அகில உலக மிஷனரி இயக்கம், இம்மானுவேல் கிறிஸ்துவ சபை, வேப்பங்குப்பம்.
பாஸ்டர்: சார்லஸ் M.சதீஷ்குமார்
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
லூக்கா 7:11-15
லூக்கா 7:11-15
___
- மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார், அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
லூக்கா 7:11 - அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள், அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள், ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
லூக்கா 7:12 - கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
லூக்கா 7:13 - கிட்டவந்து, பாடையைத் தொட்டார், அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள், அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 7:14 - மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
லூக்கா 7:15
விளக்கம்:-
- மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார், அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
லூக்கா 7:11
திரளான கூட்டம் இயேசுவை பின்பற்ற காரணம் என்ன?
- அவரோடு இருந்தால் பசி இல்லை
- அவரோடு இருந்தால் வியாதி இல்லை
- அவரோடு இருந்தால் பிசாசுக்கு இடமில்லை
- அவரோடு இருந்தால் சந்தோஷம், சமாதானம் இவைகளுக்கு குறைவில்லை
என்று பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த கூட்டம் அரசியல் தலைவர்கள் மாதிரி பணம் கொடுத்து சேர்த்த கூட்டம் அல்ல. கிறிஸ்துவம் பணம் கொடுத்து கூட்டப்படும் கூட்டம் இல்லை. இயேசுவின் அன்பால் ஈர்க்கப்பட்ட கூட்டம் ஆகும்.
- அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள், அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள், ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
லூக்கா 7:12
ஊராரின் வெகு ஜனங்கள் அந்த விதவை தாயுடன் வந்தார்கள் என்பது அவ்வூரில் அவர்கள் சாட்சியோடு வாழ்ந்தார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
ஒருவனுடைய மரணத்தில் தான் அவன் நல்லவனா? கெட்டவனா? என்பது தெரியவரும்.
- கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
லூக்கா 7:13
இயேசு அந்த விதவை தாயை பார்த்து அழாதே என்றார். அவள் பின்னாக ஊர்களுள் யாவரும் வந்தார்கள் அவர்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்லி இருப்பார்கள். மனுஷன் சொல்லும் வார்த்தைகள் வெறும் வார்த்தையாக தான் இருக்கும். ஆனால் இயேசு கூறும் வார்த்தை வெருமையானது அல்ல.
இயேசுவின் வார்த்தை:-
- உயிர்ப்பிக்க கூடியது
- ஆறுதல் தரக்கூடியது
- பெலப்படுத்த கூடியது
- கண்ணீரை துடைக்க கூடியது
- பேதைக்கு ஞானத்தை தர கூடியது
- கண்களை தெளிவிக்க கூடியது
- பாதைக்கு வெளிச்சம் காட்ட கூடியது…………
- கிட்டவந்து, பாடையைத் தொட்டார், அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள், அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 7:14 - மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
லூக்கா 7:15
இயேசுவின் வார்த்தை அவளுக்கு தேவை என்ன என்பதை அறிந்து அதை பூர்த்தி செய்தது. இழந்து போன மகனை மட்டும் அல்ல அவள் வாழ்க்கையையும் திரும்ப தந்தது. அவள் கண்ணீரை துடைத்து ஒரு புது வாழ்வை இருவருக்கும் தொடங்க செய்தது.
நடந்த ஆச்சரியம் என்ன தெரியுமா…?
இயேசுவோடு கூட வந்த ஆர்பரிப்பின் கூட்டமும் விதவையோடு வந்த அழுகையின் கூட்டமும் சந்தித்தது. இயேசுவின் வார்த்தை அழுகையின் கூட்டத்தையும் ஆர்பரிப்பின் கூட்டமாய் மாற்றியது.
இயேசுவை நீ அழுகையோடு சந்திப்பாய் என்றால் உன் அழுகை சந்தோஷமாய் மாறும்.
உன் குறைவு நிறைவாக மாறும்
உன் வியாதி சுகமாய் மாறும்
நீ இழந்து போன யாவும் உனக்கு திரும்ப கிடைக்கும்.