தானியேல் 10ஆம் அதிகாரம் வேத ஆராய்ச்சி

தானியேல் 10ஆம் அதிகாரம் வேத ஆராய்ச்சி

இந்த அதிகாரத்திலும், இதற்கு பின்பு வரும் இரண்டு அதிகாரங்களிலும் ஒரு தரிசனமும், ஒரு தீர்க்கதரிசனமும் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு தானியேல் கண்ட தரிசனங்களில் அடையாளங்கள் இருந்தது (தானி 7,8 ஆகிய அதிகாரங்கள்). இந்த தரிசனமோ முழுவதுமாக வார்த்தையினால் விவரிக்கப்படுகிறது. கர்த்தர் தனக்கு கொடுத்த வார்த்தைகளை தானியேல் சபைக்கு அறிவிக்கவேண்டும்.

தானியேல் அனுதினமும் ஜெபம்பண்ணுகிறார். ஆனால் எப்போதாவதுதான் தரிசனங்களைக் காண்கிறார். இந்த அதிகாரத்தில் கர்த்தர் அவருக்கு வெளிப்படுத்தும் தீர்க்கதரிசனத்தின் முன்னுரை மாத்திரமே சொல்லப்பட்டிருக்கிறது. தானியேல் 11-ஆவது அதிகாரத்தில் இந்த தீர்க்கதரிசனத்தின் விவரமும் தானியேல் 12-ஆவது அதிகாரத்தில் இந்த தீர்க்கதரிசனத்தின் முடிவுரையும் சொல்லப்பட்டிருக்கிறது.

தானியேல் இந்த தரிசனத்தை காண்பதற்கு முன்பாக அவர் உபவாசம் செய்து, தன்னை வருத்துகிறார். கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறார் (தானி 10:1-3). தேவகுமாரன் தமது மகிமையில் தானியேலுக்கு தரிசனமாகிறார் (தானி 10:4-9).

இனிமேல் நடைபெறப்போகும் சம்பவங்கள் தானியேலுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இந்த செய்திகள் அவருக்கும், சபையாருக்கும் மிகவும் பிரயோஜனமாயிருக்கும். இந்த தரிசனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு கர்த்தர் தானியேலுக்கு உதவிசெய்கிறார் (தானி 10:10-21).

தானியேலின் துக்கம் தானி 10:1-9

தானி 10:1. பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக்காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டான்.

தானி 10:2. அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்றுவாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன்.

தானி 10:3. அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை.

தானி 10:4. முதலாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து,

தானி 10:5. என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன்.

தானி 10:6. அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்ன-ன் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.

தானி 10:7. தானியேலாகிய நான்மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷரோ அந்தத்தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளித்துக்கொண்டார்கள்.

தானி 10:8. நான் தனித்துவிடப்பட்டு அந்தப்பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.

தானி 10:9. அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன்.

பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே தானியேலுக்கு தரிசனம் உண்டாயிற்று. கோரேசு ராஜா பாபிலோன் ராஜ்யத்தின்மீது யுத்தம்பண்ணி, அந்த தேசத்தை தன் வசமாக்கிக்கொள்கிறார். இதன் பின்பு மூன்று வருஷங்களாயிற்று. தானியேலுக்கு கோரேஸ் ராஜாவோடு பழக்கம் உண்டாயிற்று.

தானியேலின் பெயர் இங்கு பெல்தெஷாத்சார் என்று எழுதப்பட்டிருக்கிறது. தானியேல் கண்ட தரிசனத்தின் பொதுவான விவரமும் இந்த வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. தானியேலுக்கு வெளியாக்கப்பட்ட காரியம் சத்தியமும், நீடிய யுத்தத்திற்கு அடுத்ததுமாயிருக்கிறது. இந்த தரிசனம் நிறைவேற அதிக காலமாகும். அந்தியோகசின் ஆட்சிக்காலத்தின் முடிவிலே இந்த தரிசனம் நிறைவேறும். இது சுமார் 300 வருஷங்களுக்கு பின்பு நடைபெறப்போகிற சம்பவம்.

இந்த உலகத்தின் முடிவிலே நடைபெறப்போகும் காரியங்களை கர்த்தர் தானியேலுக்கு வெளிப்படுத்துகிறார். இங்கு சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனம் முடிவு காலசம்பவத்திற்கு அடையாளமாயிருக்கிறது. மரித்தோரின் உயிர்தெழுதலைப்பற்றியும் இங்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும்.

தானியேல் இந்த தரிசனத்தைக் காண்பதற்கு முன்பாக அவர் தன்னைத்தானே ஒடுக்கி உபவாசம்பண்ணிக்கொண்டிருக்கிறார். அவர் ƒமூன்று வாரம் முழுவதும் துக்கித்துக்கொண்டிருக்கிறார். அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் தானியேல் ருசிகரமான அப்பத்தை புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் அவருடைய வாய்க்குள் போகவுமில்லை. தானியேல் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை (தானி 10:2,3).

தன்னுடைய சொந்த பாவங்களுக்காகவும், இஸ்ரவேல் வம்சத்தாரின் பாவங்களுக்காகவும், அவர்களுடைய வருத்தங்களுக்காகவும் தானியேல் மூன்று வாரம் முழுவதும் துக்கித்துக்கொண்டிருக்கிறார். கர்த்தரிடத்தில் உபவாசம்பண்ணி ஜெபம்பண்ணுகிறார்.

பாபிலோன் தேசத்திலுள்ள யூதர்கள் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பிப்போகலாம் என்று ராஜா ஆணை பிறப்பித்திருக்கிறார். ஆனால் யூதர்களில் ஒரு சிலர் மாத்திரமே தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பிப்போகிறார்கள். யூதர்களில் அநேகர் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பிப்போகாமல், பாபிலோன் தேசத்திலேயே தங்கிவிடுகிறார்கள். தானியேல் இதைப் பார்த்து மனங்கலங்குகிறார். மூன்று வாரம் முழுவதும் துக்கித்துக்கொண்டிருக்கிறார்.

இஸ்ரவேல் வம்சத்தாருக்கு விடுதலை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களோ விடுதலையை சுதந்தரித்துக்கொள்ள விரும்பவில்லை. தாங்கள் சிறைப்பட்டுக்கிடந்த பாபிலோன் தேசத்திலேயே தொடர்ந்து தங்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். தானியேல் இதை நினைத்து மிகவும் துக்கப்படுகிறார்.

பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்து யூதர்களில் சிலர் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பிப்போனார்கள். அவர்கள் அங்கே கர்த்தருடைய தேவாலயத்தை மறுபடியும் எடுப்பித்துக் கட்டுகிறார்கள். தேவாலயக்கட்டுமான வேலையிலே அநேக தடைகளும், பிரச்சனைகளும், பாடுகளும் உண்டாயிற்று. யூதர்களுக்கு சத்துருவாகயிருக்கிறவர்கள், தேவாலயத்தைக் கட்டுவதற்கு தடைபண்ணுகிறார்கள். தானியேல் இந்த தடைகளை நினைத்து, மனம் வேதனைப்பட்டு, மூன்று வாரம் முழுவதும் துக்கித்துக்கொண்டிருக்கிறார்.

""அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுவதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்டகாலமட்டும், அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்குக் கைக்கூ- கட்டினார்கள்'' (எஸ்றா 4:4,5).

கோரேசு ராஜாவின் ஆட்சிக்காலம் முடியும் வரையிலும் தானியேல் ருசிகரமான அப்பத்தைப் புசிக்கவில்லை. இறைச்சியும் திராட்சரசமும் அவருடைய வாய்க்குள் போகவில்லை. தானியேல் தன் சரீரத்திலே பரிமள தைலம் பூசிக்கொள்ளவுமில்லை.

தானியேல் தன் தரிசனத்திலே ஒரு புருஷனைக் காண்கிறார். அவர் மகிமையுள்ளவராகவும், பிரகாசமுள்ளவராகவும் இருக்கிறார். அவர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். கிறிஸ்துவானவரே நித்திய வார்த்தையாயிருக்கிறார். அந்தப் புருஷன் இதெக்கேல் என்னும் ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருக்கிறார்.

தானியேல் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் கர்த்தரைப்பற்றித் தியானித்துக்கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய கண்களை வானத்திற்கு ஏறெடுக்கிறார். அங்கே ஒரு புருஷரைக் காண்கிறார்.

""முதலாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து, என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன்'' (தானி 10:4,5) என்று தானியேல் சொல்லுகிறார்.

அந்தப் புருஷனுடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்ன-ன் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருக்கிறது (தானி 10:6).

தானியேல் மாத்திரமே இந்த தரிசனத்தைக் காண்கிறார். தானியேலோடு கூடயிருந்த மனுஷர் அந்தத் தரிசனத்தைக் காணவில்லை. அவர்கள் மிகவும் நடுநடுங்கி ஓடி தங்களை ஒளித்துக்கொள்கிறார்கள் (தானி 10:7).

அப்போஸ்தலர் பவுல் இயேசுகிறிஸ்துவைத் தரிசித்தார். அவரோடு கூட வந்தவர்கள் வெளிச்சத்தை மாத்திரம் பார்த்தார்கள், அவர்கள் இயேசுவைப் பார்க்கவில்லை.

""அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள்'' (அப் 9:7).

""என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை'' (அப் 22:9).

தானியேலோடு கூடயிருந்தவர்கள், தானியேல் கண்ட தரிசனத்தைக் காணவில்லை. ஆனால் தரிசனத்தின் பாதிப்பு அவர்களிடத்தில் உண்டாயிற்று. அவர்கள் மிகவும் நடுநடுங்குகிறார்கள். அவர்கள் தானியேலைவிட்டு ஓடி ஒளித்துக்கொள்கிறார்கள். ஒருவேளை அவர்கள் இதெக்கேல் ஆற்றங்கரையிலுள்ள நாணல் செடிகளுக்கு அருகாமையில் ஓடி ஒளிந்திருக்கலாம்.

தானியேல் மாத்திரமே அந்தத் தரிசனத்தைக் காண்கிறார். அவரோடு கூடயிருந்தவர்கள் ஓடி ஒளிந்துகொண்டதினால், தானியேல் மாத்திரம் இப்போது தனித்துவிடப்பட்டிருக்கிறார். தானியேல் மாத்திரமே அந்த பெரிய தரிசனத்தைக் காண்கிறார். அப்போது அவருடைய பெலனெல்லலாம் அவரை விட்டுப்போயிற்று. தானியேலின் உருவம் மாறி வாடிப்போயிற்று. அவர் திடனற்றுப்போகிறார். தானியேல் தன் ஆவியிலே உற்சாகமாயிருக்கிறார். அவருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் உண்டாயிற்று.

தானியேல் திடனற்றுப்போனாலும், அவருடைய பெலனெல்லாம் அவரை விட்டுப்போனாலும், அவர் இயேசுகிறிஸ்துவை தரிசிக்கிறார். தானியேல் தனித்து விடப்பட்டாலும், அவர் அந்தப் பெரிய தரிசனத்தைக் காண்கிறார்.

தானியேல் தன்னுடைய தரிசனத்தில் கண்ட அந்த மனுஷன், தானியேலோடு பேசுகிறார். தானியேல் அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்கிறார். அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை தானியேல் கேட்கும்போது, தானியேல் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவராய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடக்கிறார் (தானி 10:9).

இயேசுகிறிஸ்துவைப்பற்றிய தரிசனத்தினால் தானியேல் பெலனற்றுப் போகிறார். அவருடைய உருவம் மாறி வாடிப்போயிற்று. அவர் திடனற்றுப்போகிறார். இயேசுகிறிஸ்துவைப்பற்றிய தரிசனம் தானியேலுக்கு நடுக்கத்தையும், பயத்தையும், திகிலையும் உண்டாக்கிற்று. இயேசுகிறிஸ்துவினுடைய வார்த்தைகள் அவருடைய இருதயத்தை நிரப்புகிறது.

தானியேல் இயேசுகிறிஸ்துவினுடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்கும்போது, அவர் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவராய், தரையிலே முகங்குப்புற விழுந்து கிடக்கிறார் (தானி 10:9). தானியேல் முகங்குப்புற விழுந்துகிடக்கும்போது, அவருக்கு பரிசுத்தமான பாதுகாப்பும், இனிமையான நித்திரையும் உண்டாயிற்று. அவருடைய நடுக்கம் நின்றுபோயிற்று.

பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் என்பவன் தானி 5:31; தானி 6:1; தானி 9:1 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் மேதியனாகிய தரியு அல்ல. இவன் பெர்சியாவின் ராஜா. தரியு மேதிய-பெர்சிய தேசத்தில் இரண்டு வருஷங்களுக்கு ஆட்சி புரிந்தான். கோரேசு இவனுக்குப் பின்பு மேதிய-பெர்சிய தேசத்திற்கு ராஜாவானான். ஏசாயாவின் தீர்க்க தரிசனங்களில் கோரேசைப் பற்றி அதிகமாகக் கூறப்பட்டிருக்கிறது. பாபிலோனிலிருந்து இஸ்ரவேலை மீட்பது, எருசலேம் திரும்பக் கட்டப்படுவது, சிறையிருப்புக்குப் பின்பு யூதருடைய தேவாலயம் கட்டப்படுவது ஆகிய காரியங்களோடு தொடர்பு படுத்தி ஏசாயா கோரேசைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். (ஏசா 44:28-45:1) இவன் பிறப்பதற்கு 175 வருஷங்களுக்கு முன்பாகவே வேதாகமத்தில் இவனுடைய பெயர் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. யூதர்களை விடுவிப்பது, எருசலேமைத் திரும்பக் கட்டுவது ஆகியவை பற்றிய கோரேசுவின் ஆணையும், வேதாகமத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. (2நாளா. 36:22-23; எஸ்றா 1:1-8; எஸ்றா 3:7; எஸ்றா 4:3-5; எஸ்றா 5:13-17; எஸ்றா 6:3,14; ஏசா 44:28; ஏசா 45:1).

