சிலுவையின் வரலாறு 1
I. சிலுவையின் துவக்கம்:
a. சிலுவை என்பது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கிறிஸ்தவ காலத்திற்கும் முந்தினக் காலத்திருந்தே ஒரு மத சம்பந்தமான அடையாளச் சின்னமாக ஏறக்குறைய உலகலாவிய விதத்தில் சிலுவை பயன்படுத்தப் -பட்டுள்ளது என்று சரித்திரத்தின் மூலம் கருதப்படுகின்றது.
b. சிலுவை என்ற இந்தச் சொல் 'லத்தின்' மொழியின் சொல்லான "க்ரக்ஸ் (crux)" என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். ஆதலால் இதை "குருக்ஸ் என்றும், "குரூஸ்" என்றும், அழைப்பார்கள்.
C. வெகு காலத்திற்கு முன்பே கிரேக்கர்களின் பாக்கஸ் தீரு தேசத்தாரின் "தம்முஸ்', கல்தேயரின் "பெல்", ஸ்காண்டினேவியரின் 'ஓடின்" போன்ற விக்கிரகங் -களின் அடையாளச் சின்னமாகவும் சிலுவை பயன்படுத்தப் பட்டுள்ளது.
d. சிலுவை என்ற வார்த்தையைச் சொல்ல, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் "ஸ்டாரஸ்" என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். "ஸ்டாரஸ்" என்ற வார்த்தையானது செங்குத்தானக் கம்பம் அல்லது கழுமரம் என்பதைக் குறிக்கிறதாகும்.
e. தி இம்சீரியஸ் பைபிளின்-அகராதி சிலுவையை கழு மரம் என்று சொல்வதை ஒப்புக்கொள்ளகிறது.
II. சிலுவையும் ரோமர்களும்:
a. ரோமானியர்கள் இந்த சிலுவையின் தண்டணை முறையை பிற நாட்டுக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்க்காக கி.மு முதல் நூற்றாண்டு முதலே பயன்படுத்தி -யுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றது.
b. செல்வாக்குள்ள சிலரைத் தவிர, தண்டனைப்பெற்ற குற்றவாளிகள் அணைவரையும், நிர்வாணமாகவே ரோமர்கள் சிலுவையில் அறைந்து கொள்ளுவார்கள்.
c. ரோம அரசாங்கத்தினர் பல்வேறு அளவுகளில் சிலுவைகளைச் செய்து, பொருள் கிடங்கில் வைத்திருப்பார்கள்.
d. ரோமர்களில் யார் எவ்வளவு பெரிய துரோகியாக இருந்தாலும், சிலுவையில் கொல்லப்பட மாட்டார்கள். அடிமைகளும், அந்நியர்களும் மட்டுமே சிலுவையில் கொள்ளப்படுவார்கள்.
e. இந்தியாவில் தூக்குதண்டனையைப் போன்று, பார சீகர்களும், மேதியர்களும், சீரியர்களும், மரணத் தண்டணையை நிறைவேற்ற சிலுவையையேப் பயன்படுத்தினர்.
f. கி.மு 27ல் ரோம ராயனாக அகுஸ்து சீஷர்" என்பவரும் யூதேயாவை உள்ளடக்கின சீரிய ஆளுனராக "குரேனியுவும் இருந்த நாட்களில் தான், யூதேயாவிளுள்ள பெத்லெகேமில் இயேசு பிறந்து வளர்ந்தார் (லூக் 2:1,2) இயேசுவின் புரட்சிகரமான வாரத்தைகளும், வல்லமை மிக்க செயல்களும் ரோம ஆளுனர்களை பயம் கொள்ள வைத்தது. அதனால்தான், இயேசுவை சிலுவையில் அறைந்து, கொள்ள வேண்டுமென்று யூதாஸ்காரியோத் மூலம் பலிதீர்க்கும் காரியத்தை ஆரம்பித்தார்கள்.
III. சிலுவையின் நிலை: கொலோ 2:15
a. சிலுவையானது 7 அல்லது 7.5 அடியாக இருந்துள்ளது. ஏனெனில் யோவா 19:29 ன் படி இயேசுவுக்குத் தாகம் உண்டானபோது 1 அல்லது 2 நீளம் மட்டுமேயுள்ள ஈசோப்புத் தண்டில் புளித்த திராட்சைரசத்தில் ஊறின கடற் பஞ்சை பொருத்தின ஒருவன் அதை இயேசுவின் வாய்க்கு அருகே நீட்டினான் என்பதிலிருந்து, சிலுவை தரையில் நாட்டப்பட்டப் பின்பு, ஒரு ஆள் உயரத்திற்கும் சற்று உயர்வாகத்தான் இருந்திக்கும்.
b. ஒரு முழுமையான சிலுவை என்பது நான்கு விதங்களில் இணக்கப்படும்.
