*_ஆதித்திருச்சபை (1-3 நூற்றாண்டுகள்)_*
★ _இயேசு உயிர்தெழுந்து 50 நாளுக்கு பின்னர் வந்த பெந்தேகோஸ்தே நாளே சபை பிறந்த நாளாகும்_ (அப்.2) _இதன் மூலம் பூமியில் பரலோக ராஜ்யம் நிறுவப் பட்டது. சீஷர்கள் அந்த ராஜ்ஜியத்தின் குடிமக்கள், அவர்கள் "கிறிஸ்தவர்கள்" எனறு ஜனங்களால் அழைக்கப் பட்டார்கள்._
_யூதரல்லாத புறஜாதியாருக்கும் பரலோக ராஜ்யத்தின் வாசல் திறக்கப்பட்டது._
★ _ஆதித்திருச்சபை "அப்போஸ்தலர் காலம்"_ "அப்போஸ்தலருக்கு பிந்தைய காலம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
அப்போஸ்தலர் காலமே திருச்சபையின் பொற்காலமாகும்._
*அப்போஸ்தலரின் பொற்காலம்:*
*(முதல் நூற்றாண்டு)*
★ _உலக வரலாறு காணாத பொருளாதர நீதி சபையில் நிலவியது. சொத்துக்கள் பொதுவில் வைத்து அனுபவிக்கப் பட்டன
(அப்.4:32,35)
மாபெரும் அற்புதங்கள் சர்வசாதாரணமாக சபையில் நடந்தேறின_
★ _சபை அப்போஸ்தல அதிகாரத்தின்கீழ் இருந்தது. சபைகள் பல இடங்களில் இருந்தாலும் எங்கும் ஒருமனப்பாடு நிலவியது (அப். 4;32) விசுவாசிகளிடையே தூய்மையான ஐக்கியம் காணப்பட்டது._
★ *விசுவாசிகள் உலகிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்களாய் வாழ்ந்தார்கள். அவர்களது சாட்சி மலைமேல் இருக்கும்சபைகள்மாக எல்லா ஜனத்துக்கும் முன்பாக பிரசித்தமாய் இருந்தது*(அப். 17;6)
★ _அக்காலத்தில் அச்சடிக்கப்பட்ட வேதாகமம் அவர்கள் கையில் இல்லை ஆனால் எபிரேயர் 8;10 சொல்லுகிறபடி வேதவசனம் அவர்கள் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்டிருந்தது._
★ _அவர்கள் பெரும் உபத்திரவத்தின் மத்தியில் வாழ்ந்தார்கள். அதின்நிமித்தம் அவர்கள் இயேசுவின் வருகையை, நித்திய வீட்டை அடையும் நாளை ஒவ்வொருநாளும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்…_
_அப்போஸ்தலருக்குப் பிந்திய காலம்
(2-ஆம் 3-ஆம் நூற்றாண்டுகள்)_
★ _இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டு சபை அப்போஸ்தலரின் மாணவர்களால் நடத்தப்பட்டது. இவர்கள் "Apostolic Fathers" என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுள் முக்கியமானவர்கள் கிளமெண்ட், அந்தியோகியாவின் இக்னேஷியல், பாலிகார்ப் மற்றும் இரேனியஸ் போன்றவர்களாவார்._
★ _சபைகள் கண்காணிகளால்(பிஷப்புகள்) நடத்தப்பட்டது._
_உபத்திரவம் தொடர்ந்தது, புதிய ஏற்பாட்டின் பல பகுதிகள் தொகுக்கப்பட்டு சபைகளுக்குள் விநியோகிக்கப்பட்டது._
★ _சபையானது யூதமார்க்கத்தை விட்டு மெல்ல விலக தொதொடங்கியது, யூதமார்க்கத்துக்கு விரோதமான கருத்துக்கள் உள்ளே நுழைய துவங்கின._
