⚡வாலிபத்திலே சிருஷ்டிகரை நினை⚡
💥 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. (பிரசங்கி 12:7)
💥 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. (பிரசங்கி 12:7)
👉 வாலிப பருவத்திலேயே சிருஷ்டிகரைத் தேட வேண்டும்.
👉 சாலொமோன் ஞானியின் ஆலோசனை:
👉 பிரசங்கி 12:3-6 வரை உள்ள வசனங்களின் அர்த்தத்தை காணுவோம்.
⚡மழைக்குப்பின் மேகங்கள் திரும்ப திரும்ப வராததற்கு முன்னும், -அதாவது வயோதிபத்தில் ஒரு வியாதி போனால் மற்றொன்று வரும். அப்படிப்பட்ட நாட்கள் வருவதற்கு முன்னும்,
⚡வீட்டுக்காவலாளிகள் தள்ளாடி – அதாவது கால்கள் இரண்டும் தள்ளாடி போவதற்கு முன்னும்,
⚡பெலசாலிகள் கூனிப்போய் - அதாவது உடலை நிமிர்ந்து நிற்கச்செய்யும் முதுகெலும்பு வளைந்து கூன் விழும் முன்னும்,
⚡ எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து – அதாவது நாம் உண்ணும் உணவு பற்களால் நன்றாக அரைக்கப்பட்டு வயிற்றுக்குள் செல்கிறது. முதுமையில் அநேக பற்கள் விழுந்து விடும். இப்படிப்பட்ட நாள் வரும்முன்னும்,
⚡ பலகணி வழியாய் பார்க்கிறவர்கள் இருண்டு போகிறதற்கு முன்னும் - அதாவது கண்கள் இருளடைந்து பார்வையற்று போகிற வயோதிக காலம் வருவதற்கு முன்னும்,
⚡எந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெரு வாசலின் கதவுகள் அடைப்பட்டு - அதாவது காது கேட்பது குறைய தொடங்கு முன்னும்,
⚡குருவியின் சத்தத்திற்கும் எழுந்திரிக்கவேண்டியதாகி, - அதாவது வயதானவர்கள் ஒரு சிறு சத்தத்திற்கும் தூக்கம் கலைந்து விடுவர். இப்படிப்பட்ட நிலை வருவதற்கு முன்னும்,
கீத வாத்திய கன்னிகைகளெல்லாம் அடங்கி போகாததற்கு முன்னும் - அதாவது தொண்டை வறண்டு, சப்தம் ஒடுங்கி ஒலி எழுப்பும் தொண்டையின் உள் உறுப்புகள் அடங்கி போவதற்கு முன்னும்,
⚡மேட்டிற்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி - அதாவது வயதானவர்கள் உயரமான சாலையை பார்த்தாலே ஏறிச்செல்ல பயப்படுவார்கள். விழுந்து விடுவோமோ, விபத்து வந்து விடுமோ என்று பயங்கள் தோன்றும். இப்படிப்பட்ட நாட்களுக்கு முன்னும்,
⚡ வாதுமை மரம் பூ பூத்து – அதாவது வாதுமை மரம் வெள்ளை வெளேறென பூ பூப்பதைப்போல முடியெல்லாம் நரைப்பதற்கு முன்னும்,
⚡வெட்டுக்கிளியும் பாரமாகி, பசி தீபனமும் அற்று போகாததற்கு முன்னும் - அதாவது வயது முதிரும்போது, ஒரு சிறு காரியமும் பாரமாகி விடும். அதோடு பசியும் மிகவும் குறைந்து விடும். அப்படி ஆவதற்கு முன்னும்,
⚡வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு – அதாவது நரம்புகளெல்லாம் தளர்ந்து போய், பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி – அதாவது பொற்கிண்ணியாகிய இருதயம் நசுங்கி சாவு வருவதற்கு முன்னும்,
⚡இப்படி மண்ணாண நம் சரீரம் பூமிக்குள் புதைக்கப்பட்டு ஆவி மறுபடியும் தேவனிடம் போகும் முன்பே நம் வாலிப பிராயத்திலே தேவனை நாம் நினைத்து அவரை ஏற்று கொள்வோமாக.
வாலிபர்களே உங்களுடைய வாலிப பிராயத்தில் தேவனைத் தேடுங்கள்.
WhatsApp பகிர்வு
