1. தேவபக்தியை மையமாக வைத்துப்போதிக்காதவன்
2. தெவபக்தியின் வேஷத்தை தரித்து அதன் பலனை மறுதலிப்பவன்
3. தேவபக்தியை ஆதாயத்தொழில் என்று எண்ணுபவன்
4. பிள்ளைகளை சகல நல்லொழுக்கத்திலும் கீழ்படுத்தத் தெரியாதவன்
5. வசனத்தை கிரமமாக போதிக்கத் தெரியாதவன்
6. தான் நம்பும் சத்தியத்திற்குஎதிராக கேள்வி எழுப்பும்போது உத்தரவு சொல்லத்தெரியாதவன்
7. ஒரே மனைவியை உடைய புருஷனாக இல்லாமல் ஒன்றுக்கு மேற்ப்ட்ட திருமணம் செய்பவன்
8. மனைவியை அடிப்பவன், விவாகரத்து செய்தவன், விவாகரத்து செய்தபின் மறுதிருமணம் செய்தவன்.
9. விசுவாசிகளை தேவனிடத்திற்கு நடத்தாமல், தன்னை சார்ந்துகொள்ளும்படி செய்கிறவன்.
10. விசுவாசிகளை உழைக்கவும், உண்மையாயிருக்கவும் ஊக்குவிக்காமல் ஜீபூம்பா பாணியேலே ஆசீர்வாதங்களை வாக்களித்து சோம்பேறியாக்குகிறவன்..
11. கடன் பிரச்சனை என்று வந்தால் அவர்களின் கடனுக்கான காரணத்தை அறிந்து அதை சரிசெய்ய முயலாமல், அவர்களை அதிலிருந்து மன்ந்திரும்பவைக்காமலே, கர்த்தர் கடனை அடைப்பார் என புரூடா விடுகிறவன்.
12. தன் தேவைகளுக்கு தேவனை சார்ந்துகொள்ளாமல், எப்போதுமே விசுவாசிகளையே சார்ந்திருப்பவன்
13. பழைய உடன்படிக்கை, புதிய உடன்படிக்கை வித்தியாசம் தெரியாமலே புதிய உடன்படிக்கை சபையை நடத்துகிறவன்.
14. பழையஏற்பாட்டு பலி, பண்டிகைகளை கர்த்தர் ஒழித்துவிட்டார் என போதித்துவிட்டு, அறுப்பின் பண்டிகை, தசமபாகம், முதற்பலன் பண்டிகை, இப்படி காணிக்கைக்கான பண்டிகைகளை மட்டும் தன் சபையில் போதிக்கிறவன்.
15. அற்புத அடையாளைங்களை பிரகடனப்படுத்தியே மற்றவர்களை கவர்ச்சிக்க முயல்பவன்
16. தன்னைப்பற்றி சாட்சி கூறும்படி மக்களை வற்புறுத்துபவன்.
17. கர்த்தர் தரிசனம் தந்தார் என்ற பெயரில் காணிக்கை வசூல்வேட்டையில் இறங்குபவன். (பரிசுத்தத்தில் வளர இவர்களுக்கு ஒரு நாளும் தரிசனமோ, திட்டமோ தேவனிடம் இருந்து ஒருபோதும் வந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)
18. காணிக்கைக்காகவே பல திட்டங்களை உருவாக்குபவன்…[தக்கச்சாவி, ஒரு செங்கல் கட்டிட திட்டம், இளம்பங்காளர், தவணைமுறை காணிக்கை மற்றும் பரிசு திட்டம், நேர்ந்துகொள்ளுதலின் ஆசீர்வாதம், 12 மாத உண்டியல் திட்டம், உடமைகளை தாரைவார்க்கும் திட்டம், காணிக்கை பை வரும்போது அரசாங்கம் அச்சடித்த காசை போடமாட்டேன் தேவன் இந்த உலகில் உருவாக்கிய ஐஸ்வர்யத்தை(தங்கம், வெள்ளிபோன்றவைகள்) தருவேன் என்கிற திட்டம், ஆசீர்வாத தட்டு, ஆசீர்வாத பந்தி, தங்க நாணயத்திட்டம், இப்படி இன்னும்பல…..]
