தூய ஆவியானவர்
தேவத்துவத்தின் மூன்று நபர்களாக பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் இருப்பதை நாம் அறிவோம் தேவதுவக்தில் இருக்கும் ஆவியானவரைப்பற்றிய குறிப்புகளைக் காண்போம்
ஆவியானவர் ஒரு நபர்
பரிசுத்த ஆவியானவர் ஏதோவொரு ஆவியோ அல்லது வல்லமையோ அல்ல, அவர் ஒரு நபர் ஆவர். தானாக சிந்திக்கும் திறனும் செயல்படும் திறனும் ஆலோசனை சொல்லும் மனப்பக்குவம் உணர்ச்சிகளும் வழிநடத்தும் ஆற்றலும் இருப்பவர் ஒரு நபர் தானே. ஆவியானவரை துக்க படுத்த முடியும் (எபே.4:30; ஏசா.63:10). மனிதர் மூலம் பேசும் ஆற்றல் அவருக்கு உண்டு (2 சாமு.23:2; மத்.22:43; 2 பேது.1
21), மனிதருக்குக் கட்டளையிடுகிறார் (1நாளை.26:12), வெளிப்படுத்துகிறார் (1 கொரி.2:10). போதிக்கிறார் (யோவான்.14:26), அறிவை உணர்த்துகிறார் (நெகே.9.20), சாட்சி கொடுக்கிறார் (யோவான்.15:26: 1 யோவான்.5:8), ஞானம், உணர்வு, ஆலோசனை, பெலன், அறிவு, கர்த்தருக்கு பயப்படும் பயம் ஆகியவற்றை அருளுகிறார் (ஏசா.11:2), நினைப்பூட்டுகிறார் (யோவா.14:26).
மனிதரை நியாயந்தீர்ப்பார், சுத்திகரிக்கிறார் (ஏசா.4:3). மனிதரிடம் பேசுகிறார் (அப்.8:29; 10:19-20). நற்செய்திப் பணியை வழிநடத்துகிறார் (அப்.11:12; 13:2), பயணத்தைத் தடை செய்கிறார் (அப்.16:6-7), மனிதர்களை இடம் விட்டு இடம் கொண்டுசெல்ல அவரால் முடியும் (அப்.8:39; சே.3:12-14; 8:3; 11:1,24; 43:5), அவரைச் சோதிக்க முடியும் (அப்.5:9), அவரிடம் பொய் சொல்ல முடியும் (அப்.5:3), நமது எதிரியை அடையாளம் கண்டு அவனை எதிர்த்துச் செயல்படுகிறார் (ஏசா.59:19) அவருக்குச் சிந்தை உண்டு (ரோம.8:27), சித்தம் உண்டு (1 கொரி.12:11). தமது சித்தப்படி வரங்களைப் பகிர்ந்தளிக்க அவருக்கு அதிகாரம் உள்ளது. (1 கொரி.12:11), உருவமாகக் காட்சியளிக்க அவரால் முடியும் (மத் 3:16). இவற்றினின்று பரிசுத்த ஆவியானவர் ஒரு நபர் என்பதை அறிகிறோம்.
ஆவியானவர் தேவன், கர்த்தர்
அப்.5:3-4 இலிருந்து பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பதை அறிகிறோம். அவர் கர்த்தர் என்பதை 2 கொரி.3:17-18 கூறுகின்றது. உலகத்தை உருவாக்குவதில் அவர் ஈடுபட்டிருந்தார் (ஆதி.1:2). பிதாவோடு சேர்ந்து குமாரனை அனுப்பினார் (ஏசா.48:16). திருமுழுக்கிலும் (மத்.28:19-20) ஆசீர்வாதத்திலும் (2 கொரி.13:14) பிதாவோடும் குமாரனோடும் இணைந்துள்ளார். மேலும் ஆண்டவர் பேசியதாக ஏசா.6:9-10 இல் கூறப்பட்டுள்ளதைப் பரிசுத்த ஆவியானவர் பேசினார் என்று அப்.28:26-27 இல் எழுதப்பட்டுள்ளது. எனவே ஆவியானவர் தெய்வீகமானவர்.
