விசுவாசிகள், குறிப்பாக மந்தைக்குப் பொறுப்பாக உள்ள போதகர்கள், மற்றும் ஆத்துமாபாரத்தோடு உழைத்துக் கொண்டிரும்மும் எவரும் தங்கள் சரீரத்தையும் சற்றே.. இல்லை.. கொஞ்சம் நன்றாகவே கவனிப்பது அவசியம்.
ஆத்துமாவுக்காகப் பாரப்படும் உங்கள் ஆவிக்குறிய ஓட்டம் சரீரம் சரியில்லாவிட்டால் படுத்துவிடும் அபாயம் உண்டு அவசியமென்பதை நினைவில் கொள்க. இதற்கு முக்கியக்காரணமான உணவில் கட்டுப்பாடு இல்லாமைன, ஓடும் ஓட்டதில் ஒருநாள் இடறலை உண்டாக்குவது உறுதி!
சில போதகர்களைக் கண்டு உரையாடியபோது அவர்கள் சொன்னது வெளியில் எங்கும் நான் சாப்பிடுவதில்லை. ஆனால் வீடுகளில் சாப்பிடுகிறேன். அதாவது போகிற வீடுகளிலெல்லாம்!!! பாஸ்டரைத் திக்குமுக்காடச்செய்வதையே அன்பின் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இதைமட்டும் அவர்களால் தவிர்க்கவே முடிவதில்லை என்றனர். நூறுவருடங்களுக்கு முன் உணவு கிடைக்கவே ஊழியர்கள் (எல்லோரும்தான்) சிரமப்பட்ட காலம் போய் இப்பொழுது கிடைக்குக் உணவே பிரச்சனையாக மாறிவிட்டது பிரதர் என்றார்கள். போகிற இடமெல்லாம் பிரியாணி. சாப்பிடும் வேளையெல்லாம் சோறு!
ஒரே ஒரு போதகர் மட்டும் விதிவிலக்கு. “கல்யாணங்களில் என்னை அழைப்பது உங்கள் அன்பு என்றால் அதைவிட அதிக அன்புகாட்ட உங்களுக்கு ஒரு வாய்ப்பு: என்னை விருந்துக்கு எக்காரனம் கொண்டும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஒரு வேண்டுகோள் வைத்து விடுவேன். தினமும் இரவில் ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் 8 கிமீ, அதுவும் இரவில் நடந்துவிடுகிறேன்”. ஆனால் இப்போதகர் ஒரு விதிவிலக்கு.
மற்றப்படி சர்வசாதாரணமாக, நூறுகிலோவைத் தாண்டி செம குண்டாக இருப்பது நம் ஆவிக்கிறிய வாழ்வுக்கே உலைவைக்கும் அபாயத்தை, அதாவது இன்றில்லாவிட்டால் ஒருநாள் உண்டாக்கும் என்பதை மறந்துவிட்டிருக்கிறார்கள். சிலர் ஞாபகம் இருந்தாலும் “எங்கே பிரதர்,உடலைக் குறைக்க விரும்பினாலும் உடற்பயிற்சிக்கு நேரமே கிடைப்பதில்லை” என்று சொல்லிக் கொண்டே பயங்கர சைஸில் இருக்கிறார்கள். நடக்கவே சிரமப்படுகிறார்கள். உபவாசம் இருப்பது பெரும் சோதனையாக மாறிவிட்டிருக்கிறது. இன்னும் சிலர், “நான் கர்த்தருடைய வேலையைச் செய்கிறேன், அவர் என் சுகத்தைப் பார்த்துக் கொள்வார்” என்று சவுண்ட் டாக்ட்ரைன் உரைக்கிறார்கள். ஆனால், அது நல்லதற்கல்ல. கண்டதும் தின்று குண்டராக இருப்பதைக் கர்த்தர் விரும்புவார் என்று நினைக்கிறார்களா, தெரியவில்லை.
போதகர் கதை இப்படியென்றால், விசுவாசிகள் கதையும் இப்படியே. முஸ்லீம்கள் என்றால் பிரியாணி ஞாபத்துக்கு வரலாம், ஆனால், உண்மையில் எல்லா விழாக்களிலும் பண்டிகைகளிலும் பிரியாணிபோட்டுக் கோழியை எண்ணையில் நீந்தவிட்டுச் சில்லிச் சிக்கன் அடிப்பவர்கள் கிறிஸ்தவர்கள்தான். தென் தமிழ்னாட்டு இல்ல ஜெபக்கூடுகைகள் புரோட்டா இல்லாமல் போகாது. கிராம ஊழியங்களில் வேன்களில் ஆடுகள் ஏற்றப்பட்டு பிரியாணியில்லாமல் சொல்லப்படும் நற்செய்தி நிறைவடையாது.