19. ஆடம்பரத்திற்காக அதிகம செலவிட்டு பகட்டு வாழ்க்கை வாழ்பவன்.
20. சபையில் எடுக்கப்படும் காணிக்கைக்கு கணக்கு காட்டாதவன்.
21. தன்னுடைய குடும்பத்திற்கே முன்னுரிமை கொடுப்பவன்.
22. ஒருமுறை கூட தன் தவறை பகிரங்கமாக ஒத்துக்கொள்ளாதவன்.
23. தன்னை மற்றவர்கள் அதிக மரியாதை தந்து தாங்கவேண்டும் என்று விரும்புகிறவன்,
24. பெயருக்கு பின்னால் போடக்கூடிய தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன்.
25. எந்த மீட்டிங்கிற்கு போனாலும் தனக்கு முதல் இடம், மற்றும் மேடையில் மட்டுமே அமர வேண்டும் என்று நினைப்பவன்.
26. மற்றவர்களின் பிரசங்கத்தை கேட்கவோ, எந்த வேத ஆராய்ச்சிக்கூட்டங்களிலும் கலந்துகொள்ளவோ விரும்பாதவன்.
27. ஏழை, பணக்காரன், ஜாதி பாகுபாடு பார்க்கிறவன்
28. அதிக காணிக்கை, நிலம், பொருள் கொடுத்தவர்களை சபை மக்கள் முன்பாக பாராட்டிவிட்டு, குறைவாகக் கொடுத்தவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பவன்.
29. அதிகம் பணம் கொடுத்தவர்களின் பெயரை சபைக்கு முன்பாக கல்வெட்டில் பொறிப்பவன்
30. தான் உபவாசம் இருந்து ஜெபித்ததை ஊரெல்லாம் சொல்லி பிரகடனப்படுத்துபவன்.
31. சபையில் பாவசஞ்செய்தவர்களை பற்றி கவலையோ அக்கரையோ இல்லாதவன்.
32. பாவஞ்செய்தவர்களை கண்டிக்காதவன், ஆனால் தசமபாகம் கொடுக்காதவர்களை கடிந்துகொள்ள தீவிரிக்கிறவன்.
33. எப்பொழுதும் ஒரு சில விசுவாசிகளை தன் குடும்பத்தை கவனிப்பதற்காகவே வைத்திருப்பவன்.
34. சொன்ன தீர்க்கதரிசனத்தில் 2 நடந்துவிட்டால் அதை தாரை ஊதுவித்துவிட்டு, நடக்காத 98 தீர்க்கதரிசன்ங்களைக் குறித்து கப்சிப் என்றிருப்பவன்.
35. சில விஷேசித்த நாட்களான அம்மாவாசை, பௌர்னமி போன்ற நாட்களை மையப்படுத்தி கூட்டங்கள் நடத்தி மக்களை மூடநம்பிக்கைக்கு நேராக நடத்துகிறவன்.
36. வெள்ளை சட்டை அணிந்தால் பரிசுத்தம் என போதித்துவிட்டு, பணம் வந்தவுடன் கலர் கலராக கோர்ட் சூட் அணிபவன்.
37. திருமணம் செய்யாதவர்களை அதிக பரிசுத்தவான்கள் என்று போதிப்பவன்.
38. விஷேசித்த நாட்களில் தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை சாப்பிடக்கூடாது என போதிக்கிறவன்.
39. நாவை கட்டுப்படுத்த தெரியாதவன், அது பேசுவதாக இருந்தாலும் சரி, சாப்பிடுவதாக இருந்தாலும் சரி.
40. கோபப்படுகிறவன், எரிச்சலைடைகிறவன், பொறாமைபடுகிறவன், கெட்டவார்த்தை பேசுகிறவன்.
41. விசுவாசிகளின் அந்தரங்க வாழ்க்கையை தனக்குசாதகமாக பயன்படுத்திக்கொள்பவன்.
