திரித்துவ தேவனின் பண்புகள்
எங்கும் இருக்கிறவர்
காணக்கூடிய நிலையில் பரலோகத்தில் பிதாவும் குமாரனும் (அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக), ஆவியானவரும் (ஏழு அக்கினி தீபங்களாக) இருப்பதை நாம் அறிவோம். (வெளி.4:2,5; 5:7). காணக்கூடாத நிலையில் (invisible) தேவர் (பிதாவும் குமாரனும் ஆவியானவரும்) எங்கும் இருக்கிறார் (Omnipresent சங்.139:7-12, மத்.18:20; 28:20; ஏசா.6:1), தேவனுடைய சரீரம் எங்கும் இருக்கிறது என்பதில்லை (God is not omnibo
dy). ஆனால் அவருடைய பிரசன்னத்தை எங்கும் உணர முடியும். தேவன் மட்டுமே எங்கும் இருக்கிறவர்.எல்லாம் வல்லவர்
திரித்துவ தேவன் எல்லாம் செய்ய வல்லவர் (ஆதி.17:1; சங்.33:19; வெளி.15:3). ஆனால் அவர் தனது பண்புகளுக்கெதிரானவற்றைச் செய்யமாட்டார். எடுத்துக்காட்டாக தேவன் பொய் சொல்லமாட்டார் (எண்.23:19).
தேவன் மட்டுமே 'எல்லாம் வல்லவர்'.
எல்லாம் அறிந்தவர்
கடந்த காலம் நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றின் அனைத்து நிகழ்ச்சிகளையும் தேவன் அறிவார் (ரோம் 11:33), நமது நினைவுகளையும் நமது வாயில் சொல் பிறவாததற்கு முன்பே நமது சொற்களையும் அறிந்திருக்கிறார் (சங்.139:2-4) என்பதிலிருந்து அவரது அறிவின் மாட்சிமையை சற்று உணரலாம் காலத்தைக் குறித்து, தனது தீர்க்கதரிசிகள் மூலம், சரியாக முன்னறிவிக்கக் கூடியவர் தேவன் ஒருவரே.
தேவனுடைய அறிவு மனிதருக்கு எட்டாத அளவிற்கு உள்ளது (சங்.139:6), -
ஏனைய பண்புகள்
தேவனுடைய பண்புகள் யாவற்றையும் சொல்லி முடியாது. ஒருசில பண்புகளை மட்டும் இங்கு காண்போம்.
தேவன் சதாகாலமுமுள்ளவர் (ஆதி.21:33; யாத்.15:18; 1 நாள்.29:10; சங்.145:13; வெளி.4:9). தேவன் ஒருவரே பரிசுத்தர் (வெளி.15:4). தேவன் அன்புள்ளவர் (1 யோவா.4:8; யோவா.3:16), நீதியுள்ளவர் (எஸ்றா 9:15; நெகே.9:8; யோபு 37:23; சங்.119:137; ஏசா.53:11; 1 தீமோ .3:16; 1 யோவா.2:1), முற்றிலும் நம்பத்தகுந்தவர் (1 யோவா. 1:9; கொரி.10:13; 2 கொரி.1:20), வாக்கு மாறாதவர் (எண்.23:19), இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகா தயையுமுள்ளவர் (யாத்.34:6), மன்னிக்கிறவர் (யாத்.34:9), அக்கிரமத்தை விசாரிக்கிறவர் (யாத்.34:7), தன்னை தருபவர் (உபா.5.11 சங்.34:10; 118:18), நல்லவர் (மத்.5:45; சங்.34:8).