உணவுக் கட்டுப்பாடு - குறிப்பாக கண்ட கண்ட வேளைகளில் பிரியாணி, பொறித்த ஐட்டங்கள் உண்ணத்துவங்குவது ஆஸ்பத்திரியிலும் மருந்திலுமே நிறைவடையும். பின்பு உழியம் செய்வது எப்படி? இயேசு சுகமளிப்பார் என்று நம் சுகவீனத்தில் எப்படி நோயுடன் வாடுபவர்க்கு ஆறுதல் சொல்ல முடியும்? உடல் நலம் நசிவடையத் துவங்கினால், சிலநாட்களுக்குள் ஊக்கமான ஜெபமும் உற்சாகமான வேத வாசிப்பும் தொடரும் என்றாலும் பின்பு வேதனையில் விரக்தி கூடிக்கலக்கும். ஆவிக்குறிய வாழ்வில் ஆப்பைச் செருகத்துவங்கும்.
ஒருவேளை இதுவரை தொடர்ந்து வாசித்து..சரி..சரி, இப்பொழுது என்ன செய்யலாம் என்பீர்களானால் சில சிறு ஆலோசனைகள். கேட்பதற்குக் காதுள்ளோர் கேட்கலாம்.
சர்க்கரை, இரத்த அழுத்தம் ஆகிய இருவரும் நண்பர்கள். சேர்ந்தே கொஞ்சம் முன்னே பின்னே வருவார்கள். பொறித்த ஐட்டங்களும், ரீபைன்ட் எண்ணைகளும், ஏகப்பட்ட வெள்ளைச் சர்க்கரை போட்ட சில பல டீ காப்பிகளும் கேன்சரைக் கொண்டுவந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கொலஸ்ட்ராலை விட முக்கியமான ஒன்றுபல மருத்துவர்களே அறியாத ஒன்று உண்டு. அதன் பெயர் hscrp! என்னவென்று கூகிளில் தேடுங்கள். இல்லையென்றால் கமண்ட்டில் கேளுங்கள்.
“ஒல்லியாத்தான் இருப்பாரு, காலையில் வரை நல்லாத்தான் இருந்தாரு, பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தாரு. திடீருனு சரிஞ்சுட்டாரு, இப்ப ஆஸ்பத்திரியில் பேரலைஸ் என்கிறார்கள் (அல்லது ஹார்ட் அட்டாக் என்கிறார்கள், மூளையில் இரத்தக் கசிவாம்)” என்ற வசனத்தை ஒருமுறையாவது யாரோ சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதற்கு முக்கியக் காரணம் இன்ஃப்ளமேஷன். அதற்குக் காரணம் இந்த hscrp. இது அதிகமாக இருப்பதற்குக் காரணமான சில உணவுகளை (குப்பைகளை)த் தவிர்த்தால்கூடப் போதும். தப்பிக்கலாம். இப்போ கொஞ்சம் டிப்ஸ்:
1. மாலையில் பப்ஸ் சாப்பிட்டுத்தான் டீ குடிப்பீர்களானால் உங்களுக்கு hscrp அதிகமிருக்கும். புரோட்டா வாரம் ஒரிருமுறை சாப்பிடுவீர்களால் hscrp அதிகமிருக்கும். பிரியாணிப் பிரியரா hscrp அதிகம்தான்! மூன்றுவேளையும் சோறு, தொட்டுக்கொள்ள பக்கோடா, பஜ்ஜி?. கேட்கவே வேண்டாம்!
2. ஒரு முழு இரத்தப்பரிசோதனை எடுங்கள். hscrp என்ற ஒரு டெஸ்ட் அவசியம் எடுங்கள். கொலஸ்ட்ராலலைக் கண்டு பதறுவதைவிட நீங்கள் அதிகம் பதறவேண்டியது hscrpக்குத்தான்.
3. அப்புறம், வாரம் நான்கு நாட்கள் நல்ல வெயிலில் நடவுங்கள். ஆம், நல்ல உச்சி வெயிலில். உடல் கறுப்பது முக்கியமா, சர்க்கரை வராமல் வருவதைத் தடுப்பது முக்கியமா என்ற கேள்விக்குப் பின், சர்க்கரைக்கும் சூரியஒளிக்கும் சம்பந்தம் உண்டு என்பதை அறியுங்கள். அதாவது சர்க்கரை ஒளி ‘விட்டமின் டி’ குறைபாட்டுக்கும் அந்தக் குறைபாடே சர்க்கரை நோய்போன்று பல்வேறு நோய்களுக்கும் காரணம். எனவே, வெயில், அதாவது சூரியஒளி அவசியம்!