*_ரோமச்சபையின் எழுச்சி_*
(4-ஆம் நூற்றாண்டு)
★ _கி.பி 312 ஆம் ஆண்டு ரோம பேரரசரான கான்ஸ்டாண்டைன், தான் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுகொண்டதாக அறிவித்ததிலிருந்து சபைகள் மீதான உபத்திரவத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க்ப் பட்டது. அதன் பின்பு 70 ஆண்டுகள் கழித்து தியோடோசியஸ் காலத்தில் கிறிஸ்தவம் அரசாங்க மதமாக அறிவிக்கப்பட்டது._
★ _விக்கிரக ஆராதனைக் காரர் வலுக்கட்டாயமாக கிறிஸ்தவர்கள் ஆக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் எல்லா பழக்க வழக்கங்களையும் தங்களுடனே சபைக்குள் எடுத்து வந்தனர், சபை முற்றிலுமாய் கறைப்பட்டுப் போனது._
★ _சபையின் அதிகாரம் பிஷப்புகள் கைக்கு வந்தது, அவர்களுக்கு அரசாங்கத்தின் உயர்ந்த பீடம் கொடுக்கப்பட்டது. ரோம் நகரின் பிஷப்பு தன்னை "போப்"(பிதா) என்று அழைத்துக் கொண்டார்._
*கிறிஸ்தவத்தின் இருண்ட காலங்கள்*
★ _பல தேவாலயங்கள் கட்டப்பட்டன, ஆண்டவர் அருவெறுக்கும் Clergy- Laity முறை சபைக்குள் ஆழமாகக் காலூன்றியது. போப் பாவமே செய்ய முடியாதவராக (Infallible) என்று கருதப்பட்டார். அவர் அரசனுக்கு நிகராக மதிக்கப் பட்டார்._
★ _வேதாகம மொழியும், ஆராதனை மொழியும் லத்தீன் என்று ஆக்கப்பட்டது. வேதத்தை மொழிபெயர்த்தல் தேவதூஷணமாக கருதப்பட்டு அதைச் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது._
★ _வேதத்துக்கு புறம்பான கணக்கிலடங்காத சடங்குகளும் போதனைகளும் கடைப்பிடிக்கப் பட்டன._
★ _பாவமன்னிப்பு சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டது._
*விடியலுக்கான ஆரம்பம்*
(14-ஆம் & 15-ஆம் நூற்றாண்டுகளில்)
★ _ஜான் விக்ளிப்(1320-1384) முதன் முதலாக ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்க்க துவங்கினார். இவரே பதினோராம் நூற்றாண்டில் எழும்பிய மாபெறும் சீர்திருத்ததுக்கு அடிகோலியவர்._
★ _இவர் மீதான உக்கிரம் தணியாத போப் இவர் மரித்து 44 ஆண்டுகளுக்குப்பின் இவர் எழும்புகளைத் தோண்டி எடுத்து நொறுக்கி ஆற்றில் வீசும்படி உத்தரவிட்டார்._
★ _இவர் வழிவந்த ஜான்ஹஸ் சபையின் அக்கிரமத்தை எதிர்த்து குரல் கொடுத்தற்காக உயிரோடு கொளுத்தப்பட்டார்._
★ _கிரலாமோ சவனரோலா என்ற இத்தாலியத் துறவியார் சபை சீர்திருத்தத்துக்காகவும், பாவத்துக்கெதிராகவும் குரல் கொடுத்த காரணத்துக்காக ரோமத் திருச்சபையால் உயிரோடு கொளுத்தப் பட்டார்._
★வில்லியம் டிண்டேல் என்ற தேவ மனிதர் வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்காக படுகொலை செய்யப் பட்டு இரத்த சாட்சியாக மரத்தார்.
