சகோதரி ஹேமா ஜான் அவர்களின் சாட்சி (தொடர்ச்சி.........)

24 வருடங்களாக நான் தேடி கொண்டிருந்த சமாதானமும் சந்தோசமும் அந்த
ஜெபநேரத்திலே என் உள்ளத்திலே வந்தது. பலவித எதிர்ப்புகளின் மத்தியில்
"ஜான்" அவர்களை 1990 ஆகஸ்ட் 24ம் நாள் திருமணம் செய்துகொண்டேன்.

திருமணத்திற்கு முன் பல சினிமா பாடல்கள் பாடிகொண்டிருத நான் "பாடினால்
இந்த ஆண்டவருக்கு மட்டும் தான் பாடுவேன்" என்று வைராக்கியமாய் ஒரு முடிவு
எடுத்து என் தாலந்துகளையும், என் வாழ்க்கையையும் கர்த்தருடைய கரத்தில்
ஒப்புகொடுத்தேன்.

இந்த நாள் வரைக்கும் ஆண்டவரின் மகிமைக்காக பல ஆயிரம் பாடல்கள் பாட
ஆண்டவர் உதவி செய்தார்.

24 வருடமாக என் குடும்பத்திலே காணாத சமாதானத்தை தேவன் கொடுத்தார்.
கர்த்தரின் நாமத்திற்கு
மகிமையுண்டாவதாக. பல ஒளிநாடக்களிலே பாடும்படியாக தேவன் வாய்ப்பு கொடுத்தார்.

குறிப்பாக சகோதரர் T . Agustin என்பவர் அதிகமாய் கிறிஸ்தவ பாடல்கள் பாடும்படியாக
ஊக்கப்படுத்தினார்.

இயேசு அழைக்கிறார், சகோதரர் சாம் ஜெபத்துரை, சகோதரர் மோகன் சி லாசரஸ் என்று பெரிய
ஊழியக்காரர்கள் ஒலிநாடாக்களில் பாடும்படியாக தேவன் எனக்கு கிருபை தந்தார்.

இந்த ஆண்டவர் ஒருவரே நமக்காக, நம்
பாவங்களுக்காக, தன்னுடைய ஜீவனை கொடுத்தவர். என் குடும்பத்தின்
சமாதானத்திற்கென்று பல இடங்களுக்கு சென்று, பல விக்கிரங்களை நான் தொழுது
வந்திருக்கிறேன். ஆனால் ஒரு தெய்வத்தினாலும் என் குடும்பத்திற்கு
சமாதானத்தை கொடுக்க முடியவில்லை.

இந்த ஒரு ஆண்டவர் தான் எனக்காக யாவையும் செய்து முடித்தவர். எனக்காக தன
ஜீவனை கொடுத்தவர்.

உங்கள் வாழ்க்கையிலும் கூட, உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் இந்த
ஆண்டவர் ஒருவரே நமக்காய் ஜீவனை கொடுத்தவர், உங்களுக்காக மாட்டு
தொழுவத்திலே பிறந்தவர் இந்த ஒரு தேவன் தான் என்பதை நீங்கள் புரிந்து அதை
உங்கள் உள்ளத்திலே நீங்கள் அறிந்து அதை அறிக்கை
செய்வீர்களேயானால் உங்கள் பாவமான வாழ்க்கையை விட்டு நீங்கள்
திரும்புவீர்கலேயானால் உங்களுடைய உள்ளத்திலே இந்த ஆண்டவரால் வரமுடியும்.

என்னுடைய வாழ்கையில் செய்ததுபோல பல அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையிலும்
நடைபெறும். ஆமென்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.