தானியேலுக்கு வெளியாக்கப்பட்ட இந்தத் தரிசனம் தானி 9 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் 70 வாரங்களின் தரிசனத்திற்கு 5 வருஷங்களுக்குப் பின்பு வெளியாக்கப்பட்டிருக்கிறது. (தானி 10:1=தானி 9:1).

மூன்றாம் வருஷத்திலே தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது. தானியேலுக்கு இந்தத் தரிசனம் வெளிப்பட்ட விதமும், இதனால் தானியேலுக்கு ஏற்பட்ட விளைவுகளும் தானி 10:2-12:13 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. தெய்வீக வெளிப்பாடுகளைப் பெற்றுக் கொள்கிறவர்கள் மீது தெய்வீக விளைவுகள் உண்டாகும். (தானி 2,4,5,7-12; ஏசா 6; வெளி 1; ஆதி 15).

தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட அந்தக்காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது. இந்தத் தரிசனம் உடனடியாக நிறைவேறாது. இது நிறைவேறுவதற்கு நீண்ட காலமாகும். (தானி 10:14,35) தானி 11:35-12:13 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் சம்பவங்கள் இனிமேல் நிறைவேறும். இந்தச் சம்பவங்களெல்லாம் நிறைவேறுவதற்கு முன்பாக நீடிய யுத்தங்கள் நடைபெறும்.

யுத்தங்களைப் பற்றிய தரிசனம்

1. காபிரியேலுக்கும், பெர்சிய ராஜ்யத்தின் அதிபதிக்கும் இடையே யுத்தம். பெர்சியாவின் அதிபதி சாத்தானின் அதிபதியாக இருக்கிறான். தானியேலுக்கு யுத்தங்களைப் பற்றிய இந்தத் தரிசனங்களை வெளிப்படுத்துவதற்காகக் காபிரியேல் வருகிறான். அவனை பெர்சிய ராஜ்யத்தின் அதிபதி தடைபண்ணுகிறான். (தானி 10:12-13,20)

2. பெர்சியருக்கும், கிரேக்கருக்கும் இடையில் நடைபெறும் யுத்தம். (தானி 10:20-21, 11:2-3; தானி 8:20-21)

3. மேதிய-பெர்சிய தேசத்தாருக்கும், பாபிலோனியருக்கும் இடையில் நடைபெறும் யுத்தம். (தானி 11:1; தானி 5:25-31)

4. மகா அலெக்ஸôண்டரின் சேனைத் தலைவர்கள் அவனோடு யுத்தம் செய்து, அவனுடைய ராஜ்யத்தைக் கைப்பற்றி, அதை 4 பிரிவாகப் பிரிக்கிறார்கள். (தானி 11:4; தானி 8:8,22).

5. சீரியருக்கும், எகிப்தியருக்கும் இடையில் நடைபெறும் முதலாவது யுத்தம். அலெக்ஸôண்டருடைய ராஜ்யம் 4 பகுதிகளாகப் பிரிக்கப்படும்போது எகிப்து அதில் இரண்டாவது பகுதியாக இருக்கும். (தானி 11:5)

6. சீரியருக்கும், எகிப்தியருக்கும் இடையில் நடைபெறும் இரண்டாவது யுத்தம். (தானி 11:7-9)

7. சீரியருக்கும், எகிப்தியருக்கும் இடையில் நடைபெறும் மூன்றாவது யுத்தம் (தானி 11:10-12)

8. சீரியருக்கும், எகிப்தியருக்கும் இடையில் நடைபெறும் நான்காவது யுத்தம் (தானி 11:13-16)

9. சீரியருக்கும், எகிப்தியருக்கும் இடையில் நடைபெறும் ஐந்தாவது யுத்தம் (தானி 11:17)

10. சீரியருக்கும், கிரேக்கருக்கும், ரோமருக்கும் இடையில் நடைபெறும் யுத்தம் (தானி 11:18-19)

11. சீரியருக்கும், இஸ்ரவேலருக்கும் இடையில் நடைபெறும் முதலாவது யுத்தம். (தானி 11:20)

12. சீரியருக்கும், இஸ்ரவேலருக்கும் இடையில் நடைபெறும் இரண்டாவது யுத்தம். (தானி 11:21-24)

13. சீரியருக்கும், எகிப்தியருக்கும் இடையில் நடைபெறும் ஆறாவது யுத்தம் (தானி 11:25-27)

14. சீரியருக்கும், இஸ்ரவேலருக்கும் இடையில் நடைபெறும் மூன்றாவது யுத்தம் (தானி 11:28)

15. சீரியருக்கும், எகிப்தியருக்கும் இடையில் நடைபெறும் ஏழாவது யுத்தம் (தானி 11:29-31)

16. சீரியருக்கும், இஸ்ரவேலருக்கும் இடையில் நடைபெறும் நான்காவது யுத்தம் (தானி 11:32-34)

17. சீரியருக்கும், தேவனுக்கும் இடையில் நடைபெறும் யுத்தம். (தானி 11:36-39)

18. சீரியருக்கும், எகிப்தியருக்கும் இடையில் நடைபெறும் எட்டாவது யுத்தம். (தானி 11:40-42)

19. சீரியருக்கும், இஸ்ரவேலருக்கும் இடையில் நடைபெறும் ஐந்தாவது யுத்தம் (தானி 11:41)

20. சீரியருக்கும், மற்ற தேசங்களுக்கும் இடையில் நடைபெறும் யுத்தம். (தானி 11:41)

21. லீபியரோடும், எத்தியோப்பியரோடும் சீரியரின் யுத்தம். (தானி 11:43)

22. சீரியருக்கும், அதற்குக் கீழுள்ள பத்து ராஜ்யங்களும் இடையில் நடைபெறும் யுத்தம். (தானி 11:44)

23. சீரியருக்கும், இஸ்ரவேலருக்கும் இடையில் நடைபெறும் ஆறாவது யுத்தம் (தானி 11:45; சக. 14:1-5,14)

24. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது கிறிஸ்துவிற்கும், சீரியாவிற்கும் இடையில் நடைபெறும் யுத்தம். (தானி 11:45; தானி 7:21-22, 25-27; தானி 8:23-25; தானி 9:27)

25. பரலோகத்தில் மிகாவேல், அவன் தூதர் ஆகியோருக்கும், சாத்தான், அவன் தூதர் ஆகியோருக்கும் இடையில் நடைபெறும் யுத்தம் (தானி 12:1; வெளி. 12:7-12)

""இதெக்கேல்'' இடத்தைப் பற்றி வேதாகமத்தில் இரண்டு இடங்களில் கூறப்பட்டிருக்கிறது. (தானி 10:4; ஆதி 14) இது டைகிரீஸ் ஆற்றங்கரையாக இருக்கலாம்.