ஆவியானவர் பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமானவர்
இதற்குச் சான்றுகள்:
1) ஆவியானவரைப் பிதாவும் குமாரனும் அனுப்பியது போன்று (யோவான்.14:16,25; 15:26) குமாரனைப் பிதாவும் ஆவியானவரை அனுப்பினர் (ஏசா.48:16).
2 ஆவியானவரின் ஆற்றலால்தான் இயேசு மரியாளின் கர்ப்பத்தில் உருவானார் (மத்.1:18,20; துர்க்.1:35)
3. கிறிஸ்து பரிசுத்த ஆவியானவருக்குள் திருமுழுக்கு தருவது போன்று (மத்.3:11) பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் நமக்குத் திருமுழுக்கு தருகிறார் (1 கொரி.12:13),
4. தண்ணீர் திருமுழுக்கு தருவதற்கு, பிதா குமாரன் பரித்த ஆவியானவரின் திருப்பெயர் கூறப்படுகின்றது (மத்.28:19-20).
5. ஊழியங்களில் ஆவியானவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பிதாவாகிய தேவனும் இணைந்து செயல்படுவதை 1 கொரி.12:4-6 இல் காண்கிறோம்.
6. ஆவியானவர் வருங்கால நிகழ்ச்சிகள் அறிவிக்கிறார் என்பது அவரது தெய்வீகப் பண்பை குறிக்கிறது
7. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதம் சபைக்குக் கூறப்பட்டுள்ளது (2 கொரி.13:14; வெளி.1:4-5)
இன்னும் பல ஆதாரங்கள் உண்டு. பிதாவும் குமாரனும் ஆவியானவரும் சமமாயிருந்தபோதிலும் தேவத்துவத்தின் தலைமைப் பொறுப்பு பிதாவிடத்தில் உள்ளது என்பது முக்கியமான உண்மையாகும் (யோவான்.10:29; 14:28; 1 கொரி.11:3; 15:28).
ஆவியானவரின் செயல்கள்
1. படைப்பில் :
உலகைப் படைப்பதில் ஆவியானவர் செயல்பட்டார் (ஆதி.1:2; யோபு 26:13; சங்,104:30).
2. வேதத்தை அருளுவதில் :
முழு வேதம் ஆவியானவரால் அருளப்பட்டது (2 தீமோ.3:16-17; 2 Gug.1:20-21).
3. இயேசுவின் பிறப்பில், வாழ்க்கையில் :
ஆவியானவரின் ஆற்றலால் கன்னி மரியாள் இயேசுவை கர்ப்பந்தரித்தார் (மத்.1:18-21; லூக்.1:31-35). இயேசு திருமுழுக்கு பெற்று கரையேறியபோது அவர்மேல் ஆவியானவர் இறங்கினார் (மத்.3:16). இயேசு சோதிக்கப்படும்படி அவரை வனாந்தரத்துக்கு வழி நடத்தினார் (மத்.4:1). இயேசு ஆவியானவராலே அற்புதங்கள் செய்தார் (மத்.12:28). இயேசு தம்மைப் பலியாக ஒப்புக்கொடுப்பதற்கு ஆவியானவர் செயல்பட்டார் (எபி.9:14), இயேசுவின் உயிர்த்தெழுதலில் ஆவியானவர் செயல்பட்டார் (ரோம.1:5). இயேசுவை மகிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றார் (யோவான்.16:14).
4. மனிதனின் இரட்சிப்பில் :
ஆவியானவரின் செயல்பாடின்றி ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது பாவத்தைத்குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக்குறித்தும் கண்டித்து உணர்த்துகிறார் (யோவான்.16:7-8), ஒரு மனிதன் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்ளும்பொழுது கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் ஒரு உறுப்பாகும். இவ்வாறு கிறிஸ்துவின் சரீரத்துக்குள் அவனுக்குத் திருமுழுக்கு கொடுப்பதும் ஆவியானவரே (1 கொரி.12:13). இதைக் கிறிஸ்துவுக்குள் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடுதல் என்று எபே.1:13 கூறுகிறது. இந்நிகழ்ச்சியை இரட்சிப்பு, மீட்பு, மறுபடியும் பிறத்தல் புது சிருஷ்டியாதல், தேவனுடைய பிள்ளையாதல் என்ற பல பெயர்களால் அழைக்கிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று நம்முடைய ஆவியுடனே சாட்சி கொடுப்பவரும் அவரே (ரோமர்.8:15-16).
