தீங்குநாட்கள்
வராததற்குமுன்னும்,
நான்வெறுக்கும்வருஷஙள்
என்னை தொடராததற்கு
முன்னும்,
உலகமும்அதிலுள்ளவைகளும்
என்னைtமயக்கும்முன்னும்
உலக கவலைகள்என்னை
பிடிக்கும்முன்னும்
என்கால்கள் இரண்டும்
பெலனற்றுபோகும்முன்னும்
என்புயங்கள்தன்பெலவீனத்தை
அறிந்துக்கொள்ளும்முன்னும்
என்மூச்சுக்காற்றின்வேகம்
லேசாக குறையும்முன்னும்
என்சிந்தனைதிறன்
சோர்ந்துtபோகும்முன்னும்
நாடிநரம்புகள்
ஆடி அசைந்து
போகும்முன்னும்
நான்கேழு வருடங்கள்
என்வயதை தொடும்முன்னும்
உலக சிநேகத்தில்
நான்மயங்கும்முன்னும்
உலகமனுஷர்களில் எனக்கு
அருமையானவர்களை
இழக்கும்முன்னும்
தேவனே உம்மை நினைக்கிறேன்..
துள்ளித்திரியும் என்tஇளமை
காலத்தை உமக்கு அர்ப்பணிக்கிறேன்!
தூய என்பரிசுத்த வாலிபத்தை
உமக்கே அர்ப்பணிக்கிறேன்
இனி,
என்tஆவி ஆத்துமா சரீரம்
உமக்கே!
உமக்கொருவருக்கே!!
நீர்அனுப்பும் இடம்நோக்கி
என்கால்கள்செல்லட்டும்
நீர்விரும்பும்செயலை
என்கைகள்செய்யட்டும்
நீர்சொல்லும்சொற்களையே
என்வாய்பேசட்டும்
நீர்விரும்பும்வண்ணமே
என்ஜீவன்வாழட்டும்!
இப்படிக்கு,
நீர் விரும்பும்படி வாழ விரும்பும் வாலிபன்.
நன்றி....!!!
Bro.Yesudass Solomon.