மேசியாவைப் பற்றிய வர்ணனை

1. சணல் வஸ்திரந்தரித்திருக்கிறவர். (தானி 10:5; தானி 12:6-7; வெளி. 1:13; வெளி 19:8; யாத் 28:4-12).

2. தமது அரையில் ஊப்பாசின் தங்கக் கச்சையைக் கட்டிக் கொண்டிருக்கிறவர். (தானி 10:5; வெளி. 1:13).

3. அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போல இருக்கிறது. (தானி 10:6; வெளி. 4:3).

4. அவருடைய முகம் மின்ன-ன் பிரகாசத்தைப்போல இருக்கிறது. (தானி 10:6; வெளி. 1:16; வெளி. 10:1).

5. அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போல இருக்கிறது. (தானி 10:6; வெளி. 1:15; வெளி 19:12).

6. அவருடைய புயங்கள் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போல இருக்கிறது. (தானி 10:6; வெளி. 1:15; வெளி. 10:1).

7. அவருடைய கால்கள் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போல இருக்கிறது. (தானி 10:6; வெளி. 1:15; வெளி. 10:1).

8. அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போல இருக்கிறது. (தானி 10:6; வெளி. 1:15)

தானியேல் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டார் (தானி 10:9). ஒருவர் தரிசனம் காணும்போது அவரோடு இருக்கும் மற்றவர்கள் அந்தத் தரிசனத்தைக் காணாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. (அப் 9:7; அப் 22:9).

தானியேலோடு இருந்த மனுஷருக்கு தரிசனத்தினால் ஏற்பட்ட விளைவு

1. அவர்கள் மிகவும் நடுநடுங்கினார்கள்.

2. ஓடி ஒளித்துக்கொண்டார்கள்.

தரிசனத்தினால் தானியேலுக்கு ஏற்பட்ட விளைவு

1. தானியேலின் பெலனெல்லாம் போயிற்று. (தானி 10:8).

2. அவருடைய உருவம் மாறி வாடிப் போயிற்று. திடனற்றுப்போனார்.

3. அவர் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவராய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தார். (தானி 10:9).

4. ஒருவன் கை தானியேலைத்தொட்டு, அவர் ழுழங்கால்களும், அவர் உள்ளங் கைகளும் தரையை ஊன்றியிருக்க அவரைத் தூக்கி வைத்தது. (தானி 10:10).

5. தானியேல் நடுக்கத்தோடே எழுந்து நின்றார். (தானி 10:11).

6. அவருக்கு மிகுந்த பயம் உண்டாயிற்று. (தானி 10:12).

7. அவர் தலைகவிழ்ந்து, தரையை நோக்கினார். (தானி 10:15)

8. பேச்சற்றுப்போனார் (தானி 10:15).

9. மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் தானியேலின் உதடுகளைத் தொட்டான். (தானி 10:16-17).

10. தானியேல் மறுபடியும் பலப்படுத்தப்பட்டு தரிசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஆயத்தமானார். (தானி 10:18-12:13).

கடைசிநாட்களில் சம்பவிப்பது தானி 10:10-21

தானி 10:10. இதோ, ஒருவன் கை என்னைத்தொட்டு, என் ழுழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கிவைத்தது.

தானி 10:11. அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்.

தானி 10:12. அப்பொழுது அவன் என்னைநோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.

தானி 10:13. பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திரிந்தேன்.

தானி 10:14. இப்போதும் கடைசிநாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்.

தானி 10:15. அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்.

தானி 10:16. அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.

தானி 10:17. ஆகையால் என் ஆண்டவனுடைய அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில்பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன்.

தானி 10:18. அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி,

தானி 10:19. பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடன்கொண்டு அவனைநோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.

தானி 10:20. அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்குதேசத்தின் அதிபதி வருவான்.

தானி 10:21. சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை.

தானியேல் கொஞ்சம் கொஞ்சமாக பெலப்படுகிறார். முகங்குப்புற விழுந்து கிடக்கிறவர், கொஞ்சம் கொஞ்சமாக காலூன்றி நிற்கிறார். தானியேல் இயேசுகிறிஸ்துவினுடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்கிறார். அந்த சத்தத்தைக் கேட்கும்போது, அவர் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவராய் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடக்கிறார். அப்போது ஒருவர் தானியேலை தொடுகிறார். தானியேலின் முழங்கால்களும், அவருடைய உள்ளங்கைகளும் தரையில் ஊன்றியிருக்க அவரைத் தூக்கி வைக்கிறார் (தானி 10:10).

தானியேலும் நடுக்கத்தோடே எழுந்து நிற்கிறார். தானியேலின் மனதில்மிகுந்த பயமுண்டாயிற்று. அவரைத் திடப்படுத்தவில்லையென்றால், அவர் மறுபடியும் தரையிலே முகங்குப்புற விழுந்துவிடுவார். கர்த்தர் தம்முடைய ஜனத்திற்கு பெலத்தைக் கொடுப்பதற்கு முன்பாக, அவர்களுடைய பலவீனங்களை அவர்களுக்கு உணர்த்துகிறார். நம்முடைய சுயபலத்தினாலோ, சுயபராக்கிரமத்தினாலோ நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

தானியேலை தூக்கி வைக்கிற மனுஷன், அவரிடத்தில் பேசுகிறார். ""பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில்'' (தானி 10:11) என்று சொல்லுகிறார்.

இந்த வார்த்தையை அவர் தானியேலினிடத்தில் சொல்லுகையில், தானியேல் நடுக்கத்தோடே எழுந்து நிற்கிறார்'' (தானி 10:11). தானியேல் காலூன்றி நிற்பது மாத்திரமல்ல, அவர் தன்னுடைய வாயைத் திறந்து பேசவும் செய்கிறார் (தானி 10:16). தான் இவ்வளவு நேரம் பேசமுடியாமல் இருந்ததற்கான காரணத்தையும் தானியேல் இயேசுகிறிஸ்துவிடம் வருத்தத்தோடு அறிக்கை செய்கிறார். தான் கண்ட தரிசனத்தினால் தானியேலின் மூட்டுகள் புரண்டன. அவர் பெலனற்றுப்போனார். அவரிடத்தில் பெலனுமில்லை. மூச்சும் இல்லை. ஆகையினால் தானியேலால் பேசக்கூடாமற்போயிற்று (தானி 10:16,17).

தானியேல் பாதி செத்தவர் போல இருக்கிறார். அவரிடத்தில் பெலனுமில்லை. மூச்சும் இல்லை. தேவனுடைய தெய்வீக மகிமையைப் பெற்றுக்கொள்வதற்கோ, அதை விவரிப்பதற்கோ தானியேலினிடத்தில் பலனில்லை. தானியேலால் தேவனுடைய தெய்வீக சித்தங்களை அறிந்துகொள்ளவும் முடியவில்லை. அவரிடத்தில் மூச்சில்லை. ஆகையினால் அவரால் தெளிவாய்ச் சிந்திக்கவும் முடியவில்லை.

