புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள் (விக்கிபீடியா கலக்ஷன்)


புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள் பல காணப்படுகின்றன. இயேசு யூதேயா மற்றும் அதைச் சூழவுள்ள பிரதேசங்களில் போதனை செய்யும் போதும் அவர் விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டபின்பும் அவரது சீடர்களால் அவரைக் குறிக்க பலபெயர்களை பயன்படுத்தினார்கள். இவற்றுள் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்ட பெயர்கள் இன்றும் கிறிஸ்தவரால் பயன்படுத்தப் படுகிறது.

இயற்பெயர்தொகு

பல எழுத்தாளர்கள் இயேசு என்ற பெயரின் தொடக்கம் பற்றியும் அதன் பொருள் பற்றியும் பல விளக்க கட்டுரைகளை எழுதியுள்ளனர். உறுதியான தகவல்களின்படி இயேசு என்ற பெயர் எபிரேய மொழிப்பெயரான יהושוע (யெஷுஹா) இது விவிலியத்தில் முதலாவதாக யாத்திராகம் 17:8 இல் காணப்படுகிறது. மோசேக்கு அடுத்ததாக இஸ்ரவேல் மக்களின் தலைவரின் பெயராகும். இப்பெயரில் கடவுளின் பெயரும் அவரது செயலும் உள்ளடக்கப்பட்ட பெயர் வடிவமாகும். இப்பெயர் இரண்டு பகுதிகளை உடையது அவயாவன: יהו (யாஹூ), இது யா(வ்)வே கடவுளின் பெயரின் மறுவிய வடிவாகும், மற்றைய மூன்றழுத்து பகுதியான שוע என்பனவாகும். שוע ஐ பயன்பாடு வேறுபாட்டால்[1] [2] [3] [4] [5] இப்பெயருக்கு பல கருத்துகள் பெறப்படுகிறது. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிப்பெயர்ப்புகளாவன
  • "யாவே காக்கிறார்"
  • "யாவே விடுதலை"
  • "யாவே என் உதவி"
  • "யாவே விடிதலை ஒலி" எனபனவாகும்.
யூத மக்கள் பபிலோனில் அடிமைகளாக இருந்தபோது அவர்களது தாய்மொழி அபிரேய மொழியிலிருந்து அறமைக் மொழிக்கு மாற்றம் பெற்றது இதுவே இயேசுவின் தாய்மொழியாக கருதப்படுகிறது. יהושוע (யெஷுஹா)என்ற பெயரும், ישוע (இயேஷுஹா)என மறுவிற்று. இப்பெயரின் இரண்டாக பிரித்து அதன் முதல் பகுதியை நோக்கும் போது அது அரமைக் மொழியின் உச்சரிப்பு வேறுபாடுகள் காரணமாக יה (யா) அல்லது יהו (யாஹூ), அல்லது יא [ய] அல்லது י (யி) என்று வழங்கப்பட்டது. இச்சுறுக்கம் பெயரின் முதல் பகுதியின் மறுவலானது, שוא (ஷுஹா)(காத்தல்) என்பதன் படர்கை குறில் வடிவமாக ישוע ஐக் கொள்ள வைத்தது. இதனால் "அவர் காப்பார்" என பொருள் பட பாவிக்கப்பட்டது. இது மத்தேயு நற்செய்தியில் இறைத்தூதர் "அவர் எல்லோரையும் காப்பார் அதனால் இயேசு என்று பெயரிடு" என்று மரியாளுக்கு கூறியதை [6]அமோதிக்கிறது.
புதிய ஏற்பாடு ஒன்றினைக்கப் பட்டப்போது, ישוע (இயேஷுஹா) கொய்னே கிரேக்க மொழி எழுத்துப்பெயர்ப்பின் போது இயேசுஸ் என மாற்றப்பட்டது. கிரேக்கத்தில், ש (ஷீன்), என்ற எபிரேய எழுத்துக்கு சமனனான் உச்சர்ப்புள்ள எழுத்து இல்லாதபடியால் அது σ (சிக்மா) ஆல் மாற்றீடு செய்யப்பட்டு, பெயரின் இறுதியில் ஒருமை ஆன்பாலை குறிக்கும் விகுதி சேர்க்கப்பட்டது. இப்படி எழுத்துப்பெயர்க்கப்பட்டபெயர் முதலாவதாக அலெக்சாந்தரியாவைச் சேர்ந்த பிளோ என்பவரால் முத்லில் பயன்படுத்தப்பட்டது[7].
ஆங்லிலத்திலும் 16 ஆம் நூற்றாண்டுவரை இப்படியே வழங்கப்பட்டது. இது பின்னர் ஆங்கிலத்தில் ஏற்பட்ட எழுத்து மாற்றங்கள் காரணமாக (I-J)[8]. 17 ஆம் நூற்றாண்டில் ஜேசுஸ் என மாறியது.16 ஆம் நூற்றாண்டில் தமிழர் பகுதிகளுக்கு முதலில் கிறிஸ்தவம் பரப்பப்பட்ட போது இயேசுஸ் என்ற பெயரே போர்த்துக்கேயரால் பயன்படுத்தப்பட்டது. பின்னர் "ஸ்" என்ற வடமொழி எழுத்து பாவனையை தவிர்ப்பதற்க்காக இயேசு என்று பயன்படுத்தப் பட்டது

கிறிஸ்த்துதொகு

கிறிஸ்த்து என்பது ஒரு பெயர் அல்ல மாறாக அது ஒரு பட்டமாகும். இது கிரேக்க மொழியில் ஆசிர்வதிக்கப்பட்டவர்[9] என பொருளுள்ள "கிறிஸ்தோஸ்" என்ப்திலிருந்து தமிழுக்கு மறுவியதாகும். கிறிஸ்தோஸ், மசியக் (משיח) என்ற எபிரேய பதத்தின் அல்லது ம்சிகா (משיחא) என்ற அரமைக் பதத்தின் கிரேக்க மொழிப்பெயர்பாகும். இது மெசியா என்ற தமிழ் பதத்தின் மூலமாகும். மெசியா என்பது கடவுளால் தெரிந்துக் கொள்ளப்பட்ட தீர்கதரிசி, அரசர், அல்லது தலைமைக் குரு வை குறிக்கும்.

புதிய ஏற்பாட்டில் ஏனைய பெர்யர்கள்தொகு

புதிய ஏற்பாட்டில் இயேசு வேறு பல பெயர்களால் அழக்கப்பட்டார். அவற்றில் சில: தேவன், தீர்க்கதரிசி, ஆன்டவர், மனித குமாரன், இறைவனின் ஆட்டுக்குட்டி, யூதரின் அரசன், ராபீ, எம்மானுயேல் என்பனவாகும். கிறிஸ்தவர் இவை இயேசுவின் இறைமையைகுறிக்கும் பெயர்களாக கருது அதேவேலை வரலாற்றாய்வாளர் இப்பெயர்கள் வேறு பொருளுடன் பயன்படுத்தப்பட்டதாக கருதுகின்றனர்.

தேவன்தொகு

கிரேக்க புதிய ஏற்பாட்டின் பல இடங்களில் இயேசு தியெஸ் (Θεός) என குறிப்பிடப்பட்டுள்ளார். இது கொன்யே கிரேக்க மொழியில் இறைமையை குறிக்கும் சொல்லாகும். ஜேம்ஸ் மன்னனின் தமிழ் விவிலியம் இதனை "தேவன்" என மொழிப்பெயர்க்கிறது[10]

தீர்க்கதரிசிதொகு

புதிய ஏற்பாட்டின் படி பல யூதர் இயேசுவை ஒரு தீர்க்கதரிசி என நினைத்தனர்[11]. புதிய ஏற்பாட்டில் இயேசு தன்னை ஒரு தீர்க்கதரிசி என குறிப்பிட்ட இடங்களும் உண்டு[12]. பழைய ஏற்பாட்டில் கடவுளின் வார்த்தைகளையும்,எதிர்காலத்தில் நடைப்பெறப்போகிறவற்றையும் மக்களுக்கு எடுத்து கூறியவர்களே தீர்க்கதரிசிகள் எனப்பட்டனர்.

ஆண்டவர்தொகு

நற்செய்திளும் பணிகளும் இயேசுவை ஆண்டவர் என பல இடங்களில் குறிப்பிடுகின்றன். யோவான் நற்செய்தியில் உள்ளபடி இயேசு தான் ஆண்டவர் என ஏற்றுக்கொண்டார்.[13]
பெரும்பாலான கிறிஸ்தவருக்கு இது இயேசுவி இறைத்தன்மைக்கு சான்றாக விளங்குகிறது. ஒரு வசனத்தில் இயேசு என் ஆண்டவரே என் தேவனே என அழைக்கப்படுகிறார்.[14]ஆய்வாளர் இப்பட்டதின் பயன்பாட்டை வெவ்வேறு விதங்களில் விளக்குகின்றனர்: சிலர் இயேசுவின் சீடர் அவரை ஆண்டவர் என அழைத்தது அவரின் இறைமையை குறிக்கவன்றி மரியாதையின் நிமித்தமும் போதகர் என்றவகையிலுமாகும். ஆண்டவர் என்பத்த்ற்கு பதிலாக "ஐயா", "குருவே" போன்ற சொற்களை பாவிக்களாம் என்பது இவர்களின் கருத்தாகும். ஆனால் இப்பதிலீடுகல் சில இடங்களில் அர்த்தமற்றைவையாக தென்படுகின்றன.[15]
வேறுசிலரின் கருத்துப்படி ஆண்டவர் என்று புதிய ஏற்பாட்டில் குறிப்பிடுவது இயேசுவின் இறைமையை குறிதாலும் அது இயேசு உயித்தெழலுக்கு பின்பு கிறிஸ்தவர்களால் கொடுக்கப்பட்ட பட்டதாகும்.[16] இயேசுவின் உயிர்த்தெழுத்லக்குறிக்க பயன்படுதப்படும் பழைய ஏற்பாடு வசனம் சங்கீதம் 110:1 ஆகும். இங்கு ஆண்டவர் என்பது மெசியாவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது பணி 2:34.

