பிசாசு எப்பொழுது விழுங்குவான்
Charles MSK
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
1 பேதுரு 5:8
1 பேதுரு 5:8
செய்யாதே என்று தேவன் சொல்லியதை செய்யும்பொழுது பிசாசு விழுங்கி விடுவான்
- ஆதாம் ஏவாள்
- ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
ஆதியாகமம் 2:17 - ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.
ஆதியாகமம் 3:3
புசிக்க வேண்டாம் என்று ஒதுக்கிய மரத்தின் பழத்தை பூசித்த போது பிசாசு ஆதாமையும் ஏவாளையும் விழுங்கினாள்.
- விளைவு
- கர்த்தருடைய சந்நிதிக்கு விலகினார் (ஆதி 3:8)
- கர்த்தர் தங்களைப் பார்த்துவிடக்கூடாது என்று ஒழித்துக் கொண்டனர் (ஆதி 3:8)
- தேவ சத்தம் கேட்டும் அவரோடு உறவாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர் (ஆதி 3:9)
- பயம் அவர்களை கவ்விக்கொண்டது (ஆதி 3:9)
- வேதனை பின்தொடர்ந்தது (ஆதி 3:16)
- வருத்தம் வந்தது (ஆதி 3:17)
- பாதைகள் கடினமாக்கப்பட்டது (ஆதி 3:18)
- மரணம் பிரகடனப்படுத்தப்பட்டது (ஆதி 3:19)
- ஏதேன் தோட்டத்தை இழந்து போனான் (ஆதி 3:23)
- செய்ய வேண்டாம் என்று கர்த்தர் சொன்ன சில:-
- நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே, உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார், அது உனக்குப் பாவமாகும்.
உபாகமம் 23:21 - முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக.
யாத்திராகமம் 22:29 - ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம், பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம், ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்,
எரேமியா 9:23 - சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது, இரத்தம் ஜீவனுக்குச் சமானம், ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம், சகல மாம்சத்ததின் உயிரும் அதின் இரத்தந்தானே, அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
லேவியராகமம் 17:14 - அஞ்சனம்பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள், அவர்களாலே தீட்டுப்படவேண்டாம், நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவியராகமம் 19:31 - நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்,
மத்தேயு 5:39
கர்த்தர் செய் என்று சொல்லியதை செய்யாமல் இருக்கும் போது பிசாசு விழுங்கி விடுவான்
- சவுல்
- பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே. இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்.
1 சாமுவேல் 15:1
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
1 சாமுவேல் 15:2
இப்பொழுதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
1 சாமுவேல் 15:3
சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப் போட்டான்.
1 சாமுவேல் 15:9
- விளைவு
- ராஜ்ஜியத்தை இழந்தான் (1சாமு 15:23)
- அசுத்த ஆவி அவளைப் பிடித்துக் கொண்டது (1சாமு 16:14)
- பரிசுத்த ஆவியை இழுந்தான் (1சாமு 16:14)
ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
யாக்கோபு 4:17
செய்ய வேண்டியதை செய்யத் தக்க சமயத்தில் செய்யாமல் போனால் பிசாசு விழுங்கி விடுவான்
- தாவீது
- மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான்.
2 சாமுவேல் 11:1
- யுத்தத்திற்கு போக வேண்டியவன் தான் செய்ய வேண்டியதை செய்யாததால் பார்க்க கூடாததை பார்த்தான் (பர்சேபாளை), செய்யக்கூடாததை செய்தான் (விபச்சாரம், கொலை).
- விளைவு
- தாவீதுக்கும் பர்சேபாளுக்கும் பிறந்த குமாரனை கர்த்தர் அடித்தார் (2சாமு 12:15)
- தன் குமாரனே தன் குமார்த்தியை கற்ப்பழித்தான் (2சாமு 13:11-14)
- தாவீது உரியாவை தந்திரமாய் கொன்றது போலவே அம்னோன் தந்திரமாய் தாயாரை அடைந்தான்.
- நினைவில் கொள்ளுங்கள்:-
- ஆராதனை, ஜெபம், வேத தியானம் செய்ய வேண்டிய இடத்தில், நேரத்தில், காலத்தில் செய்யுங்கள்.
- 10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள். அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
யாத்திராகமம் 20:10 - ஆறுநாளும் வேலைசெய்யவேண்டும், ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்,; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.
லேவியராகமம் 23:3
நமக்கு வாரத்தின் முதல் நாள் ஞாயிறு