தானியேல் விளக்கவுரை அதிகாரம் 9

கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே, தானியேல் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்கள் மூலம் அறிந்துகொண்டான்." 'இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்(எரே.25:11)." பெல்ஷாத்சார் மரணத்தோடு எழுபது வருஷம் முடிவுக்கு வருகிறது. அதன்பின்பு மேதியனாகி தரியுவின் ஆடசி துவங்குகிறது. யூதா ஜனங்களின் பாபிலோனிய சிறையிருப்பு முடிகிறது.  எருசலேமுக்கு திரும்புவது சீக்கிரத்தில் நடக்க போகிறது என்பதை தானியேல் அறிந்துகொள்ளுகிறான்.


பாவ அறிக்கையின் ஜெபம் (தானி.9:3-16)

தானியேல் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட முகத்தை அவருக்கு நேராக்கி, தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவஅறிக்கைசெய்து ஜெபிக்கிறார். ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகலஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம். தன்னுடைய ஜனத்தின் மீறுதலையும், தங்களின் இராஜாக்களுடைய மீறுதலையும் மன்னிக்கும்படி அறிக்கையிடுகிறார். பாவம் ஒரு தேசத்தின் அழிவுக்கு காரணம்.
ஆண்டவரே, நீதி உமக்கே உரியது. உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது. ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம். அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.  'தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்@ அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்(நீதி. 28:13)".

இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம். ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன. அநீதி எல்லாம் பாவம். பாவம் சாபத்தை கொண்டுவரும்.

ஆனாலும் நாங்கள் எங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்புகிறதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை. ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து, அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார். எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர். நாங்களோ அவருடைய சத்தத்துக்கச் செவிகொடாமற்போனோம். இப்போதும் உமது ஜனத்தைப் பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி, உமக்குக் கீர்த்தியை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கமாய் நடந்தோம். தானியேல் தன்னுடைய ஜனங்களுக்காக பரிந்துபேசி ஜெபிக்கிறான்.

வேண்டுதலின் ஜெபம்(தானி.9:17-19)

பாவங்களை அறிக்கையிட்டபின்பு வேண்டுதலின் ஜெபத்தை ஏறெடுக்கிறார். 'ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும். எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம். இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும். என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும். உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும். நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம். ஆண்டவரே, கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும். என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும். உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்".
தானியேல் இவ்விதமாக ஜெபம்பண்ணி, தன் பாவத்தையும் தன் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு,   விண்ணப்பத்தை தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தார்.

ஜெபத்திற்கு பதில்(தானி.9:20-23)

தானியேல் அப்படி ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, காபிரியேல் தூதன் வெளிப்படுகிறார். அந்திப்பலியின் நேரமாகிய சாயங்காலவேளையில் 3 மணிக்கு தானியேலை தொடுகிறான். அவன் தானியேலோடு பேசி, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன். நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன். இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்.

காபிரியேல் வெளிப்படுத்தின 70 வார காரியம்(தானி.9:24-27)

'மீறுதலைத் தவிக்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும் அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுவிக்கிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும். அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும். ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார். ஆனாலும் தமக்காக அல்ல. நகரத்தையும் பரிசுத்தஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள். அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும். முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார். அருவருப்பான செட்டைகளோடு பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்".

 தானியேலின் ஜனத்தின்மேலும் பரிசுத்த நகரமாகிய எருசலேமின் மேலும் எழுபது வாரங்கள் செல்லும். 70 வாரகாலத்தை மூன்று காலகட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. 7 வாரம், 62 வாரம், மற்றும் 1 வாரமாக காணப்படுகிறது. 1 வாரம் என்பது 7 வருஷத்தைக்குறிக்கிறது
எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும். எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை, இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோனிய சிறையிருப்பில் காணப்படும் போது வெளிப்பட்டது.  

