“சர்வ வல்ல தேவனின் ஊழியர்” என்ற தரம் காக்கப்பட வேண்டும்! - சகரியா பூணன்

நான் இந்திய கப்பற்படையில் பணியாற்றியபோது கப்பற்படை நிர்வாகம் எனக்குரிய சம்பளத்தைத் தந்து என் சரீரத்தின் எல்லாத் தேவைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டது. என் பொருளாதார தேவைகளுக்காக நான் யாரிடமும் சென்று கையேந்தியதேயில்லை! அப்படியிருக்க, நம் தேவன் இந்த கப்பற்படையோ அல்லது வேறு எந்த எஜமானனைக் காட்டிலும் மகா பெரியவர் அல்லவா? நாம் மெய்யாகவேசர்வவல்ல தேவனுடைய
ஊழியக்காரர்களாக இருந்தால்எந்த மானிடரிடத்திலாவது சென்று உதவி கேட்க வேண்டிய அவசியம் வருமோ? அப்படியிருக்க அவருடைய ஊழியர்கள் மற்ற விசுவாசிகளிடம் சென்று பணத்திற்காக கெஞ்சுவது தேவாதி தேவனுடைய கௌரவத்திற்கு கொண்டுவரும் இழுக்காகும்! தன்னுடைய ஊழியர்கள் எந்த மனுஷரையும்
சார்ந்திருக்காமல்தன்னை மாத்திரமேசார்ந்து கொள்ள வேண்டுமென்பதில் தேவன் மகா வைராக்கியம் கொண்டவர்!!

இதை சற்று விவரித்துக் கூற விரும்புகிறேன் : ஒரு மேற்கத்திய நாட்டு வெள்ளைக்காரன் கோட்டு-சூட்டோடு ஒருநாள் உங்கள் வீட்டிற்கு வந்து “சகோதரரே, நான்அமெரிக்க ஐக்கிய நாட்டின் தூதர்”என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் என எண்ணிக் கொள்ளுங்கள்! பின்பு அவர் “என்னுடைய தேசம் மகா பஞ்சத்தில் சிக்கியிருக்கிறது. உங்களால் முடிந்த உதவியை (சில நூறு ரூபாய்களாக இருந்தாலும் பரவாயில்லை!) எங்கள் தேசத்திற்கு செய்யுங்கள்” எனக் கூறினால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? நீங்கள் உடனடியாகவே இந்த மனுஷன் தந்திரக்காரன் என்பதையும், உங்களை ஏமாற்ற முயற்சிக்கிறான் என்பதையும்
அறிந்துகொள்வீர்கள்! ஏனென்றால், அமெரிக்க அரசாங்கத்தைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்! அந்த வல்லரசு வீடுவீடாய் ஜனங்களிடம் சென்று பணத்திற்காக பிச்சை எடுக்கும் கதிக்கு ஒருபோதும் வராது என்பதும் உங்களுக்குத் தெரியும்!!

இப்போது இதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு மனிதன் உங்கள் வீட்டிற்கு வருகிறார் அல்லது ஒரு பத்திரிக்கையை வீட்டிற்கு அனுப்புகிறார்! பின்பு, தன்னை அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தூதர் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்! அவர் உங்களிடம் “சகோதரனே,பரலோகராஜ்ஜியத்தில் சற்று பொருளாதார நெருக்கடி........இந்த சிக்கலில் நீங்கள் தேவனுக்கு உதவி செய்ய வேண்டும். அவருடைய ஊழியத்திற்கு காசு தேவை! ஏதோ உங்களால் முடிந்த அளவு கொடுத்து உதவுங்கள்!!” என பணிவுடன் கூறுகிறார். இதைக் கேட்கும் நீங்கள், அதை உடனே நம்பிவிடுகிறீர்கள்!! அதை ஏன் அவ்வாறு நம்பினீர்கள்? ஏனென்றால் அமெரிக்க தேசத்தை விட பரலோக ராஜ்ஜியம் அற்பமானது என நீங்கள் கருதிய எண்ணமே அதற்கு காரணமாகும். இதுதான் இன்றைய துயரமான உண்மை நிலை. இதனிமித்தமே ‘நம்பிக்கைக்கு பாத்திரமான தந்திரவாதிகள்’ தங்களை “தேவனுடைய ஊழியர்கள்” என பிரபல்யப்படுத்தி பல்லாயிரக் கணக்கான விசுவாசிகளை ஏமாற்றிட முடிகிறது!!

இவ்வாறு “தங்களை தேவனுடைய ஊழியர்கள்” என சொல்லிக் கொள்ளும் அனேகர் தேவ
இராஜ்ஜியத்தின் கௌரவத்தை இத்தனை தரம் குறைந்ததாய் மாற்றியிருப்பது மகா வெட்கத்திற்குரிய காரியமாகும்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.