இந்த தேவதாசர்கள் மூலம் 16-ஆம் நூற்றாண்டில் வரப்போகும் எழுப்புதல் பெருமழைக்கு அடையாளமாக ஒரு உள்ளங்கையளவு மேகம் எழும்பினது._
*தொடர்ச்சி கீழே*👇🏾👇🏾
[10/31, 5:48 PM] isaac jeba: *சரித்திரத்தை மாற்றிய எழுப்புதல்*
(16-ஆம் நூற்றாண்டு)
★ _மார்டின் லூத்தர் என்ற ஜெர்மானிய கத்தோலிக்க துறவி பாவ மன்னிப்புச் சீட்டு விற்பனையையும் சபையின் மற்ற அக்கிரமங்களையும் கண்டித்து தனது 95 கோட்பாடுகள் அடங்கிய கடிதத்தை விட்டன்பர்க் தேவாலயக் கதவுகளில் ஆணியால் அடித்தார். எழுப்புதல் தீ பற்றிக்கொண்டது._
★ _சடங்குகளால் அல்ல விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற முழக்கத்துடன் சீர்திருத்த சபை (Protestant Church) பிறந்தது._
சபைக்குள் பல சீர்திருத்தங்கள் செய்யப் பட்டன, சபை வெகு வேகமாக விருத்தியடைந்தது.
★ _சீர்திருத்த சபையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க கத்தோலிக்க சபை எதிர் சீர்திருத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது._
*அனபாப்டிஸ்ட் இயக்கம்*
(16-ஆம் நூற்றாண்டு)
★ _அனபாப்டிஸ்ட் என்பது மறுமுழுக்கு என்று பொருள். இவர்கள் குழந்தை திருமுழுக்கை தீவிரமாக எதிர்த்தனர். மனந்திரும்பியே திருமுழுக்கு பெற வேண்டும் என்று வலியுருத்தினர்._
★ _இவர்கள் இயேசுவின் மலை பிரசங்கத்தை 100% பின்பற்றிய தீவிர சீஷர்கள்._
★ _கிறிஸ்தவர்கள் பாரம்பரியமாக கடைபிடிக்கும் எந்த பழக்கத்தையும் இவர்கள் முற்றிலும் புக்கணித்தனர். உதாரணமாக திருமண மோதிரம் அணிவது, சத்திய பிரமானம் எடுப்பது, அரசு வேலைகளில் பணிபுரிவது போன்றவற்றை புக்கணித்து "பூமியில் நாம் அந்நியரும் பரதேசிகளும்" என்று வேதம் சொல்வதற்கேற்ப வாழ்ந்தார்கள்._
★ _இவர்கள் மத்தியில் அந்நியபாஷை, தீர்க்கதரிசனங்கள் போன்ற வரங்களும் அனேக அற்புத அடையாங்ளும் நடைபெற்றது. நம்மை போலல்லாமல் அந்நிய பாஷை பேசுவதால் இவர்களது வாழ்க்கையில் பிரதிஷ்டையும், பரிசுத்தமும் காணப்பட்டது._
★ _இவர்கள் 16-ஆம் நூற்றாண்டுகளில் மிகக் கொடூமாய் உபத்திரவப்படுத்தப்பட்டார்கள். கத்தோலிக்க சசபையாலும், சீர்திருத்த சபையாலும் கூட இவர்கள் கொடூரமாய் உபத்திரவப்பட்டார்கள்._
★ _இவர்கள் சபை நிறுவன மயமாக்கப் படுவதையும் (Churchianity), தேவன் அருவருக்கும் Clergy-Laity முறையையும் கடுமையாக எதிர்த்தார்கள்._
*ப்யூரிட்டன் இயக்கம்*
*(16-ஆம் நூற்றாண்டு)*
★ _ப்யூரிட்டன்கள் என்பவர்கள் Church of england-க்குள் இருந்த மிகவும் வைராக்கியமிக்க சர்திருத்தவாதிகள். இவர்கள் அனபாப்ஸடிஸ்டுகளைப் போல அல்லாமல் சபைக்குள் இருந்தபடியே சபை சுத்திகரிக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பினார்கள்._
★இவர்கள் பரிசுத்தத்துக்கு அதி முக்கியத்தும்
கொடுத்தார்கள்.
