கடைசி கால இரத்த சாட்சி
*உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,*
(ரோமர் 8 :35)
ரோமர் 8: 35 இரத்த சாட்சியாக ஒப்புக்கொடுக்கப்பட்டவர் அல்ல. இவர்கள் கடைசி கால இரத்த சாட்சிகளாக ஒப்புக் கொடுக்கப்பட்டிருப்பவர்கள். அவர்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை. ஐவ்வகை ஊழியக்காரர்களும் உள்ளார்கள். அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் (மூன்றரை வருஷங்கள்) நடக்கப்போகும் உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள். மூன்றரை வருட முடிவில் எடுத்துக் கொள்ளப்போகிறவர்கள். அவர்கள் மரணக்குழியில் இரண்டு, மூன்று, நான்கு வருஷங்களே இருப்பார்கள். இன்றைக்கு செத்துக்கொண்டிருக்கிற இரத்த சாட்சிகள் கடைசி நிமிட இரத்த சாட்சிகள். அது நாமாகவும் இருக்கலாம். கடைசி கால இரத்த சாட்சிகள் வீரமும் பலமும் ( சிங்கத்தின் குணம்) சாந்த குணமும் - தாழ்மை குணமும் (ஆட்டுக்குட்டியானவர் குணம்) பழிவாங்காத பண்பும் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.
இப்போது வாழும் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதைப்போல, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிப்போல எண்ணப்பட்டாலும்
ஜெயங்கொள்ளுகிறோம்.
*என்ன நேரிட்டாலும்,*
36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
37 இவை எல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. (ரோமர் 36- 37)
அந்த இரத்தசாட்சிகள் இப்போதும் இதைப்போலவே இப்போது ஜெயங்கொள்கிறதாலே தேவன் அவர்களை தேர்ந்தெடுக்கிறார். நாம் ஒப்புக்கொடுத்தாலும் தெரிந்து எடுப்பது தேவனே. எப்போது கசாப்புக்கடைக்குப்போவோம் என்று இந்த ஆட்டுக்குட்டிக்கு தெரியாது.
______________________________
