Type Here to Get Search Results !

ரேடியோவும் ஜெபமும்

ரேடியோவும் ஜெபமும்

ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி சிறுவயதாய் இருந்தபோது ஒறுநாள் தன்னுடைய தகப்பனார் ஜெபித்து கொண்டிருப்பதை பார்த்து சிரித்துகொண்டு இருந்தார். தகப்பனார் மகனை பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டார். அதற்கு மார்கோனி, அப்பா... நீங்கள் பரமண்டலங்களில் இருக்கும் எங்கள்பிதாவே என்று ஜெபித்தீர்கள்  அந்த பரமண்டலம் எங்கேஇருக்கிறது? என்று கேட்டார். அதற்கு தந்தை மேலே கை காண்பித்தார்.மேலே பரமண்டலத்தில் இருக்கிற பிதாவுக்குஇங்கு இருந்து நீங்க செய்கிற ஜெபம் எப்படிகேட்கும்? பக்கத்திலிருக்கிற எனக்கே கேட்கமாட்டேங்கிறது என்று  பரியாசமாய் கேட்டார். அதற்கு தந்தை என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மறுபடியும் முழங்கால் போட்டு ஆண்டவரே நீரே என் மகனுக்கு புரியவையும் என்று ஜெபித்துவிட்டு போய்விட்டார்.

மார்க்கோனி ரேடியோ கண்டுபிடித்தபின் தன்னுடைய சொந்த ஊரிலே நடந்த பாராட்டு விழாவில்... என்னுடைய சிறுவயதிலே என் தந்தையிடம் நான் கேட்ட ஒரு கேள்விக்கு ஆண்டவர் என் வழியாகவே எனக்கு பதில் சொல்லிவிட்டார். எப்படியெனில் நான் கண்டுபிடித்த இந்த ரேடியோவை ரோமில்  வைத்து கேட்கும்போது  முன்னூற்றுஇருபது கி.மீ தொலைவில் இருக்கும் மிலனிலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எந்த நேரத்தில் ஒளிபரப்பபடுகிறதோ அதே நேரத்தில் ரோமிலும் கேட்கமுடியும். சாதாரன ஆறறிவுள்ள மனிதனாகிய நான் கண்டுபிடித்த இந்த ரேடியோவே இப்படிகேட்கும்போது என்னை படைத்த ஆண்டவர் நிச்சயமாக என் தகப்பன் செய்த ஜெபத்தை  கேட்பார். என்று சொன்னார்.

ஆகையால் சகோதரனே சகோதரியே  நம்முடைய ஆண்டவர் ஜெபத்தை  கவனித்து கேட்கிறவர் என்பதில் நிச்சயம் கொண்டவர்களாக இருப்போம்! ஆனால் அவர் விரும்பும் விதமாக ஜெபிக்கிறோமா என்பதை ஆராய்ந்து சரியாக ஜெபிக்க கற்றுக்கொள்வோம். அவரிடம் ஜெபிக்க நாம் பெற்றிருக்கும் சிலாக்கியத்தை கொள்ளையாடின பொருளாக எடுத்துகொள்ளாமல் இருப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக!

   

Post a Comment

0 Comments