5. மனிதனைப் பலப்படுத்தி ஊழியங்களை வழிநடத்துவதில் :
ஆவியானவரின் திருமுழுக்கு பெறும் போது தான் நாம் பெலனடைகிறோம் (அப்.1:8). நம்மைத் தேற்றுகிற மிகவும் தேவையான பணியை அவர் செய்கிறார். ஏனெனில் அவர் தேற்றரவாளன் (யோவா.14:16), நாம் கர்த்தருக்கென்று பாடுபடும்பொழுது விசாரிக்கப்பட்டால், அவர் நம்மிலிருந்து பேசுவார் (மத்.10:19-20). சகல சத்தியத் திற்குள்ளும் வழிநடத்துகிறார் (யோவான்.16:13). தேவனுடைய பிள்ளைகளுக்கு ஆவியின் வரங்கள் பகிர்ந்தளிக்கும் (1 கொரி.12:4,11). நற்செய்திப்பணியில் நம்மை வழிநடத்துகிறார் (அப்.11:12; 13:2; 16:6 நமக்காகப் பரிந்து பேசுகிறார் (ரோம.8:26-27). ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளவும் (யோவான்.4:24) ஆவியோடும் சுருத்தோடும் ஜெபிக்கவும் உதவுகிறார் (1 கொரி.14:14-15),
ஆவியானவருக்கு எதிரான பாவங்கள்
1. பரிசுத்த ஆவியானவருக்கு எதிர்த்து நிற்பது (அப்.7:51). உண்மையான ஊழியர்களுக்கும் ஊழியருக்கும் எதிராக செயல்படுதல்
2. பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக அவதூறாகப் பேசுதல் (மத் 12:31-32). இந்தப் பாவத்திற்கு இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பு இல்லை. சத்தியத்தை அறிந்தவர்கள் கிருபையின் ஆவியை நிந்திப்பது கொடிய பாவம் ஆகும் (எபி.10:26-29). "
3. பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய் சொல்லுதல் (அப்.5:3-4). இதன் விளைவை அப்.5:1-10 இல் காணலாம்
4. பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துதல் (எபே.4:30). கசப்பு, கோபம், மூர்க்கம், கூக்குரல், தூஷணம், துர்க்குணங்கள், மன உருக்கமின்மை, பிறரை மன்னியாமலிருத்தல் போன்றவை ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் காணப்பட்டால் பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுவார் (எபே 4:31-32),
5. ஆவியை அவித்துப்போடுதல் (1 தெச.5:19), ஆவியானவரின் வழி நடத்துதலுக்கு ஒப்புக்கொடரமலிருத் தல், ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளாமல் இருத்தல் (யோவான்.4:24), ஆவியோடும் கருத்தோடும் விண்ணப்பம் பண்ணாமலிருத்தல் (1 கொரி.14:14-15), நமக்கு அளிக்கப்பட்ட வரங்களையும் தாலந்துகள் பொறுப்புகளையும் ஆதாயம் செய்யாமல் சோம்பலாக இருத்தல், ஆவியின் கனி காணப்படாமல் பயனற்ற வாழ்க்கை நடத்துதல் பயன்படுத்தாமல் இருந்தால், போன்றவை ஆவியானவரை அவித்து போடுவதாகும்.
6. தேவனுக்கு விரோதமாக கலகம் பண்ணுவதால் ஆவியானவரை விசனப்படுத்துதல் (ஏசா.63:9-10) முறுமுறுத்தல், கலகம் பண்ணுதல் ஆகியவற்றிற்குப் பதிலாக, துதித்தலும் கீழ்ப்படிதலும் தாழ்மையாக காத்திருத்தலும் சிறந்தது.
