பாவத்தின்மேல் வெற்றி நிச்சயம்! - சகரியா பூணன்

பாவத்தின்மேல் வெற்றி நிச்சயம்! - சகரியா பூணன்

விசுவாசமில்லாமல் தேவனிடமிருந்து ஒன்றையும் நீங்கள் பெற்றுக்கொள்ள
முடியாது என்பதை சாத்தான் நன்கு அறிவான். அப்படியானால் உங்கள் இருதயத்தை
எவ்வளவாய்
அவிசுவாசத்தால் நிறைப்பதற்கு அவன் முயற்சி செய்வான் என்பதை சற்று
எண்ணிப் பாருங்கள்! அவிசுவாசமானது, பொய் சொல்லுதல் விபச்சாரம் செய்தலைவிட
பயங்கர அபாயம்
நிறைந்தது. ஏனெனில் பிறவற்றை நாம் பாவங்கள் என்று எளிதில் கண்டுகொள்ள
முடியும். ஆனால் அவிசுவாசம் அப்படியல்லவே! அவிசுவாசமுள்ள பொல்லாத
இருதயம், ஜீவனுள்ள
தேவனைவிட்டே விலகுவதற்குக் காரணமாகிவிட முடியும் என்றுஎபிரேயர்
3:12-ம்வசனம் நம்மை எச்சரிக்கிறது. ஆம், அவிசுவாசமே எல்லாப்
பாவங்களுக்கும் வேர்!!

"நாம் கிருபைக்கு கீழ்ப்பட்டிருந்தால் பாவம் நம்மை ஆளுகை செய்யவே
முடியாது" என்றுரோமர் 6:14-ம்வசனம் திட்டமாய் கூறுகிறது. மிக
வெளிப்படையான இவ்வசனத்தை ஒரு
சிறுபிள்ளை கூட புரிந்துகொள்ள முடியும்! இவ்வாறெல்லாம் இருந்தும்,
அநேக விசுவாசிகள்பாவத்தின்மேல் பூரண வெற்றியுள்ள வாழ்க்கைவாழமுடியும்
என்ற சத்தியத்தை
விசுவாசிக்கவில்லையே!!

நீங்கள் வெற்றி வாழ்க்கை வாழவே தேவன் விரும்புகின்றார்! உங்கள்
சிந்தனை ஜீவியம் எவ்வளவு அருவருப்பாய் இருந்தால் என்ன? எவ்வளவோ காலம்
நீங்கள் கோபத்தால்
தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் என்ன? இவை எல்லாம் ஒரு பொருட்டல்ல!
தேவன் உங்களை நுற்றுக்கு நுறு விடுதலை செய்து சுத்த இருதயத்தை உங்களுக்கு
கொடுத்திட முடியும்!
ஆனால் இவையெல்லாவற்றையும், உங்களிடம் விசுவாசம் இல்லையென்றால்,
அவரால் ஒன்றும் செய்யவே முடியாது!

நாம் இருதயத்தில் விசுவாசிப்பதை, வாயினால் அறிக்கை செய்ய வேண்டும்
என்றல்லவா வேதம் கூறுகிறது (ரோமர் 10:10).இது ஓர் மிக முக்கியமான
கோட்பாடாகும்! ஏனெனில்,
வாயினால் அறிக்கை செய்வதின் மூலமாகவே நம் இருதயத்தின் விசுவாசத்தை
நாம் பிரதிபலித்திட முடியும். இதன் விளைவுதான், எல்லாப்
பாவங்களிலிருந்தும் விடுதலையாகும்
இரட்சிப்பிற்குள் நம்மை நடத்துகிறது. எனவே, இப்போது சாத்தானை நோக்கி
நம் சாட்சியின் வார்த்தைகளை அறிக்கை செய்து முழங்குவோமா? "சாத்தானே!
தேவன் என்னைப்
பாவத்தின்மேல் பூரண வெற்றியுள்ள வாழ்விற்குள் நடத்தப் போகிறார் என்று
நான் விசுவாசிக்கிறேன்!!" ஆம், இவ்வாறுதான் நாம் சாத்தானை ஜெயித்திட
முடியும் (வெளி
12:11).வெற்றி உங்கள் வாழ்வில் நிஜமாய் வந்துவிடும்வரை, நீங்கள்
வீழ்ச்சியடையும் நேரமெல்லாம், இந்த அறிக்கையை செய்துகொண்டே இருங்கள்.
ஜெயம் சொற்ப நாட்களில்
வந்துவிடாது! எனவே கொஞ்சமும் அதைரியம் அடைந்துவிடாதீர்கள்...

தேவன் உங்கள் வாயின் அறிக்கையை நிச்சயம் கனப்படுத்துவார்!!

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.