இரத்த சாட்சிகளின் குணங்கள் - பண்புகள்

இரத்த சாட்சிகளின் குணங்கள் - பண்புகள்

தானியேல் புத்தகம் 3 & 6 அதிகாரத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளை கூறலாம். மரிக்கும் நிலைக்கு அருகில் இருந்தவர்கள், தானியேல் மற்றும் அவரது நண்பர்கள் சாத்ராக் - மேஷாக் - ஆபேத் நேகே இவர்களே.

ஒன்று அக்கினிசூளையில் எரிந்து சாக துணிந்த தானியேல் நண்பர்களின் பயமின்மை - மற்றது தானியேல் பயமில்லாமல் சிங்ககெபிக்குப்போனது . மரணத்தை ருசி பார்க்காமல் திரும்பி வந்தவர்களே ஆயினும் பயமற்ற நிலையில்  இருந்தனர்.

இரத்த சாட்சிகளின் குணங்கள் - பண்புகள் :

★பழி வாங்கும் எண்ணம்  
    கூடாது
★ தைரியம் வேண்டும்

வெ. விசேஷம் 6 அதிகாரத்தில் இரத்த சாட்சிகள் பேசுவதை கேட்கலாம். அவர்களை கொன்றவர்களை பழிவாங்கும் வரை கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இயேசு கிறிஸ்துவும் மகா பெரிய இரத்த சாட்சியே. அதனால்தான் அவரை குத்தினவர்கள் கண்ணும் காணும்படியாக இரண்டாம்முறை வரப்போகிறார் என
வெ. வி 1: 7 சொல்லுகிறது.

இரத்த சாட்சியை எபிரேயத்தில்  Mar tus என்று சொல்லுவார்கள். அதன்
அர்த்தம்:

i. நீதித்துறை சாட்சி
ii. சம்பவத்திற்க்கு உண்மை 
    சாட்சி
இது எப்படி நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பொருந்தும் என பார்த்தால், ஒரு இரத்த சாட்சி மரித்து பரலோகத்திலே தேவனின் சிம்மாசனம் முன்பு
(Judicial witness) நடந்த சம்பவத்திற்க்கு உண்மை சாட்சியாக நிற்பவர் -
மற்றும் சம்பவத்தை பார்த்த சாட்சியாக நிற்பவர்.

*தேவன் மரித்ததற்க்கான சாட்சியை சம்பவம் நடந்த இடத்திலுள்ள சபைகளின் போதகர்களை எல்லாம் கூட்டி விசாரிப்பார். இரண்டாவதாக அந்த இடத்தின் இரட்சிக்கப்படாத மக்களை விசாரிப்பார். இரண்டுபேரும் சொல்லுவார்கள்.இரத்த சாட்சி உண்மையை சொல்லுவார்.*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.