தானியேலைத் தூக்கிவிட்டவர், அவரை காலூன்றி நிற்குமாறு சொல்லுகிறார். தானியேலும் நடுக்கத்தோடே எழுந்து நிற்கிறார். இயேசுகிறிஸ்துவே தம்முடைய தூதர்களில் ஒருவரை, தானியேலினிடத்தில் அனுப்பி வைத்திருக்கிறார். இந்தத் தூதன் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை தானியேலுக்கு சொல்லவேண்டும். தானியேலை உற்சாகப்படுத்தி திடப்படுத்த வேண்டும். அவர் தானியேலுக்கு ஆறுதலான வார்த்தைகளையும் ஆலோசனைகளையும் சொல்லவேண்டும்.

தானியேல் இப்போது இருந்ததுபோலவே, யோவானும் கர்த்தர் வெளிப்படுத்தின தரிசனத்தைப் பார்த்து பெலனற்றவராயிருந்தார். அப்பொழுது இயேசுகிறிஸ்து தாமே, யோவானைத் தொட்டு தூக்கிவிட்டார். தானியேலைத் தூக்கிவிடுவதற்கோ கிறிஸ்துவானவர் தம்முடைய தூதரை இங்கு அனுப்பியிருக்கிறார்.

""நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்'' (வெளி 1:17).

இயேசுகிறிஸ்து அனுப்பின தூதன், தானியேலின் கையைத்தொட்டு, அவரைத் தூக்கி வைக்கிறார். அப்போது தானியேலின் முழங்கால்களும், அவருடைய உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்கிறது. தானியேல் நடுக்கத்தோடே எழுந்து நிற்கிறார். அந்தத் தூதன் தானியேலைத் தொட்டு தூக்கிவிடவில்லையென்றால், தானியேல் இன்னும் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடப்பார். தானியேல் இன்னும் பேசமுடியாதவராகவே இருந்திருப்பார். மனுஷரூபமானவர் தானியேலை மறுபடியும் தொட்டு திடப்படுத்துகிறார் (தானி 10:18).

பரலோகத்திலிருந்து நாம் தொடப்படவேண்டும். நாம் கர்த்தருடைய சமுகத்தில் முழங்கால்படியிட்டு ஜெபம்பண்ணும்போது, கர்த்தர் நம்மைத் தொடுகிறார். நம்மை காலூன்றி நிற்கச் செய்கிறார். நம்முடைய உதடுகளைத் திறக்கிறார். நம்மைப் பெலப்படுத்துகிறார். இவையெல்லாம் கர்த்தருடைய கிரியைகள்.

கர்த்தர் நம்மை தொடுவதினால், கர்த்தர் நமக்கு அநேக நன்மைகளைச் செய்கிறார். கர்த்தர் நம்மீதும் கிரியை நடப்பிக்கிறார். கர்த்தர் நமக்குள்ளேயும் கிரியை நடப்பிக்கிறார். கர்த்தருடைய கிரியைகளெல்லாமே நம்முடைய நன்மைக்கேதுவானவை.

இயேசுகிறிஸ்து அனுப்பிய தூதர் தானியேலை உற்சாகப்படுத்துகிறார். தேவனுடைய விசேஷித்த கிருபைகள் தானியேலுக்கு கொடுக்கப்பட்டிருப்பதை உறுதிபண்ணுகிறார். அவர் தானியேலை அழைக்கும்போது, ""பிரியமான புருஷனாகிய தானியேலே'' (தானி 10:11) என்றும், ""பிரியமான புருஷனே'' (தானி 10:19) என்றும் சொல்லி அழைக்கிறார்.

கர்த்தர் யாரையெல்லாம் அதிகமாய் நேசிக்கிறாரோ அவர்களெல்லோருமே கர்த்தருக்குப் பிரியமானவர்கள். கர்த்தர் நம்மீது பிரியமாயிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வது நமக்கு ஆறுதலைத்தரும்.

கர்த்தருடைய தூதன் தானியேலிடம் வந்ததற்கான காரணத்தையும் சொல்லுகிறார். அவர் தானாக வரவில்லை. அவர் இயேசுகிறிஸ்துவினால் அனுப்பப்பட்டு வந்திருக்கிறார். ""நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்'' (தானி 10:11) என்று கர்த்தருடைய தூதன் தானியேலிடம் சொல்லுகிறார்.

கர்த்தருடைய தூதன் தானியேலினிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்திருப்பதினால், அந்தத் தூதன் தனக்கு சொல்லும் வார்த்தைகளின் பேரில், தானியேல் கவனமாயிருக்கவேண்டும். தானியேல் தன் காலூன்றி நிற்கவேண்டும். அந்தத் தூதன் இந்த வார்த்தையை தானியேலிடத்தில் சொல்லுகிறார். அப்பொழுது தானியேல் நடுக்கத்தோடே எழுந்து நிற்கிறார்.

கர்த்தருடைய தூதன் தானியேலுக்கு அருகாமையில் நிற்கிறார். தானியேலோ நடுக்கத்தோடும், பயத்தோடும் காணப்படுகிறார். கர்த்தருடைய தூதன் முதலாவதாக தானியேலின் பயத்தை நீக்குகிறார். ""தானியேலே, பயப்படாதே'' (தானி 10:12) என்று ஆறுதலாகச் சொல்லுகிறார். மறுபடியுமாய் ""பயப்படாதே, உனக்கு சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள்'' (தானி 10:19) என்னும் ஆறுதலான வார்த்தை தானியேலுக்கு மறுபடியும் சொல்லப்படுகிறது.

தானியேலுக்கு கர்த்தருடைய ஆறுதலின் வார்த்தை உண்டாயிற்று. தானியேலைப் பலப்படுத்தும் வார்த்தை கர்த்தருடைய சமுகத்திலிருந்து, அவருடைய தூதன் மூலமாய், தானியேலுக்கு சொல்லப்படுகிறது. கர்த்தருடைய வார்த்தை கிருபை நிரம்பிய வார்த்தையாயிருக்கிறது. தானியேல் இப்போது பயமும் நடுக்கமும் நீங்கி, உற்சாகமாயிருக்கிறார்.

தானியேல் மூன்று வாரம் முழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தார். அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் தானியேல் ருசிகரமான அப்பத்தை புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் அவருடைய வாய்க்குள் போகவுமில்லை, அவர் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை (தானி 10:2,3).

தானியேலின் ஜெபமும் உபவாசமும் கர்த்தருடைய சமுகத்திலே சென்றடைகிறது. தானியேல் எந்த நாளில் உபவாசம்பண்ணினாரோ, அந்த நாளிலிருந்தே கர்த்தர் அவருடைய வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் செவிகொடுத்து கேட்கிறார்.

