பிரசங்கியாரான டி.எல்.மூடியை சிந்திக்க வைத்த ஜார்ஜ் முல்லரின் விசுவாசம் டி . எல் . மூடி அவர்கள்சிகாகோ நகரில் YMCA கட்டட நிதிக்காக பல பல பணக்காரர்களிடம் ஓடோடிச்சென்று கடும் உழைப்பினாலும்ம முயற்சியினாலும் மனபாரத்துடன்நிதி திரட்டிக்கொண்டிருந்தார். . அக்காலங்களில் ஒருமுறை அவர் பிரிஸ்டல்நகருக்குச்சென்றார்.அப்பட்டணத்தில் இறையடியான் ஜார்ஜ் முல்லர் நடத்திவந்த அற்புத ஊழியத்தைக்கண்டு மூடிபிரமிப்படைந்தார். இதுபற்றி அப்போது அவர்தனதுதாய்க்கு ஒருகடிதம் எழுதினார். அதில்இவ்வாறு எழுதியிருந்தார். 'இந்தபிரிஸ்டல் பட்டணத்தில் ஜார்ஜ்முல்லரின்சிறப்பானதொண்டாற்றும்பெரிய அனாதைப்பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில்1150பிள்ளைகள்தங்கி ஆதரவுபெறுகின்றனர். ஆனால்அவர்களது பராமரிப்புக்காக முல்லர்யாரிடமும் பணம்தேவையென்று ஒருபைசாகூடகேட்டுவாங்கு வதுகிடையாது. . அவர்ஆண்டவரிடமே தனது தேவைகளுக்காக முறையிடுகிறார். ஆண்டவரே அவருக்குப்பணம் அனுப்புகிறார். ஜெபிக்கும் ஒருமனிதனுக்கு ஆண்டவர்செய்யக்கூடிய அற்புதத்தை நான்நேரில் கண்டு ஆச்சரியப்படுகிறேன்' என்று அதில் எழுதியிருந்தது. . ஜார்ஜ்முல்லர்யாரிடமும் கேட்காமலேயே ஆண்டவரால் ஏவப்பட்ட தேவமக்களால் அவருடைய பெரும்நிதித்தேவைகள் சந்திக்கப்பட்டன. மூடிதன்னுடைய முயற்சியையும், முல்லரின் அர்ப்பணிப்புள்ள விசுவாசத்தையும் ஒப்பிட்டுபார்த்து சிந்திக்கலானார். மனிதரிடம்கேட்காமல் தேவனிடம்கேட்டுப்பெற்றுக்கொள்வதே கிறிஸ்தவனுக்குஅழகு என்பதை புரிந்துகொண்டார். . ஒருமுறை அவர்முல்லரை சந்தித்தபோது தான்கட்டட நிதிசேகரிக்கபட்டு வரும்பிரயாசங்களை அவரிடம்பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார். முல்லரோ சற்றும் அதைக்கண்டுகொள்ளாமல் மூடியைப்பார்த்து 'நீ ஆண்டவருக்காக என்னசெய்யலாம் என்று சிந்திக்கிறாய். ஆனால் ஆண்டவர்உனக்கு என்னசெய்யலாம் என்று சிந்தித்துகொண்டிருக்கிறார். நீ மனிதரிடம்கேட்பதையல்ல தன்னிடம்கேட்பதையே ஆண்டவர்விரும்புகிறார்'. என்றார். . இன்று 'கட்டடநிதிக்காக 10,000ரூபாய்தரக்கூடிய 1000பேர்இங்கு இருக்கிறீர்கள் என்று கர்த்தர்சொல்லுகிறார்' என்று தீர்க்கதரிசனம்கூறும் ஊழியக்காரர்கள்பற்றி நியாயம்தீர்க்க எனக்கு அருகதையில்லை. அதுசரியா தவறா என்று கூட எனக்கு தெரியவில்லை. . ஆனால்நான்பூட்டப்பட்ட அறையிலிருந்து தேவனிடம்கேட்பதே சிறந்ததென்று நம்புகிறேன். சில வேளைகளில் நான் மனிதரிடம் ஊழியத்துக்காக பணம் சேகரித்து ஊழியம் செய்துள்ளேன். ஆனால் என்னை ஊழியத்துக்கு அழைத்தது மனிதரல்ல தேவனே. எனக்கு ஊழிய தரிசனத்தையும்திட்டத்தையும் தந்ததுதேவனாக இருந்தால், நான்மனிதரிடம் ஒருசதம்கூட கேட்கத்தேவையில்லை, ஏனெனில்திட்டத்தைதந்தவர் அதைநிறைவேற்ற தேவையான பணத்தைதரமாட்டாரோ?இனிமேல் ஊழியத்தை தந்தவரிடம் உரிமையோடுகேட்டுப்பெற்றுக்கொள்வேன். அதுவேஅவரது விருப்பமும்கூட. தேவையானதை தராவிட்டால் ஊழியத்தைசெய்யாமல்விட்டுவிடுவேன். மனிதனிடம்கையேந்துவதை விடஇதுவேசிறந்ததாக எனக்குதோன்றுகிறது. ---------------------


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.