நீதிமான் பாக்கியவான்
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 1:2).
நீதிமான் நற்கிரியைகளைச் செய்வார் நன்மையானதைப் பற்றிக்கொள்வார். தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவார். தேவனுடைய ஆலோசனையின் பிரகாரம் ஜீவிப்பார். நீதிமான்கள் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருப்பார்கள். இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருப்பார்கள். தேவன் இருக்கிறார் என்று விசுவாசித்து சந்தோஷப்படுகிறவர்கள், அவருடைய பரிசுத்த வேதாகமத்திற்காகவும் சந்தோஷப்படுவார்கள் பரிசுத்த வேதாகமம் தேவனுடைய வெளிப்பாடு. கர்த்தர் தம்முடைய தெய்வீக சித்தத்தை பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். நம்முடைய ஜீவியத்தில் சந்தோஷம் உண்டாகவேண்டுமென்றால் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவருக்குப் பிரியமான வழியில் ஜீவிக்கவேண்டும்.
/p>
நீதிமான்கள் இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கிறார்கள். கர்த்தருடைய வார்த்தையைத் தியானிக்கும்போது, அவருடைய வார்த்தைகள் நம்முடைய ஆத்துமாவோடு பேசும் தேவனுடைய வசனங்களை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். தியானிக்கவேண்டும். நம்முடைய இருதயத்தில் தேவனுடைய சிந்தனை நிரம்பியிருக்கவேண்டும். கர்த்தருடைய சித்தத்தை அறிந்துகொண்டு, அதற்கு நம்முடைய ஜீவியத்தை ஒப்புக்கொடுக்கவேண்டும். நம்முடைய ஜீவியத்தில் கர்த்தருடைய வல்லமை கிரியை நடப்பிக்கவேண்டும் நம்முடைய இருதயத்தில் இரட்சிப்பின் அனுபவமும், இரட்சிப்பின் வல்லமையும் நிரம்பியிருக்கவேண்டும். கர்த்தருடைய வசனமே நம்முடைய ஜீவியத்தை ஆளுகை செய்ய வேண்டும்.
யாரெல்லாம் பாக்கியவான்கள்
1. வேதத்தில் தியானமாயிருக்கிறவன் (சங் 1:1; சங் ஏசா 56:2)
2. தேவனை அண்டிக்கொள்ளுகிறவர்கள் (சங் 2:12 சங் 34:8; சங் 40:4; சங் 84:12)
3. மீறுதல்கள் மன்னிக்கப்பட்டவர்கள் (சங் 32:1)
4. அக்கிரமத்திலிருந்து விடுபட்டவர்கள் (சங் 32:2)
5. அகங்காரிகளை நோக்காதவர்கள் (சங் 40:4)
6. பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களை நோக்காமலிருப்பவர்கள் (சங் 40:4)
7. சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் (சங் 41:1)
8. கர்த்தருடைய பிரகாரங்களில் வாசமாயிருக்கும்படி சேர்த்துக் கொள்ளப்படுகிறவன் (சங் 65:4)
9. கர்த்தருடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் (சங் 84:4)
10. கர்த்தரிலே பெலன் கொள்ளுகிற மனுஷன் (சங் 84:5)
11. தேவனுடைய கம்பீர சத்தத்தை அறியும் ஜனங்கள் (சங் 89:15)
12. கர்த்தரால் சிட்சிக்கப்பட்டவன் (சங் 94:12)
13. கர்த்தருக்குப் பயப்படுகிறவன் (சங் 112:1; சங் 128:1)
14. வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார்கள் (சங் 119:1)
15. கர்த்தருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் (சங் 119:2)
16. கர்த்தருடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் (நீதி 8:32,34)
17. ஞானத்திற்கு செவி கொடுக்கிற மனுஷன் (நீதி 8:34)
18. உத்தமத்திலே நடக்கிற நீதிமானுடைய பிள்ளைகள் (நீதி 20:7)
19. ராஜா குலமகனாய் இருக்கிற தேசம் (பிர 10:17)
20. கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட
21. ஜாதி (சங் 33:12) 21. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் (ஏசா 30:18)
22. ஆயிர வருஷ அரசாட்சியில் நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைக்கிறவர்கள் (ஏசா 32:20)
23. உபத்திரவ காலத்தின் வழியாக ஜீவித்தவன் (தானி 12:12)
சங்கீதக்காரர் மூன்று விதமான பாவிகளைக் காண்கிறார் அவர்கள் துன்மார்க்கன், பாவி, பரியாசக்காரன் என்பவர்களே! (வெளி 4:11)
நீதிமானின் நற்குணங்களை அவன் கிரியைகள் வெளிப்படுத்தும்
நீதிமானின் கிரியைகள்
1. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருப்பான் (சங் 1:2)
2. இரவும், பகலும் கர்த்தருடைய வேதத்தை தியானிப்பான் (சங் 2)
3. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்கமாட்டான் (சங் 1:1)
4. நீதிநெறியில் ஜீவிப்பான் (யாக் 1:22#27)
5. கர்த்தரை விசுவாசித்து ஜீவிப்பான் (2தீமோ 3:16#17)
6. தீர்க்கதரிசன வசனங்களை வாசித்து, அதைக் கைக்கொள்வான் (மத் 24:15; எபே 3:4; வெளி 1:3)
7. ஆவிக்குரிய காரியங்களில் வளருவான் 1பேதுரு 2:1#3; ரோம 10:17
நீதிமான் செய்வதெல்லாம் வாய்க்கும்
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போ-ருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங் 1:3).
