ப ரிசுத்த ஜீவியம் கடினம் என்றே இன்றைய கிறிஸ்தவ கூட்டம் ஓலமிடுகிறது!
ஆனால், மெய் பரிசுத்த வாழ்வை கண்டவர்களுக்கு மாத்திரமே ஒரு ரகசியம்
தெரியும்:"நான் கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்த ஜீவிய பகுதி மிகவும்
கொஞ்சம்......
ஆனால், நான் காணாத ஏராளமான கன்னிகளில் கர்த்தர் என்னைப்
பாதுகாத்திருக்காவிட்டால், நான் என்றைக்கோ பாவம் செய்திருப்பேன்....
நல்லவேளை, எத்தனை பெரிய தீமையிலிருந்து நான் பாதுகாக்கப்பட்டேன்...
"இப்படிப்பட்ட சாட்சி அவர்களிடம் ஒன்றல்ல இரண்டல்ல, ஏராளமாய் இருக்கும்!
" பரிசுத்தமாகுதல் தேவ பயத்தோடே பூரணப்பட"(2கொரிந்தியர்7:1)விரும்புகிற
யாவரும் தங்களுக்கு கிடைத்த வெளிச்சத்தில் நூற்றுக்கு நூறு
உண்மையுள்ளவர்களாய் இருந்து, தங்கள் மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான
எல்லா அசுசிகளும் நீங்க தங்களைச் சுத்திகரித்துக் கொள்வார்கள்!
ஏனென்றால், அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பங்கு வெகு சொற்பமென்று
அவர்களுக்குத் தெரியும்.......ஆனால்'அந்த தெய்வ பயமே'அவர்களுக்கு
மூலதனமாய் மாறி, கர்த்தரே அவர்களைப் பூரண பரிசுத்தத்தில் நடத்தி காத்துக்
கொண்டார் என்பதும் அவர்களுக்கு நன்றாய் தெரியும்!!
இவர்களின் பங்கு 5அப்பம் என்றால், தேவன் அவர்களுக்கு நிறைவேற்றிய
பங்கு5000பேருக்குரிய அப்பமாய் இருக்கும்!
இவர்களிடமிருந்தது"கொஞ்ச பெலனாயிருந்தால்"தேவனுடைய பங்கோ"மீதியானியர்
சேனை முழுவதையும்"அழித்த வல்லமையாய் இருக்கும்!ஆம், முற்றிலும்
பரிசுத்தமாகும் ஜீவியத்திற்கு அழைத்தவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே
தங்களை முழுவதுமாய் பரிசுத்தமாக்குவார் என்ற இரகசியம் அவர்களுக்கு
நன்றாய் தெரியும்! (1தெச.5:23,24).
நன்றி....!!!
- ரத்னம்
