மறக்கப்பட்ட கற்பனை - பரிசுத்தராயிருங்கள்

ஆசிரியர்: வில்லியம் மெக்டொனால்டு

கிறிஸ்துவின் சாயல்:-

"கிறிஸ்துவின் சாயலைக் கொண்டவர்" என்ற வர்ணனை, ஒருவரது குணநலனை மிகச்
சிறப்புடன் விவரித்துக் காட்டும் சொற்றொடர் ஆகும். அந்தச் சிறப்புரையே
ஒரு விசுவாசி அடையக்கூடிய விரும்பத்தகுந்த புகழுரையும், நன்மதிப்பின்
இலக்குமாகும். கிறிஸ்துவைப் போலக் காணப்படுவதைக் காட்டிலும் ஒரு விசுவாசி
விரும்பத்தக்க மேலான வாஞ்சை
வேறொன்றுமில்லை.

ஹென்றி டிரமண்ட் என்பார், "இந்த உலகில் வாழ்கிறபோது கிறிஸ்துவைப்
போலாகுதல் ஒன்றே ஒருவரது தகுதிவாய்ந்த விருப்பமாயிருக்கிறது. இந்தக்
குறிக்கோளுக்கு முன்னர் அவரது மற்ற விருப்பங்கள் யாவும் மதியீனமே.

அதனினும் குறைவுடைய வெற்றிகள் அனைத்தும் வீணாகவே கருதப்படும்"
எனக்கூறியுள்ளார்.

"ஒன்றே எந்தன் விருப்பம்
என்றும் அதனை நாடுவேன்,
அண்ணல் யேசுதம் சாயல்
அடைவதே எந்தன் ஆவல்!
வாழ்க்கை என்னும் பயணம்
உலகம் அதனது தொடக்கம்
அதனது இலக்கு வான்மகிமை
அதனது சிறப்பு அவர் சாயல்,
அண்ணல் யேசுதம் சாயல்
அடைவதே எந்தன் ஆவல்."

ஒருவர் மிகுந்த வரம் பெற்றவராயிருந்து, கற்பிக்கும் திறமையினாலும்,
அறிவுரை வழங்கும் நாவன்மையினாலும் கேட்போரது உள்ளங்களைத் திருமறை

வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவும், ஏவிவிடவும் செய்பவராயிருப்பாரெனில் அது

மிகுந்த மனநிறைவு அளிக்கக் கூடியது என உறுதியாய் நம்புகிறேன். ஆயினும்
"கிறிஸ்துவின் சாயலை" அணிந்த தன்மை, அந்த உயர்ந்த வரத்தைக் காட்டிலும்
மேலானதாகும். அந்தச் சாயலை உடையவராய் இல்லாதிருப்பின், அவர்
பெற்றவரம் சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்
போலவும் காணப்படும். மேடையிலே வரம் பெற்றவராகவும், வீட்டிலே மூர்க்க

குணமுடையவராகவும், ஒருவரால் இரண்டு நிலைகளில் இருக்க முடியும். 'வரம்'

தேவன் அருளும் சலுகையாக இருக்கிறது. மாறாக, நாம் பரிசுத்த ஆவியானவரின்
வல்லமையால் வளர வேண்டியது நமது சொந்தப் பொறுப்பாகும். அதுவே
தனிமனிதனைச் சார்ந்த கிருபை என்றழைக்கப்படுகிறது.

ஆத்தும ஆதாயம் செய்யப் பலர் ஆவலுடையவராயிருக்கிறார்கள்.

ஆத்தும ஆதாய ஊழியம் செய்வது ஒன்றுதான் நாம் படைக்கப்பட்டிருப்பதன்
நோக்கமாகும் என்று பொதுவாகப் பலர் நம்புகிறார்கள். அதன் விளைவாக
இடைவிடாது தனிநபர் சுவிசேஷ ஊழியம் செய்யப் பலர் முனைகின்றனர்.

ஆயினும், அவரது வாழ்க்கை கிறிஸ்தவ விசுவாசத்தை விரும்பத் தகாததும்,
நம்பகமற்றதுமாகக் காணச் செய்கிறது. "என் பின்னே வாருங்கள், உங்களை
மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்" என இயேசு கிறிஸ்து தகுந்த கட்டளை
யைக் கிறிஸ்தவர்களுக்கு வழங்கினார். அதனை நிறைவேற்றுவதற்காக நாம்
எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார். நமது
பொறுப்பு அவரைப் பின் தொடர்வதாகும். அதாவது அவர் வாழ்ந்த வண்ணம்
வாழ்வதாகும். நம்மை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவது அவரது பொறுப்
பாகும். ஆத்தும ஆதாயம் செய்யும் இயல்பு கிறிஸ்துவின் சாயலை அணிவதால்
உண்டாகும் பலனாகும்.

