பயப்படாதிருங்கள் (தூதன் சொன்னது)
1.யோசேப்பே, பயப்படாதே
*மத்தேயு 1:20(18-25)*
கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய *யோசேப்பே* , உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள *ஐயப்படாதே;* அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
2.மரியாளே, பயப்படாதே
*லூக்கா 1:30(26-38)*
[30]தேவதூதன் அவளை நோக்கி: *மரியாளே* , *பயப்படாதே* ; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
3. சகரியாவே, பயப்படாதே
*லூக்கா 1:13(5-25)*
[13]தூதன் அவனை நோக்கி: *சகரியாவே* , *பயப்படாதே* , உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக
4. மேய்ப்பர்களே, பயப்படாதிருங்கள்
*லூக்கா 2:10(8-20)*
[10]தேவதூதன் *அவர்களை* நோக்கி: *பயப்படாதிருங்கள்* ; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
