*வேத பாடம்: 5*
*வேதத்தைப் பகிர்ந்தளிப்பது எப்படி?*
வேதத்தை சரியாக விளக்கம் செய்வதற்கான
(வியாக்கானம் செய்வதற்கான பகிர்ந்தளிப்பதற்கு கான) சில நெறிமுறையை இங்கு கூறப்பட்டுள்ளன வேதத்தை சரியா விளங்கி கொள்ளவும் இந்த நெறிமுறைகள் பொருந்தும்.
இதில் கூறப்பட்டுள்ளவற்றை நன்கு சிந்தித்துப் பாருங்கள். குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களை வாசித்து புரிந்து கொள்வது நல்லது.

1. வேதத்தில் உள்ள வார்த்தைகள் சொற்றொடர்கள் இலக்கண முறைகள் உவமைகள் வரலாறுகள் முதலியவற்றிற்கு எழுத்தின்படி என்ன பொருளோ அதையே முதன்மையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது அது வேறு ஒரு புத்தகத்தில் இருந்தால் என்ன பொருள் படுமோ அப்பொருளையே எடுத்துக்கொள்ள வேண்டும். எழுத்தின்படி பொருள் தரமுடியாத உவமைகளுக்கும் அணிகளுக்கும் அவைதரும் பொருளெனத் வேதத்தின் மற்ற பகுதிகளுக்கு ஏற்ப செய்ய விளக்கம் தர வேண்டும். எல்லாவற்றிற்கும் செயற்கையாக ஆவிக்குரிய பொருள் ஏற்படுத்த முயற்சி செய்யக்கூடாது. மாற்கு 9:9-11 இல் எழுத்தின்படி பொருள் கொள்ளாமல் சீடர்கள் தத்தளித்ததை பார்க்கிறோம்.
*அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது,அவர் அவர்களை நோக்கி, மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.*
மாற்கு 9:9
*மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு.*
மாற்கு 9:10
*எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள்.*
மாற்கு 9:11
ஆனால் ஆவிக்குரிய பொருள் இருக்கும் இடத்தில் அதை சரியாக விளக்க வேண்டும். மத் 16:6-12 இல் *"பரிசேயருடய"* என்ற சொல்லை சரியாக கவனிக்காததால் ஆவிக்குரிய பொருளைப் புரிந்து கொள்ளாததை காண்கிறோம்.
6 இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.
மத்தேயு 16:6
7 நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
மத்தேயு 16:7
8 இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
மத்தேயு 16:8
9 இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்,
மத்தேயு 16:9
10 ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
மத்தேயு 16:10
11 பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
மத்தேயு 16:11
12 அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
மத்தேயு 16:12
2. பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டின் நிழல் என்பதைக் கருத்தில் கொண்டு விளக்க வேண்டும்.
எடுத்துக்காட்டுகள்:
பலி, பஸ்கா, உயர்த்தப்பட்ட சர்பம் இவற்றிற்கு கிறிஸ்து புதிய ஏற்பாட்டு நிறைவேறுதல்
3. மாதிரிகளை அவை குறிக்கும் பண்புகளை மட்டும் சரியாகக் ஒப்பீட்டு விளக்க வேண்டும்.
எடுத்துக்காட்டுகள்:
யோசேப்பு தாவீது ஈசாக்கு என்பவர்கள் கிறிஸ்துவின் மாதிரிகள் என்றாலும் கிருஸ்துவின் கிறிஸ்துவின் குணங்களுக்கு எதிரான குணங்கள் இவர்களுக்கு உண்டு. அந்த குனங்களை சரியாக அடையாளம் கண்டு விளக்கம் தர வேண்டும். அங்குலங்கள் கிறிஸ்துவுக்கு இருப்பதாக கூறி விடக்கூடாது.
4. வேதத்தில் அதிகமாக பயன் பெரும் நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் கற்று அதற்கேற்ப விளக்கம் தர வேண்டும்.
எடுத்துக்காட்டு:
யூதர்கள் காலை 6மணியை 0 என்று கணக்கிடுவர். எனவே லூக்கா 23:44 இல் குறிப்பிடப்பட்ட நேரம் நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை.
44 அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது, ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
லூக்கா 23:44
ஆனால் யோவான் 19:14 இல் குறிப்பிடப்பட்டுள்ள நேரம் நமது வழக்கில் படியான காலை ஆறு மணி. இது ரோமரின் முறை ஆகும்.