தெய்வீக முன்னுரிமை
தேவ மக்கள் தமது குமாரரின் சாயலுக்கு ஒப்பானவராக மாற வேண்டும்
என்பதே தேவனின் பெரிதான நோக்கமாகும். கிறிஸ்துவைப் போலக் காணப்
படுகிறவர்களால் பரலோகம் நிறைய வேண்டும் என்று தேவன் விரும்பும்
அளவிற்கு அவர் இயேசு கிறிஸ்துவின்பாற் மனமகிழ்ச்சி கொண்டிருக்கிறார். நாம்
அவரைக் காணும் போது அவர் இருக்கிறவண்ணமாகவே மாற்றப்படுவோம்.

ஆயினும் அதன் செயலாக்கம் இவ்வுலக வாழ்க்கையிலேயே நடைபெறு
மென்றால் அது தேவனுக்கு அதிக மகிமையாக இருக்கும்.
கரேல் மேஹால் என்பார் இச்செயலாக்கத்தை விளக்கும்படி இரண்டு மறக்க
இயலா எடுத்துக்காட்டுகளைக் கூறியுள்ளார். முதலாவது, தனது உடல் எடையைக்
குறைக்கும்படி உடற்பயிற்சி சாலையில் சேர்ந்த ஒரு பருமனான பெண்மணியைக்
குறித்ததாகும். பயிற்சியாளர் முதலாவதாக ஒரு கண்ணாடியில் அப்பெண்மணி
எவ்விதம் தான் காணப்பட வேண்டும் என்று விரும்பினாரோ அவ்வகையில் ஒரு
கோடிட்ட வரைபடத்தை வரைந்தார். அக்கண்ணாடிக்கு முன் அப்பெண்மணியை நிற்கச்
செய்தார். அப்பெண்ணின் உருவம் வரைபடக் கோட்டிற்கு அதிகமாக
எல்லாப் பக்கங்களிலும் பெருத்துக் காணப்பட்டது. அப்போது பயிற்சியாளர்
அந்தப் பெண்ணிடம், "நீங்கள் அந்த வரைபடத்தைப் போல காணப்பட
வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்" என்றார். பல வாரங்கள் தொடர்ந்து
அந்தப் பெண்மணி உணவைக் குறைத்தும் பயிற்சியை மேற்கொண்டும் வந்தார்.

ஒவ்வொரு வாரமும் அக்கண்ணாடிக்கு முன் நின்று பார்ப்பார். அவரது பருமன்
குறைந்து கொண்டு வந்தாலும் அவ்வரைப்படத்தைக் காட்டிலும் பெருத்தே
காணப்பட்டார். எனினும் பயிற்சியை நிறுத்திவிடவில்லை. தொடர்ந்து கடினமான
பயிற்சிகளைச் செய்தார். உணவைக் கட்டுப்படுத்தினார். கடைசியில் ஒருநாள்
அவர் கண்ணாடிக்கு முன் நின்றபோது அவரது உருவம் வரைபடத்திற்கு
ஏற்றாற்போலக் காணப்பட்டது. அஃது அப்பெண்ணிற்கு மட்டுமின்றி எல்லோருக்
கும் பேருவகையைக் கொடுத்தது.

இரண்டாவது எடுத்துக்காட்டு, கருங்கற் பாறையில் சிங்கத்தின் உருவத்தைச்
செதுக்கிய ஒரு சிற்பியைப் பற்றியதாகும். அந்தத் தலைசிறந்த படைப்பை
எவ்விதம் செய்து முடித்தார் என்று அவரிடம் கேட்டபோது அவர் உரைத்த பதில்,
"இது மிக எளிது, சிங்கத்தைப் போல இல்லாத எல்லாவற்றையும் நான் செதுக்கி
விட்டேன்" என்பதாகும். நமது வாழ்வில் தேவையற்றவை அனைத்தும் செதுக்கி
எறியப்பட்டு, தேவனுடைய சீரிய நோக்கமாகிய கிறிஸ்துவின் சாயல் காணப்
பெறுவது எவ்வண்ணம் என்று பின்வரும் பக்கங்களில் விளக்குவோம்.

தொடர்ந்து படிக்கும் நாம், இவ்வித ஜெபத்தை ஏறெடுப்போம்.

எந்தன் இரட்சகா! கர்த்தர் இயேசுவே!
உம்முடன் உறைவதாய்க் காண்பதென் ஆசை.
எந்தன் உடையிலும், எந்தன் நடையிலும்,
உந்தன் உரிமையாய்க் காண்பதென் வாஞ்சை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.