"சரீரச் சாவு"
Rev.Fr.John Joseph
துன்பங்கள் அதாவது வேதனைகளை மகிழ்வோடு ஏற்பது “சரீரச் சாவு”:
“இயேசுவுடைய மீட்புப் பணியின் இரண்டு அம்சங்கள்"
1.“பாவம் போக்கும் மீட்பு”
- இயேசு முதலில் தன்னை பாவமில்லாதவராக மாற்றினார்.
- இயேசு தன் “சுயவிருப்பங்களை” “பிதாவின் விருப்பங்களுக்கு” ஒப்புவித்தார் - யோவா 8:29, 46, 7:16, 6:38, 5:30, 4:34, மத் 26:39,42,44.
- இயேசு தன் “சுயத்துக்குள்” பிதாவின் விருப்பங்களை வைத்துக் கொண்டார்.
- உலகம், பிசாசு, சரீரத்தின் விருப்பங்களை மேற்கொண்டார்.
- அதை ஒரு அடையாளமாக, பாலைவன நோன்பின் போது காட்டினார்.
- உலக மேன்மையை மேற்கொண்டார் - மத் 4:8-10.
- பிசாசின் தந்திரத்தை மேற்கொண்டார் - மத் 4:6,7.
- மாமிச இச்சையை மேற்கொண்டார் - மத் 4:2-4.
- அவ்வண்ணமே இயேசு, தன் “மீட்பின் செய்தியில்”, தம் மக்களுக்கும், பாவத்தை சாகடிக்க கற்றுத்தந்தார்.
- உலகம், பிசாசு, சரீரத்தின் விருப்பங்களை “சாகடித்து”, நம்மில் கடவுளின் விருப்பங்களை நிறைவேற்ற, என்ன செய்ய வேண்டுமென்ற படிப்பினையை தம், “மீட்பின் செய்திகளில்” வெளிப்படுத்தினார்.
- இதை நாம், முதல் பகுதியில் பார்த்தோம்.
2.“பாவத்தின் விளைவான “துன்பத்தை – சாவை – போக்கும் மீட்பு”: 1பேதுரு 2:21
- பாவத்தின் விளைவான துன்பத்தை, நாம் எப்படி சாகடிக்க வேண்டும் என்பதை இயேசு, தம் வாழ்வில் வெளிப்படுத்தினார்.
- துன்பத்தை “ஏற்றுக்கொள்வதே”, துன்பத்தை போக்கும் ஒரே வழி.
- இதுவே, இயேசு கண்ட வழி, இயேசு காட்டிய வழி. 1பேதுரு 2:21
- துன்பத்தை ஏற்றுக்கொள்பவனைக் கண்டு, துன்பம் ஓடும்.
- ஆனால், துன்பத்தைக் கண்டு பயந்தவனை, அவனது “சாவு வரை” அவனை துன்பம் துரத்தும்.
பாவமும் - தண்டனையும்:
- எல்லா பாவத்துக்குமே, தண்டனை உண்டு.
- அந்தத் தண்டனையே “துன்பம்” – தொ.நூ 3:14-19.
- மனிதகுலம் செய்த, பாவத்துக்குரிய தண்டனையை, மனிதன் அடைந்து முடியும் வரை, அவன் “அலகையின் ஆட்சியில்” தான் இருக்கிறான்.
- அலகையின் “ஆட்சியில்” இருக்கும் மனிதனை, “தண்டனையிலிருந்து மீட்கவும்” இயேசு இவ்வுலகுக்கு வந்தார்.
இயேசுவும் - பாவத் தண்டனையும்:
- எசா 53 –ன் படி, இயேசு, மனிதன் செய்த “பாவத்தின் தண்டனையை: தாமே ஏற்றுக்கொண்டார்.
- நம் பாவங்களையும், பாடுகளையும், அவர் சுமந்து தீர்த்தார். எசா 53:5,8,11,12.
- இவ்வாறு, அலகையின் கையிலிருந்து, மனுக்குலத்தை இயேசு மீட்டார். – மத் 20:28.
- இவ்வாறு, பாடுகளை ஏற்றுக்கொள்வதால், பாடுகள் நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பதை, நமக்கு கற்றுத் தந்தார்.