கர்த்தருடைய தூதன் தானியேலிடம் ""தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது'' (தானி 10:12) என்று சொல்லுகிறார்.

தேவதூதனுடைய வார்த்தை தானியேலுக்கு ஆறுதலாயிருக்கிறது. நாம் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, கர்த்தர் தம்முடைய இரக்கத்தின் பாதையில், நம்மை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறார். நாம் உபவாசம்பண்ணி, தேவனுக்கு முன்பாக நம்மை சிறுமைப்படுத்தி, கர்த்தரிடத்தில் நம்முடைய மனதை செலுத்தி, ஜெபம்பண்ணும்போது, கர்த்தர் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார். நம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறார். தானியேலின் ஜெபவார்த்தைகளினிமித்தமாக, தேவதூதன் அவரிடத்திற்கு வந்திருக்கிறார். இந்தத் தூதன் கர்த்தரால் தானியேலினிடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

கடைசி நாட்களில் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு சம்பவிக்கப்போவதை, தானியேலுக்கு தெரியப்பண்ணும்படிக்கு, கர்த்தர் அனுப்பின தூதன், தானியேலினிடத்திற்கு வந்திருக்கிறார். தானியேல் கண்ட இந்த தரிசனம் உடனே நிறைவேறாது. இது நிறைவேற இன்னும் நாள் செல்லும் (தானி 10:14).

கர்த்தர் தம்முடைய தூதனை நம்மிடத்தில் அனுப்பும்போது, அவர் யாரையும் சும்மா அனுப்பமாட்டார். தம்முடைய செய்தியோடு அனுப்புவார். தானியேலுக்கு சொல்லும்படியாக, கர்த்தர் தம்முடைய தூதனிடத்தில் ஒரு செய்தியை கொடுத்தனுப்பியிருக்கிறார்.

தானியேல் கர்த்தரிடத்தில் உபவாசம்பண்ணி ஜெபம்பண்ணுகிறார். தன்னுடைய ஜெபத்திற்கு கர்த்தர் பதில் கொடுப்பார் என்று ஆவலாய் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் தானியேலின் ஜெபத்திற்கு, தம்முடைய தூதன் மூலமாய், பதில் கொடுத்தனுப்புகிறார்.

இஸ்ரவேல் வம்சத்தாருக்கு கடைசி நாட்களில் என்னென்ன சம்பவிக்கும் என்பதை அறிந்துகொள்ள தானியேல் ஆவலாயிருக்கிறார். கர்த்தரும் அந்த மறைவான இரகசியத்தை, தம்முடைய தூதன் மூலமாய் தானியேலுக்கு சொல்லியனுப்புகிறார்.

தூதன் சொல்லுகிற செய்தியை விவாதம்பண்ணி, அதை உறுதிபண்ணவேண்டும் என்னும் அவசியமில்லை. அந்த தூதன் கர்த்தரால் அனுப்பப்பட்டவர். அவர் கர்த்தருடைய செய்தியோடு வந்திருக்கிறவர். அவர் சாதாரண தூதனாகயிருந்தாலும், அவர் கர்த்தருடைய தூதன். அவர் சொல்லுகிற செய்தி கர்த்தருடைய செய்தி.

யோவானுக்கு தேவதூதன் மூலமாய் இயேசுகிறிஸ்துவைப்பற்றிய வெளிப்படுத்துதல் உண்டாயிற்று. யோவான் அந்த வெளிப்பாடுகளை சபைகளுக்கு சொல்லவேண்டும்.

""சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்'' (வெளி 1:1).

சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை தேவதூதன் தானியேலுக்கு தெரிவிக்கிறார். தேவனுடைய பிரமாணம் சத்திய எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய எழுத்துக்களை யாரும் மாற்ற முடியாது.

சபைக்கு விரோதமாக சில சத்துருக்கள் எழும்பியிருக்கிறார்கள். கர்த்தர் தம்முடைய தூதன் மூலமாய், தானியேலுக்கு சபையின் சத்துருக்களைப்பற்றிய செய்திகளை வெளிப்படுத்துகிறார்.

""கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்'' (சங் 2:2,3).

பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் இந்த தேவதூதனோடு எதிர்த்து நின்றான் (தானி 10:13). தானியேல் மூன்று வாரம் முழுவதும் உபவாசத்தோடு துக்கித்துக்கொண்டிருக்கிறார். பெர்சிய ராஜ்யத்தின் அதிபதியும், இந்த மூன்று வாரங்கள் வரையிலும் தேவதூதனோடு எதிர்த்து நிற்கிறான்.

தேவதூதனுக்கு எதிர்த்து நிற்கிறவன், பெர்சிய ராஜ்யத்தின் புதிய அதிபதி. இவன் தேவாலயத்தின் ஆராதனைக்கு தடையாகயிருக்கிறான். கர்த்தருடைய நற்செய்திகளும், பிரமாணங்களும் ஜனங்கள் மத்தியில் அறிவிக்கப்படுவதற்கு இந்த ராஜா தடையாகயிருக்கிறான்.

இந்த தூதன் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ண திரும்பவும் போவார் (தானி 10:20). பெர்சியாவின் பிரபு யூதர்களுக்கு தீங்கு செய்ததினால், அவனுடைய ராஜ்யம் அழிந்துபோகும். அவனுக்குப் பதிலாக வேறு ராஜா வருவான். ""கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்'' என்று அந்தத் தேவதூதன் சொல்லுகிறார்.

கிரேக்கு தேசத்தின் அதிபதி ஆரம்பத்தில் யூதர்களுக்கு நன்மை செய்வான். பெர்சியாவின் அதிபதியும் இவனைப்போலவே, ஆரம்பத்தில் யூதர்களுக்கு நன்மை செய்தான். அதன் பின்பு அவன் யூதர்களுக்கு தீங்கு செய்ய ஆரம்பித்துவிட்டான். பெர்சியாவின் அதிபதியைப்போலவே, கிரேக்கு தேசத்தின் அதிபதியும், ஆரம்பத்தில் யூதர்களுக்கு நன்மை செய்வான். அதன் பின்பு அவன் யூதர்களுக்கு தீங்கு செய்ய ஆரம்பித்துவிடுவான்.

பரலோகத்தின் தேவனே இஸ்ரவேல் வம்சத்தாரை பாதுகாக்கிறவர். கர்த்தருடைய ஜனத்திற்கு கர்த்தரைத் தவிர வேறு பாதுகாப்பு யாருமில்லை.

தானியேலிடம் பேசிக்கொண்டிருக்கிற தேவதூதனுடைய பெயர் காபிரியேலாகயிருக்க வேண்டுமென்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். பெர்சிய தேசத்தின் அதிபதியைப்பற்றி, தானியேலுக்கு சொல்லுவதற்காகவே, தேவதூதன் கர்த்தருடைய சமுகத்திலிருந்து வந்திருக்கிறார். அவர் தானியேலிடம் ""நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா'' (தானி 10:20) என்று கேட்கிறார்.

கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாரைப் பாதுகாக்கிறார். கர்த்தருடைய ஜனத்திற்கு விரோதமாக பெர்சியாவின் பிரபு எழும்பியிருக்கிறான். அவனோடே யுத்தம்பண்ணுவதற்காக, கர்த்தருடைய தூதனானவர் திரும்பிப்போகிறார். யுத்தம் நீடிய யுத்தத்திற்கு அடுத்ததாயிருக்கும் (தானி 10:1).

யுத்தத்திலே பெர்சியாவின் அதிபதி தோற்றுப்போவான். அவனுடைய பெருமையும், ஆணவமும் அழிந்துபோகும். பெர்சியாவின் பிரபு கர்த்தருடைய ஜனத்திற்கு தீங்கு செய்ய நினைத்தான். கர்த்தர் தம்முடைய ஜனத்திற்கு விரோதமாக எழும்பின பெர்சியாவின் அதிபதியை அழித்துப்போடுகிறார்.

மிகாவேல் என்பவர் பிரதான அதிபதிகளில் ஒருவராயிருக்கிறார். மிகாவேல் கர்த்தருடைய சபையைப் பாதுகாக்கிறார். மிகாவேல் என்பவர் கர்த்தருடைய தூதர்களுக்கெல்லாம் தலைவரைப்போன்றவர் என்று வேதபண்டிதர்களில் சிலர் வியாக்கியானம் சொல்லுகிறார்கள்.

ஆனாலும் வேதபண்டிதர்களில் அநேகர் மிகாவேலைப்பற்றிச் சொல்லும்போது, அவர் ""கர்த்தராகிய இயேசுகிறிஸ்து'' என்று விளக்கம் சொல்லுகிறார்கள். தானியேல் இதெக்கேல் என்னும் ஆற்றங்கரையிலிருந்தபோது, தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தார். அப்போது அவர் சணல் வஸ்திரம் தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்க கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டார். அந்தப் புருஷன் இயேசுகிறிஸ்துதான் என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.

""பிரதான அதிபதிகளில் ஒருவராகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்'' (தானி 10:13) என்று தேவதூதன் தானியேலிடம் சொல்லுகிறார். கிறிஸ்துவே தம்முடைய சபைக்கு அதிபதியாயும், எஜமானாயும், பிரபுவாயும் இருக்கிறார். அவரே ராஜாதி ராஜா. தேவதூதர்கள் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்.

""இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை'' (எபி 2:5).

தானி 10:5-6 ஆகிய வசனங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் நபர் காபிரியேலாக இருக்க வேண்டும். இந்தத் தரிசனம் வெளி 1:12-17 ஆகிய வசனங்களில் காணப்படும் மனுஷ குமாரனுடைய தரிசனத்தைப் போல விரிவாக உள்ளது. இவ்விரண்டு தரிசனங்களும் ஒரே நபரைப் பற்றியே குறிப்பிடுகிறது.

தானி 8:13-19 ஆகிய வசனங்களில் ஒரு நபர் காபிரியேலிடம் தரிசனத்தைத் தானியேலுக்கு அறிவிக்குமாறு கூறுகிறார். அதே நபரே இங்கும் கூறப்பட்டிருக்கிறார். தானி 10:5-6 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் நபர் காபிரியேலிடம் இந்தத் தரிசனத்தைத் தானியேலுக்கு அறிவிக்குமாறு கூறுகிறார்.

யாரோ ஒருவர் தானியேலிடம் இவரை அனுப்பியிருப்பது தானி 10:11-12 ஆகிய வசனங்கள் மூலமாகத் தெரியவருகிறது. இவர் தானியேலிடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறார். தானியேலின் புஸ்தகத்தில் தேவதூதர்களின் தோற்றங்களைப் பற்றி பல வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. (தானி 3:25; தானி 4:13,17,23; தானி 6:22; தானி 7:16; தானி 8:13,14,16-26; தானி 9:21; தானி 10:4-12,16,18,20; தானி 12:1,5-6).

"தானியேலின் ஜெபத்திற்கு உடனடியாகப் பதில் கிடைக்காமல் காலதாமதமாகப் பதில் கிடைக்கிறது. (தானி 10:12-13). காலதாமதம் விசுவாசத்தைத் தடைபண்ணக் கூடாது. கர்த்தர் வாக்குப் பண்ணியிருப்பதை விசுவாசத்தோடு காத்திருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். ஜெபத்திற்குப் பதில் கிடைக்கும் வரையிலும் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். (லூக்கா 18:1-8).

தானியேலின் ஜெபத்திற்குப் பதில் கொடுப்பதற்காகத் தேவதூதன் வந்திருக்கிறார். தானியேல் தன் ஜெபத்தில் எந்தெந்த வார்த்தைகளையெல்லாம் கூறினாரோ அந்த வார்த்தைகள் எல்லாமே கர்த்தருடைய சமுகத்தில் கேட்கப்படுகிறது. (மத் 7:7-11). கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மையான எல்லா ஈவுகளையும் கொடுக்கிறார். ஜெபத்தில் நாம் கேட்பதற்கும், வேண்டிக் கொள்வதற்கும், நினைப்பதற்கும் அதிகமானவற்றைக் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார். (மத் 7:7-11; மத் 17:20; மத் 21:21-22; மாற்கு 11:22-24; யோவான் 15:7).

பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி சாத்தானுடைய குணமுடையவன் (தானி 10:13). சாத்தானுக்காக இவன் பெர்சியா ராஜ்யத்தை ஆளுகை செய்கிறான். இவன் இந்த உலகத்தின் அதிபதியாக வேதாகமத்தில் கூறப் பட்டிருக்கிறான். (மத் 4:8-9; மத் 12:24-30).

இந்த உலகத்தில் பல ராஜ்யங்கள் உள்ளன. இந்த ராஜ்யங்களிலெல்லாம் சாத்தான் தன்னுடைய தூதர்களை வைத்திருக்கிறான். இவர்கள் தேவனுடைய திட்டம் நிறைவேறுவதைத் தடைபண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

கர்த்தரிடத்திலும் தூதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள். இந்த உலகத்தில் என்னென்ன சம்பவங்களெல்லாம் நடைபெறும் என்று கர்த்தர் முன்னறிவித்திருக்கிறாரோ அந்தச் சம்பவங்களெல்லாம் கர்த்தருடைய தூதர்கள் நிறைவேற்றுகிறார்கள். (தானி 10:11-21; தானி 11:1; தானி 12:1).

இதனால் பரலோகத்தில் கர்த்தருடைய தூதர்களுக்கும், சாத்தானின் தூதர்களுக்கும் யுத்தம் நடைபெறுகிறது. (தானி 10:13,20-21; தானி 11:1; தானி 12:1; யூதா 1:9; வெளி 12:7-12). உலகத்தில் நடைபெறும் யுத்தங்களின் வெற்றி தோல்விகள் பரலோகத்தில் நடைபெறும் தூதர்களுடைய யுத்தங்களின் முடிவைப் பொறுத்தே அமைந்திருக்கும்.