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிறவர்களும், அவருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாயிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கிறார். அவர்களுக்கு அநேக நன்மைகளை வாக்குத்தத்தமாகக் கொடுக்கிறார் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள். கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும்போது நமக்குள் பூரண சந்தோஷம் நிரம்பியிருக்கும் நன்மையும் பரிசுத்தமும் மாத்திரம் நமக்கு பூரண சந்தோஷத்தைக் கொடுத்துவிடாது. கர்த்தருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்களே பாக்கியவான்கள்
(வெளி 22:14). இவர்களே பரிபூரணமான சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்வார்கள். கர்த்தருடைய கற்பனைகளின்படி செய்வதே மெய்யான சந்தோஷம்
நீதிமான்கள் கர்த்தருடைய வசனத்தை தங்களுடைய ஜீவியத்திற்கு வழிகாட்டியாக
அமைத்துக்கொள்கிறார்கள். கர்த்தர் தங்களுக்கு நியமித்து வைத்திருக்கிற கடமைகளை உண்மையாயும், உத்தமமாயும் நிறைவேற்றுகிறார்கள். நீதிமான்கள் கனிதரும் விருட்சத்தைப் போன்றவர்கள். இவர்கள் இலையுதியராதிருக்கிற மரத்தைப் போன்றவர்கள் இவர்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தருகிறவர்கள்.
நீதிமான்களுக்கு தெய்வீக ஆசீர்வாதமுண்டு. தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் செழித்திருப்பார்கள். நீதிமான்கள் தேவனுடைய கிருபையினால் நடப்பட்டவர்கள். நம்முடைய மாம்சசுபாவம் காட்டு ஒலிவமரத்தின் சுபாவத்தைப்போன்றது. கர்த்தரோ நம்முடைய மாம்சசுபாவத்தை மாற்றுகிறார். தம்முடைய தெய்வீக வல்லமையினாலும், கிருபையினாலும் நம்மைப் புதுப்பிக்கிறார். தம்முடைய சித்தத்தின் பிரகாரமாய் நீர்க்கால்களின் ஓரமாய் நம்மை மறுபடியும் நட்டுகிறார். நம்முடைய மாம்ச சுபாவத்தை மாற்றுகிறார். காட்டு ஒலிவமரத்தின் சுபாவத்தை உடையவர்களாகயிருந்த நமக்கு, தேவன் தம்முடைய கிருபையினாலும் வல்லமையினாலும், நாட்டு ஒலிவமரத்தின் சுபாவத்தைக் கொடுக்கிறார்
நல்ல மரம் தானாய் வளருவதில்லை. கர்த்தரே நல்ல மரங்களை நாட்டுகிறார். நீதிமான்களை கர்த்தர் நாட்டியிருக்கிறார். அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்கள் என்னப்படுவார்கள் (ஏசா 61:3). கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் தேவனுடைய மகிமைக்கென்று நாட்டப்பட்டவர்கள். கர்த்தர் நமக்கு சாம்பலுக்குப் பதிலாக சிங்காரத்தைக் கொடுத்திருக்கிறார். துயரத்திற்குப் பதிலாக ஆனந்த தைலத்தைக் கொடுத்திருக்கிறார். ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையைக் கொடுத்திருக்கிறார்
தேவன் தம்முடைய கிருபையினால், நீதிமான்களை நீர்க்கால்களின் ஓரமாய் நாட்டுகிறார். நீதிமான்கள் தங்களுக்குத் தேவையான கிருபைகளையும், வல்லமைகளையும் இந்த நீர்க்கால்களிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இந்த நீர்க்கால்கள் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள். கர்த்தரே நமக்கு ஜீவத்தண்ணீராக இருக்கிறவர். ஜீவத்தண்ணீரின் நீரூற்றுக்கள் கர்த்தரிடமிருந்து புறப்பட்டு வருகிறது நாம் கர்த்தருடைய நீர்க்கால்களின் ஓரமாய்
நடப்பட்டவர்களாயிருந்தால், நாம் கனிதருகிறவர்களாயிருப்போம். இலையுதிராதிக்கிற விருட்சங்களாகயிருப்போம்.
நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டவர்கள் கர்த்தருடைய ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வார்கள் கர்த்தருடைய இரகசியமான சமுகத்திலிருந்து, நமக்குத் தேவையான கிருபையும், இரக்கமும், ஆசீர்வாதமும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். நாம் கர்த்தருடைய கிருபையில் தொடர்ந்து நிலைத்திருக்கும்போது தேவனுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்வோம். கர்த்தர் நம்முடைய சிந்தையை தம்முடைய கிருபையினால் புதுப்பிப்பார். நம்முடைய ஜீவியத்தை பரிசுத்தப்படுத்துவார்.
தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள் பிறருக்கு ஆசீர்வாதமாயிருப்பார்கள். இவர்கள் தன் காலத்தில் தன் கனியைத் தருகிற
விருட்சங்களைப்போல இருப்பார்கள். தேவனுடைய நீரூற்றிலிருந்து நீதிமான்களுக்கு ஆசீர்வாதம் வருகிறது தேவனுடைய ஆசீர்வாதம் ஒருபோதும் வற்றிப்போவதில்லை. ஆகையினால் கனிதருகிற விருட்சங்களாகயிருக்கிற நீதிமான்கள் ஒருபோதும் பட்டுப்போவதில்லை. இவர்கள் இலையுதிராதிருக்கிற விருட்சங்களைப் போலிருப்பார்கள்
ஒரு சில விருட்சங்கள் இலையுதிராமல் இருக்கும் இலைகள் அதிகமாகயிருக்கும். ஆனால் கனிதராது. இப்படிப்பட்ட விருட்சங்களினால் ஒரு பிரயோஜனமுமில்லை. கனிதராத ஜீவியம் பிரயோஜனமில்லாத ஜீவியம். ஒரு சிலர் கனியும் தரமாட்டார்கள். அவர்களுடைய இலைகளும் உதிர்ந்துபோகும். இவர்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்படவில்லை. வறட்சி காலத்தில் இவர்களுக்கு ஜீவத்தண்ணீரின் ஆசீர்வாதம் கிடைக்கவில்லை
தேவனுடைய வார்த்தை நம்முடைய இருயத்தை ஆளுகை செய்யும்போது, நம்முடைய சிந்தையும், செயலும் பசுமையாயிருக்கும். நமக்குத் தேவையான கிருபைகளும், ஆசீர்வாதங்களும், வல்லமைகளும், ஜீவனும், தேவனுடைய பரிசுத்தமான நீரூற்றிலிருந்து நமக்கு தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கும். நாம் தேவனுடைய வேதத்தில்
நாட்டப்பட்டவர்களாகயிருக்கவேண்டும். கர்த்தருடைய வசனங்கள் நம்முடைய இருதயத்திற்குள் தாராளமாய்ப் பிரவேசிக்கவேண்டும். வசனங்கள் இருதயத்தில் தங்கியிருக்கவேண்டும். நம்முடைய இருதயத்தில் தேவவசனம் நிரம்பியிருக்கும்போது நமக்கு ஆவிக்குரிய செழிப்பு உண்டாகும். ஆவிக்குரிய வறட்சி நம்மைவிட்டு நீங்கும். நாம் இலையுதிராமல் எப்போதும் இலை நிரம்பியவர்களாக
தழைத்திருப்போம். நம்முடைய காலத்தில் நாம் நல்ல கனிகளைக் கொடுப்போம்.
நீதிமான் மரத்தைப்போலவும் துன்மார்க்கன் பதரைப் போலவும் இருக்கிறார்கள். நீதிமான் கனியைத் தந்து செழிப்பான். துன்மார்க்கன் அழிவான் (சங் 1:4; சங் 35:5)
தன் காலத்தில்" என்பது ஏற்ற காலத்தில் என்று பொருள்படும். கனிதருவதற்கு நீர் பாய்ச்சி, மரத்தை பராமரிக்க வேண்டும். நாமும் ஆவிக்குரிய ரீதியாக தொடர்ந்து போஷிக்கப்படும் போது ஏற்ற காலத்தில் பலன் தருவோம்.
"இலையுதிராதிருக்கிற மரம்" என்பது செழிப்பான ஆவிக்குரிய ஜீவியத்தையும் கனிதரும் கிறிஸ்தவ ஜீவியத்தையும் குறிக்கும் (யோவான் 15:1-8)
நீதிமான் செய்வதெல்லாம் வாய்க்கும். ஆத்துமாவும் சரீரமும் ஆரோக்கியமாக இருக்கும்போது வாழ்வு வளம்பெறும். நீதிமானுடைய கரத்தின் கிரியைகளைக் கர்த்தர் ஆசீர்வதிப்பார். (யோசு 1:5-9; 1சாமு 2:7-8; யோவான் 1:2)