*வேத பாடம் : 2
வேதம் எவ்வாறு அருளப்பட்டது?*
வெளிப்பாடு என்பது தேவனால் தெரியப்படுத்தப்படும் புதிய உண்மை ஆகும். திரையிடப்பட்ட தை காணுமாறு திரை விலக்குதலுக்கு இதை ஒப்பிடலாம். பேதுருவும் பவுலும் வெளிப்பாடுகளைப் பெற்றதை மத்தேயு 16:17; கலாத்தியர் 1:12 இல் காண்கிறோம். அதை பெற்றுக்கொள்வோர் ஒழுங்காக தவறின்றி மற்றவர்களுக்குத் தெரிய படுத்தவும் எழுதவும் செய்வது (ஏவுதல், அருளுதல்) ஆவியானவரின் அகத்தூண்டுதல் எனப்படும். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது (good-breathed-தேவசுவாசமுள்ளது) என்று 2 தீமொத்தேயு 3:16 தெளிவாகக் கூறுகிறது. 40 இற்கும் மேற்பட்ட நபர்களால் எழுதப்பட்ட போதும் ஆவியானவர் மட்டுமே வேதத்தின் ஆசிரியர் ஆவார். வேதத்தில் ஒவ்வொரு சொல்லும் ஆவியானவரால் அருளப்பட்டது என்பது 1கொரிந்தியர் 2:13 இல்லிருந்து தெளிவாக தெரிகிறது. ஒரு எழுத்தாகிலும் எழுத்தின் உறுப்பாகிலும் ஒளிந்து போகாது என்பதால் (மத்தேயு 5:18) அவை ஒவ்வொன்றும் ஆவியானவரால் அருளப்பட்டவையே. தேவன் வேதத்தை கருத்துக்களாக அருளி செய்யாமல், வார்த்தைகளை தந்தார் என்பதை எண்ணாகமாம் 22:20,35; 23:5,16 கூறுகின்றன. சங்கீதம் 139:4; அப்போஸ்தலர் 1:16; 2:21; மாற்கு 7:10,13; மத்தேயு 22:43 போன்ற பல பகுதிகள் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

*பலவிதங்களில் எழுதுதல்:*
1. தேவன் பேசியதை நேரடியாகக் கேட்டு எழுதின பகுதிகள் (யத் 34:6,7; உபா 18:17-22; ஏசாயா 6:9 போன்ற பகுதிகள்) வேதத்தில் உண்டு. தேவன் கூறிய சொற்களைக் அப்படியே எழுதினர்.
2. தரிசனங்ககள், கனவுகள் , தூதர்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டவைகள் ஆகியவற்றை ஆவியானவர் தந்த சொற்களின் படியே எழுதினர்.
3. வரலாற்று நிகழ்ச்சிகளை தீர விசாரித்து எழுதியவர்களும் நேரில் பார்த்து எழுதிவார்களும் (லூக் 1:1-4; யோவான் 1:14; 19:34,35; 2 பேது 1:16-18; 1யோவான் 1:1,2; வெளி 1:19) தாங்கள் அறிந்த யாவற்றையும் எழுதாமல் அவற்றில் எவற்றை எல்லாம் எழுதும்படி ஆவியானவர் அகதூண்டுதல் அளித்தாரோ அவற்றை மட்டும் ஆவியானவர் தந்தச் சொற்களில் எழுதினார் ( யோவான் 20:30,31).