தூதர்கள் ராஜ்யங்களை ஆளுகை செய்வது போல தனி மனுஷர்களையும் ஆளுகை செய்கிறார்கள். (மத் 18:10; 2கொரி 10:4-6; எபே 2:2; எபே 6:10-18; எபி 1:14; யூதா 1:9). தேவனுடைய பிள்ளைகளின் ஜீவியங்களில் கர்த்தருடைய சித்தம் நிறைவேறுவதைத் தடுப்பதற்குச் சாத்தான் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறான். (1நாளா 21:1; யோபு 1:6; யோபு 2:1; சக 3:1; மத் 4:1-11; 2கொரி 4:4; எபே 2:2; எபே 6:10-18; 1யோவான் 3:8; வெளி 12:12). மிகாவேல் இஸ்ரவேலின் அதிபதி (தானி 10:21; தானி 12:1) கிரேக்கு தேசத்தின் அதிபதியைப் பற்றி தானி 10:20 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கிறது.

தேவதூதர்களின் பெயர்கள்

1. லூசிபர் (ஏசா 14:12; எசே 28:11-17)

2. மிகாவேல் (தானி 10:13,21; தானி 12:1; யூதா 1:9; வெளி 12:7)

3. காபிரியேல் (தானி 8:16; தானி 9:21; லூக்கா 1:19,26)

4. அபெத்தோன் அல்லது அப்பொல்லியோன் (வெளி 9:11)

தேவதூதர்கள் அவர்களுடைய அந்தஸ்துகளின் பிரகாரம் வரிசைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். (1தெச 4:16; யூதா 1:9).

""பெர்சியாவின் ராஜாக்கள்'' என்பவர்கள் மேதிய-பெர்சிய தேசத்தின் ராஜாக்கள். இவர்கள் சாத்தானால் இயக்கப்படும் பிரபுக்கள்.

இந்தத் தரிசனத்தில் கூறப்பட்டிருக்கும் அநேக சம்பவங்கள் கடைசி காலத்தில் இஸ்ரவேல் தேசத்தாருக்கு நிறைவேறும். அப்போது புறஜாதியார் அவர்களை ஒடுக்கியிருப்பார்கள்.

""மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன்'' என்பவர் தானியேலுக்குத் தரிசனத்தைக் கொடுப்பதற்கு அனுப்பப்பட்ட அதே நபராக இருக்கலாம். (தானி 10:11-12).

தானியேலுக்கு தரிசனத்தை கொடுப்பதற்கு அனுப்பப்பட்டவர் நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன் (தானி 10:20) என்று சொல்லுகிறார். இவர் ஏற்கெனவே பெர்சியாவின் பிரபுவோடு யுத்தம் பண்ணிவிட்டு வந்திருக்கிறார். இனிமேல் மறுபடியும் அவனோடு யுத்தம்பண்ணப் போகிறார். தானி 10:13-14 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் யுத்த சம்பவங்கள் தொடருகிறது.

அந்த மனுஷன் தானியேலினிடத்தில் ""நான் போனபின்பு, கிரேக்குதேசத்தின் அதிபதி வருவான்'' (தானி 10:20) என்றும் சொல்லுகிறார். இவனும் சாத்தான் மூலமாக ஆளுகை செய்கிறான். கிரேக்கு தேசத்தின் இந்த அதிபதி இப்போது பாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கிறான். கடைசி நாட்களில் அவன் பாதாளத்திலிருந்து வெளியே வந்து, அந்திக்கிறிஸ்து பழைய கிரேக்கப் பேரரசைத் திரும்பவும் உயிர்ப்பிப்பதற்கு அவனுக்கு உதவிபுரிவான். இவர்களெல்லோரும் அர்மெகதோனில் இயேசு கிறிஸ்துவை எதிர்ப்பார்கள்.

அந்த மனுஷன் சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை தானியேலுக்கு தெரிவிப்பார் (தானி 10:21). தானியேல் புஸ்தகத்தில் ஏற்கெனவே கூறப்பட்டிருக்கும் மேதிய-பெர்சியருக்கும், கிரேக்கருக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தைப் பற்றிய வெளிப்பாட்டை இந்த வாக்கியம் குறிக்கிறது. (தானி 2:39; தானி 7:5-6; தானி 8:3-8,20-25)

அந்த மனுஷனோடுகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை (தானி 10:21). பெர்சியாவின் பிரபுவிற்கு விரோதமாக இவர் யுத்தம்பண்ணும்போது மிகாவேல் மட்டுமே இவருக்கு உதவி புரிகிறார். இந்த யுத்தத்தில் பெர்சியாவின் பிரபு தோற்றுப் போகிறான். கிரேக்கருடைய அதிபதி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கிறான். (தானி 10:20-21).

மிகாவேலும், காபிரியேலும்

காபிரியேல் தானியேலிடம் தரிசனத்தின் விவரத்தை அறிவிக்கிறார். இந்த வெளிப்பாட்டிற்கு இரண்டு வருஷங்களுக்கு முன்பு காபிரியேல் மிகாவேலோடு துணை நின்று, அவனைத் திடப்படுத்தி, பலப் படுத்துகிறார். பாபிலோனியப் பிரபுவை அகற்றும் பொறுப்பு, மிகாவேலுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. பாபிலோன் பிரபு அகற்றப் பட்டால்தான் பெர்சியாவின் பிரபு ஆட்சிக்கு வரமுடியும். (தானி 11:1).

இப்போது மிகாவேல் காபிரியேலுக்குத் துணை நிற்கிறார். பெர்சிய தேசத்தின் பிரபுவை அகற்றுவதற்கு மிகாவேல் காபிரியேலுக்கு உதவி புரிகிறார். பெர்சியாவின் பிரபு அகற்றப்பட்டால்தான் கிரேக்கு தேசத்தின் அதிபதி ஆட்சிக்கு வரமுடியும். (தானி 10:20-21).

கர்த்தர் தம்முடைய தீர்க்க தரிசன வார்த்தைகளை நிறைவேற்றுவதற்கு முன்பாக சில தேசங்களிலுள்ள சாத்தானின் அதிபதிகளை அகற்றிப்போடுகிறார். புறஜாதியாரின் காலங்களில் சில ராஜ்யங்கள் எழும்புவதையும், விழுவதையும் குறித்து கர்த்தர் ஏற்கெனவே முன்னறிவித்திருக்கிறார். சாத்தான் எப்போதுமே கர்த்தருடைய சித்தம் நிறைவேறுவதற்குத் தடைபண்ணிக் கொண்டே யிருப்பான். ஆகையினால் கர்த்தருடைய சித்தம் நிறைவேறுவதற்காகச் சாத்தானுடைய முயற்சிகள் தொடர்ந்து அகற்றப்படும். (தானி 2:38-45; தானி 7:3-12,19-27; தானி 8:20-25).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.