அகணிநார்க் கயிறு - THONG
அகணிநார்க் கயிறு பாலஸ்தீன தேசத்தில் வளர்ந்த ஒரு வகைப் புல்லைத் திரித்து உண்டாக்கப்பட்ட
நார் கயிறு ஆகும். சிம்சோனை கட்டுவதற்கு அகணிநார்க் கயிறு பயன்படுத்தப்பட்டது.
சிம்சோன் காசாவிற்கு போய், அங்கே தெலீலாள் என்னும் ஒரு வேசியைப் கண்டு, அவனிடத்தில்
தங்கியிருந்தார். சிம்சோன் மகா பலசாலி அவனுடைய மகாபலம் எதனால்
உண்டாயிருக்கிறது என்றும் அவனை சிறுமைப்படுத்துவதற்கு எதனால் கட்ட
வேண்டுமென்றும் தெலீலாள் சிம்சோனிடம் கேட்டாள். "அதற்கு சிம்சோன்: உலராத
பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி,
மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத
பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகள் அவரிடத்திற்கு கொண்டுவந்தார்கள்;
அவைகளால் அவள் அவனை கட்டினாள்" (நியா 16 :7- 8.
அகணிநார்க் கயிறு என்பதற்கு
எபிரெய வார்த்தை - - yether - 3499 என்பதாகும்.
புதிய ஏற்பாட்டுக் காலத்தில் சேனாபதி பவுலை விசாரிக்கும்போது அவரைச்
சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான். பவுலைச் சவுக்கால் அடிப்பதற்கு முன்பு
அவர்கள் பவுலை வாரினால் அழுந்தக் கட்டினார்கள். இது அகணிநார்க் கயிராகும்.
இதற்கான கிரேக்க வார்த்தை - himas - 2438 என்பதாகும்.