இயேசு சிலுவையில் மரித்ததற்கான வரலாற்று ஆதாரங்கள்; உண்மை எது ? பொய் எது ? என்று அறியுங்கள்

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்க வில்லையென்றும் வேதாகமத்தில் புதிய
ஏற்பாடு பகுதி அவரது சீடர்களால் எழுதப்பட்டதனால், அதை அவர்கள்
மறைத்திருக்க கூடும்மென்றும் சிலர் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவர்.

அவர்களின் குற்றச்சாட்டின்படி தனியே சீடர்களால் மட்டுமின்றி இயேசு
கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பல சரித்திர ஆசிரியர்களும் இயேசு
கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கின்றபடியாலும்; இக்
குற்றச்சாட்டுக்கள் பொய் என்று தெட்டத்தெளிவாக
தெரிகின்றது.

இயேசு சிலுவையில் மரித்ததற்கான வரலாற்று ஆதாரங்கள்;

FLAVIUS JOSEPHUS

(உலகப்புகழ் பெற்று யூத சரித்திர ஆசிரியர்) கிறிஸ்துவின் மரணத்திற்கு சில
ஆண்டுகளுக்குப்பின்பு கி.பி 66 ஆம் ஆண்டளவில் கலிலேயாவிலுள்ள யூத
இராணுவஅதிகாரியாக இருந்தவர். அவர் தன்னுடைய புஸ்தகம்Antiquitnesஇல்
கிறிஸ்துவைப்பற்றியும் அவர் சிலுவையில் அறையப்பட்டதைக்குறித்தும் இப்படி
குறிப்பிட்டுள்ளார்.

இப்பொழுது இயேசுவின் காலம் வந்துவிட்டது, ஒரு ஞானி, சட்டத்தின்படி
கூறுவதென்றால் ஒரு மனிதர், அநேக அற்புதங்களை செய்தவர். அவர் அநேகருக்கு
போதித்தார், அவருடைய சத்தியமான போதனைகளை சந்தோஷத்துடனும்
ஏற்றுக்கொண்டார்கள். பொந்தியு பிலாத்துவினால் சிலுவையில் அறையப்பட்டார்.
ஆனாலும் இயேசுவை உண்மையாக நேசித்தவர்கள், அவர்களுடைய நம்பிக்கையை
விட்டுக்கொடுக்கவில்லை. மூன்றாம் நாளில் அவர் தம்முடைய சீடர்களுக்கு
உயிருடன் காட்சியளித்தார். அவருக்கு முன்பு வந்த பல தீர்க்கதரிசிகள்
அவரைக்குறித்து பல அற்புதமான தீர்க்கதரிசனங்கள் சொன்னது அவ்வளவும்
அவருக்கு பொருத்தமாக இருந்ததது.

கி.பி 150 ஆண்டளவில் சீசார் அந்தோனியுஸ் பியுஸ்-க்கு"கிறிஸ்தவர்கள்
தற்காப்பு" எனும் அவர் எழுதிய புஸ்தகத்தில் இயேசுகிறிஸ்துவின்
மரணத்தைப்பற்றியும், அவர் மரணத்திற்கு பொந்தியு பிலாத்து காரணமாக
இருந்தததைப்பற்றியும் எழுதியிருக்கின்றார்.



இவர் ஒரு ரோம சரித்திர ஆசிரியர், கி.பி112 ஆசியாவின்(துருக்கி) கவர்னராக
இருந்தவர். இவருடைய உறவினன் யூலியுஸ் அக்ரிகோலா என்பவர் கி.பி 82-84
பிரித்தானிய கவர்னாராக இருந்தவர்; கொர்நேலியுஸ் ரசித்துஸ் நேரோ மன்னனுடைய
ஆட்சியைப்பற்றி குறிப்பிடுகையில் இயேசுகிறிஸ்துவை ப்பற்றியும்,
ரோமாபுரியிலே கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தையும் பற்றி தன் னுடைய புஸ்தகத்தில்
குறிப்பிட்டுள்ளார்.

அவர் எழுதிய நூலில் (XV) ஆம் பாகத்தில்:

இயேசு கிறிஸ்து என்பவர் திபேரியு மன்னன் ஆட்சியில், பொந்தியு பிலாத்து
யூதாவின் அதிகாரியாக இருக்கையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை யைப்பற்றி
எழுதியிருக்கின்றார்.



இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் தம்முடைய புஸ்தகத்தில் பலஸ்தீனாவிலே
பிறந்த இயேசுகிறிஸ்துவைப்பற்றியும், அவருடைய மரணத்தைப்பற்றியும்
எழுதியுள்ளார்.



இவர் சீரியா நாட்டை சார்ந்தவர், இவருடைய காலம் கி.பி 70 இவர்
ஜெயிலில்இருந்து தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில்யூதர்கள் தங்களுடைய
ஞானமுள்ள இராயாவை கொலை செய்தனர்என்று குறிப்பிட்டிருக்கின்றார்.



கி.பி 110 இல் இவர் சின்ன ஆசியாவின் பித்தினியாவின் கவர்னராக இருந்தவர்.
இவர் தன்னுடைய தலைவர் த்ரஜான்-க்கு எழுதிய கடிதத்தில் இயேசுகிறிஸ்துவின்
சீடர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் என்று
குறிப்பிட்டிருக்கின்றார்.

அவர்கள் செய்த தவறுகள், அல்லது அவர்களுடைய பைத்தியக்கார தன்மைகள்
என்னவெனில், குறிப்பிட்ட சில நாட்களில் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு
முன எழுந்திருந்து இயேசுகிறிஸ்துவை ஒரு கடவுளைப்போல கும்பி டுகின்றனர்.
அவர்களிடத்தில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. களவு, கொள்ளை, விவாக இரத்து,
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தைகளை மீறுவது போன்ற காரியங்கள்
அவர்களிடத்தில் இல்லை.


இவர் ஒரு ரோம எழுத்தாளர், இவர் எழுதிய"க்ளோடியஸ் வாழ்க்கை வரலாறு"
பகுதியில் கிறிஸ்தவர்களை ரோமை விட்டுக்ளோடியஸ் போகச்சொல்லி
துரத்தியதைப்பற்றி குறிப்பபிட்டிருக்கின்றார்.இவருடைய வாழ்க்கை காலம்
கி.பி 69-122.



TERTULLIAN

கி.பி 155-220 வாழ்ந்த இவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அவரது
வாழ்க்கையைப்பற்றியும், மரணத்தைப்பற்றியும் எழுதியிருக்கின்றார்.


கி.பி 140, முதலாம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்தாளர், இவருடைய புஸ்தகங்கள்
இப்போது இல்லை. தொலைந்து விட்டன. ஆனால் வேறு புரதான சரித்திர ஆய்வாளர்கள்
இவருடைய எழுத்துக்களைப்பற்றி கூறும் சமயத்தில், இவர் இயேசுவின் சிலுவை
மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருந்தார் என்று கூறுகின்றார்கள்.

THULUS

இவரும் முதலாம் நூற்றாண்டை சார்ந்த எழுத்தாளன், காலம்: கி.பி 52. இவருடைய
புஸ்தகங்களும் இப்போது இல்லை. தொலைந்து விட்டன. ஆனால் இவருடைய
புஸ்தகங்களைப்பற்றி வேறு புராதான சரித்திர ஆய்வாளர்கள் கூறுகையில்:
இவரும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி தன்னுடைய புஸ்தகத்தில்
குறிப்பிட்டிருந்தார் என்று. The Chronology of Julius Africanus எனும்
கி.பி 221 எழுதப்பட்ட புஸ்தகத்தில் காணலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.