42. மற்றவர்களின் அந்தரங்கத்தை மறைக்க தெரியாதவன்.
43. விசாரிக்கும் முன் முடிவெடுப்பவன்.
44. தன்னைவிட திறமையானவர்களை வளரவிடாமல் சீனியாரிட்டி பற்றி சிந்திப்பவன்.
45. சிபாரிசுக்காக அரசியல்வாதிகளிடமே செல்லுபவன்
46. கடன்வாங்கி, அதை நியாயப்படுத்துகிறவன்.
47. தன்னுடைய புத்தகங்கள், ஒலி ஒளி நாடாக்கள் பெறும் விலையை மீறி அதிகப்படியான லாபம் வைத்து பணம் சம்பாதிக்கமுயல்பவன்.
48. தன்னுடைய சபையை விட்டு யாரும்போகக்கூடாது என நேரடியாகவோ மறைமுகமாகவோ போதிக்கிறவன்
49. அப்படியே தன் சபையை விட்டு போனவர்களை விரோதிக்கிறவன் சபிக்கிறவன்.
50. பாவம் செய்தவர்கள் திருவிருந்து எடுக்கலாம் ஆனால் தசமபாகம் கொடுக்காதவர்கள் திருவிருந்து எடுக்கக்கூடாது என போதிக்கிறவன்.
51. பாவம் செய்தவர்களை திருத்த முயலாமல் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவே பிரயாசப்படுகிறவன், ஜெபிக்கிறவன்.
52. கிறிஸ்துவின் மந்தை பெருகவேண்டும் என நினைக்காமல், என் சபை பெருகவேண்டும் என்று எண்ணுகிறவன்.
53. நான் கிறிஸ்துவை பின்பற்றுவதைபோலவே நீங்கள் என்னை பின்பற்றுங்கள் என சொல்லமுடியாதவன்.
54. மந்தைக்கு மாதிரியாக தன்னை காண்பித்து கண்காணிப்பு செய்யாதவன்.
55. சபை மூப்பர்களின் ஆலோசனையை ஒருமுறை கூட கேட்காதவன்
56. தன்னை எதிர்த்தால் தேவன் அவர்களை தண்டிப்பார் என்ற உணர்வை நேரடியாகவோமறைமுகமாகவோ விசுவாசிகளின் இதயத்தில் விதைப்பவன்
57. ஆசீவாதம் என்றாலே அது நிலம், பணம், பொருள்கள் தான் என நம்பவைத்து. தேவனுடைய உண்மையான அழியாத ஆசீர்வாதங்களான தேவபக்தி, கனியுள்ள வாழ்க்கையை மழுங்கச்செய்கிறவன்.
58. ஊழியத்தின் தேவைகளுக்காக வெளிநாடு ஸ்பான்ஸர்களிடம் தன் ஊழியத்தை மிகைப்ப்டுத்தி பணம் பெற முயற்ச்சிப்பவன்.
59. பிரபலமான ஊழியருடன் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் போன்றவறின் மூலம் தன்னையும் அவர்களில் ஒருவனாக காண்பிப்பவன்.
60. கர்த்தரை அறியாதவர்களிடமும் காணிக்கை வேட்டை நடத்துகிறவன்.
61. உதவி ஊழியர்கள், ஊழிய அழைப்பை பெற்றவர்கள் தன் சபையில் இருந்தாலும், தகுதியில்லாத தன்மகனையே தனது வாரிசு ஊழியனாக ஏற்படுத்துகிறவன்.
62. சபையில் சடங்காச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன்.
இப்படி பல குணாதிசயங்களை குறித்து பேசிக்கொண்டே போகலாம், இதிலிருந்து கர்தருடைய ஊழியன் தன்னைக் காத்துக்கொள்கிறான். நீங்கள் ஒரு ஊழியனாக இருந்தால் உங்களை நீங்களே நிதானித்து அறிய இந்த குறிப்புகளை பயன்படுத்திக்கொள்ளவும்…
சாலமன் திருப்பூர்
Theos’ Gospel Hall Ministries, Tirupur