1. நெடுமரத்தின் நுனியில் குறுக்கு மரத்தை இணைத்தல்
2. சற்று கீழே இறக்கி இணைத்தல்
3. சரியாக நடுவில் இணைத்தல்
4. நடுபாகத்தில் பொருத்தி கூட்டல் (t) குறி போன்று, அல்லது பெருக்கல் (x) குறி போன்று வைப்பார்கள்
C. சில சிலுவைகளில் கை மற்றும் காள்களில் அடிக்கப்படும் ஆணிகள் ஊடுறுவுவதற்க்காக ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும்.
d. சிலுவை என்பது இரண்டு மரத்துண்டுகளால் ஆனது. அவை, ஒன்று: நெடுமரம், இரண்டு: குறுக்கு மரம் என்றும் சொல்லப்படும்.
e. இயேசுவின் சிலுவை ஒருபோதும் பாலீஸ் செய்யப்பட்டது கிடையாது. அது கரடுமுரடாகத்தான் இருந்திருக்கும். காரணம், அக்காலத்தில், இயேசுவை சிலுவையில் அறைந்த யூதர்களும், சிலுவையில் அறைய கட்டளையிட்ட ரோமர்களும் முரடர்களாகத்தான் காணப்பட்டனர்.
f. ஒரே சிலுவையில் அடிக்கடி அநேகரை அறையும் பழக்கமும் இருந்தது. அதை யாரும் சுத்தம் செய்யாததினால் அது எப்பொழுதும் அசுத்தமாகவும், இரத்தக்கரைகளோடும், நாற்றமெடுக்கக் கூடியதாகவும் இருந்துள்ளது.
g. சிலுவையில் தொங்குபவரின் முழு எடையையும் அவர்களின் கைகளே தாங்கும் நிலை உருவாவதால் மூச்சுத்தினறலும், சோர்வும், நீரிழப்பும் ஏற்படுவதுடன் இரத்த ஓட்டமும் பாதிக்கப்படும். நிர்வாண நிலையில், நெஞ்சடைத்து தாகம் ஏற்படும். ஏதோ சில வார்த்தைகளை சொல்ல விரும்பியும் சொல்ல முடியாமல் சாவு என்னும் மரணத்துடன் போராடுவதே சிலுவை தண்டணையின் உச்சக்கட்ட வேதனையாகும்.
h. சிலுவையின் மரணம் வழங்கப்படும் இடம் எழும்புகளும், எழும்புக் கூடுகளும், மண்டையோடுகளும், இரத்தக்கரைகள் நிறைந்ததும், ஊறுக்கு அப்பால் உள்ள இடமுமாயிருக்கும்.
i. சிலுவையில் அறையப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் பொதுவாக அதிலேயே தொங்கிக்கொண்டிருக்கும். அவற்றைத் தின்ன பறவைகள், எலிகள், இன்னும் வேதம் சொல்வதுப் போல சில நேரத்தில் பெரிய பெரிய கழுகும் வந்து அழையும் (ஆதி 40:19).
j. பெருபாலும் மரணத்தண்டனை குற்றவாளிகளின் கழுத்தில் ஒரு பலகையைத் தொங்கவிட்டு, ஊர்வமாக அழைத்துச் செல்வார்கள். அதில் இவன் என்னைக் குற்றத்திற்காக மரணத்தண்டணை அடைந்தான் என்றக் காரணம் எழுதப்பட்டிருக்கும்.
ஆனால், இயேசுவை சிலுவையில் அறைந்தப்பின்னர் தான் பிலாத்துவின் உத்தரவு போர்வீர்களுக்குக் கிடைத்தது(மத் 27:37). அதனால், இயேசுவின் கழுத்தில் பலகை தொங்கவிடப்படவில்லை.
k. கடந்த காலங்களில் மரணத்தண்டணை மூன்று விதங்களில் தனித்தனியாக வழங்கப்பட்டது;
1. கல்லெறிந்து கொள்ளப்பட்டனர் (யோசு 7:25,26).
2. உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்டனர் (சங் 106:18; வெளி 17:16).
