தேவன் அருவருக்கிற ஜெபம்:*

*தேவன் அருவருக்கிற ஜெபம்:*

கிட்டத்தட்ட அனைத்து கிறிஸ்தவர்களின் வாழ்விலும் தொத்தி கொண்டு இருக்கிற ஒரு கேள்வி *ஏன் என் ஜெபத்திற்கு தேவன் பதிலளிக்கவில்லை?* என்பதே!
நானும் உபவாசம் இருந்து பார்க்கிறேன், காணிக்கை தருகிறேன், சபைக்கு சரியாக போகிறேன், ஜெபிக்கிறேன் ஆனாலும் வாழ்க்கையில் எதும் நடக்கவில்லையே என புலம்புகிற கிறிஸ்தவர்கள் தான் அதிகம். ஏன்? தேவன் நமக்கு பதிலளிப்பதில்லை? நம் தேவன் தான் ஜெபத்தை கேட்கிறவராயிற்றே! ஆனாலும் ஏனோ என்று நினைத்து கொண்டு இருப்பீர்களாகில் இதனை படியுங்கள்.


இந்த பதிவின் மூலம் தேவன் பதிலளிக்காததின் முதன்மை காரணத்தை கண்டுணர அழைக்கிறேன்.

தேவன் பதிலளிக்கவில்லையே என்று கேள்வி வரும் போது, தேவன் என் ஜெபத்தை முதலில் கேட்டாரா என்ற கேள்வி நம்மில் எழட்டும்.
என்னுடைய ஜெபம் தேவனை எட்டினதா என்று நிதானித்து கொள்ளுங்கள்.
தானியேல் என்ற தேவ மனிதன் ஜெபிக்க துவங்கும் முன்னே பதில் வெளிப்பட்டதாம். ஆ! என்ன ஆச்சரியம்!
பின் நம்முடைய ஜெபத்தை தேவன் நிராகரிக்க என்ன காரணம்.??

நீதிமொழிகள் 28:9
*வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.*

இதனாலேயே தேவன் நமக்கு செவி கொடுப்பதில்லை. இன்னும் கூற வேண்டுமானால் தேவன் அருவருக்கிறாராம் ஜெபத்தை. ஏன்? வேதத்தை கேளாத்தினால்,
நாம் தான் ஒவ்வொரு வாரமும் கேட்கிறோமே?
பல கூட்டங்களுக்கு போகிறோமே?? பின் ஏன்?

கேட்கிறது என்றால் கூட்டத்திற்கு போகிறது என்று அர்த்தம் இல்லை.
செவிகொடுங்கள், கேளுங்கள் என்பதின் எபிரேய வார்த்தை *'shema'*(ஷேஃமா).
அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?  நான் சொல்லுவதை கேட்டு,கவனித்து, அதற்கு கீழ்படி என்பது. ஏனென்றால் அந்த காலத்தில் இதற்கு தனியான எபிரேய சொல் இல்லையாம். ஆக கேள் ,செவி கொடு என்றாலே கீழ்படிந்திடு என்றே அர்த்தம்.
இன்றைக்கு நிறைய தேவ வார்த்தைகளை கேட்கிறது உண்டு ஆனால் எத்தனைக்கு கீழ்படிய கற்றுக்கொண்டோம் என்பதே கேளவி!

இன்று சபைகளில் வெறுமனே ஆசிர்வாதங்களே அதிகமாக முன்னிருத்த படுகின்றன.
ஆனால் அவை நடைபெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பது அதிக முக்கியப்படுத்தப் படுவதில்லை என்பதே வேதனை.

மரத்தினுடைய வேர் உள்ளே ஆழமாய் போகாத போது வெளியே கனிகள் எப்படி கிடைத்திடும்?? அப்படியே மீறு வருகிற கனிகள் சத்தில்லாத சாரமற்ற கனிகளாய்தான் வருகிறது. இன்று சபைகளில் இப்படி பேசப்படும் ஆசிர்வாதமான போதனைகளும் அரைகுறை பிரசவத்தில் பிறந்த சத்துவமற்ற குழந்தைகளையே உருவாக்குவதினால் அவர்கள் ஜெபங்கள் கேட்கப்படாத போது அவிசுவாசம் தொத்தி கொள்கிறது.

வேத வசனத்தை சரியாக பகுத்து போதிக்காமல் , தெளவாக சொல்ல வேண்டுமானால் சாவின் விளிம்பில் இருக்கிற ஒரு நோயாளியை நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள், ஒரு பிரச்சனை இல்லை என்று தடவி தருவதை போலத்தான்.

பாவத்தை குறித்து அழுத்தமாக பேசினாலே இது கடினமான உபதேசம் யார் இதை பின்பற்றகூடும் என மனத்தாங்கல் அடைகிற ஜனங்கள் தான் இன்று அதிகம்.

ஆனால் அப்படிப்பட்ட வார்த்தையை மிகுந்த உபத்திரவத்தின் மத்தியில் ஏற்று கொண்ட பெரேயா பட்டணத்து ஜனங்கள் தான் நற்குணசாலிகள் ஆக முடிந்தது. மாறாக ஆசிர்வாதத்தில் மூழ்கி போயிருந்த கொரிந்து சபையால் மாம்சத்திற்கு உரியவர்களாக தான் ஆக முடிந்தது.

இனி ஜெபம் செய்கையில் வசனம் சொல்லும் போது அதற்கு கீழ்படிந்திருக்கிறேனா என கேள்வி கேட்டு கொண்டு ஜெபித்தால், நிச்சயமாக நம்முடைய ஜெபத்தை கேட்பார்.


*சத்தியத்தின் சத்தம்*
*Voice of Truth*
*9787452777*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.