_வெளி. விசேஷம் 6: 2_
நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன், அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான், அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது, அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.
*இவன் அந்திக்கிறிஸ்து* :
வில்லை வைத்திருக்கிறான். அம்பு இல்லை. இதுவே வஞ்சகம். தன் வஞ்சகத்தினால் நாடுகளை பேச்சுவார்த்தை மூலமே ஜெயிப்பான். இவன் உலகரீதியாக எல்லா நாடுகளையும் சந்தித்து சமாதனத்தை கொண்டுவர செய்வான். ஏனென்றால் இப்போதைய உலகம் மதரீதியாக இனரீதியாக பிரிந்து சமாதானமில்லாமல் இருப்பதால் கள்ளத்தீர்க்கதரிசி ஒரே உலக மதத்தை ஒன்றியிணைப்பான். அடையாள அற்புதம் செய்வான். இந்த கள்ளத்தீர்க்கதரிசி அந்திக்கிறிஸ்துவை கடவுள் என அடையாளம் காட்டுவான்.
கர்த்தர் கொடுத்த அதிகாரம்
*வெள்ளைக்குதிரை - சமாதானமாகி காட்டி ஏமாற்றி (வஞ்சனை) சர்வாதிகாரி ஆவான்.*
கடைசி கால யுத்தம் அர்மெகதான் யுத்தம். இஸ்ரவேலை ஆதரிக்கும் நாடுகளுக்கும் அந்திக்கிறிஸ்துவை ஆதரிக்கும் நாடுகளுக்கும் நடக்கும். சேனைகளின் கர்த்தர் தன் பரலோக பூலோக சேனைகளோடு (ஆவிக்குரிய யுத்தம் நிஜம் - அச்சுருத்தல் நிஜம்) நடத்துவார். நிஜ யுத்தம். 100 கோடி பேர் வந்தாலும் ஜெயிப்பார்.
முத்திரைகள் உடைப்பது பேசுவதெல்லாம் நம்ம கணிப்பு.
பல வசனங்கள் முத்திரை போடப்பட்டிருக்கிறது. யோவான் பார்த்ததெல்லாம் புத்தகத்தின் மேல் பகுதி. உள்ளே உள்ளது சொல்லப்படவில்லை. இனிமேல்தான் காலம் நெருங்க நெருங்க கர்த்தர்
தன் தீர்க்கதரிசிகளுக்கு அறிவித்துக்கொண்டே வருவார். கர்த்தர் யுத்தத்திற்க்கு பூமியிலே வாலிப - ஆண் பெண் குழந்தை சேனைகளை ஏற்படுத்தி வருகிறார். பைபிளில் இருந்தால் சொல்லுங்கள். பல முத்திரையிடப்பட்டுள்ளன.
அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைக் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.
(வெளிப்படுத்தின விசேஷம் 5 :1)
நாம் படிப்பதெல்லாம் புத்தகத்தின் வெளிப்பக்கம். முத்திரை உடைக்கக்கண்டேன் என இருக்கும். வந்து பார் இருக்கும். உள்ளே உள்ளது வாசிக்கப்படவில்லை.
*உள்ளும் புறம்பும் உள்ளதில் புறம்பே உள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளேயுள்ளல்ல.*
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.
(வெளிப்படுத்தின விசேஷம் 6 :1)
*இப்போதைய தீர்க்கதரிசனம்படி முதலில் உடைக்கப்படப்போகிற முத்திரை ஐந்தாம் முத்திரை. இது ரத்த சாட்சிகள் எழுப்பப்பட வேண்டியதற்க்கான முத்திரை.*