தேவனுடைய சில வெளிப்பாடுகளை எழுதும்படி ஆவியானவர் அருளவில்லை (வெளி 10:14). இவை எழுதப்படவில்லை. வெளிப்பாடு இல்லாமல் ஆவியானவரின் அகத்தூண்டுதலால் எழுதப்பட்ட சில பகுதிகளும் வேதத்தில் உண்டு (லூக்கா 1:1-4; அப்போ 1:1-2; ரோமர் 16:1-15). வெளிப்பாடுகளும் ஆவியானவரின் அகத் தூன்டல்களும் இருந்தபோதிலும் எழுதியவர்களுக்கு விளங்காத பகுதிகளும் வேதத்தில் இருக்கின்றன (1 பேதுரு 1:11,12). எனவே அவர்கள் தங்களது சொந்த கருத்துக்களை எழுதவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
வேதத்திலும் சாத்தானின் பேச்சு இடம் பெற்றுள்ளது ( யோபு அதிகாரம் 1 வசனம் 9 முதல் 11 வரை; அதிகாரம் 2 வசனம் 4 முதல் 5 வரை; மத்தேயு அதிகாரம் 4 வசனம் 3 ,6, 9) இப்பகுதிகள் தேவனுடைய வார்த்தையை ஆகுமா என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? *சாத்தான் கூறியதை எழுதும்படி ஆவியானவர் மத்தேயுவை ஏவியதால் மத்தேயு 4:3,6,9 ஆகிய வசனங்களை சாத்தான் கூறியதாக எழுதியுள்ளார்.* இந்த பகுதியை நாம் மேற்கோள் காட்டும்போது *_தேவன் இவ்வாறு கூறினார், வேதம் இவ்வாறு கூறுகிறது என சொல்லாமல் சார்தான் இவ்வாறு கூறினான் என்று வேதம் கூறுகிறது என்று சொல்ல வேண்டும்_* சாத்தான் கூறியதை் எழுதும்படி அகத்தூண்டுதல் அளித்தவர் ஆவியானவர் என்பதால் இப்போது களும் தேவனுடைய வார்த்தைகள் என்றுதான் கூறமுடியும்.
இவ்வாறே யோபின் நண்பர்களான 3 பேர் கூறியதை தவறு என்று தேவன் கூறியுள்ளார் (யோபு 42:7). எனவே அவர்களில் ஒருவர் கூறியதை தேவன் கூறுகிறார் அல்லது வேதம் கூறுகிறது என்று பேசக்கூடாது. யார் பேசினார்கள் என்று வேதம் கூறுகிறதோ அவர்கள் பேசினார்கள் என்று நாம் அப்பகுதியை விளக்க வேண்டும். ஆனால் அவர்கள் கூறியதையும் எழுதும்படி ஆவியானவர் அருளியுள்ளதால் இப்பகுதிகளை தேவனுடைய வார்த்தை என்று கூறுகிறோம்.

சில புத்தகங்களில் அவற்றை எழுதினவரின் விளக்கங்கள, சொற்கள், கருத்துக்கள் (யோவா 20:30,31; 21:23,24,25), ஆலோசனைகள் (1 கொரி 7:6,7,8,9; 12 முதல் 40), வால்துதல்கள் ( ரோமர் 16:1 முதல் 15) உள்ளது இவைகளை தேவனுடைய வார்த்தைகள் என்று சொல்வது சரியா? ஆம் இவை யாவும் தேவனுடைய வார்த்தைகளே ஆகும் எப்படி என்றால், இவற்றை எழுதும்பொழுது ஆவியானவர் எழுதும்படி ஏவியதால் தான் எழுதியுள்ளனர் 1 கொரி 7:40இன் பிர் பகுதி இதற்கு ஆதாரமாகும்.
சிலர் செய்த பாவங்கள் வேதத்தில் எழுதப்பட்டுள்ளன எடுத்துக்காட்டாக 2சாமு 11:2-27 தாவீதின் பாவங்களையும் 2சாமு 13:1-18 அம்னோனின் பாவங்களையும் மத்தேயு 26:14-16,46-50 யூதாசின் பாவங்களையும் கூறுகிறது. மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக இவற்றை எழுதாமல் நடந்த நிகழ்ச்சிகளாகத் எழுதப்பட்டுள்ளன. இவற்றின் தீய விளைவுகளைக் குறித்து எச்சரிப்பாக ஆவியானவர் எழுதியுள்ளார்.