மனித குமாரன்தொகு

நற்செய்திகளுக்கு புற்ம்பாக, இயேசு மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டுமே மனித குமாரன் என அழைக்கப்பட்டார்.(அறமைக்:בר נשא பர் நஷா) முதல் மூன்று நற்செய்திகளில் இயேசு பேசும் போது தன்னைக் குறிக்க பயன்படுத்தினார். இது அக்காலத்தில் வழக்கிலிருந்த ஒரு பழமொழி என்பது ஆய்வாளர் கருத்தாகும்..[17]

கடவுளின் மகன்தொகு

புதிய ஏற்பாட்டில் இயேசு கடவுளின் மகன் என பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இயேசு தன்னை கடவுளின் மகன் என சில வேலைகளில் மட்டுமே குறிப்பிடுகிறார், பல சந்தர்ப்பங்களில் இயேசு கடவுளை தந்தை என அழைத்தார். கிறிஸ்தவர் இதனை இயேசு கடவுளின் மகன் என்பதற்கு ஆதாரமாக பயன்படுத்துகின்றனர். நைசின் விசுவாச அறிக்கையின் படி இயேசு "கடவுளோடு உட்பவித்தவர்" (யோவான் 3:16).

யூதரின் அரசன்தொகு

யூதரின் அரசன் என்ற பட்டம், இயேசு பிறந்த போது அவரை வணங்க கிழக்கிழிருந்து வந்த ஞானிகளால் பாவிக்கப்பட்டது. அவர்கள் எரோது அரசனிடம் "யூதருக்கு அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்" என்றார்கள்..[18]அப்போது திருச்சட்ட அறிஞ்ஞர்கள் யூதரின் அரசன் பெத்லகேமில் பிறப்பார் என மீகா தீர்கதரிசி எழுதியதை கூறினார்கள்.[19]
இது மீண்டு இயேசு கைது செய்யப்பட்டு விச்சாரிக்கப்படும் போது பாவிக்கப்பட்டது. நான்கு நற்செய்திகளில் குறிப்பிட்டுள்ளப்படி, போன்சியோ பிலாத்து இயேசுவை பார்த்து நீர் யூதரின் அரசனா? என வினவினார் அதற்கு இயேசு நீரே அவ்வாறு கூறினீர் என்றார்.[20] பின்பு பிலாத்து இயேசுவை சிலுவையில் அறையும் படி கொடுக்கும் போது குற்றப்பாதாகையில் "நசரேயனாகிய இயேசு, யூதருடைய ராஜா" என எழுதுவித்தான்.[21] இப்பாதாகை சிலுவையில் இயேசுவின் தலைக்கு மேலாக திங்கவிடப்பட்டது. இது அறமைக் மொழிஇலத்தீன் மொழிகிரேக்க மொழிஆகியவற்றில் எழுதப்பட்டது.[22]இலத்தின் மொழியில் இது "Iesus Nazarenus Rex Iudaeorum" என மொழிபெயர்க்கப்படும். இதன் சுறுக்கமான "INRI" என்பது இயேசுவின் சிலுவை காட்சிகளில் பாவிக்கப்படுகிறது.

இறைவனின் ஆட்டுக்குட்டிதொகு

இது யோவான் மட்டுமே பயன்படுத்திய பெயராகும்.[23] புனித பவுல் இயேசுவை பாஸ்கா பண்டிகையின் போது பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டிக்கு ஒப்பிடுகிறார்.[24] அனால் Geza Vermes இன் கருத்துப்படி அறமைக் மொழியில் ஆட்டுகுட்டியை குறித்த "தல்ய" என்ற சொல் ஆன்பிள்ளையை குறிக்க பயன்படுத்தப்பட்டது. எனவே இது இறைவனின் மகன் என பொருள்படும்படி அன்றைய சமூகத்தில் பயன்பட்ட்டிருக்கலாம்.

ராபீதொகு

மர்தலேன் மரியாள் இயேசுவை றபோனி என அழத்தார்.[25] இது என் றாபி என பொருள்படும் (என் குருவே) இப்பெயர் இயேசுவுக்கு மற்ற வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டது.[26] ராபீ என்பது யூதமத போதகர்களை குறிக்க பயன்பட்ட சொல்லாகும்.

அப்போஸ்தலர்தொகு

எபிரெயருக்கு எழுதிய நிருபத்தில் இயேசு அப்போஸ்தலர் என அழைக்க்கப்படுகிறார்.[27]அப்போஸ்தலர் எனப்பது ஒரு பணியின் பொருட்டு அனுப்ப பட்டவர் என பொருள்படும். இது யோவன் நற்செய்தியில் இயேசு அனுப்பபட்டவர் என எழுதப்பட்டுள்ளதுடன் ஆமோதிக்கிறது.[28]

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.