ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். ஆதி.4:4.
தேவனுக்கு காணிக்கை கொண்டு வந்த முதல் மனிதன்.
தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் மனிதன்.
சொந்த சகோதரனால் பகைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட முதல் மனிதன்
தேவனுக்கு காணிக்கை பலரும் படைக்கிறார்கள் .
தேவன் உங்களையும் உங்கள் காணிக்கையையும் ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது ஊழியர்கள் மாத்திரம் ஏற்றுக் கொள்கிறாரா?
தேவனால் நீங்களும், உங்கள் காணிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட இயேசுவே தேவனென்றும் பாவத்திலிருந்து விடுவிக்கிறவர் என்ற விசுவாசித்திருக்க வேண்டும்.
இயேசுவே தேவனென்றும் இரட்சகரரென்றும் விசுவாசித்த நீ தீமையை விட்டு விலகியோட வேண்டும்.
தீமையை (பாவத்தை)விட்டு விலகியோடாமல் நீ செலுத்தும் காணிக்கையை ஊழியர் ஏற்றுக்கொள்ளலாம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது கேள்விக்குறியே.
தேவன் உன்னிடத்தில் பல ஊழியர்கள் கேட்பது போல ஆயிரங்களையும், கோடிகளையும் கேட்பதில்லை.
அன்று அருள்நாதர் இயேசுவின் பார்வையிலே இரண்டு காசு போட்ட பாட்டியின் காணிக்கை அங்கிகரிக்கப்பட்டது.
நண்பனே நீ எவ்வளவு கொடுத்தாய் என்பது முக்கியமல்ல இயேசுவுக்கு.
நீ எப்படிப்பட்ட இருதய சிந்தையோடு காணிக்கை செலுத்துகிறாய் என்பதையே இயேசு எதிர் பார்க்கிறார்.
நீ பல ஆயிரங்களை கொடுப்பதால் சபையில் போதகர் உன்னை மேன்மைபடுத்தி பேசிவிடலாம்.
பல ஆயிரம் காணிக்கை செலுத்தி உனது போதகரை திருப்தி செய்தது போல இயேசுவை திருப்தி செய்ய முடியாது.
இயேசு உன்னிடம் எதிர் பார்ப்பது உன் காணிக்கையல்ல, கனியுள்ள வாழ்க்கையை.
கிறிஸ்துவின் ஊழியனாக
பேதுரு 💪 ROCK