*மனிதனின் சொந்த முயற்சி இல்லை:*
வேதத்தில் ஒவ்வொரு நூலையும் பகுதியையும் எழுதியவர்கள் உள்ளதில் ஆவியானவர் அருளினதை அவர்கள் தங்கள் எழுதும் திறனை பயன்படுத்தி தவறின்றி ஆவியானவர் தந்த சொற்களில் எழுதினார். எந்த ஒரு பகுதியையும் தங்களது சொந்த விருப்பப்படி சொந்த அறிவினால் ஆவியானவரின் அகத்தூண்டுதல் இல்லாமல் எழுதவில்லை (2 பேதுரு 1:20,21). வேதவாக்கியங்களெல்லாம் ஆவியானவரால் அருளப்பட்டவை. மேலும் வேதப் வசனங்களுடன் எதையும் கூட்டவோ அதிலிருந்து எவையும் நீக்கவோ கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது வெளி 22:18,19 என்பதையும் வாநாமும் பூமியும் ஒழிந்து போனாலும் வேதத்தின் ஒரு உறுப்பும் ஒழிந்து போகாது மத்தேயு 5:18; 24:35 என்பதையும் கவனித்து யாரா ஆனாலும் வேதம் முழுவதும் தேவனுடைய வார்த்தை என்று ஏற்றுக் கொள்வர். வெளிப்படுத்தின விஷயத்திற்கு பின்னர் தேவனுடைய புதிய வெளிபாடுகள் (வெதபகுதிகள்) இல்லை. ஏற்கனவே எழுதப்பட்டுள்ள வேதத்தின் பகுதிகளுக்கு விளக்கம் அளித்தலே உண்டு.
*மாற்றங்கள்:*
பழைய ஏற்பாட்டில் உள்ள சில வசனங்கள் புதிய ஏற்பாட்டில் ப கூறப்படும் பொழுது சில மாற்றங்கள் அடைந்திருக்கிறதை நாம் காணலாம் (சகரியா 9:9; மத்தேயு 21:4) . இதற்குக் காரணம் பெரும்பாலும் எபிரேய மொழியிலும் சில பகுதிகள் கல்தேய மொழியிலும் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டின் சொற்களைப் புதிய ஏற்பாட்டில் கிரேக்க மொழியில் எழுதும் பொழுது மொழிகளில் உள்ள தனித்தன்மையின் விளைவுகளால் அப்படி எழுதப்பட்டுள்ளது என்பதாகும். சில சொற்களுக்கு பல பொருள் இருப்பதால் வந்த மார்க்கங்களாக இருப்பது இன்னொரு காரணமாகும். யாவற்றிற்கும் மேலாக ஆவியானவர் பழைய ஏற்பாட்டில் தாம் கூறிய சொற்களை புதிய ஏற்பாட்டில் மேற்கோள் காட்டும் பொழுது சிறிது மாற்றம் செய்து எழுத செய்தார் என்பதே பொருத்தமான காரணமாகும்.
*வேதம் தேவனுடைய வார்த்தை:*
வேதத்தில் தேவனுடைய வார்த்தை அடங்கியுள்ளது என்ற கருத்து சரியன்று. அவ்வாறு கூறினால் எந்த வசனம் தேவனுடைய வார்த்தை எந்த வசனம் தேவனுடைய வார்த்தை அல்ல என்பது குழப்பமாகி விடும். வேதம் முழுவதும் தேவனுடைய வார்த்தையே என்று ஏற்றுக் கொள்ளுவதுதான் சரியானது ஆகும்.
*கிருஸ்தவ ஜீவிக்கிற தேவனுடைய வார்த்தை என்பது போல வேதம் எழுதப்பட்டதே தேவனுடைய வார்த்தை ஆகும்.*

ஆக்கியோன்:
பாஸ்டர்.சார்லஸ் MSK