3. மரத்திலே தொங்கவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். (எஸ்த 2:23; ஆதி 40:19).
l. கொல்கொதா மலையில் இரண்டு மரத்துண்டுகளையும் இணைத்து இயேசுவைக் கிடத்தி, கால்களைக் கயறு கொண்டு கட்டினப் பின்பு, முதலில் ஒரு கையில் ஆணி அடித்தபோது, சிலுவையின் ஓட்டை வழியே அந்த ஆணி மறுபக்கம் வந்திருக்கும். அடுத்தக் கையில் ஆணி அடிக்க ஓட்டை பொருத்தமாயிராமல் இருக்குமானால், இயேசுவின் கையில் கயறு கட்டி உல்லின் மீது ஒரு காலை வைத்து மிதித்துக் கொண்டு கயிற்றை பிடித்து இழுத்து ஓட்டைக்கு நேராக வைத்து மற்றொறு கையில் ஆணி அடித்திருப் -பார்கள்.
இப்படி கயறு கட்டி இழுப்பதால் தோல்பட்டையின் உள்பகுதிகள் கிழிந்து போகும். அதனால் இன்னும் வேதனை கடுமையாயிருக்கும். அதனால் ஆணிகள் அறைந்த பின்பு,சிலுவையை புறட்டிப்போட்டு, ஆணிகளை வலைத்து விடுவார்கள். அந்நேரத்தில் இயேசுவின் முதுகின் மீது பாரமான மரச்சிலுவை அழுத்திக்கொண்டிருந்திருக்கும்.
m. எழும்புத்துண்டுகளையும், இரும்பு குண்டுகளையும், இரும்பினாலான கொக்கிகளையும் இடை இடையே இணைத்துப் பிண்ணப்பட்டிருந்த சவுக்கி -னால் இயேசுவை அடித்திருந்தனர். அப்படி கொடூரமான முறையில் அடித்திருந்ததால் அவரின் தோல் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. இப்படி மகாகொடிய காயத்தோடுதான் இயேசு சிலுவையை சுமந்துக் கொண்டு போனார்.
n. பிலாத்துவின் அரண்மனையிலிருந்து கொல்கொதா மலை வரைக்கும் சிலுவையை தூக்கிக் கொண்டுப் போகும்போது வழியில் மூன்று விசை இயேசு தடுமாறித் தள்ளாடினதாக வரலாறு சொல்லுகிறது.
o. இந்த இயேசுவைக் கண்டு நாம் பரிதாபப்பட்டு அழ வேண்டும் என்பதற் -க்காக அவர் பாடுபடவில்லை. மனிதகுலம் அணைத்தும் பரலோகம் வந்து சேர வேண்டும் என்பதற்க்காகவே அவர் பாடுபட்டார்.
p. சிலுவை என்பது இயேசுவின் மரணக் கருவியாகவும், கிறிஸ்த்தவர் -களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது.
q. சிலுவையில் அறையப்பட்ட இயேசு என்று சொல்லி, படத்தை வரை -கிறவர்கள் அதையும் அழகாகவே வரைந்து வைத்திருக்கிறார்களே ஏன்? என்று கேள்வி கேட்டபோது, இயேசுவின் மேலுள்ள அன்பினால் என்று சொன்னால் அது பொய் என்று புறிந்துக் கொள்ள வேண்டும்,
IV. வரலாற்றுக் குறிப்புகள்
1. சிலுவையின் குன்று (Hill of Crosses):
வட லித்துவேனியாவில் அமைந்துள்ள சியாவுலியாய் நகரின் வடக்கில் 12 கி.மீ தூரத்தில் உள்ளது சிலுவையின் குன்று. இது கிறிஸ்தவ யாத்ரீகர்கள் செல்லும் இடமாகும். 1831ம் ஆண்டு, இங்கு முதல் முதல் ஒரு சிலுவை வைக்கப்பட்டது.
பின்பு, அதுவே பாரம்பரிய பழக்கமாக மாறிப்போய் இப்போது ஏறாளமான சிலுவைகள் அங்கு பெருகிப் போயுள்ளான. 1990 ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ 55,000க்கும் அதிகமான சிலுவைகள் காணப்பட்டன. அதுவே கடந்த 2006ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,00,000 அதிகமான சிலுவைகள் அந்த குன்றின் மீது நடப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.
2. தமிழ்நாட்டில் ஓர் சிலுவைச்சேரி
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓர் கிராமம் தான் சிலுவைச்சேரி. இந்த ஊரில் அய்யனார் கோவிலும், மாரியம்மன் கோவிலும் பிரபல்யமானது. அப்படிப்பட்ட பிரபல்யத்திற்கு மத்தியில் அந்த ஊரின் பெயர் சிலுவையை சுமந்து கொண்டு இருப்பதால் இது ஓர் கிறிஸ்தவர்களின் ஊர் என்றே அணைவராலும் கருதப்படுகின்றது..
3. சிலுவைப் போர்கள்
இலத்தின் திருச்சபையின் அனுசரணையுடன் இடம் பெற்ற மதம் சார்ந்த போர்களின் தொடர்தான் சிலுவைப்போர் ஆகும்.
1. இஸ்லாமியரிடமிருந்து எருசலேமை மீட்பது
2. பாகனிய நெறிகளை ஒடுக்குதல்
3. மத நிந்தனையை இல்லாததாக்குதல்
4. ரோமன் கத்தோலிக்க குழுக்களுக்கான போட்டி நிலை -மைக்கு தீர்வுக்காணுதல்
என்பவைகள்தான் சிலுவைப் போரின் முக்கியக் காரணமாக இருந்தது.
1095 முதல் 1272 வரையும் ஏறத்தால ஒன்பது சிலுவைப் போர்கள் நடைபெற்றுள்ளன.
4. எசுப்பானிய நாட்டின் தலைநகரான மத்ரித் என்ற பட்டணத்தில் உலகின் உயரமான சிலுவை அமைந்துள்ளது.
5. பாகிஸ்தான் சிலுவை
பாகிஸ்தான் நாட்டின், கராச்சி பட்டணத்தில் கோரா கப்ரிஸ்தான் என்ற கல்லறைக்கருகில், ஆசியாவிலேயே பெரிய சிலுவையை பர்வேஸ் ஹென்றி கில் என்ற வியாபாரி கடந்த 2015ம் ஆண்டில் கட்டினார். இந்த சிலுவையானது 140 அடி (42.7 மீட்டர்) அளவு உயரம் கொண்டதாகும்.
என்ன கட்டுகிறோம் என்பதை முதலில் அவர் யாருக்கும் சொல்ல -வில்லை, ஓரளவு கட்டியப் பின்னர்தான் சிலுவை என்று தெரியவந்தது. அதனால், தொழிளாலர்கள் வேலையை பாதியிலேயே விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
ஆனாலும் ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம் வாரத்தின் ஏழு நாட்களும், ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேளை செய்து கட்டிமுடிட்த்தனர். யாராவது இந்த சிலுவையைத் தாக்கலாம் என்று நிணைத்ததால், குண்டு துழைக்காத வகையில் இந்த சிலுவை கட்டப்பட்டுள்ளது.
V. கருத்துக்களும் கேள்வியும்
கருத்து 1
a) "X" - CRUX DECUSSATA
b) "T" CRUX COMMISSA
c] “+" -- CRUX IMMISSA -CRUX SIMPLEX
இதில் எந்த வகை சிலுவையில் இயேசு அறையப்பட்டார் என்ற கேள்வியோடு கூடிய பெரிய விவாதம் அறிஞர்கள் மத்தில் இன்றும் உண்டு. ஆனாலும் "+ CRUX IMMISSA" வடிவிலான சிலுவையாகத்தான் இருந்திருக்கும் என்றும் பலரும் நம்புகின்றார்கள்.
காரணம்: இயேசுவின் தலையின் மீது ஓர் பலகை மாட்டப்பட்டதாக வேதம் சொல்கின்றது (மத் 27:37). அதற்கு ஏற்ற இடவசதி இதில்தான் இருந்திருக்கும் என்று நம்புகின்றனர்.
கருத்து 2:
குரூஸிஃபிகேஷன் இன் ஆன்ழகியுட்டி புஸ்தகம்:
இயேசுவை ஒற்றை நேர் மரத்துண்டில்தான் சிலுவையில் அறைந்தனர். அதனால் அதனை சிலுவை என்று சொல்ல முடியாது என்று இந்த புஸ்தகம் விவரிக்கிறது.
கருத்து 3
இயேசு இறந்து சுமார் 300 வருஷங்களுக்குப் பிறகு, ரோம பேரரசனான கான்ஸ்டன்டைன், சிலுவையை தன்னுடைய ராணுவப் படைகளின் சின்னமாக பயன்படுத்தினார். காலப்போக்கில் அதுவே சின்னமாக மாறிப்போனது.
கருத்து - 4:
எழுத்தாளரும், தொல்லியலாளருமான அடால்ப் நப்பாலேயன் டிரான் என்பவரின் கருத்து:
கிறிஸ்துவுக்குச் சமமாய் இல்லையென்றாலும், அவரைப்
-போலவே சிலுவையும் வழிபாட்டிற்குறிய ஒன்றாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. சொல்லப்போனால் மரத்தினால் செய்யப்பட்ட இந்த புனிதச் சின்னம் ஏறக்குறைய கடவுளுக்குச் சமமாகவே சில இடங்களில் பூஜிக்கப்படுகின்றது.