காசா
சொன்னவுடனேயே சட்டென ஞாபகத்துக்கு வந்துவிடுகிற நகரமல்ல காசா.
சராசரி கிறிஸ்தவர்களுக்கு நெற்றியை நடுவிரலால் நாலு தட்டுத் தட்டிக் கொண்டால் கொஞ்சம் பிசிறாக ஞாபகத்திற்கு வரலாம்.
காசா என்பது நகரம் என்ற அளவிற்குக் கூட ஞாபகம் வராமல் ஏதோ தையல்கடை சமாச்சாரம் என்ற எண்ணம் வருமா னால்....... ரொம்பவும் கஷ்டம் தான்.
அப்படிப்பட்டவர்கள் வேதத்தை இன்னும் கொஞ்சம் கருத்தாகப் படிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்.
ஆதியாகமம் காலம் தொட்டே இருந்ததாக வேதம் கூறுப்படும் மிகப்பழமையான நகரம் காசா.
முதலில் கானானியரின் கையிலிருந்து பின்னர் யூதாவின் கைக்கு மாறி பிறகு பெலிஸ்தியர்களின் கைக்குள் இருந்த நகரம் இது. வாழ்ந்திருக்கும் காலத்தில் பாக்கை மென்று கொண்டே பொழுது போக்காக பைபிள்படிக்கும், அல்லது கோயிலில் கொட் டாவிவிட்டுக் கொண்டே பிரசங்கம் கேட்கும் உதாசீனர்களுக்கு நடக்கப் போகும் பயங்கரங்களுக்கு முன்னுதாரணமாய் திகழும் நகரம் காசா.
பெலிஸ்தியர்களுக்கு புகழ்பெற்ற நகரங்கள் ஐந்து. அவற்றில் ஒன்று காசா.
மீதி நான்கு அஸ்கலோன், அஸ்தோத், காத், யோப்பா.
காசா பற்றி இன்னும் கொஞ்சம் விவரமான பூகோள அடையாளம் சொல்ல வேண்டுமானால் யோப்பாவிலிருந்து 40 கி.மீ தெற்கே மத்தியதரைக் கடலின் கரையில் அமைந்துள்ளது.
கடற்கரையில் அமைந்திருந்தாலும் காசாவில் துறைமுகம் இல்லாமலிருந்தது ஆச்சரியம் தான். அதுவும் பக்கத்து நகரமான அஸ்கலோன் கடல் வாணிபத்தில் நம்நாட்டு அரசியல்வாதிகள் லெவலுக்கு சம்பாதித்துக் கொண்டிருக்க, காசா மட்டும் ஏன் துறை முகம் வைத்துக் கொள்ளவில்லை என்று தெரியவில்லை.
ரோமர்கள் தங்கள் எல்லையை காசா வரைக்கும் கொண்டி ருந்த காலத்தில் கூட இங்கு துறைமுகம் அமைக்கவில்லை என்பதுதான் புரியாத புதிர்.
சாயங்கால நேரத்தில் பிள்ளைக்குட்டிகளோடு காலாற நடந்து போய் கடலை கொறித்தபடியே வேடிக்கை பார்க்க மட்டும். தான் கடல் போலிருக்கிறது இந்த காசாக்காரர்களுக்கு.
காசா, எகிப்திலிருந்து சீரியா போகும் முக்கிய பாதையில் அமைந்துள்ளது. காசாவிலிருந்து கொஞ்சம் வடக்கு நோக்கி கடற் கரை ஓரமாகவே நடந்தீர்கள் என்றால் அஸ்கலோன், அஸ்தோத், யோப்பா இவற்றை பார்க்கலாம்.
