தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.
யாக்கோபு 1:9
ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன். ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.
யாக்கோபு 1:10
சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம். ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.
யாக்கோபு 1:11