4. அடுத்ததாக சமையல் எண்ணை. முதலில் ரீஃபைண்டு ஆயிலை விட்டொழியுங்கள். அது சமையலுக்கான எண்ணையே இல்லை. செக்கில் ஆட்டிய நல்லெண்ணை, தேங்காய் எண்ணை மற்றும் நெய் தயங்காமல் சேருங்கள். உடல் நலம் மேம்படுவது உறுதி.
5. டீப் ஃபிரை என்கிற எண்ணையில் முழுகடித்துப் பொறிப்பது கிச்சனில் செய்யும் வில்லத்தனம். எண்ணையை இப்படி பயன்படுத்து உண்மையில் நமக்குநாமே செய்யும் டெரரிசம்.
6. நடங்க அய்யா! தினமும் 3 கிமீ ஓகே. 5-6 மிகவும் சிறப்பு. 7-8 என்றால் ஆரோக்கியத்தின் அன்புப் பிடியில் நீங்கள்.
7. டீ காபிக்கு அடிமையா? நீங்கள் இதுவரை ஆரோக்கியமாக இருப்பது தேவகிருபைதான். அந்தக் கிருபையை தொடர்ந்து சோதிக்காதீர்கள். ஒரு டீ சரி, அதற்கு மேல் வேண்டாம். மாற்றாக பட்டர் டீ, பட்டர் காஃபி என்றால் என்ன என்று கூகிளிட்டுக் கண்டுபிடியுங்கள்.
8. வாரம் ஒருமுறை 3 வேளை உபவாசம். அதை ஒருவேளையில் இருந்து துவங்கி, மூன்றாக மாற்றுங்கள் மூன்று மாதத்தில். ஆவிக்குறிய வாழ்க்கையும் பலப்படும். மூளை கீட்டோஸிஸில் இருக்கும். கீட்டோ
9. அரிசியைக் குறையுங்கள். ஒருவேளைக்கு மேல் வேண்டாம். கோதுமையும் அப்படியே. (அதற்காக அரிசி ஒருவேளை, கோதுமை ஒருவேளையா என்று கேட்காதீர்கள். இரண்டும் அவற்றின் செயல்பாடுகளில் ஒன்றே.) சாதத்தை வடித்த சாதமாக மாற்றுங்கள். குக்கருக்கு ஒரு குட்பை சொல்லுங்கள்!
10. வெள்ளைச் சர்க்கரை ஸ்லோ பாய்ஸன் என்று அடிக்கடி சொல்வார் என் தாத்தா. அதுவும் 80களிலேயே. இனிப்பு எல்லாமே எனிமியே!
11. வாரம் ஒருமுறை 3 வேளை உபவாசம். அதை ஒருவேளையில் இருந்து துவங்கி, மூன்றாக மாற்றுங்கள் மூன்று மாதத்தில். உங்கள் உடல் இப்பொழுது கீட்டோன்களில் இயங்கும். அதாவது மூளை சுறுப்பில் துடிக்கும். இப்பொழுது வேத தியான,ஜெபவாழ்க்கை ஓங்கும்.
11. நீங்கள் எதைச் சாப்பிடவேண்டும் எதைச் சாப்பிடக்கூடாது என்று அந்தப் பொய்யர், அதாவது பன்னாட்டுக் குப்பை உணவு உற்பத்தியாளர்கள் கட்டளையிடுவது நிஜமா (1 தீமோத்தேயு 4:1-4) என்று சிந்தியுங்கள். சாலமோன் ஞானி, ஞானம்.. ஞானம், அதைச் சம்பாதி என்கிறாரே, அதில் உடலைப் பேணும் ஞானம் அடக்கமா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். பிசாசாவனன் யார் எந்தக் கண்ணியில் விழுவாரோ, அதைத்தான் வைப்பானே ஒழிய, கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் படிக்க ஒருபோதும் முயல அவன் முட்டாள் அல்ல. சரிதானே?
கடைசியாக, ஆத்துமா நித்தியத்தை அடையும்வரை உங்கள் ஆவிக்குறிய வாழ்க்கை ஆரோக்கியமாகச் செல்ல இந்த சரீரம் அவசியம் என்பதை உணருங்கள். உங்களுக்காக ஆத்துமாக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர், அவர்களையும் சந்திக்க நீங்கள் இன்னும் ஆரோக்கியமாக ஓட வேண்டும்.