காசாவின் புவியியல் அமைப்பு தெளிவானது. ஆனால் வரலாறு கொஞ்சம் சிக்கலானது,
துவக்க காலத்தில் காமின் சந்தததியாரான கானானியர்கள்
கையிலிருந்தது இந்நகரம். காசா மட்டும் கானானியரின் எல்லை
என்று வேதம் இதைக் காட்டுகிறது. (ஆதி 10 : 19)
யோசுவாவின் காலத்தில் ஏனாக்கியர் அங்கே குடியிருந்தார்கள் (யோசு 11 : 22). யோசுவா இஸ்ரவேலர்களுடன் காசாவுக்கு வந்து சங்காரம் செய்து முறியடித்த போதும் இதை சுதந்தரித்துக் கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டார். ஆனால் பிறகு கோத்தி ரங்களுக்கு பங்கு வைத்துக் கொடுக்கும் போது காசாவை யூதாவு க்கு கொடுத்தார்.
யூதா இதைப் பிடித்துக் கொண்ட போதும் வெகுகாலம் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ளவில்லை. காரணத்தை நியா 10-ம் அதிகாரத்தில் படித்து தெரிந்து கொள்க.
யூதாவிடமிருந்து காசாவை பெலிஸ்தர்கள் பிடித்துக் கொண்டார்கள்.
சிம்சோன் பற்றி படித்த யாரும் காசாவை அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியாது. காசாவில் இராத்தங்கின சிம்சோ னைப் பிடிக்கும்படி கோட்டைக் கதவை பெலிஸ்தர்கள் பூட்டி விட கதவை பெயர்த்துக் கொண்டு, கதவையும் சுமந்தபடி சிம்சோன் எதிரே இருந்த மலையுச்சிக்குப் போனார் என்பது மறக்கக்கூடிய விஷயமில்லையே (நியா 16: 1-13) தவிரவும், சிம்சோன் மாவரைத்ததும் காசாவின் சிறையில் தான்.
எரேமியாவின் நாட்களில் எகிப்தியரின் கைவசமிருந்தது இந்தக் காசா. (எரே 47 : 1)
காசாவை எபிரெய பாஷையில் ஆசா என்று கூறுவார்கள் (உபா 2 : 22) அமர்னா கல்வெட்டுக் குறிப்புகளில் ‘ஆசாட்டி' என்று இதே நகரம் குறிக்கப்பட்டுள்ளது. வேதத்தில் சில இடங்களில் 'காத்சா' எனக் குறிக்கப்பட்டுள்ளதும் காசாவைத்தான் (எரே 47 : 5)
காசா என்ற பெயருக்கு அரண் என்று பொருள். பெயருக் கேற்பவே பட்டணத்தைச் சுற்றிலும் மிகப்பெரிய கோட்டைச் சுவர் இருந்தது.
செழிப்பும் வளமுமான பெலிஸ்தியாவின் மிக முக்கியமான நகரமாகிய காசா குடியற்று பாழாகும் என்று வேதம் செப்பனியா
தீர்க்கர் மூலம் முன்னறிவித்திருந்தது. (செப் 2 : 4)
ஆனால் இன்றும் காசா பட்டினம் இருக்கிறது. சுமார் 18,000
குடும்பங்கள் அங்கே காணப்படுகின்றன. வீதிகளில் நவீனம் தெரிகி
றது. பல குடும்பங்களில் 'மெர்சிடிஸ்' கார் இருக்கிறது. இன்னும்
வளம் குறையவில்லையென்பதை கணிசமான பெர்- கேப்பிடா- இன்கம் (தனிநபர் வருமானம்) நிரூபிக்கிறது.
என்னாயிற்று? ஏன் இன்னும் வேதம் சொன்ன தீர்க்க தரிசனம் நிறைவேறவில்லை?
ஒருவேளை செப்பனியாவும், நமது ஊரில் தாயத்து எடுக்கிற தீர்க்கதரிசி மாதிரியான ஆளோ?
இப்படிப் போன்ற காசாவைப் பற்றிய சந்தேகம் பலரு டைய மனதில் பல நாளாய் இருந்தது.
விசுவாசிக்கிறவர்களை வாயடைக்கப் பண்ண நினைக் கிறவர்கள் காசாவைப் பற்றி பேச்சை ஆரம்பித்து தர்மசங்கடப் படுத்தினார்கள்.
