இரகசிய வருகைக்கு ஆயத்தமாவது எப்படி...?









இரகசிய வருகைக்கு நாம் ஆயத்தமாயிருப்பது எப்படி?



எவ்வாறு நடைபெறும்


இரகசிய வருகையின் போது கிறிஸ்துவுக்குள் மரணமடைந்தவர்கள் யாவரும் (உள்ளான மனிதர்கள்) பரலோகத்திலிருந்து கிறிஸ்துவுடனேகூட பூமிக்குக் கொண்டுவரப்பட்டு அவரவர் தங்கள் மறுரூபமாக்கப்படும் சரீரங்களோடு இணைந்தவர்களாக உயிர்த்தெழும்புவார்கள். இது முதலாவது நடைபெறும். அதன் பின்பு அப்பொழுது உயிருடனிருக்கும் கர்த்தருடையவர்கள் ஒருநொடிப்பொழுதில் மரணமின்றி மறுரூபமாக்கப் படுவார்கள் (1 கொரி.15:51-54), கிறிஸ்து பூமிக்கு வராமல் ஆகாயத்தில் இருப்பார். மறுரூபமாக்கப்பட்ட யாவரும் ஒரே நேரத்தில் மேகங்கள் மேல் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆகாயத்தில் கிறிஸ்துவைச் சந்திப்போம். அங்கிருந்து அவருடன் பரலோகத்திற்குச் சென்று அவர் ஆயத்தம்பண்ணிவைத்த உறைவிடங்களைச் சென்றடைவோம் (1 தெச.4:14-17).


இரகசிய வருகைக்கு நாம் ஆயத்தமாயிருப்பது எப்படி?


1) தூங்காமல் விழித்துக்கொண்டிருக்கவேண்டும். அதாவது ஆவிக்குரியவற்றில் அசதியாக இராமல், பாவத்தில் விழுந்து விசுவாசத்தை விட்டு வழுவிப்போகாதபடி, கவனமாக இருக்கவேண்டும் (1 தெச.5.6).


1 தெசலோனிக்கேயர் 5:6
6 ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். 
1 தெசலோனிக்கேயர் 5:6


மத்தேயு 25:4-8


4 புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். 


5 மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். 


6 நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. 


7 அப்பொழுது, அந்தச் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். 


8 புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். 


1 பேதுரு 5:8 


தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.


2) தெளிந்தவர்களாக இருக்கவேண்டும். இன்று கிறிஸ்துவின் இரகசிய வருகை இருக்குமானால் நீங்கள் எடுத்துக் கொள்ளப்படுவீர்களா? என்று. கேட்டால் பலர் தெரியாது என்று பதிலுரைத்தார்கள் அவ்வாறின்றி தெளிவுடன் இருக்க வேண்டும்


1 பேதுரு 4:7


 எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.


1 பேதுரு 1:13 


ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.


3) இதற்கு விசுவாசம், அன்பு, இரட்சிப்பின் நம்பிக்கை ஆகியவை தேவை. எப்பொழுதும் இப்மூன்றும் உடையவர்களாயிருக்கவேண்டும் (1 தெச.5:8).


1 தெசலோனிக்கேயர் 5:8


8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம். 


4) உபத்திரவ காலத்துக்குத் தப்பி இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டு கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்கத் தகுதியுடையவர்களாக இருக்கும்படி ஜெபிக்கவேண்டும் 


லூக்கா 21:36


36 ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.