முதலாவது செருபாபேலின் தலைமையில் (எஸ்றா 1:1,2) முதல் கூட்ட ஜனம் பெர்சியா இராஜாவாகிய கோரேஸின்  அனுமதியோடு சுமார் கி.மு. 536-ல் எருசலேமுக்கு வருகிறார்கள். அவர்கள் சாலொமோனால் கட்டப்பட்டு நேபுகாத்நேச்சாரால் இடிக்கப்பட்ட ஆலயத்தை எடுத்து கட்டுகிறார்கள்.
இரண்டாவது கூட்ட ஜனம் வேதபாரகனாகிய எஸ்றாவின் தலைமையில்(எஸ்றா 7:1-27)  பெர்சியா இராஜாவாகிய அர்தசஷ்டாவின் அனுமதியோடு  சுமார் கி.மு. 458-ல் எருசலேமுக்கு வருகிறார்கள். எஸ்றா நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கருத்தாய் கற்றுகொடுத்து, அவர்களுடைய புறஜாதி மனைவிகளை தள்ளிவிடும்படி கூறி,  ஆவிக்குரிய பிரகாரமாக கட்டுவிக்கிறார்.

மூன்றாவது  13 ஆண்டுகளுக்கு பிறகு நெகேமியாவின் தலைமையில் (நெகேமியா 2:1-8) சுமார் கி.மு. 445-ல்  பெர்சியா இராஜாவாகிய அர்தசஷ்டாவின் அனுமதியோடு எருசலேமிற்கு வருகிறார்கள். இவர்கள் எருசலேமை திரும்ப எடுத்து கட்டுகிறார்கள். வீதிகளும் அலங்கங்களையும் கட்டுகிறார்கள்.

எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்பட்ட கி.மு. 445 முதல்   மேசியாவாகிய இயேசு சங்கரிக்கப்படும்படிக்கு இராஜாவாக எருசலேமிற்குள் கி.பி 30-ல் கழுதையின் மேல் ஏறி பவனியாக வந்தது வரை சுமார் 475 வருடங்கள் ஆகிறது. கி.மு. 445ற்கும் கி.பி. 30ற்கும் இடைப்பட்ட வருஷங்கள் 475 ஆகும்;. இந்த 475 வருஷங்கள்; ஜுலியன் ஆண்டுகளாகும். அதாவது ஒரு வருடத்திற்கு 365-1ஃ4 நாட்கள். ஆனால் வேதத்தின்படி 1 வருஷம் என்பது 360 நாட்கள். அதை விளக்கமாக அறிந்துகொள்ள நோவாவைக்குறித்து படித்தால் புரிந்துகொள்ளலாம். (குழச வாளை ளவரனலஇ pடநயளந எளைவை ழரச டiமெ hவவி:ஃஃறறற.றழபiஅ.ழசபஃலநயச360.hவஅ ). ஆக வேதாகமத்தின் ஒரு வருட நாட்களாகிய 360 நாட்களால் 475 வருஷங்களை மாற்றும்போது 483 வருஷங்கள் வரும். 483 வருஷங்களை 7-ஆல் வகுக்கும்போது 69 கிடைக்கும். இதுதான் 7 வாரமும், 62 வாரமுமாகிய 69 வாரங்களாக காணப்படுகிறது. 1 வாரம் என்பது 7 வருஷத்தைக்குறிக்கிறது. 69 வாரங்கள் முடிகிற அன்று இயேசு சங்கரிக்கப்படும்படி கழுதைகுட்டியின் மேல் ராஜாவாக எருசலேமிற்குள் பவனியாக வந்தார்;. இயேசுவின் பாடுகள், மரணம், அடக்கம், உயிர்தெழுதலுக்கு பின்பு சiபியின் காலம் துவங்குகிறது. பெந்தெகொஸ்தெ துவங்கி மணவாளனாகிய இயேசு மணவாட்டி சபையை சேர்த்துகொள்ள மத்தியாகாயத்தில் வெளிப்படும் வரை சபையின் காலமாகும். அதன்பின்பு ஒருவாரம் (7 வருஷம்) அந்திகிறிஸ்து ஆளுவான். அந்நாட்களை உபத்திரவ காலம் என்று அழைக்கிறோம். அக்காலத்தின் மத்தியில் கட்டப்படபோகிற எருசலேம் தேவாலயத்தில் வந்து இறங்குவான். தன்னை தேவனாக வெளிப்படுத்துவான். ஏழு வருஷத்தின் முடிவில் இயேசு கிறிஸ்து ராஜாவாக வெண்குதிரையின் மேல் வெளிப்பட்டு அவனை நிர்மூலமாக்குவார். 'அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது@ மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்@ இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். வெளி. 19:20."

Pastor. David .T
Time Word of God Church
(Non-Denominational Full Gospel Tamil Church)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.