இயேசுவின் தொனி மாதிரிப் பத்திரிகைகளுக்கு கேள்வி எழுதிப்போட்டு பதில் வராது பார். என்ன பந்தயம்? என்றார்கள்.
காசாவைப் பற்றிய தீர்க்கதரிசனம் நிறைவேறாததில் ரொம் பவும் திருப்தி பலருக்கு.
ஆனால் பாவம் அவர்கள் திருப்தி கொஞ்சக் காலத்திற்கு மேல் நீடிக்கவில்லை.
தற்போதுள்ள காசாபட்டணத்திலிருந்து கிழக்கே 4.8 கி.மீ தூரத்தில் பெரிய முண்டு முண்டாய்க் காணப்பட்ட மண்மேடுகள் 1923-ம் ஆண்டில் W.J. பித்தியன்-ஆடம்ஸ் (W.J. Pythian - Adams) என்ற அகழ்வாராய்ச்சியாளர் கண்ணை உறுத்தியது.
இந்த மண்மேடுகளின் கீழ் மர்மம் ஏதாவது இருக்கலாம் என்று உள்ளுணர்வு உந்த கொஞ்சம் மண் தொந்தியை கரைத்துப் பார்த்தால் ஆச்சரியம் காத்திருந்தது.
இடியுண்ட சுவர்கள், சிதலமான கோயில்கள், ஆயுதங்கள், ஆபரணங்கள், நிறைய எலும்புத்துண்டுகள், கல்வெட்டுக்கள் என்று ஒரு முழுப்பட்டிணமே மண்ணுக்கடியில் நிறைந்திருந்தது.
இங்கு கிடைத்த எஷர்காடன் என்ற அசீரிய ராஜாவின் கல்வெட்டை ஆராய்ந்தவர் இன்னும் அதிர்ந்தார்.
மண்ணுக்கடியில் கிடைத்த இந்த நகரம் தான் காசா. உண்மையான காசா.
இப்போதிருப்பதில் பெயர் மட்டும்தான் காசா.
வேதவசனம் எப்போதோ நிறைவேறிவிட்டிருந்ததை வெளியுலகுக்கு கொண்டு வந்தார் பித்தியன் ஆடம்ஸ். (நன்றி ஐயா!)
காசாவில் கிடைத்த பல்வேறு கல்வெட்டுகள், இடிபாடுகள் ஆகியவற்றை ஆராய்ந்து கொண்டிருந்த போதே தெற்கு அரேபியா விலிருந்த ஒரு புதையுண்ட கோயிலில் கிடைத்த கல்வெட்டு ஒன்றும் காசாவைப் பற்றிய செய்தியைச் சொன்னது.
T.C. மிட்செல்லி என்ற அகழ்வாராய்ச்சியாளர்தான் இந்த கல்வெட்டை கண்டுபிடித்தவர்.
கோயிலின் அருமை பெருமைகளைச் சொல்லிக் கொண்டே வந்த கல்வெட்டு ஒரிடத்தில் காசாவில் நடைபெற்ற அடிமை வாணிபத்தைப் பற்றி விளக்கமாக சொல்லியது. காரணம், இந்தக் கோயில் அடிமைகளின் தெய்வமான ஒரு தேவதைக்கான ஸ்பெஷல் கோயில்,
அஸ்கலோனின் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் பல நாடுகளைச் சேர்ந்த அடிமைகளை காசாவில் வைத்து விற்பது தான் நடைமுறை.
சுற்றிலுமிருந்த நாடுகளிடையே காசாவின் அடிமைச் சந்தை வெகுபிரபலம். காசாவின் அடிமை வியாபாரிகள் கொடூரமும், மனிதாபிமானமற்றவர்களுமாயிருந்தனர்.
அடிமைகளின் நாலுவயதுப் பிள்ளைகளைக் கூட தாயிட மிருந்து பிரித்து நாலணாவுக்கு அடிமையாக விற்றுவிடுவார்கள்.
