Meaningful Story

*குரங்கு* ஒன்று தேக்கு மரத்தின் குளிர்ச்சியான நிழலில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது.

அப்போது காற்று சற்று பலமாக வீசவே தேக்கு மரத்திலிருந்த உலர்ந்த காய்கள் பொத்து பொத்தென்று குரங்கின் மேல் விழுந்தன. 🌳


கற்களால் அடிபட்டது போல் எழும்பிய வலியில் குரங்கு,
" ஐயய்யோ , எவனோ கல்லால அடிக்கிறானே " என்று அலறியபடியே வாரிசுருட்டிக் கொண்டு எழுந்தது.

எழுந்த பிறகுதான் தெரிந்தது அவை மரத்திலிருந்து உதிர்ந்த காய்கள் என்பது.

குரங்குங்குத் தேக்கு மரத்தின் காய்கள் மேல் பொல்லாத கோபம் வந்துவிட்டது.

"உங்களை என்ன பண்றேன் பாரு " என்று அவற்றைக் காலால் ஓங்கி ஓங்கி மிதித்தது. கால்தான் வலித்ததே தவிரக் காய்களுக்கு ஒன்றுமே நேரவில்லை .

குரங்கின் முட்டாள்தனத்தை மரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குருவி ஒன்று குரங்கிடம் கேட்டது ,

" குரங்கண்ணே , என்ன பண்ணிக்கிட்டு இருக்கே ? "

குரங்கு சொன்னது , இந்தக் காய்களைப் பழிவாங்கணும்னு பாக்குறேன். ஆனா அதுங்களுக்கு ஒன்னுமே ஆகமாட்டேங்குது.
               
குருவி சொன்னது ,
இதுங்களைப் பழிவாங்க ஒரே வழி , மண்ணில குழி பறிச்சு இதுங்களை ஒவ்வொன்னா புதைச்சு வைக்கிறதுதான்.

புதைச்சு அது மேல கொஞ்சம் தண்ணி ஊத்தி வச்சிட்டா அது அப்படியே மக்கிப்போய் மண்ணோட மண்ணாயிடும் .

அப்படி இல்லன்னா தண்ணில தூக்கி வீசினாலும் அப்படியே அழுகிப் போயிடும் " என்றது .
             
குருவி சொன்னதை உண்மையென்று நம்பிய குரங்கு அன்று முதல் தேக்குவிதைகளைத் தேடித்தேடிப் பிடித்துப் பழிவாங்கி வருகிறது.

அது ஆற்றில் எறிந்த விதைகள் வெகுதூரம் பயணித்துக் , கரை ஒதுங்கும் இடமெல்லாம் தேக்குத் தோப்புகள் உருவாகி வருகின்றன.

புதைக்கப்பட்ட
விதைகள் வளர்ந்து மரமாகிக் காட்டை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
           
இன்று வரை முட்டாள் குரங்கு பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு அதைப் *பெருக*ச் செய்து கொண்டே இருக்கிறது.

ஊழியங்களை ஒழிப்பதாக நினைத்து , பிசாசும் இப்படித்தான் நம்மைப் புதைப்பதும் , தொலைதூரம் போய்விடும்படி வீசியெறிவதுமான காரியங்களை செய்து வருகிறான் .

*நாம் அக்கினியில் எறிப்பட்டாலும் ஆயிரங்களாய் முளைத்துப் பரம்புகிற விதைகள் என்பது அவனுக்குக் தெரியாதல்லவா ?*


ரோமர் 8:36 சொல்வது போல 🎚

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?

இப்படி அவன் எந்தத் துன்பத்தில் நம்மைப் புதைக்க எண்ணினாலும் , நாம்தான் விருட்சமாக *எழுந்து நிற்போமே..!!* 👍🏻

🙏🏻
____________________________
By s j s k

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.