சீஷாக்கின் வெற்றிச் செதுக்கோவியம் வெளிப்படுத்துவது எவற்றை?


சீஷாக்கின் வெற்றிச் செதுக்கோவியம் வெளிப்படுத்துவது எவற்றை?

எகிப்தின் அரசனாகிய சீஷாக், வேதாகமத்தில் ஏழு தடவை குறிப்பிடப்படுகிறான். அரசன் ரெகொபெயாம் யெகோவா தேவனின் பிரமாணத்தை விட்டு விலகியதால், சீஷாக் யூதாவுக்கு எதிராக படையெடுக்கும்படி யெகோவா தேவன் அனுமதித்தார், ஆனால் அதை முழுமையாக அழிக்கும்படியல்ல.

1 இராஜாக்கள் 14:25-28

25. ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,
26. கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
27. அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
28. ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் அவைகளைப் பிடித்துக்கொண்டு போய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.

2 நாளாகமம் 12:1-12

ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்ட பின், அவனும் அவனோடே இஸ்ரவேலரனைவரும்
 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.

2. அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினபடியினால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதினாயிரம் குதிரைவீரரோடும் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான்.

3. அவனோடேகூட எகிப்திலிருந்து வந்த லூபியர், சூக்கியர், எத்தியோப்பியரான ஜனங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாயிருந்தார்கள்.

4. அவன் யூதாவுக்கு அடுத்த அரணான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்மட்டும் வந்தான்.

5. அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக்கும் சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னைவிட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழும்படி
விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

6. அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள்.

7. அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக் கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.

8. ஆனாலும் என்னைச் சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.

9. அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகளாகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டுபோய் விட்டான்.

10. அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.

11. ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.

12. அவன் தன்னைத் தாழ்த்தினபடியினால், கர்த்தர் அவனை முழுதும் அழிக்காதபடிக்கு அவருடைய கோபம் அவனைவிட்டுத் திரும்பிற்று; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் சீராயிருந்தது.

சமீப ஆண்டுகள் வரையில், இந்தப் படையெடுப்பை பற்றி வேதாகமம் மாத்திரமே குறிப்பிடுவதாக கருதப்பட்டது. பின்பு சீஷாக் (முதலாம் ஷெஷாங்க்) என்று வேதாகமம் அழைக்கும் பார்வோனின் பெரிய ஆவணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, கார்னக்கிலுள்ள (பூர்வ தீபஸ்) பெரிய எகிப்திய கோயிலின் தெற்கு மதிலின்மீது சித்திர எழுத்துக்களையும் படங்களையுங்கொண்ட கவர்ச்சிகரமான செதுக்கோவியமாக இருந்தது.

பிரமாண்டமான இந்த செதுக்கோவியத்தில், எகிப்திய தெய்வமாகிய அம்மோன், தன் வலது கரத்தில் அரிவாள் வடிவ பட்டயத்தை பிடித்திருப்பதைப்போல் சித்தரிக்கப்பட்டுள்ளான். அவன் 156 பலஸ்தீனிய கைதிகளை விலங்கிட்டு பார்வோனாகிய சீஷாக்கிடம் கொண்டுவருகிறான், அவர்கள் கயிறுகளால் அவனுடைய இடது கரத்தில் கட்டப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு கைதியும் ஒரு நகரத்தை அல்லது கிராமத்தை பிரதிநிதித்துவம் செய்கிறான், அவற்றின் பெயர்கள் எகிப்தியரின் சித்திர எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளன.

அதில் பின்வருபவை, வாசித்து அடையாளம் கண்டு கொள்ளக்கூடியவற்றில் சில உதாரணங்களாகும்:-
ராப்பித் (யோசு. 19:20); தானாக், பெத்செயான், மெகிதோ (யோசு. 17:11); சூனேம் (யோசு. 19:18); ரேகோப் (யோசு. 19:28); அப்பிராயீம் யோசு. 19:19); கிபியோன் (யோசு. 18:25); பெத்தொரோன் (யோசு. 21:22); ஆயலோன் (யோசு.21:24); சோக்கோ (யோசு.15:35); ஆராத் (யோசு.12:14). "ஆபிராமின் வயல்" என்பதையும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது, இது எகிப்திய பதிவுகளில் ஆபிரகாமைப் பற்றிய மிகவும் பூர்வமான குறிப்பாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.