நெகேமியா புத்தகம் அறிமுகம்



நெகேமியா புத்தகம் ஒரு கண்ணோட்டம்

 

யூதர்களுடைய சரித்திரம் நெகேமியாவின் புஸ்தகத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. யூதர்கள் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பி வந்திருக்கிறார்கள். இக்காலத்தில் பெர்சியா தேசம் வல்லமையுள்ள தேசமாக விளங்கிற்று. பெர்சியா தேசத்தைப்போலவே கிரேக்கு தேசமும், ரோமாபுரியாரின் தேசமும் வல்லரசாக வளர்ச்சி பெற ஆரம்பிக்கிறது

 பெர்சியா தேசம், கிரேக்கு தேசம், ரோமாபுரியாரின் தேசம் ஆகியவற்றைப்பற்றிய சரித்திர சம்பவங்கள் ஏராளமாய் உள்ளன. ஆனாலும் இக்காலத்தில் யூதர்களுடைய தேசத்தின் சரித்திரத்தைப்பற்றி, பரிசுத்த வேதாகமத்தில் மாத்திரமே சொல்லப்பட்டிருக்கிறது

 எஸ்றாவும், நெகேமியாவும் ராஜாக்களல்ல. அவர்கள் பெரிய சேனைக்கு தளபதிகளுமல்ல. அவர்கள் எந்த தேசத்தின்மீதும் யுத்தம்பண்ணவுமில்லை. அவர்கள் அக்காலத்தில் பேர் பெற்ற தத்துவ ஞானிகளோ அல்லது சிறந்த பேச்சாளர்களோ அல்ல. இவர்கள் இருவரும் கர்த்தருக்கு பயந்து ஜீவிக்கிறவர்கள் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறவர்கள். இவர்கள் தங்கள் காலத்தில் இஸ்ரவேல் ஜனத்தாருக்கு, தங்களால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறார்கள்

 கர்த்தருடைய பார்வையில் எஸ்றாவும் நெகேமியாவும் மிகவும் விசேஷித்தவர்கள். இக்காலத்தில் பிளாட்டோ போன்ற தத்துவ ஞானிகள் இருந்தாலும், அவர் உலகப்பிரகாரமான ஜனங்களுக்கு முக்கியமானவராகயிருந்தாலும், கர்த்தருக்கு எஸ்றாவும் நெகமியாவுமே முக்கியமானவர்களாயிருக்கிறார்கள்

 மேலும் படிக்க........ மற்றும் word document Download செய்ய.......










Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.