எழுப்புதலே என் வாஞ்ஜை
சந்தோஷ் குமார்
Gate way to heaven church (WMM), K.K.Puram, Vellore.
எழுப்புதல் என்னும் அக்கினியை உனக்குள்ளே வைத்துக் கொண்டு ஏன் எழுப்புதலுக்காக அலைந்து கொண்டு இருக்கிறாய்!
எங்கள் கிராமத்தில்
எங்கள் மாவட்டத்தில்
எங்கள் மாநிலத்தில்
எங்கள் தேசத்தில்
இந்த உலகம் முழுவதும் எழுப்புதல் வேண்டும் என்று ஜெபிக்கின்ற நாம்
என்றைக்காவது என்னிடம் இருந்தது இந்த எழுப்புதல் முதலாவது எழும்பட்டும் என்று ஜெபித்த நாட்கள் உண்டா?
சரி இப்படி நாம் ஜெபித்திருப்போம் என்றால் ஏன் இன்னும் அந்த எழுப்புதல் வரவில்லை?
இரட்சிக்கப்பட்ட நாள் முதற்கொண்டு இந்நாள் வரைக்கும் எத்தனை ஆயிரம் ஜெபங்களை ஏறெடுத்து இருந்தும் ஏன் எழுப்புதல் இன்னும் நமக்குள் வரவில்லை?
என்றாவது நாம் இதை சிந்தனை செய்ததுண்டா?
கடமைக்காகவும் உதட்டளவில் இருந்தும் நாம் செய்த ஜெபத்திற்கு எப்படி பதில் கிடைக்கும்?
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
ஆமோஸ் 4:12
என்று வேதம் சொல்லுகிறதே,
நாம் என்ன ஆயத்தப்பட்டு இருக்கிறோம்?
இன்று நாம் மரித்தால் அடுத்த நொடி பரலோகத்தில் இருப்போம் என்ற நிச்சயம் நமக்கு உண்டா?
நாம் என்ன ஆயத்தப்பட்டு இருக்கிறோம்?
இன்று நாம் மரித்தால் அடுத்த நொடி பரலோகத்தில் இருப்போம் என்ற நிச்சயம் நமக்கு உண்டா?
சொல் சகோதரா…
பொய்யான வாழ்க்கை
போலியான வாழ்க்கை
பயம் இல்லாத வாழ்க்கை
சாட்சி இல்லாத வாழ்க்கை
தீர்மானம் இல்லாத வாழ்க்கை...
பயம் இல்லாத வாழ்க்கை
சாட்சி இல்லாத வாழ்க்கை
தீர்மானம் இல்லாத வாழ்க்கை...
இப்படியே
நாட்களை வீணாக கழித்தோம்.
வேதத்தில் நான்கு வாலிபர்கள் உண்ணும் உணவு கூட நம்மை தீட்டுபடுத்த கூடாது என்று வைராக்கியமாய் இருந்தார்களே!
சிங்க கெபியும், ஏழு மடங்கு அக்கினியும் வந்த போது அவர்கள் வைராக்கியமாய் எழும்பினார்களே
அதுதான் உண்மையான எழுப்புதல
தீர்மானத்தை இழக்காமல் ஜெபத்தில் உறுதியாக நின்றார்களே அதுதான் உண்மையான எழுப்புதல்.
ஆனால் நாம் எத்தனை முறை தீர்மானம் எடுத்துக் கொண்டோம் அதில் உறுதி கொண்டு நின்றோமா?
ஒவ்வொரு நாளும் வைராக்கியம் கொண்டு ஜெபிக்க வேண்டும் என்று ஏற்றுக்கொண்ட தீர்மானத்தில் உறுதியாக நின்றோமா?
எழுப்புதல் மட்டும் வேண்டும் ஆனால் அதற்கான எந்த விலைக்கிரயமும் செலுத்துவது கிடையாது.
இப்படி இருக்க எழுப்புதல் எப்படி வரும்?
இனியும் கூட நாம் ஜெபிக்காத மனிதர்களாக இருந்தால் சிறு எறும்பிடம் கூட எதிர்த்து நின்று ஜெயித்திட முடியாது.
தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையை நாம் வாழவில்லை என்றால் நாம் உயிரோடு இருந்தும் செத்து பிரேதங்களுக்கு சமம்.
என் அன்பு சகோதரனே
இப்போது நான் எடுத்துக் கொண்ட தீர்மானத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்கு என்னுடைய சாட்சியாகவும் உங்களை உற்சாகபடுத்தவும் சொல்லுகிறேன்.
விழுந்து எழும் நிலை என்னில் மாறி நிலையாய் எழும்பி நிற்கும் எழுப்புதல் என்னிலே எழும்பிட நள்ளிரவு 12 மணி என்னுடைய ஜெப நேரமாக இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
ஜீவனுள்ள தேவனின் கிருபை என்னோடும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.