காசாவில் கண்டெடுக்கப்பட்ட சில குறிப்புகளில் அடிமை களின் கைகளின் மணிக்கட்டுச் சதையில் துளைபோட்டு சங்கிலி களைப் பிணைத்திருந்ததைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. அடிமை களை அடிக்க முள்கோர்த்த சவுக்குகள், சங்கிலிகள் ஆ ஆகியவை பயன்படுத்தப்பட்டன. வியாதிகொண்ட, வயதான, தேறாத கேஸ் களை சந்தைத்திடலிலேயே கழுத்தை நெறித்துக் கொன்றுவிடும் கொடுமையும் தினசரி நடப்பதுண்டு.
அரேபியாவின் தெற்குப்புற நாடுகளில் விவசாய வேலைக் காக நிறைய அடிமைகளை விலைக்கு வாங்குவார்கள். அவர் களிடையே ஒரு மூட நம்பிக்கை பலமாக நிலவியது. ஒரு கண் பழுதான ஆண் அடிமை வீட்டிலிருந்தால் நல்ல அதிர்ஷ்டம்.
பணம் கொட்டும் என்பதுதான் அந்த நம்பிக்கை.
இதினிமித்தம் காசாவின் சந்தையில் என்ன நடந்திருக்கும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?
காசாவில் நடைபெற்ற இந்த அடிமை வியாபாரம் பற்றி அரேபியக் கல்வெட்டு மட்டுமல்ல, வேதமும் சொல்கிறது பாருங் கள்.
ஆமோஸ் 1 : 6
காசாவின் பாதகங்களினிமித்தம் நான் அதன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன். அவர்கள் சிறைப் பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முற்றிலும் சிறையாக்கினார்களே.
வளமாய் வாழ்ந்திருந்த காலத்திலேயே காசாவின் அழிவைப் பற்றி ஆமோஸ் முன்னறிவித்தது ஐம்பத்திமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியது.
கி.மு. 734-ல் அசீரிய மன்னன் திக்லாத்பிலேசர் காசாவின் மீது படையெடுத்தான். பலமும் கொடூரமும் கொண்ட அசீரியப் படைகள் காசாவைக் குறிவைத்து வருவதைக் கண்ட காசாவின் இராஜா ஹானுனு (Hanunu) என்பவர் இரவோடிரவாக, தன் மனைவி மற்றும் சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு ஓடி விட்டார். திக்லாத்பிலேசருக்கு வேலை சுலபமாயிற்று. காசாவில் புகுந்த அசீரியப் படைகள் நகரை சூறையாடி தரைமட்டமாக் கினார்கள். அங்கிருந்த வியாபாரமாக வேண்டிய அடிமைகளின் விலங்கை முறித்து அவர்கள் கையிலேயே தீயைக் கொடுத்து நகருக்கு தீயிடச் செய்தனர். காசாவின் மேல் கொண்ட வெறுப்புக் காரணமாக விடுவிக்கப்பட்ட அடிமைகள் வெறியுடன் நகருக்கு தீ வைத்தபோதே அசீரியர்கள் காத்சாவின் கோட்டை கதவை அடைத்துக் கொண்டு வெளியே புறப்பட்டு அங்கிருந்து, கோட் டைக்குள் உண்டாகும் அலறலையும், வானளாவ உயரும் நெருப் பையும் கண்டு களித்தனர்.
அசீரியப் படைகளுக்கு சிறு கீறல் கூட வராமல் அடிமைகளைக் கொண்டே காத்சாவைத் தீக்கொளுத்திய தங்கள் பராக்கிரமத்தை ஒரு கல்வெட்டில் பதிவு செய்துள்ளனர். இந்தக் கல்வெட்டு இன்றைய எகிப்திய நகரமான ஏல் - ஆரிஷ் (el-Arish)
என்ற நகரத்திற்கருகில் கிடைத்துள்ளது.
அடைக்கப்பட்ட கோட்டைக்குள் கொளுத்தப்பட்ட தீயில் காசாவின் மக்களுடன் அடிமைகளும் சேர்ந்தே மாண்டார்கள்.