14 அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது,அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
யோவான் 19:14
5. வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் புவியியல் கூறுகளையும், வேதத்தில் உள்ள வரலாற்றையும் நன்கு கற்ற பின்னரே அவற்றை குறித்து விளக்க முயல வேண்டும்.
6. வேதம் முழுவதையும் கற்றிருப்பதுடன், வேதத்தில் காணப்படும் தேவனின் திட்டத்தின் பொது அறிவை பெற்று அதற்கு ஏற்ப வியாக்யானம் செய்ய வேண்டும். யுகங்கள், தாத்தானின் இறுதித் தோல்வி, சத்துருக்கள் கிறிஸ்துவின் பாதபடிக்கு கீழாவது, கிறிஸ்துவின் வருகைகள,் இரட்சிப்பு போன்றவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
7. வேதத்தில் உள்ள ஏதேனும் ஒரு வசனத்திற்கு முரண்பட்ட உபதேசம் கள்ள உபதேசமாகும். வேதத்தில் எந்த ஒரு முரண்பாடும் இல்லை என்பதை மனதில் கொண்டு வியாக்கியானம் செய்ய வேண்டும். முரண்பாடு அல்லது தவறு இருப்பது போல் தோன்றுவது நமது அறிவின் குறைவினால்தான்.
8. வேதம் கற்க எளிதானது ஏனெனில் அது ஒரு வெளிப்பாடு. அதன் மொழியும் எளிது அனேக சத்தியங்கள் பலமுறை கூறப்பட்டுள்ளது. உடனடியாக புரியாத பகுதிகள் பல தடவைகள் வாசித்த பின்னர் அல்லது சில காலம் சென்ற பிறகு புரியும். முயற்சி எடுத்துப் படித்து விளக்கம் செய்ய வேண்டும். மனிதனுக்கு தேவை என்று தேவன் கருதும் எல்லாக் கேள்விகளுக்கும் வேதத்தில் பதில் உண்டு.
9. பாரம்பரியத்திற்கு ஏற்ப அல்லது நமது சொந்த அனுபவத்துக்கு ஏற்ப வசனத்தை விளக்கம் செய்யாமல், தேவனுடைய வார்த்தைக்கு ஏற்ப நமது பாரம்பரியங்களும் நமது அனுபவங்களும் இருக்கிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
10. எந்த ஒரு உபதேசத்தையும் உதாரணங்கள் மட்டும் வைத்து நிறுவக்கூடாது. குறைந்தபட்சம் 2 அல்லது 3 வேதப்பகுதிகளால் உபதேசங்கள் நிறுவப்பட வேண்டும்.
11. வேதத்தில் உள்ள ஒரு பகுதியை விளக்கம் செய்யும்போது, அந்தப் புத்தகம் யாரால் எந்த சூழ்நிலையில் என்ன நோக்கத்திற்காக எழுதப்பட்டது என்பதையும், அந்த வார்த்தையை கூறுவது யார் என்பதையும் கருத்தில் கொண்டு விளக்கம் செய்ய வேண்டும்.
12. ஒரு வசனத்தை விளக்கம் செய்தால் அதை சொன்னவர் யார் என்பது மட்டுமல்ல, அதன் அருகில் உள்ள வசனங்கள் என்ன சொல்லுகிறது என்பதையும் கவனித்து விளக்கம் செய்ய வேண்டும்.
*வேத போதனையை கேட்பாருக்கு எச்சரிப்பு:*
எந்த ஊழியரும் சில சமயங்களில் தங்கள் சொந்த கருத்துக்களைக் கூறுவது நடக்கக் கூடியதே (2 சாமு 7:2-13; 1இரா13:14-24). ஏனெனில் தொலைக்காட்சி மேடைகள் சபையின் பிரசங்கம் மேடை போன்ற எதிலிருந்தும் சபை ஊழியர் பெரிய போதகர் உலக புகழ்பெற்ற ஊழியர் போன்ற யார் என்ன பேசினாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுவது தவறு. அது வேதத்தின்படி உள்ளதா என்று நிதானித்து கவனித்துக் நலமானதை சரியானதை மட்டுமே ஏற்றுக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும். கவனமாக இல்லையென்றால் கள்ளப் போதகத்தில் விழும் அபாயம் நேரிடும். (1 தெச 5:21).

வாழ்வியல் விளக்க வேதாகம்