந்தனர் (தானி.11:6) (திருமண சரித்திரம் கூட. தரிசனத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் பாருங்கள்).

8. அதன்பின் தென் திசை ராஜாவுக்கு (எகிப்து புயபலம் இல்லாமல்

போனது. எனவே வடதிசை ராஜாவுக்கு (சிரியா) எல்லாவற்றையும்

ஒப்புக் கொடுத்தான்.

9. ஆனாலும் ஒரு ராஜா தென்திசையிலிருந்து எழும்பிரனன். அவன். சிரியாவிலிருந்த வெள்ளியும் பொன்னும், அவர்கள் தெய்வங்கள் எல்லாவற்றையும் கொள்ளையிட்டுப்போனான். 9.

10. இப்படியாய் இருராஜ்யம் போரிட்டுக் கொண்டிருந்தன.

11. ஒரு கட்டத்தில் எகிப்தின் வசமிருந்த எருசலேம். சிரியா வசம் போய்விட்டது.

12. வடதிசை ராஜாவுக்கு பெலனில்லாமல் போன காலக்கட்டத்தில். அவன் தென் திசை ராஜாவோடு ஒப்பந்தம் பண்ணி தன் மகள் கிளியோபட்றாவை கொடுத்தான். அவள் மூலமாய் தமக்கு சாதகங்கள் வருமென்று எண்ணினான். அவளோ தன் அப்பாவுக்கு சாதகமாக இல்லை (தானி.11:17).

இப்படிப்பட்ட கால கட்டத்தில்தான் (கி.மு.175-164) அந்தி கிறிஸ்து போல மூர்க்கநெறி உள்ள அந்தியோகஸ் 4ம் எபிபேன்ஸ் என்பவன் சிரியாவிலிருந்து எழும்பி. யூதர்களை மிகவும் உபத்திரவப்படுத்தினான் (தானி.11:21-35). தானி.11:25-28 வரை அவனது எருசலேமின் முதலாம் முற்றுகையை விவரிக்கிறது. தானி.11:31-35 வரை. அவன் எருசலேம் ஆலயத்தைப் பாழ்படுத்துவது போடப்பட்டுள்ளது. இந்த ராஜாதான் தேவாலய பலிபீடத்தில், பன்றியைப் பலியிட்டு தீட்டுப்படுத்தினான் என்று சரித்திரம் சொல்கின்றது. இது தள்ளுபடி ஆகமம். 1 மெக்காபே 1:44-50ல் சொல்லப்பட்டுள்ளது. இந்த அந்தியோகஸ் ராஜாவோடு யுத்தம் உபத்திரவம் - கிட்டத்தட்ட 4 வருடங்கள் நடந்தன. இதைத்தான் தானி.8:14ல் சொல்லப்பட்டுள்ளது. அதன் பின். பெர்சியாவில் இவன் மரித்துப்போனான். இவனுக்குப் பின்னும் சிரியாவிலும். எகிப்திலும் வந்த ராஜாக்கள் கி.மு.30ல் ரோமப் பேரரசால் பிடிபடும்வரை தொடர்ந்து ஆட்சியிலிருந்தார்கள். (ரோமப் பேரரசு கி.மு.63லேயே எருசலேமைப் பிடித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது). யூதர்களின் உபத்திரவம்பற்றி தள்ளுபடி ஆகமம். மெக்கபே 1. 2 புத்தகங்களில் விளக்கங்கள் உள்ளன. தானி.7ல் வரும் சின்னக் கொம்பு இவனில்லை என்றும்,தானி.8ல் வரும் சின்னகொம்புதான் இவன் என்றும் ஏற்கெனவே நாம் பார்த்தோம். இந்த இரு கொம்புகளுமே யூதர்களை உபத்திரவப்படுத்துவதில், பாழக்குகிற அருவருப்பாய் செயல்பட்டு, பரிசுத்த ஸ்தலத்தைப் பாழாக்குவதில் சமமானவர்களே!

இவனுக்குப் பிறகு தன்னிஷ்டப்படி செயல்படும் ராஜா ஒன்று எழும்பப் போவதாக தானி.11:36 லிருந்து சொல்லப்பட்டுள்ளது. தேவ கோபம் தீருமட்டும் அவன் ஆட்சி கைக்கூடும் என்பதால், இவன்தான். சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு வரப்போகும் உலகின் கடைசி ராஜாவான அந்தி கிறிஸ்து என்று உணரலாம் (see தானி.9:26; ஏசா.10:23, 25).

இந்த அந்திகிறிஸ்து பற்றிதரிசன விளக்கம்:

1. இவன் தேவாதி தேவனுக்கு விரோதமானவன் (தானி.11:36).

2. தன் பிதாக்களின் தேவர்களை (god of his fathers) மதிக்கமாட்டான். (தானி.11:37)

3. பிதாக்கள் மற்றும் ஸ்திரிகளின் சிநேகம் உள்ள மற்ற எந்த தேவர்களையும் மதிக்காதவன் (தானி.1:37ன் மூலபாஷை).

4. god of foot trusses - Roman Beast ஐ Honour பண்ணுவான் (See வெளி.13:11-18).

5. தானி.11:40-43ன் படி. இவன் வடதிசை சிரியாவிலிருந்து எழும்புவான். எனவே இவன் இஸ்ரேலிருந்து எழும்புகிறவனல்ல (See வெளி.13:1,2: 17:12-17).

6. இஸ்ரேலர் கட்டப்போகும் பரிசுத்த எருசலேம் ஆலயத்தில் சிங்காசனம் போடுவான் (தானி.11:45: 2 தெச.2:4).

7. இவனுக்கு இயேசுவின் 2ம் வருகையில் முடிவு உண்டு (தானி.7:11, 26.27: 9:27: 2 தெச.2:8: வெளி.19-21).

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.