இந்த சம்பவம் பற்றி, இது நடப்பதற்கு 55 ஆண்டுகளுக்கு முன்பாகவே கி.மு.787-ல் ஆமோஸ் தீர்க்கதரிசி, மூலம் வேதம் முன் னறிவித்ததைப் பாருங்கள்.
ஆமோஸ் 1:7
காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன். அது அதனுடைய அரமனைகளைப் பட்சிக்கும்.
வசனம் எத்தனை துல்லியமாக நிறைவேறியுள்ளது பார்த் தீர்களா?
கி.பி. 1270-ல் பிர்பாஸ் என்பவர் காசா, அஸ்கலோன் இவற்றின் மீது படையெடுத்தார். பிர்பாஸ் நகரங்களை கொள்ளை யிட்டதுமின்றி குடியிருக்க லாயக்கில்லாதபடி முற்றிலும் தகர்த்தும் போட்டான்.
பிர்பாஸின் படையெடுப்புக்குப்பின் அஸ்கலோன் பாழா னாலும் அதன் சுற்றுப்புறங்கள் செழிப்பான புல்வெளியும், தண்ணீரும் உள்ளதாய் காணப்பட்டது. எனவே, அஸ்கலோனில் யூத மேய்ப்பர்கள் கிடைபோட்டு ஆடு மேய்த்து வந்தனர்.
ஆனால் காசாவில் நிலை இன்னும் மோசமானது. ஒரு வித அமிலம் கலந்தமண், பாழாகிப் போன காத்சாவின் மேல் மூடிப் படர்ந்தது. நாளாவட்டத்தில் இடிபாடுகளையெல்லாம் மூடி மண் மேடுகளாக காட்சியளித்தது. அமிலமண் காரணமாக இந்த மண் மேடுகளில் மேல் புல் கூட வளர்வதில்லை. இதன் உடனொத்த பாழான நகரங்களான அஸ்கலோன், அஸ்தோத் போன்ற நகர மேடுகளிலெல்லாம் பசேலென்று புல்மண்டிக் கிடக்க நடுவில் காசா மட்டும் நடு வழுக்கை விழுந்த தலைபோல காட்சியளித்தது.
இதில் வியப்பூட்டும் விஷயம், காத்சாவை மூடியிருந்த அமிலமண் எங்கிருந்து பறந்து வந்தது என்பது தான். காரணம் காசாவில் காணப்பட்ட இந்த மண் சுற்றுப்புற நகரங்கள் ஒன்றிலும் காணப்படவில்லை.
இதைக் குறித்தும் வேதம் முன்னறிவியாமல் இல்லை. வெகு முன்பாகவே கி.மு. 607-ல் எரேமியா மூலம் உரைக்கப்பட்டதைப்
பாருங்கள்.
காத்சா மொட்டையடிக்கப்படும் (எரேமியா 47: 5)
உண்மையிலேயே மொட்டையடிக்கப்பட்ட தலை போலவே காணப்பட்டது காசா.
இன்று காசா என்ற பெயரில் காணப்படும் நகரம். பழைய காசாவின் மேல் கட்டப்பட்டதல்ல. சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் கட்டப்பட்டுள்ளது. கி.பி. 1400-ல் கட்டப்பட்ட இந்நகரம் வேத வசனம் நிறைவேறியதை பலகாலம் மறைத்து வந்திருக்கிறது.
அமில மண்மேடுகளும் தங்கள் பங்குக்கு வேதம் நிறை வேறியதைப் பலகாலம் மறைத்து வந்திருக்கின்றன.
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்.
வேதத்தை எப்போதும், யாராலும் மறைத்துக் கொண்டே யிருக்க முடியாது.
அதற்கு காசா தான் சரியான உதாரணம்
மூலம்: ஆழங்கள் சொல்லும் சாட்சிகள்
ஆசிரியர்: சகோ.வின்சென்ட் செல்வகேமார்
