தியானவசனம் : நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். - (நீதிமொழிகள் 13:21ன் பின் பகுதி)
ஜெபம் :எங்கள் அன்பின் பரம தகப்பனே,
நீர் நல்லவர், நன்மை செய்கிறவர், நன்மைகளின் ஊற்று, பாரபட்சம் இல்லாதவர், மாறாதவர். உம்முடைய பிள்ளை களாகிய நீதிமான்களுக்கு, நன்மையை பலனாக தருகிற தெய்வமாக நீரே இருக்கிறபடியால், உமக்கே துதி, கனம், மகிமை, இன்றும், என்றும், எப்போதும் உண்டாவதாக.
அப்பா, இந்த இடத்திலும், உம்மால் ஞானவானாக்கப்ப ட்ட ராஜா சாலமோன், பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும் என்று சொ ல்லுவதை பார்க்கிறோம்.
அப்பா, உமது பிள்ளைகளாகிய நாங்கள், நன்மை கிடை க்காதபடி, தீங்கை, தீமையை, ஆபத்தைக் கண்டு பயந்து, கலங்கி, ஐயோ! தீமை சூழ்ந்து கொள்ளுமோ? தீங்கு பின் தொடருமோ? ஆபத்து சடுதியாக வருமோ? என்று மனம் அஞ்சி எண்ணிக் கொண்டு இருந்தால், இந்த வசனத்தை தியானிக்கின்ற இந்த வேளையில், நாங்கள் எங்களை ஆராய்ந்து பார்த்து, பாவங்கள், அக்கிரமங்கள், குற்றங்க ள் இருக்குமாயின், உம்மிடம் அறிக்கையிட்டு, நன்மை யான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் பரத்திலிரு ந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இற ங்கி வருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யா தொரு வேற்றுமையின் நிழலுமி ல்லை என்று உணர்ந்து, உம்மால் நீதிமான்களாக்கப்பட்டு, உம்மிடம் இருந்து நன்மையை பலனாக பெற்று, எங்களுக்கு வரும் நன்மைகள் எல்லாம், எங்கள் கர்த்தரிடத்தில் இருந்து வருகிறது என்று உம்மை மகிமைப்படுத்த கிருபை செய்வீராக.
ஐயா, நன்மை என்றால் என்னவென்று அறியாமல், தீங்கு க்குளாக வைக்கப்பட்டு, தீமை தொடர்ந்து பிடித்து, ஆபத்து, விக்கினங்க ளுக்குள்ளாக கடந்து வந்து, என் வாழ்விலும் நன்மை கிடைக்குமா? நன்மையை தரும் தெய்வம் ஏதேனும் உண்டா? என்று உம்மை அறியாத, ஒவ்வொரு ஆத்துமா வும், உம்மை காண, இரட்ச்சிக்கப்ப ட, உமது மைந்தன் இயேசு கிறிஸ்து மூலமாக, உமது நீதிமான்க ளாகி, உம்மால் நன்மையை பலனாக பெற்று, நாங்கள் அனுபவிக்கும் நன்மை எல்லாம், எங்கள் கர்த்த ரிடத்தில் இருந்து வருகிறது என்று உம்மை மகிமைப்ப டுத்த கிருபை செய்வீராக.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே. ஆமென்.🙏🏻