★ _இவர்கள் ஆற்றி இலக்கிய பணி குறிப்பிடத்தக்கது. அது இன்றளவும் நிலைத்து நிற்க்கிறது.(உதா: ஜான்பன்யனின் மோட்ச பயணம்)._
*முதலாம் மாபெரும் உயிர்மீட்சி*
*(18-ஆம் நூற்றாண்டு)*
★ _கி.பி 1700-ஆம் ஆண்டுகளில் அமரிக்காவில் ஏற்ப்பட்ட முதலாம் உயிர்மீட்சீயானது உலக சரித்திரத்தில் ஒரு மாபெறும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது._
★ _ஜூலை 1741-இல் யோனத்தான் எட்வர்டு அளித்த "கோபமுள்ள தேவன் கையில் பாவிகள்" என்ற செய்தியானது அமெரிக்காவையே ஓர் உலுக்கு உலுக்கியது. ஆயிக்கணக்கான ஜனங்கள் மனந்திரும்பி கிறிஸ்த்துவிம் வந்தனர்._
★ _இதே காலத்தில் ஜான்வெஸ்ஸி என்ற மனிதரைக் கொண்டு தேவன் இங்கிலாந்தில் ஒரு மாபெரும் அசைவை உண்டாக்கினார். இரே மெதடிஸ்ட் சபையின் ஸ்தாபகர் ஆவார்._
*இரண்டாம் மாபெரும் உயிர்மீட்சி*
*(19-ஆம் நூற்றாண்டு)*
★ _கி.பி 19-ஆம் நூற்றாண்டில் அமரிக்காவில் உண்டான மாபெரும் எழுப்புதல் அலையே இரண்டாம் மாபெரும் உயிர்மீட்சி என்றழைக்கபடுகிறது._
★ _இந் எழுப்புதல் பாப்டிஸ்ட், மெதடிஸ்ட் சபைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. அதே நேரத்தில் சென்த் டே அஅட்ன்டிஸ்ட், மார்மன் போன்ற உபதேச மாறுபாடுள்ள சபைகள் இக்காலத்திலேயே உருவாகியது._
★ _தற்கால எழுப்புதலின் முன்னோடி என்று வர்ணிக்கப்படும் சார்லஸ் பின்னி இக்காலத்தில் தான் ஊழிம் செய்தார். இவரது அடிச்சுவட்டை பின்பற்றி வந்தவர்ள்தாம் டி.எல். மூமூடி, ல்லி சண்டே ற்றும் பில்லி கிரஹாம் போன்றோர்._
*Welsh எழுப்புதல் (20-ஆம் நூற்றாண்டு)*
★ _அக் 31, 1904 ஆம் ஆண்டு இவான் ராபர்ட்ஸ் உள்ளிட்ட 16 வாலிபர்கள் ஜெபித்துக் கொடிருந்த ஒரு கிராமச்சபையில் இருந்து ஒரு மாபெறும் எழுப்புதல் வெடித்தது. இது வேல்ஸ் தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் பற்றி எரிந்தது._
★ _மதுக் கடைகள் மூடப் பட்டன, களியாட்ட விடுதிகள். நாடகக் கூடங்கள் மூப்பட்டன, அரசியல் கூட்டங்கள் ஆட்களின்றி நடந்தது, சபைகளுக்குள்ளே கூட்டம் அலை மோதியது. வேல்ஸ் தேசம் முழுவதும் கிறிஸ்துவின் தொனி ஒலித்துக் கொண்டே இருந்தது._
*அசுசா தெரு எழுப்புதல் (20-ஆம் நூற்றாண்டு)*
★ _இது பெந்தேகோஸ்தே சபைகள் உருவாக காரணமான எழுப்புதல் ஆகும். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அசுசா தெருவில் உள்ள ஒரு சபையில் சடுதியில் ஏற்ப்பட்ட வித்தியாசமான ஆவிக்குரிய அனுபவங்களே இதன் தொடக்கம். இந்த எழுப்புதலை முன்னின்று நடத்தியவர் வில்லியம் சைமோர் என்ற ஆப்பிரிக்க அமரிக்கர் ஆவார்._
★ _அந்நிய பாஷை, ஆவியில் விழுதல் போன்ற அனுபவங்களால் நிறைந்தது தான் இந்த எழுப்புதல். இது அக்கால சபைத் தலைவர்கள் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது._