நிறைவேற வேண்டிய முன்னறிவிப்புக்கள்
1. ஏசாயா 2:2-4ஆவது வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனம், ஆயிரம் வருஷ அரசாட்சியின் போது கர்த்தருடைய நாளில் அதாவது கடைசி நாட்களில் நிறைவேறும் (ஏசா 2:2; மீகா 4:1)
2. கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும் (ஏசா 2:2).
3. எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். (ஏசா 2:2; மீகா 4:1; சக 14:16-21).
4. திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள். (ஏசா 2:3; மீகா 4:2)
5. சீயோனி-ருந்து வேதம் வெளிப்படும். (ஏசா 2:3; மீகா 4:2).
6. எருசலேமி-ருந்து கர்த்தரின் வசனம் வெளிப்படும். (ஏசா 2:3; ஏசா 11:9; ஏசா 52:7; ஏசா 66:19-21; மீகா 4:3).
7. கர்த்தர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார். (ஏசா 2:4; ஏசா 11:1-10; மீகா 4:3).
8. திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார். (ஏசா 2:4; ஏசா 11:4-5; சக 14:9,16-21).
9. எல்லா ஜாதியாரும் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள் (ஏசா 2:4; மீகா 4:3).
10. ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. (ஏசா 2:4; மீகா 4:3).
1 1. கர்த்தரின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்வார்கள். (ஏசா 2:10,19,21; மத் 24:29-31). இது வெளி 6:12-17 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் ஆறாவது முத்திரையின்போது நடைபெறப் போகும் சம்பவமல்ல. இந்தச் சம்பவம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு பல வருஷங்களுக்கு முன்பு நடைபெறும்.
1 2. நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும் (ஏசா 2:11,17).
13. கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.
14. எல்லாம் தாழ்த்தப்படும் பொருட்டு சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும் வரும். (ஏசா 2:12).
15. லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாக் கேதுருக்களின் மேலும் நியாயத்தீர்ப்பு வரும். (ஏசா 2:13).
16. உன்னதமான எல்லாப் பர்வதங்களின் மேலும், உயரமான எல்லா மலைகளின் மேலும் நியாயத்தீர்ப்பு வரும். (ஏசா 2:14).
17. உயர்ந்த எல்லாக் கோபுரத்தின் மேலும், அரணான எல்லா மதி-ன் மேலும் நியாயத்தீர்ப்பு வரும். (ஏசா 2:15).
18. தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும். (ஏசா 2:16).
19. எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும்.
20. விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம். (ஏசா 2:18).
21. பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்புவார். (ஏசா 2:19-21; வெளி 16:17-21; வெளி 18:1-24).
22. பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே.........தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான். (ஏசா 2:20-21).
நிறைவேறிய முன்னறிவிப்புக்கள்
1. யாக்கோபின் வம்சத்தாராகிய தம்முடைய ஜனத்தைக் கர்த்தர் கைநெகிழ்ந்தார். (ஏசா 2:6-9).
2. கீழ்த்திசையார்கள் அவர்களை சிறைப் பிடித்துச் செல்வார்கள். (ஏசா 2:6-9)
3. பாலஸ்தீன தேசத்தில் கீழ்த்திசையார்கள் நிறைந்திருப்பார்கள்.