*இரத்த சாட்சிகள் யார்?*
கடைசி காலமான இப்போது வேதனை ஆரம்பம் ஆகி விட்டது.
(மத்தேயு 24: 8)
★இந்த வேதனை எபிரேயத்தில் பிரசவ வலி என்று அர்த்தம். குழந்தை பிறப்பதற்க்கு முன்பு உள்ள மாதங்களில் வருரோரோ.ரே
உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக் கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
- மத் 24: 9
உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து உயிர் இழப்பவர்களே இரத்த சாட்சிகள். இந்த இரத்த சாட்சிகளாக ஆபேல், மோசே காலத்து குழந்தைகள், இயேசு காலத்து 2 வயது குழந்தைகள், புதிய ஏறபாட்டில் யோவான்ஸ்நானன், 11 அப்போஸ்தலர்கள், ஸ்தோவான் என கடந்த 2015 ஆண்டுகளாக கர்த்தருக்காக மரித்தவர்களை சொல்லலாம். இன்று வரை
(லிபியா, சிரியா, ஈரான், ஈராக், இஸ்ரவேல் ....)
மரித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
அவர்கள் பரலலோகத்திலுள்ள நமது
தேவனை நோக்கி கூப்பிடுகிறார்கள், .நாங்கள் எதுவரைக்கும் காத்திருப்போம்? எதுவரைக்கும் பூமியை நியாயத்தீர்ப்பு செய்யாமல் இருப்பீர்? என மகாசப்தமிட்டு கூப்பிடுவார்களாம்.
வெளிப்படுத்தின விசேஷம்
6: 10
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் கூப்பிட்டார்கள்.
அதற்கு தேவன் பதில் அளித்ததை படியுங்கள்.
அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங் கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
வருகின்ற அந்திகிறிஸ்துவின் ஆட்சியில் முத்திரை தரியாதவர்களை தேடிப்பிடித்து கொலை செய்வார்கள்.
______________________________