பாடுகளும், இயேசுவின் மனநிலையும்:
- பாடுகளின் போது, இயேசுவிடமிருந்த மனநிலை, “மனித குல மீட்பாக” இருந்தது.
- அவ்வண்ணமே, நாமும் பாடுகள் வரும் போது, இயேசுவிடமிருந்த மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் -பிலி 2:5-11.
- நமது பாடுகளின் போது, நமக்காக பாடுபட்ட இயேசுவை, நம் சிந்தையில் இருத்த வேண்டும் - எபி 12:2-13.
- இயேசு நம் பாவங்களுக்குப் “பரிகாரமாக” தம் பாடுகளை ஏற்றார். 1யோவா 2:2.
- நாமும், நம் பாவங்களுக்குப் பரிகாரமாக, நம் பாடுகளை ஏற்க வேண்டும். உரோ 8:17.
நாம் பாடுகளை ஏற்பதைப் பற்றிய வேத உபதேசம்:
- நன்மை செய்தும் அதற்காக பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும் - 1 பேதுரு 2 : 20.
- நன்மை செய்வதில் நீங்கள் ஆர்வமுடையவர்களாய் இருந்தால், உங்களுக்கு தீமை செய்ய போகிறவர் யார் - 1 பேதுரு 3 : 13
- நீதியின் பொருட்டு துன்புற வேண்டியிருப்பினும் நீங்கள் பேறுபெற்றவர்களே – 1 பேதுரு 3 : 14.
- அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அலகையை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? 1 பேதுரு 5 : 9.
- தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்கு திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல் - 1 பேதுரு 3 : 17.
- உங்களுக்கு வரும் துன்பங்கள், நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்க கூடாது – 1 பேதுரு 4 : 15.
- நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக வெட்கபடலாகாது. அந்த பெயரின் பொருட்டு கடவுளை போற்றி புகழுங்கள் - 1 பேதுரு 4 : 16.
- கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக - 1பேதுரு 4 : 19.
- கிறிஸ்துவும் உங்களுக்காக துன்புற்று, ஒரு முனமாதிரியை வைத்து சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுங்கள் - 1பேதுரு 2 : 21.
- கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாக பூண்டு கொள்ளுங்கள் - 1பேதுரு 4 : 1.
- ஒருவர் அநியாயமாக துயருறும் போது, கடவுளை மனதில் கொண்டு, அதை பொறுமையோடு ஏற்று கொள்வாராயின், அதுவே கடவுளுக்கு உகந்தது ஆகும் - 1பேதுரு 2 : 19.
- துன்ப தீயில் நீங்கள் சோதிக்கப்படும் போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்து விட்டதென வியக்காதீர்கள். மாறாக கிறிஸ்துவின் துன்பங்களில் பங்கு கொள்கிறீர்கள் என்று எண்ணி மகிழுங்கள். – 1பேதுரு 4 : 12.
முதல் குருத்தோலை பவனியின் படிப்பினை
- இயேசுவோடு சாகப் போகிறவர்கள், அவரோடு வாழ்வைக் கண்டடைவர்.
- பரிசுத்த வாரத்தின் முதல் சிறப்பு நிகழ்ச்சி, “குருத்து ஞாயிறோடு” ஆரம்பமாகிறது.
- முதல் பரிசுத்த வாரத்தை, இதே நாளில் தொடங்கிய இயேசுவின் சீடர்கள், “இயேசுவோடு சாகப்போகும்” மன உணர்வோடு அதைத் தொடங்கினர்.
- நாமும், பரிசுத்த வாரத்துக்குள் நுழையும் போது, இந்த வசனத்தை நினைவில் இருத்துவோம்.
- “இயேசுவோடு இறந்தால், இயேசுவோடு வாழ்வோம்” – உரோ 6:8.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
“நாமும் போவோம், அவரோடு சாவோம்” என்று, இயேசுவின் பின்னால் சென்ற தோமையாரையும், மற்ற சீடர்களையும் போல, நாமும் இந்த குருத்தோலை தினத்தில், இயேசுவின் பின்னால் சென்று, பாடுகளை சந்திக்க ஆயத்தமாவோம். அதற்காக, நம்மில் சாக வேண்டியவற்றை ஆராய்ந்து பார்த்து, குருத்தோலை தினத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோம்.